பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

நினைவில் நிற்கும் நிக்கா

பக்க்ரீத் திருநாளை கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.இத்தருணத்தில், பல வருடங்கட்க்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்.

பள்ளியில் ஒன்றாக படித்த என் நண்பர் பாபுவின் திருமணதிற்காக பத்திரிகையில் குறிக்கப்பட்ட சின்ன மசூதி இருக்கும் இடம் தேடி சென்றுகொண்டிருக்கும் வேளையில் வாங்கிவைத்திருந்த பரிசு பொருளில் பெயர் பொறிக்க கடை ஒன்றில் நின்றேன்.

பின்னர் அதை மீண்டும் நன்றாக பேக் செய்து மீண்டும் சின்ன மசூதி தேடி சென்றுகொண்டிருக்கும்போது, எதிரில் திருமண ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.

ஆஹா நாம் தாமதமாக வந்துவிட்டோமே என்று எண்ணி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த திருமண ஊர்வலதினருடன் பரஸ்பரம் வணக்கங்கள், கைகுலுக்கல்களை பரிமாறிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்'

மாப்பிள்ளை தனக்கே உரிய கம்பீரத்தோடு மினுமினுக்கும் பட்டு ஜரிகை உடை அணிந்து , ராஜா போல  ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரையில் அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்து வாழ்த்துக்கள் சொல்லவதற்காக அவரின் குதிரைக்கு பக்கத்திலேயே நடந்து கொண்டிருந்தேன், கொஞ்சநேரத்தில் அவர் முகம் இல்லை இல்லை அவர் தலை என் பக்கம் திரும்பியது, நானும் அவருக்கு  கை குலுக்கி வாழ்த்து சொல்ல குதிரையின் உயரம் அதிகமிருந்த காரணத்தால் புன்னகயாலேயே வாழ்துரைதேன்.

ஊர்வலம் போய்க்கொண்டே இருந்தது , சுமார் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் நானும் கூட்டத்தினரோடு நடந்துகொண்டே அருகிலிருந்த அன்பரிடம் ஊர்வலம் எங்கே செல்கின்றது என்று கேட்டேன். அவர் சொன்னார் பெரிய மசூதிக்கு என்று, நான் கேட்டேன் திருமணம் சின்ன மசூதியில் என்றுதானே அழைபிதழில் இருக்கின்றது என்றேன். அதற்கு அவர் பெரிய  மசூதியில் தான் திருமணம், என்றார்.

ஒருவேளை  நாம்தான் திருமண அழைபிதழை தவறாக பெரிய மசூதிக்கு பதில் சின்ன மசூதி என்று வாசித்து விட்டோமோ என்று நினைத்து உடனே சட்டைப்பையில் இருந்த அழைபிதழை பிரித்து பார்த்தேன் அதில் சின்ன மசூதி என்று தெளிவாக அச்சடிக்கப்பட்டிருந்தது, அதை என்னோடு பேசிக்கொண்டு வந்தவரிடம் காண்பித்தேன் , அவர் என்னை ஒருவிதமாக பார்த்து புன்னகையுடன் , "அடடே நீங்கள் சையத் மகன் பாபு திருமணதிற்கு வந்தவரா" என்றார், நானும் ஆமாம் என்றேன், நீங்கள் சொன்னது சரிதான் அது சின்ன மசூதியில்தான்என்றார்.

எனக்கு ஒன்றும் புரியாமல் அப்படிஎன்றால் இந்த மாப்பிள்ளை பாபு இல்லையா என்றேன், இல்லை இது அப்துல் சலாம் மகன் இம்தியாஸ் திருமணம் என்றார்.

நான் மாப்பிள்ளையின் முகத்தை பார்க்க என் தலையை உயர்த்தினேன் எனினும் அவர் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை காரணம் அவரின் முகம் முழுவதும் அடர்த்தியான அழகான மல்லி பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வழிந்த அசடை என் கிழிந்த கைகுட்டையால் துடைதுக்கொன்டே , சின்ன மசூதிக்கு வழி கேட்டேன்.

 அவர் சொன்ன பதில் என்னை சின்னதாக  மயக்கமுற செய்தது.

அதாவது இப்போ நாம வந்த அதே வழியில் திரும்பி சென்று வலது பக்கமாக இருக்கும் தர்காவுக்கு பின்னல் இருக்கும் மண்டபத்திலிருந்து ஒரு 5 நிமிடம் நடை தூரத்தில் சின்ன மசூதி இருக்கின்றது, மாப்பிள்ளை ஊர்வலம் அந்த தர்காவிலிருந்துதான் புறப்பட்டு மசூதியை வந்து சேரும் என்றார்.

பள்ளி தோழனின் திருமனமாயிற்றே முகம் சுழிக்காமல் மனம் தளராமல் நடக்க ஆரம்பித்தேன் கொஞ்சம் வேகமாக.

தர்காவை அடைந்ததும் அங்கிருந்தவர்களிடம் நான் கேட்ட முதல் கேள்வி இது பாபுவின் திருமண கூட்டம் தானே என்று.

அவர்கள் ஆமாம்  என்று சொன்ன பிறகே மாப்பிள்ளை எங்கே என்றேன், உள்ளே  இருக்கின்றார் இன்னும் 5 நிமிடங்களில்  ஊர்வலமாக மசூதிக்கு அழைத்து செல்லப்படுவார் என்றனர் , சின்ன மசூதிதானே என்று ஊர்ஜிதபடுதிக்கொண்டு   அருகிலிருந்த அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரையை பார்த்தேன், அதுவும் என்னை பார்த்து ஒரு அசட்டு புன்னகை உதிர்த்தது.

மாப்பிள்ளை குதிரைமேல் அமருமுன் முகத்தை பார்த்து கைகுலுக்கி என் நெஞ்சார வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைத்துகொண்டிருக்கையில் மாப்பிள்ளை பட்டு ஜரிகை பளபளக்க கம்பீரமாக ராஜா போல உறவினர் புடைசூழ வெளியில் வந்தார்.

நல்லவேளை மலர் கிரீடம் மணமகனின் தோழன் கையில் இருந்தது அணிவிக்க தயாராக, அதற்குள் நான் மாப்பிள்ளை பாபுவையும், மாப்பிள்ளை பாபு என்னையும் பார்த்து  புன்னகித்து, இருவரும் கட்டித்தழுவி நட்பையும் அன்பையும் பகிர்ந்துகொண்டு ஊர்வலத்திற்கு தயராகுமுன் , மாப்பிள்ளை தோழன் மாப்பிள்ளைக்கு கிரீடம் சூட்டுவதற்கு முன்பு மின்னல் வேகத்தில் மீண்டும் ஒருமுறை என் நண்பனின் திருமுகத்தை பார்த்துக்கொண்டேன்.

அதுதான் நான் பங்குகொண்ட முதல் இஸ்லாமிய திருமணம்.

நண்பன் குதிரையில் ஏறி அமர்வதற்குமுன் அவரின் நெருங்கிய உறவினரிடம் என்னை நன்றாக கவனித்து உபசரிக்கும்படி அன்பு கட்டளை இட்டதிநிமித்தம் எனக்கு மிகுந்த மரியாதையும் உபசரிப்பும் கிடைத்தது.

கல்யாண விருந்தில் மட்டன்  பிரியாணியால் என்னை மூழ்கடித்தது அவர்களது அன்பும் உபசரிப்பும்.

கொண்டுவந்த பரிசுபொருளை நண்பரின் தம்பியிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன்.

இது நடந்து  பல வருடங்கள் கழித்து என் நண்பனை பார்த்தபோது நடந்ததை சொல்லி சிரித்துக்கொண்டோம்.

இந்த பதிவின் மூலம் என் நண்பனை நினைவு கூர்ந்ததில் எனக்கு "மட்டனற்ற" சாரி "மட்டற்ற" மகிழ்ச்சி.

மீண்டும் எனது இதயம் கனிந்த பக்க்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.9 கருத்துகள்:

 1. மட்டனற்ற மகிழ்ச்சி... வார்த்தையில் தான் என்னே ஒரு விளையாட்டு. அருமையான பதிவு. ரசித்து படித்ஹு முடிக்கையில், என் மனைவி.. எங்கே சாப்பிட வாருங்கள் என்று அழைக்க.. என்ன சாப்பாடு? என்று நான் கேட்க "மட்டன் பிரியாணி' என்ற பதில்.

  தொடர்ந்து எழுந்துகள்.

  பதிலளிநீக்கு
 2. haahaahaa timing ku erppa oru pathivu sir.

  இந்த பதிவின் மூலம் என் நண்பனை நினைவு கூர்ந்ததி எனக்கு "மட்டனற்ற" சாரி "மட்டற்ற" மகிழ்ச்சி.///

  super thodarnthu ezuthungal sir.

  word verification kaatuthu sir comment pannum pothu athai remove pannitta innum easy ya irukkum sir comment panna ungal blogg l.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, படித்தது பிடித்திருந்ததற்கு மகிழ்ச்சி.

   word verification remove செய்துவிட்டேன் ,

   நன்றி.

   கோ.

   நீக்கு
 3. புதிய வலைப்பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்கள் நண்பர் "விசுAwesome", 160 பதிவுகள் எழுதிவிட்டாரே என அவரை பின்னுக்கு தள்ள நீங்கள் அவசர அவசரமாக பதிவு எழுதுவது போல் தோன்றுகிறது. வார்த்தை விளையாட்டுகளுடன் சுவாரசியமாக நீங்கள் எழுதும் பதிவுகளில் சிலபல இடங்களில் சொற்பிழைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாடி" படி" மாது அவர்களுக்கு,
   வணக்கம்.பதிவுகளை "படி"த்ததற்காகவும், பிழைகளை "படி"த்துரைத்ததற்காகவும்.
   வலைத்தளத்தில் தமிழில் தட்டச்சு செய்வதிலும் முதற்"படி"யில் காலெடுத்து வைத்துள்ளதால் , எழுத்து பிழைகள் . இனி தமிழ் எழுத்துக்கள் அத்துப்"படி" ஆகும்வரை "படி"ப்"படி"யாக பிழைகளை தவிர்க்க முயற்சி செய்கிறேன். நண்பரோடு போட்டிபோடுவதற்காக எழுதவில்லை , நண்பர் விசுவின் பத்துப் "படி" யளவு ஊக்கதின் பேரிலேயே பதிவுகளை படைக்கின்றேன்.தொடர்ந்து பிழைகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   கோ

   நீக்கு
 4. வணக்கம் அரசே,
  அது சூப்பர், வழிந்த அசடை, கிழிந்த கைகுட்டையால் துடைத்துக்கொண்டு,
  பதிவு நல்லா இருக்கு,
  வாழ்த்துக்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு மிக்க நன்றி

  இஸ்லாமியர் திருமண நிகழ்ச்சியில் பங்குகொண்டு பிரியாணி சாப்பிட்ட அனுபவம் உண்டா?

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசருக்கு வணக்கம்,
   இல்லை, காரணம் எனக்கு நன்பர்கள் இல்லை.
   நன்றி அரசே

   நீக்கு
  2. வருகைக்கும் மிக்க நன்றி.

   சரி விடுங்கள், இனி வரும் நாளில் இன்ஷா அல்லா உங்களுக்கு அருமையான நண்பர்கள் வாய்க்கட்டும்.

   கோ

   நீக்கு