பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 நவம்பர், 2014

மூன்று (ஜெக ஜால) கில்லாடிகள்.

என் மனதை யார் அறிவார்?

எனது அன்பிற்கினிய நண்பர்களே,

நாம் உலகில் பிறந்தது முதல் இன்றுவரை நமது வாழ்க்கையில் எத்தனையோ நண்பர்களை கடந்து வந்திருப்போம்.பள்ளியில், கல்லூரியில், வேலைஸ்தலத்தில்,குடியிருப்பு பகுதியில்,பேருந்து மற்றும் ரயில் பயணத்தில்,சுற்றுலா சென்ற இடத்தில்..... இப்படி நமக்கு எத்தனையோ நண்பர்கள் கிடைத்திருப்பார்கள்.

இவர்களில் எத்தனை பேர்களின் நட்ப்பு  நீடித்திருக்கின்றது அல்லது இன்னும் நீடித்து கொண்டிருக்கிறது?

சிலருடைய நட்ப்பு, அவர்களின் அணுகுமுறை, அல்லது அவர்களின் மேனரிசம்,அவர்களின் பழக்க வழக்கம்,அல்லது அவர்களின் முக(!!!) லட்ச்சணம், அவர்களின் பேச்சுத்திறன்,அவர்களின் பின்புலம், அவர்களின் செயல் திறன், படிப்பு திறன், அல்லது அவர்களின் வேலை, தொழில்,நேர்மை, நாணயம்  போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நாம் சிலருடன் நட்ப்பு பாராட்டுகின்றோம்.

முன்பு ஒரு காலத்தில் பேனா நண்பர்கள் என்று சிலர் இருந்தனர். நமது சிந்தனை எண்ணங்களை ஒட்டியே அவர்களின் சிந்தனை எண்ண ஓட்டங்கள் , ஒரே சீராக ஒரே திசையில் பயணிக்கும் பட்ச்சத்தில் அவர்களின் நட்ப்பும் ஓரளவிற்கு சில நாட்களுக்கு(சிலருக்கு பல நாட்களுக்கு) நீடித்து இருந்ததை அறிந்திருக்கின்றோம்.

இப்போது அது கொஞ்சம் மாறி, முக புத்தக நட்ப்பும் இப்போது பரவலாக பேசபடுகின்றது.

எந்த வகையில் நட்ப்பு ஏற்பட்டிருந்தாலும், ஒரு சிலரிடம் மட்டுமே எதோ நமக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருப்பதாக நினைக்க தோன்றும்.

விட்ட குறை தொட்டகுறை என்று குறையாக சொல்லாமல், பூர்வ ஜென்ம (பாவம் அல்ல) புண்ணிய பலனாக கிடைக்கப்பட்ட நட்பாக சிலருடைய நட்ப்பு நம்மில் ஒருசிலருக்கு சாத்தியமாகி இருக்கும்.

அறிமுகமாகி ஒரு சில நாட்களே ஆகி இருந்தாலும் ஏதோ குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளாவது( அதாவது என் வயசுபோல   அடடே என் ஐடென்டிடிய சொல்லிட்டோமோ? ) அன்னியோனியமாக பழகியது போல ஒரு இனம் புரியாத பவித்தர நட்புறவு நம்மை ஆக்கரமிக்கும்.

எதுவானாலும் முதலில்  அவர்களிடம் தான் சொல்லுவோம், அவர்களிடம் தான் ஆலோசனை கேட்போம்,அவர்கள் சொல்வது போல் தான் செய்வோம்  அவர்களும் அப்படியே இவர்களுடனான நட்பை அதே அளவு கடந்த அன்புடனும், நட்புடனும் , மரியாதையுடனும் தங்களது நட்பை போற்றி பாதுகாப்பார்கள்.

உடுக்கை இழந்தவன் கை போலே ஒருவருடைய பாரத்தை ஒருவர் தாங்கி, தோல்வியில்  தோள் சாய்ந்துகொள்ளவும், வெற்றியில் தோள் மீது ஏற்றியும், துன்பத்தில் ஆறுதலையும் இன்பத்தில் இரட்டிப்பையும் கொடுக்ககூடிய சிறந்த நண்பர்களாக வளம் வரும் எத்தனையோ நண்பர்களை நாம் பார்த்திராவிட்டாலும் கேள்விபட்டிருப்போம்.

இவற்றில் தொன்னூற்று ஒன்பது சதவிகிதம் ஒருவரை ஒருவர் பார்த்து, பேசி , கைகுலுக்கி, தோள் தட்டி,தொலை பேசியில்,ஸ்கைப்பில்,மற்றும் எத்தனையோ மின்னணு ஊடகங்களின் மூலம் பார்த்து பழகி தங்களின் நட்பை அன்பை  பகிர்ந்து கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் கடந்த இருபது வருடங்களாக(கணக்கில் கொஞ்சம் வீக்கு என்பதால் நாள் , மாதம், வருட கணக்கில்  எனக்கு அப்பப்போ கொஞ்சம் தடுமாறும் )  எனக்கு அறிமுகமான அன்பான இரண்டு நண்பர்களை நான் இதுவரை நேருக்கு நேர் பாராமலேயே அவர்களிடம் வேறு எந்த பேச்சு வார்த்தையுமின்றி , அவர்களின் மடல்களின் வாயிலாக ஒரு நீண்ட நெடிய நட்ப்பு பாலம் ஒன்று உருவாகி என்னை அவர்களோடு இணைத்துவிட்டிருக்கின்றது.

YOU  THREE    ARE   SMARTER - நன்றி   கூகுள்  

அவர்களின் மடல்கள் தாங்கி வரும் செய்திகளில் ஒரு ஜீவன் இருக்கும், கல்வி இருக்கும், போதனை இருக்கும், கனிவு இருக்கும்,நல்ல பாடம் இருக்கும், பகுத்தறிவு இருக்கும், அநீதியை கண்டு ஆதங்கத்துடனான ஒரு கோபம் தொனிக்கும், தேவையான இடங்களில் சிலாகிப்பு இருக்கும்.

 எல்லாவற்றிற்க்கும் மேலாக கரிசனையுடன் கூடிய அன்பு விஞ்சி இருக்கும்.

இத்தனை இறுக்கமான நடப்பு இருப்பதால் நான் எதையும் முதலில்  இவர்களிடம் தான் சொல்ல முடிவெடுப்பேன். 

அப்படி சமீபத்தில் கொஞ்சம் ஓவர் உரிமை எடுத்துகொண்டு, அவர்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் இருப்பதாகவும், அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை என்றும் அவர்களுக்கு தெரிவித்தேன்.

அவர்கள் என் மடலை கண்டவுடன் முதல் வேலையாக, என்ன வேண்டுகோள் உடனே சொல்லுங்கள் எதுவானாலும் நிறைவேற்றி வைப்போம் என்கின்ற தொனியில் பதில் மடல் அனுப்பி இருந்தனர்.

அந்த பதில்  மடலில், அவர்களாகவே, சில அனுமானங்களை தெரிவித்து இருந்தனர்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்கள் இருவர் ஆனால் ஒருவர்.

அதில் ஒரு அனுமானம்:

 தாங்கள் இருவரும் தனித்தனியாக என் வேண்டுகோளை நிறைவேற்ற  வேண்டுமா  சொல்லுங்கள் என்று எழுதி இருந்தார்கள்.

என் பதிலில்:

நீங்கள் இருவர் போட்டிருக்கும் இருப்புப்பாதையில் தான் என் நட்பு ரயில் தடம் புரளாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது அப்படி இருக்க உங்களை பிரித்து பார்க்க அல்ல அதை நினைத்து பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது எனவே எதை செய்வதாயிருந்தாலும் நீங்கள் இருவரும் இணைந்தே ஒருமித்தே  செய்யுங்கள் என்றேன்.

அப்படி இருவரும் ஒருமனப்பட்டு அந்த வேண்டுகோளை ஒருவராக  நிறைவேற்றினாலும் எனக்கு இரட்டிப்பு மகிழிச்சிதான் என்றும் குறிப்பிட்டிருந்தேன் .

மீண்டுமாக அவர்களின் பாசமிகு மடல் வந்தது அதிலும் அவர்கள் அனுமானித்து ஒரு கேள்விகேட்டிருந்தனர்:

 உங்களுக்கு எங்களின் மற்ற நண்பர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமா? என்று.

என் பதிலில்: 

உங்களின் நண்பர்களின் உறவு கிடைப்பது எனது பாக்கியமாக கருதுவேன் அப்படி உங்களுடனான என் நட்பு உங்கள் நடப்பு வட்டாரத்திற்கும் விரிவாக்கம் செய்ய தகுதி உண்டென்று நீங்கள் கருதி அதை செய்தால் மகிழ்ச்சியே.

 எனினும் என் வேண்டுகோள் அதுவல்ல என்றேன்.(நட்ப்பு  விரிவாக்கம் செய்ய என் அனுமதி தேவையா என்ன?) 

சரி அப்படி என்னதான் என் வேண்டுகோளாக இருக்கும்?

முதலில் இந்த பதிவை கில்லர் பாணியில் ஒரு பத்து பேருக்கு  அனுப்பி அவர்களின் அனுமானங்களை அறிந்துகொள்ளலாம் என நினைத்தேன், பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஏனென்றால் கில்லர் போல எனக்கு எந்த பத்துபேரும் எனது நெருங்கிய நட்ப்பு வட்டாரத்தில் இல்லையென்பதால்.

நண்பர்களிடத்தில் உதவிகள் கேட்பதை நான் பெரும்பாலும்  விரும்பாதவன் என்பது  என்னை அறிந்த இந்த இரண்டுபேர்களையும் சேர்த்து இன்னும் ஓரிருவருக்கு (அவ்வளவுதான் என் பிரண்டசீப்பு-- ரொம்ப சீப்பு ),தெரிந்திருக்கும்.

 எனவே தான் இந்த இருவரிடம் நான் உதவியாக இல்லாமல் வேண்டுகோளாக ஒன்றை கேட்க நினைத்திருக்கின்றேன்.

அது என்னன்னா........

சரி அத விடுங்க  அத பிறகு பார்த்துகொள்ளலாம்.

எவன் ஒருவன் தன் நண்பனிடம் உதவின்னு கேட்க்காம இருக்கானோ அவனுக்கு உதவிகள் தானாக வந்து சேரும், நட்ப்பும் ஆல்போல் செழித்திருக்கும் எப்படியெனில், நண்பனின் மனசு அவனது நண்பனுக்கு தெரியாமலா போகும், ஆத்தம நண்பனின்  ஆத்மா என்ன நினைக்கின்றது என்று தெரியாவிட்டால் அவர்கள் எப்படி நண்பர்களாக இருக்க முடியும்.,
அதுவும் அவன் கேட்டா நாம் செய்ய வேண்டும்? என ஓடோடி வந்து உதவிகரம் நீட்டுவார்களல்லவா?

ஆனால் இது உதவியல்ல நண்பர்கள் குறிப்பறிந்து செய்ய , இது வேண்டுகோள்.

வாய் திறந்து வேண்டினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

 அப்படியானால் நான் பேசித்தான் தெரிவிக்க வேண்டுமா?

மடல்கள்மூலம்  தெரிவிக்க முடியாதா?

இத்தனை காலம் நாங்கள் மூவரும்  ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாமல், எங்கள் ஒருவரின் ஒருவர் குரலின் ஓசை கேட்டுக்கொள்ளாமல் எங்களின் ஸ்லாங், ஸ்டைல் பேச்சுமொழி, எங்கள் சுவாசம், எங்களின் மூச்சு,எங்களின் நாதம் எங்கள் செவிகளை இன்றுவரை ச்பரிசிக்காமலே நாங்கள் கொண்டாடும் எங்கள் நட்பின் மாண்பு, அதன் புனிதம் அதன் மேன்மைக்கு எங்களின் தொலைபேசி தொடர்பு (எங்கள் இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையில் சுமார் ஆறாயிரம் மையில் தூரம் ) பங்கம் விளைவிக்காதா?

சரி ஆனது ஆகட்டும் , அவர்களை இனியும் காக்க வைக்காமல் என் வேண்டுகோளை, அவர்கள் ஏதேனும் வேறு வேறு அனுமானங்களை யோசித்து தங்களின் பொன்னான மற்றும் பெண்ணான(!!) நேரத்தையும், சி ஐ டி மூளையையும் விரயமாக்காமலிருக்க ,இதோ இப்போதே  தீர்மானித்துவிட்டேன் அவர்களிடம் நான் வைக்க நினைத்த என் வேண்டுகோளை காலம் தாழ்த்தாமல்  சொல்லிவிட வேண்டும் என்று .

சரி அதான் தீர்மானித்து விட்டீர்களே சீக்கிரம் சொல்லுங்க.

நான் தீர்மானித்துவிட்டேன்  என்று சொன்னது இனியும் காலம் தாழ்த்தாமல்  கண்டிப்பாக அடுத்த  மடலில் எப்படியாவது சொல்லிவிடவேண்டும்    என்பதைத்தான்.

அதுவரையில்  அவ்விரண்டு நண்பர்களையும் கொஞ்சம் பொறுமை காக்கும் படி என் சார்பாக கொஞ்சம் சொல்லுன்களேன் அவர்களை உங்களுக்கும் தெரிந்திருந்தால் ப்ளீஸ்.

பின்குறிப்பு:

ஒருவேளை நீங்கள் யாரவது என் வேண்டுகோள் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியுமா பாருங்கள் கீழ்காணும் சில குறிப்புகளைகொண்டு:

1. எனக்கும் அவர்களுக்கும் உள்ள ஒற்றுமை கடந்த பல பத்து ஆண்டுகளாக ஆங்கில மொழியோடு நெருங்கிய தொடர்பு, ஆனால் அவர்கள் எழுத்தறிவிப்பவர்கள், நான் ஏதுமறியாதவன்.

2. எங்கள் இரண்டு பார்டிகளுக்கும்(பாட்டிகளல்ல) தமிழின் மீது தீராத காதல்.

3. எனக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நண்பர்கள் கொஞ்சம் அதிகம், அவர்களுக்கு என் படைப்புகளை அவ்வப்போது சொல்லுவேன், ஆனால் நிறைய பேர்களுக்கு சொல்லமுடியாது.

இந்த குறிப்புகள் போதும் இதற்க்கு மேல் நான் எதுவும் சொல்ல முடியாது.


நன்றி

வணக்கம்.

மீண்டும்  ச(சி)ந்திப்போம்.   

அன்புடன்.

கோ

9 கருத்துகள்:

 1. நண்பரே! நீங்கள் யாரைக் குறிப்பிட்டு இத்தனை சிலாகித்து, மதிப்பு கொடுத்து, நட்பிற்கு மதிப்பும், ஆராதனையும், உங்கள் மகிழ்வையும் தெரிவித்து, இத்தனை உயர்வாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றீர்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் (எங்களால்) நாங்கள் வேஸ்ட். அன்டஹ் நண்பர்க்ள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை இங்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் அந்தக் கண்டுபிடிப்பை இங்கு சொல்ல வில்லை . அது மற்றவர்களுக்கு, இதை வாசிப்பவர்களுக்கு. ஆனால் அவர்களால் நிச்சயமாக முடியாது. அதற்கு உங்கள் க்ளூ போதாது. நண்பரே! ஹஹ்ஹ்... பரவாயில்லை!... நல்ல படம் நண்பரே! ரசித்தோம். ரசித்தோம்....

  மற்றவை மடலில்....வருகின்றது. உங்கள் வேண்டு கோளைக் கண்டுபிடித்து விட்டதால்....

  மிக்க நன்றி நண்பரே! (இது எதற்கு என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு திரு துளசிதரன் மற்றும் கீதா(அம்..)க்கு அநேக வணக்கங்கள்.

   பதிவை ரசித்ததோடு உங்களுக்கும் அவர்களை தெரிந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

   அவர்கள் எமது வேண்டுகோளை சரியாகத்தான் யூகித்திருப்பார்கள் என்றா நினைக்கின்றீர்கள்.

   நான் பதிவில் கொடுத்திருந்த க்ளூ முக்கியமாக அவர்களுக்குதான்.

   பதிவும் அதன் தலைப்பும் எப்படி இருந்தது?

   எமது பதிவில் இருந்த மேடத்தின் உறவினர்களின் புகைப்படம் சொல்லும் செய்திகள்:

   1: மேடம் வீட்டு சமையல் அறையில் இருந்து எடுத்தட மிளகாய் தூள் கண்ணில் பட்டுவிட்டது ரொம்ப எரியுது, கண்ண தெறக்கவே முடியல.வேணும்னே எங்க கண்ல படற மாதிரி அத வச்சிருந்தாங்கபோல.

   2.எங்கள நல்லா ஏமாத்திப்புட்டாங்க-, அவங்க கிச்சன்ல இருந்த போன தீபாவளிக்கு செய்த அல்வாவ கடிச்சி என் கடா பல்லு ஒடஞ்சிடுச்சு, வாயயும் தெறக்க முடியல.(நல்லா அல்வா கொடுத்துட்டாங்க) சாரிங்க ரொம்ப பேசமுடியல பல்லு வலிக்குது.

   3.ஏதோ சின்னபசங்க நாங்க தெரியாம அவங்க பால்கனியில கொஞ்சம் அசிங்கம் பண்ணிட்டோம், அதுக்கு அவங்க மெட்ராஸ் பாசையில வண்டி வண்டியா கழுவி ஊத்னாங்கள அப்பப்பப்பா ....அத காதுகொடுத்து கேட்க்க முடியல.

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நட்புடனும் அன்புடனும்

   கோ.

   நீக்கு
  2. அன்பிற்கினிய நண்பர்களே,

   நீங்கள் கேட்பதுபோல்,( " இலவச சிரிப்பினால் ஏற்படும் சுளுக்கிற்கு ஒரு மருத்து வைச்சு அனுப்புங்க ப்ளீஸ்.....")

   மருத்துவச்சி அனுப்பமுடியாது.(மருத்துவச்சி என்றால் லேடி டாக்டர் தானே?-- நைசா ஸ்பெல்லிங் மிஸ்டேக்குனு சொல்லி சமாளிக்கவேண்டாம்- உள்ளத்தின் நிறைவைத்தான் வாய் பேசும் - வாய் பேசநினைப்பதைதான் உங்கள் எழுத்து பேசி இருக்கின்றது ம்ம்ம்ம் காலம் கலிகாலமாயிடுத்து.... )

   பதிவையும் எமது பதிலையும் சிரித்து ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

   எதார்த்தவாழ்கையில் நான் எப்படி?

   அது இடம் பொருள் ஏவாளை (இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) பொறுத்து.

   இடுக்கண் வருங்கால் நகுக , என் பதிவுகள்/ பதில்கள் என்னும் இடுக்கண் வரும்போது நகுக.

   பின்குறிப்பு:உங்களை வெறும் கீதா என அழைக்க என் மனம் இன்னும் பக்குவமடையவில்லை, எனவே தான் இன்னும் அம்மையார் என்று அழைக்கின்றேன், மற்றும் ஒரு காரணம் ஏற்கனவே கூறி இருந்தேன்: "ஒரு பதினாறு வயது பெண்மணியை(ஸ்வீட் சிக்ஸ்டீன்) ஒரு ரெண்டு மாச குழந்தை(!!!) - வாயில் விரல் வைத்தாலும் கடிக்கதெரியாத ஒரு குழந்தை) அம்மையார் என அழைக்காமல் ஆயா என்றா அழைக்கும், நீங்க கோபித்துகொன்டாலும் பரவாயில்லை என்னால் அப்படி ஆயா என்றெல்லாம் அழைக்க முடியாது "

   எனக்கென்னமோ நீங்கள் என் வேண்டுகோளை சரியாக அனுமாநித்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன், உங்கள் மடல் இன்னமும் கிடைக்கவில்லை.

   ஒன்றும் அவசரமில்லை நிதானமாக நகரட்டும்.

   அரை கிழம் என்று யாரிடம் சொன்னீர்கள், ஓ ...ஓ ஒ.... ஒருவேளை நிலைகண்ணாடியிடம் பேசிக்கொண்டு இருந்தீர்களோ?

   நன்றி, வணக்கம்,

   அன்புடனும், நட்புடனும்

   கோ

   நீக்கு
  3. மடலில் பதில் வருகின்றது நண்பரே!

   நீக்கு
  4. அன்பிற்கினிய நண்பர்களே,

   தங்களின் மடல் காண மடிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்.

   மடியா? ஆமாம் மடி கணினியை தான் சொல்கிறேன்.

   அனைவரும் சுகமா?

   அன்புடனும் நட்புடனும்

   கோ

   நீக்கு
 2. என்ன ஆச்சு ? நண்பர் துளசிதரன் & கீதா அவர்கள் பதிவுக்கு போனால் ? அவர்களும் மூதாதையர்களின் புகைப்படத்தை போட்டிருந்தார்கள் இங்கு வந்தால் நீங்களுமா ?
  பரவாயில்லை நாமெல்லோருமே அங்கிருந்து வந்தவர்கள் தானே பதிவு அருமை நண்பரே, அதைவிட கடைசியில் வைச்சீங்களே சஸ்பென்ஸ் அதைவிட அருமை இப்படித்தான் படிப்பவரை கட்டிப்போட வேண்டும் கயிறு இல்லாமலே... (கயிறு வாங்குனா அது தெண்டச்செலவுதானே) வாழ்த்துகள் திரும்பவும் வருவேன் தாங்கள் எமது குடிலுக்கு வராவிட்டாலும்...

  பதிலளிநீக்கு
 3. நண்பன் கில்லருக்கு,

  அனேக வணக்கங்கள்.

  எனக்கும் திகைப்பாகத்தான் இருந்தது அவர்களின் பதிவு தாங்கிவந்த புகைப்படங்களை பார்க்கும்போது.
  என் பதிவை அனுப்பிய பிறகே அவர்களின் பதிவை பார்க்க நேர்ந்தது. ஒரே சிந்தனை உள்ளவர்கள் நண்பர்களாயிருப்பதை அல்லவா இது காட்டுகிறது.

  பதிவை பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்.
  தங்களின் குடிலுக்கு நான் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.
  எமது முந்தய பதிவுகளையும் பார்க்க - விமரிசிக்க அழைக்கின்றேன்.

  வாழ்த்துக்களுடனும் அன்புடனும்

  கோ.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் கோ,
  எனக்கு எல்லாம் புரிந்தது,
  தங்கள் வேண்டுகோள் நிறைவேறியிருக்கும்,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு