பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 நவம்பர், 2014

"கருடா சௌக்யமா?"

வால்பாறையில் வாலாட்டும் வன மைந்தர்கள் 


வால்பாறை என்ற ஊருக்குள் வன விலங்குகள் புகுந்து விளை நிலங்கள்,தேயிலை  தோட்டங்கள்,
குடியிருப்பு பகுதிகளை,  கடைகளை , வீடுகளை சேத படுத்திவருவது ஊர்மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருப்பதாக சமீபத்தில் செய்தி கேட்டேன்.


மனிதர்களுக்குள் வரப்பு சண்டை வருவதும் , இதில் அடிதடி, வெட்டு குத்து , கொலைவரை  கூட  பிரச்சனைகள் நீள்வதும்  இதனை தீர்க்க காவல்துறை, நீதி மன்றங்கள் போவதும்,நாம் அன்றாடம் கேள்விபடுகின்ற ஒரு விஷயம்.


ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு சமூகத்துக்கு  சொந்தமான ஒரு நிலம், வீடு  போன்றவற்றை மற்றவன் அபகரித்தால், உடனே அவனுக்கு/அவர்களுக்கு  கோபம் வரும்,  ஞாயம் கேட்டு போராட்டம் நடக்கும் . அல்லது மேலே சொன்னதுபோல் காவல்துறை நீதி மன்றம் போன்றவற்றை அணுகுவார்கள்.


இறைவன் படைத்த இந்த பூமியில் மனிதனுக்கும் விலங்குகளுக்குமென இடங்களை பிரித்து இந்த இரு சாராரும் வாழும் சூழ்நிலைகள்,சீதோஷன நிலைமைகள், சுற்றுசூழல் போன்றவற்றை உருவாக்கி கொடுத்திருக்கின்றான்.


அப்படி இருக்க இந்த விலங்குகளுக்கு கொஞ்சம் கூட புத்தியே இல்லாமல் மனிதனுக்கு கொடுத்த இடத்தில்    வந்து இப்படி அட்டகாசம் செய்கின்றதே இது ஞாயமா, தர்மமா? என விலங்குகளை பார்த்து நாக்கை பிடிங்கிகொள்ளும் வண்ணம் நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கனும்போல இருந்துச்சி.


நல்ல வேலை, கொஞ்சம் அடக்கி வாசித்துகொண்டேன்.


சத்தமா சொல்லாதீர்கள் , ரொம்ப வெட்ககேடான - களவாணித்தனம் நடந்திருக்கு.


அதாவது, விலங்குகளுக்கு சொந்தமான வன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நம்ம பயபுள்ளைங்கோ அபகறிச்சி,வீடு கட்டறேன் , ரோடு போடறேன், விவசாயம் பண்றேன், தேயிலை தோட்டம் அமைக்கிறேன்,காபி தோட்டம் போடறேன், சந்தன கட்ட கடத்துறேன், செம்மரம் கடத்தறேன்,சொந்தமே இல்லாத தந்தங்கள கடத்தறேன்னு காடு இருந்த இடங்களை எல்லாம் அழிச்சி அந்த வனவிலங்குகள் காலாகாலமாக பயன்படுத்திய வழி தடங்கல், நீரோடைகள், நீர்த்தேக்கங்களை அழித்து தமது பேராசையின் காரணத்தால் வனபகுதிகளின் பெரும்பான்மையான இடங்களை தமதாக்கிகொண்டான்.
 Google  images


 பாவம் அந்த ஜீவன்கள் வனத்தில் போதிய இடவசதியும், உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாததாலும் , ஏற்கனவே தங்களது ராஜ்ஜிய எல்லைகளான இப்போதிருக்கும் ஊர்பகுதிகளுக்குள் புகுந்து அல்ல அல்ல தங்களது பூர்வீக , பாட்டன் சொத்துக்களான நிலபரப்பை - மனிதன் வஞ்சகமாக கையகபடுத்தியுள்ள - தங்களது உரிமை பூமியை-வளம் கொழித்த  பூமி பகுதியை  அவவப்போது வலம் வருகின்றன.


இது அவங்க பாட்டன் சொத்து.


சமீபத்தில் பேராபத்தான கொடிய நோய்  இபோலா குறித்து பேருந்தில் என்னோடு பயணித்த ஒரு மருத்துவரிடம், பேசிக்கொண்டு வந்தேன்.


அப்போது அவர் சொன்னார் இந்த நோய் கிருமி காடுகளில் இருந்த விலங்குகளிடம் தான் காணப்பட்டது , அவைகளுக்குள் இந்த கிருமிகள் இருந்தாலும், அவற்றின், உடலமைப்பு, சுரப்பிகளின் தன்மை, நோயெதிர்ப்பு  சக்தி, அவற்றின் உணவு முறைகளால் , அவைகளை இந்த கிருமிகள் அவ்வளவாக பாதிக்கவில்லை, ஆனால், நோய் எதிர்ப்பு தன்மை, உடலமைப்பு, உணவு பழக்கம், சீதோஷணம் போன்றவை  மாறுபட்ட மனிதனால் இந்த நோய் கிருமியை தாக்கு பிடிக்க முடியவில்லை என்றார்,


நான் கேட்டேன், "சரி காட்டு விலங்குகளிடமிருந்த இந்த கொடிய விஷகிருமி எப்படி மனிதனை தாக்கியது"?


அதற்கு ஆப்ரிக்க நாட்டவரான  அவர் ஆங்கிலத்தில் சொன்ன  பதிலின் தமிழாக்கம் இப்படிதான் எனக்கு கேட்டது.


"பரம சிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது , கருடா சௌக்யமா?"


"யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது"


. ஆமாங்க அதில் அர்த்தம் உள்ளது.


விலங்குகளின் கோபத்துக்கு ஆளான - பாதிப்புக்குள்ளான அனைவருக்கும்  எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்ளும் இந்த நேரத்தில்: 


"விலங்குகளே உங்கள் கோபம் ஞாயமானதுதான் என்றாலும் எங்க பய புள்ளைங்கள , கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, மன்னிச்சி  பயம் காட்டாம , எஞ்சி இருக்கும் உங்க வனபகுதிக்குள்ள போய்டுங்க.


"வாய்" இல்லா  ஜீவன்களே  நான் சொல்லறத கொஞ்சம் "காது"  கொடுத்து கேளுங்க.அப்படியே ஒரு யோசனை: உங்க ஆட்கள்ல  இருக்கின்ற யெங் பாயிஸ் அண்ட்  கேள்ஸ் கொஞ்சம் செலக்ட் பண்ணி ஒரு ஊர்காவல் அதாவது வன காவல் படை  அமைச்சு உங்க எல்லையில் எங்க ஆட்கள் அத்துமீறி நுழையாவண்ணம் ஒரு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்துகொள்ளுங்களேன்.


ஏற்கனவே விலங்குகளிடமிருந்து நாம்  சத்தமில்லாமல்   "சுட்ட"  இடங்களை அவைகள் பார்க்க வரும்போது மீண்டும் அவைகளை துப்பாக்கியால்  "சுட்டு" காயபடுத்டுவது என்ன ஞாயம்?  


நன்றி!

மீண்டும் ச(சி)ந்திதிப்போம் !!.

கோ 

12 கருத்துகள்:

 1. யானையின் வழித்தடங்களை மறித்து
  தடுத்து வீடுகளாக்கிய குற்றம் நம்முடையது
  நல்ல பதிவு நண்பரே
  மனிதர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு கரந்தையார் அவர்களுக்கு.

   வணக்கம்.

   ஆமாம் சார்,

   தீதும் நன்றும் பிறர் தர வாரா.

   வருகைக்கும், வளமான பின்னூட்டத்திற்கும் நன்றி.

   கோ

   நீக்கு
 2. suya nalam piditha manitharkal taan intha nilamaikku kaaranam sollaam paarthalum.
  peruki vaarum makkal thokaiyum oru kaaranamaka irukkum niniakkuren sir.
  paavam vilangukal!

  பதிலளிநீக்கு
 3. மகேஷ்,

  நீங்க சொல்லறது ஓரளவுக்கு, சரிதான்.

  மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான், ஆனால் மரம் வைக்காதவன் அதனை வெட்டி சாய்க்கிறான்.

  வருகைக்கு நன்றி மகேஷ்.

  கோ

  பதிலளிநீக்கு
 4. Thulasi- Geethas blog has nominated you to write a blog on this.. Please read it here.
  http://thillaiakathuchronicles.blogspot.com/2014/11/Kanavil-Vantha-Gandhi.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி விசு நண்பரே! பிள்ளை அவர்கள் கலக்கியிருக்கின்றார்கள்! பாருங்கள். அடுத்து உங்கள் கலக்கலை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

   நீக்கு
 5. அருமை அருமை அருமை! நண்பரே நாம நம்ம இடத்துல யாராவ்து வந்து ஆக்ரமிச்சா நாம என்ன பண்ணுவோம்? அவர்களுடன் சண்டை போடுவோம் தானே அதைத்தான் இப்போது விலங்குகள் செய்கின்றன. காவேரித்தண்ணிக்கு சண்டை போடலையா? அவர்களது பகுதியை நாம் ஆக்ரமித்துக் கொள்ளும் போது அவர்களுக்குத் தேவையான உணவு இல்லாமல் போகின்றது. தண்ணீர் இல்லாமல் போகின்றது. எத்தனை குளங்கள், காட்டு நிலங்கள் சிமென்ட் கட்டிடங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. அவர்களது உறைவிடம் இல்லாமல் போகின்றன. எத்தனை விலங்குகள் இனம் அழிந்து வருகின்றன. இப்பொதுபுலிகள் கூடா குறைந்து வருகின்றன.

  இதில் பன்னாட்டு கம்பெனிகள் அவர்களது சுய நலத்திற்காக காடுகளை அழித்து பனை மரங்களை நடுகின்றார்களாம் ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரையே வந்துள்ளது. அதற்கு முன்னும் வந்து விட்டது. எதற்கு பாமாயில் பல அழகு சாதனங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றதாம். அந்த அழகு சாதனக் கம்பெனிகளின் வேலை இது. எத்தனியயோ ஏக்கராம்.....மனது பதைத்தது. அப்பஒ அங்கு இருக்கற விலங்குகள் என்ன செய்யும்? ஊருக்குள வரத்தானே செய்யும். அப்போ மக்கள் சுடுகின்றார்கள். அவர்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? சொல்லுங்க? கடவுளால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மக்கள் கையில் எடுப்பதற்கு என்ன உரிமை இருக்கின்றது? உயிர் என்பது ஒன்றுதானே அதன் உருவம் வேற்பட்டாலும்? ம்ம்ம் வேறு என்ன சொல்ல...புலம்பி எந்த பயனும் இல்லை...

  மிக அருமையான கட்டுரை அதுவும் உங்கள் எழுத்து நடையில்!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பொதுநல விசயத்தை கையிலெடுத்து அதற்க்கு பதிலும் ‘தந்த’ விதம் அருமை யானைகள் மட்டுமல்ல அனைத்து விலங்கினங்களுமே நாட்டுக்குள் ஊடுறுவும் நிலையை மனிதன்தான் உருவாக்குகின்றான்.
  தனக்கு சொந்த மில்லாத ‘’தந்தத்தை’’ எடுக்கிறான் ரசித்’’தேன்’’ இனித்தது நண்பனே,,, வாழ்த்துகள்

  நண்பனுக்கு ஒரு விண்ணப்பம் தாங்கள் எம்மை ‘’கில்லர்’’ என அழைப்பது கண்டு அச்சமாக இருக்கிறது காரணம் அதனால் தெய்வகுற்றம் ஏற்பட்டு தங்களுக்கு பிரட்சினைகள் நேர்ந்திடுமோ ? என்ற பயமே காரணம் இருப்பினும் தாங்கள் ‘’கோயில் பிள்ளை’’ அல்லவா அதனால் தைரியமாக இருக்கலாம் நன்றி.
  வருவேன் தொடர்ந்து....

  அன்புடன்
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 7. கில்லருக்கு, அனேக வணக்கங்கள்,

  கோயில் பிள்ளையானாலும் கொலைகாரனுக்கு பயந்துதானே ஆகவேண்டும்.

  பதிவை பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றிகள் பல.

  சொந்த பூமியை களவுக்குக் பறிகொடுத்தபின் சொந்தங்கள் என சொல்லிக்கொள்ள இருப்பது தந்தங்கள் மட்டுமே, அதையாவது விட்டு வைப்போம்.

  வருகைக்கும் விமர்சனத்திற்கும் மீண்டும் நன்றிகள்.

  அன்புடன்,

  கோ

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கோ,
  வரும் பாதை அடைத்து, வனம் நமதாக்கி கொண்ட நாம் நம் எல்லைகளை விட்டுத் தரோம்,,,,,
  அருமையான பதிவு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே. வால்பாறை சொல்கிறது . .உண்மை ஐயா

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கு மிக்க நன்றி பாரதி.

  கோ

  பதிலளிநீக்கு