பின்பற்றுபவர்கள்

சனி, 4 அக்டோபர், 2014

தண்ணீர் தண்ணீர் கண்ணீர்!!!

                         தண்ணீர் தண்ணீர் கண்ணீர்!!!சமீபத்தில் நாங்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் விநியோகம் , (எதிர் பாராத விதமாக கனரக குழாய்கள் பழுது ஏற்பட்டதால்) பாதிக்கப்பட்டது, தண்ணீர் வராது அல்லது இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுதான் என்றிருந்தால் முன்னெச்சரிக்கையாக சேமிப்பு நடவக்கைகளை மேற்கொண்டிருக்கலாம், அதுவும் நம்ம ஊர்கள் போல, அண்டா,குண்டா, தவலை, குடம் பக்கெட்களில் தண்ணீர் பிடித்து வைக்கும் தேவை இல்லாத ஊர் இது, குழாயடி சண்டை இங்கே கொஞ்சம் கூட இல்லை - தெரியாது!!24 மணிநேரமும் தண்ணீர் சப்ளை  இருக்கும் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட தரம் பரிசோதிக்கப்பட்ட,தரம் உறுதி செய்யப்பட்ட நீர்(குடிநீர் என சொல்ல தேவையில்லை - எல்லாமே குடிநீர்தான்)

எனவே யாரும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை, எதிர்பாராத சமயத்தில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. உரிய நிர்வாகதினருக்கே இது ஒரு புதிய சவாலாக இருந்தது; எனினும் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் உடனே பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் போதுமான அளவுக்கு வீடு வீடாக அரசாங்கத்தினரால்- தண்ணீர் துறையினரால் விநியோகிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பல முக்கிய மையங்களில் பெரிய பெரிய தண்ணீர் தொட்டிகளை நிறுவி தேவையான அளவிற்கு தண்ணீர் வழங்கி  குடி மக்களின் சிரமத்தையும் மன உளைச்சலையும் போக்கியதுமின்றி, தொடர்ந்து தாங்கள் மேற்கொண்டிருந்த சீரமைப்பு பணிநிலைமையை - முன்னேற்றத்தை அவர்களது இணைய தளத்தில் மக்களுக்கு அறிவித்தவண்ணம் இருந்து இரவு முழுவதும்   பணியாற்றி   அடுத்த நாள் விடியுமுன்  நிலைமையை சரிசெய்தார்கள்.

(BOWSER- WATER TANK)

Arlington tanks

(WATER DISTRIBUTION BY THE GOVERNMENT)சுமார் 10000 வீடுகளும் 30,000 மக்களும் குடியிருக்கும் இந்த பகுதிகளை அந்த ஊர் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்திததுமின்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி துரித நிவாரணத்துக்கு வழி செய்ததோடல்லாமல் மக்களிடமும் மன்னிப்பு கோரப்பட்டது இத்தனைக்கும் இவர்களில் ஒருவரும் இந்த நிலைமைக்கு நேரடி காரனமில்லதவர்கள்.                                                                    
சற்று நம் நாட்டு நிலைமையை கொஞ்சம் யோசித்து பார்த்தல்....... வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோதான் தண்ணீர் வரும்ம்ம்ம்  ..... ஆனா ........ ??? அதுவும் சுகாதாரமானதக இருக்குமா??.இங்கே தண்ணீர் தண்ணீர் நம் நாட்டில் கண்ணீர் கண்ணீர்.

காரணம் இங்கே வளங்கள் சரியாய் பங்கிடப்படுகிறது,எந்த ஒரு ஆற்றையும் நதியையும் யாரும் தமதென்று சொந்தம் கொண்டாடி தாங்கள் ஊர் எல்லைக்குள் கட்டிப்போடுவதில்லை.

மரங்கள் பாதுகக்கப்படுகின்றன பருவகாலம் தோறும் அவைகள் அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் பராமரித்து பாதுகக்கப்படுகின்றன, யாரும் வெட்டி கூருபோட்டுக்கொள்வதில்லை, கடத்துவதில்லை.(மரம் பற்றிய கவிதை ஒன்று பின்னர் இணைக்கின்றேன்),

ஆற்று மணலை யாரும் கொள்ளை அடிப்பதில்லை, அரசாங்கமே தண்ணீரை தனியார் தண்ணீர் நிறுவனங்களுக்கு மானிய விலைஎன்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு கொடுத்து எந்த அரசியல்வாதியும் ஆதாயம் தேடுவதில்லை.

நம்ம ஊரின் மழை நீர் சேமிப்பு திட்டம் எந்த அளவிற்கு செயல் பாட்டில் இருக்கின்றது? அல்லது நம்ம ஊர் அரசுகளுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை  இருக்கின்றதா?

ஒருவேளை வருண பகவானை குற்றம் கூறுவோமேயானால் அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் "நல்லார் ஒருவர்(தலைவர்) உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.(நேற்றைய பதிவோடு இதை இணைத்துப்பார்பதாயிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நன்றி,

மீண்டும்  ச(சி)ந்திப்போம்.

கோ10 கருத்துகள்:

 1. அருமையான பதிவு நண்பரே
  ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது

  பதிலளிநீக்கு
 2. என்ன செய்வது சார்... மக்கல் தொகைதான் எங்கலுக்கு இருக்கும் மிகப்பெரிய ப்ராப்லம்

  அதனாலையே இங்க எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பதிவு நண்பா, ஒரு அண்டா தண்ணீருக்கு நாம் பட்ட கஷ்டம் நமக்கு தான் தெரியும். நம் நாட்டில் இந்த நிலைமை எப்போது வரும்? தொடர்ந்து எழுதவும்.

  பதிலளிநீக்கு
 4. கடவுள் தத்துவமே காரணம் . பேராசையின் முதல் படி அதுவே.
  எனக்கு மட்டுமே கொடு கேட்டு முறை தவறி பெற முனைப்பு.
  அதற்கு கடவுளுக்கே லஞ்சம். தனக்கு நியமில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற ஆசை.
  இதன் உச்ச கட்டம் இன்று உள்ள ஊழல்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அரசே,
  எந்த குறையும் இல்லா நாட்டில் நலமுடன்
  இங்கு உள்ள குறைகளும் களையும் கவலையுடக்
  கலந்த பதிவு அருமை,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு மிக்க நன்றி

  எந்த குறையும் இல்லை என்று சொல்ல முடியாது Every coin has two sides .

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசருக்கு வணக்கம்,
   நாணயத்திற்கு இரண்டு பக்கமா?
   நன்றி.

   நீக்கு
  2. வருகைக்கும் மிக்க நன்றி.

   நா- நயத்திற்கு எத்தனை பக்கங்கள் என்று கற்றுத்தாருங்கள்.

   மீண்டும் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   கோ

   நீக்கு
 7. வணக்கம்,

  அரசரின் முதல் பதிவு இதுவோ,

  தண்ணீர் பற்றிய பரிவு,

  அருமை அருமை அரசே,,,,,,

  பதிலளிநீக்கு
 8. பேராசிரியரே,

  பார்த்தாலே தெரிகிறதே எத்தனை பிழைகள்?,

  இப்போது எழுதும் பதிவோடு(மழைக்குள் குடை) தொடர்பு படுத்திய உங்களுக்கு நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு