வழக்கமான பேருந்து பயணத்தின்போது அன்றைய காலை செய்தித்தாளை கொஞ்சம் புரட்டிகொண்டிருந்தேன்.
அதில் ஒரு செய்தியும் அதன் தொடர்பான ஒரு புகைப்படமும் என் கண்களை கவர்ந்தன.
அந்த செய்தி,
பள்ளிச்சீருடை கொள்கைக்கு முரணாக செயல்பட்ட இரண்டு மாணவியர் - சகோதரிகள் பள்ளியை விட்டு வெளியேற்றபட்டனர்,பெற்றோர்கள் சீற்றம்.
அதெப்படி பள்ளி மாணவிகள் தங்களின் பள்ளி சீருடை கொள்கைக்கு மாறுபட்டு நடந்துகொள்ளமுடியும், பள்ளி என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அந்தந்த பள்ளிகளின் சீருடைதானே.
நன்றி google image
சரி என்னதான் நடந்திருக்குமென கொஞ்சம் ஆழமாக விரிவாக படித்துப்பார்த்தேன்.
அதில்,
புற்றுநோயால் பதிக்கபட்டிருக்கும் தனது தாத்தாவிற்கு ஒரு மாரல் சப்போர்டாகவும், இது தொடர்பான ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும், அவர்கள் தங்களின் பெற்றோர்களின் அனுமதியுடன் பணம் கொடுத்து வாங்கிய புற்றுநோய் விழிப்பு பேட்ஜ்களை பள்ளிக்கு வரும்போது அவற்றை தங்களின் மேலாடை - பிளேசரில் அணிந்திருந்தனர்.
ஆனால் பள்ளி நிர்வாகமோ அந்த மாணவியரிடம் தங்கள் மேலாடையிலிருந்து அந்த விழிப்புணர்வு பேட்ஜ்களை எடுக்குமாறு சொல்லி இருக்கின்றனர், மேலும் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் புத்தக பைகளிளோ அல்லது உங்கள் பென்சில் கேஸ் , பர்சுகளில் குத்திகொள்ளுங்கள் என்று கூறியும், மாணவிகள் விடாபிடியாக பள்ளியின் வேண்டுகோளுக்கு மறுப்புதெரிவித்ததை தொடர்ந்து அந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு வெளியேற்றி இருக்கின்றது.
அதை தொடர்ந்து அந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முறை இட்டிருக்கின்றனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் தமது பள்ளி சீருடை கொள்கையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை.
சீருடை என்பது அனைத்து மாணவ மாணவியரும் எந்த ஏற்ற தாழ்வும் இன்றி சமமாக மதிபளிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் எந்த விதத்திலும் வேறானவர்கள் இல்லை என உணர்ந்து கொண்டு தங்களின் கடமைகளை சரிவர ஆற்ற வகை செய்யும் பொருட்டே எல்லா பள்ளிகளிலும் கடைபிடிக்கபடுகிறது.
இதில் எந்த நிலையிலும் எந்த மாற்று கருத்திற்கும் இடமில்லை. பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்க்கும்போதே அந்தந்த பள்ளிகளின் எல்லா சட்ட திட்டங்களுக்கும் உடன்படுவதாக உறுதி அளித்துதானே விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிடுகின்றனர், பிறகு எப்படி அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் கொள்கைக்கு மாறாக கொடிபிடிக்கமுடியும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
மாணவிகளின் நோக்கம் உன்னதமாக இருந்தாலும், அவர்களின் தாத்தாவுக்கும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவையும் கொடுக்க பள்ளி சீருடைகளை பயன்படுத்த தேவையில்லை வேறு எந்த விதமாகவும் அவர்களது தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கலாம்.
மேலும் நாங்கள் புத்தக பையிலேயோ அல்லது வேறு எந்த உடமைகளிலேயோ நீங்கள் அந்த பேட்ஜை குத்திகொள்ளுங்கள் என சலுகை கொடுத்தும் மாணவிகள் கீழ் படியாததினால்தான், அவர்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று.
மேலும் இவர்களை போன்று நாளை வேறுசிலர் வேறு சில பேட்ஜிகளுடன் பள்ளி சீருடை அணிந்து வருவார்கள், அவர்களுக்கும் நாங்கள் அனுமதிகொடுக்க வேண்டி வரும், எனவே பள்ளியின் நிலைபாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது, வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பள்ளியை பற்றிக்கொள்ளலாம் என மிகவும் உறுதியுடன் பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
பின்னர் தங்களது தவறை உணர்ந்த மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் பள்ளியின் சீருடை கொள்கைக்கு ஆதரவளித்தனறாம்.
அந்த மாணவியரின் தாத்தாவின் உடல் நிலைகண்டு இறக்கப்படும் நான் அந்த மாணவியரின்-அவர்களின் பெற்றோர்களின் முந்தய செயல் கண்டு ஆதங்கபடுகின்றேன் ஒரு ஆசிரிய பெற்றோர்களின் மகனாக இருந்து.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
என் பயணம் முடிந்து பேருந்தை விட்டு இறங்கும்போது எனக்கு முன் இறங்கிய ஒரு பள்ளி மாணவனின் சீருடையில் "ஐ லவ் மை ஸ்கூல்" என்ற வாசகம் அடங்கிய ஒரு பேட்ஜ் அவனது பள்ளி சீருடையில் அல்ல அவனது புத்தக பையில் குத்தபட்டிருந்தது என் கண்களில் பட்டது.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
ஒரு கல்லூரி விரிவுரையாளராக சொல்கிறேன் அந்த பள்ளி நிர்வாகத்தின் மேல் தவறேதும் இல்லை. இன்று இந்த பழக்கத்தை ஊக்கப்படுத்தினால் , நாளை அது இனம் சார்ந்த பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.சீருடை என்பதே எந்த வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அனைவரும் சகோதரத்துவமாக பழகவே.பயிலும் வயதில் சமூக அக்கறையுடன் இருப்பது வரவேற்க்கத்தக்கது.ஆனால் அதை பள்ளிக்குள்ளேயே செய்ய வேண்டும் என்பதில்லை.மாணவர்களுக்கு நாம் எதை விதைக்கிறோம் என்பதைப் பொறுத்து எல்லாம் இருக்கிறது.
பதிலளிநீக்குதிருமதி அனிதா அவர்களுக்கு,
நீக்குஎமது பதிவினை படித்து முதன் முதலாக பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
தங்களின் கருத்தே எமது கருத்தும் என்பதால் தங்கள் பார்வையை வழிமொழிகின்றேன்.
நேரமிருந்தால் எமது மற்ற பதிவுகளை குறித்தும் உங்களின் பார்வை என்ன என்பதை தெரிவிக்கவும்.
நன்றி
கோ
விழிப்புணர்வினைத் தூண்டும் வாசகங்களை அணிவதில் தவறில்லை என்பதே என் கருத்து
பதிலளிநீக்குகல்வியை மட்டும் போதிப்பதல்ல, ஒரு பள்ளியின் பணி,
மாணவர்களிடம் எதிர்கால நம்பிக்கைகளை, விழிப்புணர்வினை ஊட்டுவதும் பள்ளியின் கடமைதான்
பள்ளிகள் முக்கியமாக செய்ய வேண்டியது இதைத்தான்
கரந்தையார் அவர்களுக்கு ,
நீக்குபணிவான வணக்கங்கள்.
தங்கள் கருத்திற்கு நன்றி. விழிப்புணர்வினை ஊக்கபடுத்த பள்ளிகளின் பங்கு மிக முக்கியம்தான் அதே சமயத்தில் இது ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா பிள்ளைகளும் அணிந்துகொள்ளும் வகையில் பள்ளியே அனுமதித்து இருந்தால் பரவாயில்லை.
பள்ளி நிர்வாகத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும் என்பது தானே ஒவ்வொரு மாணவனின் முதல் கடமையாக இருக்க வேண்டும், ஒழுக்கம் என்பது அங்கிருந்துதானே ஆரம்பிக்கின்றது. இதுபோன்று வேறொரு விழிப்புணர்வு அல்லது மதம் இனம் மொழி கலாச்சாரம் , அரசியல் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேட்ஜை அணிந்துகொண்டு வேறு சில மாணவர்கள் வருவார்கள் அவர்களையும் அனுமதித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் , பிறகு இது எங்கே போய் முடியும், எனவே இதுபோன்ற செயல்களை பள்ளியில் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.
எனினும் உங்கள் கருத்தை எதிர்க்கவில்லை ஆனால் எனக்கு ஏற்புடையதாக இல்லை, தவறாக கருதவேண்டாம்.
வருகைக்கும் தங்களின் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.
கோ
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு'நல்லாருக்கு உங்கள் பதிவுகள். தொடரட்டும் உங்கள் அனுபவம் மற்றும் கட்டுரைகள். கரந்தையார் தஞ்சாவூர் நன் மக்களை நினைத்துக்கொண்டு ஆதரித்து எழுதியுள்ளார். போட்டிக்காக ஒவ்வொரு மாணவரும் வித விதமான பேட்ஜ் களை அணிய ஆரம்பித்தால் பள்ளிக்குத் தலைவலிதான்.
பதிலளிநீக்குநெல்லை தமிழனே,
பதிலளிநீக்குபாராட்டுக்கு மிக்க நன்றி, சரியாக சொன்னீர்கள் மாணவர்கள் முதலில் படிப்பில் கவனம் செலுத்தட்டும் , கூடவே நாட்டு நடப்புகளையும் கூர்ந்து கவனிக்கட்டும் , பட்டம் பெற்று தங்களின் கால்களில் தாங்கள் நிற்கும் நிலையில் மற்றவற்றை பற்றி சிந்திக்கட்டும்.
மாணவ பருவத்தில் போராட்டம் படிப்பு தொடர்பானதாகமட்டுமே இருந்தால் நல்ல சமூதாயம் மலர்ந்து மனம் வீசும்.
வருகைக்கு நன்றி.
நட்புடன்.
கோ.
நண்பரே! மாணவர்களின் ஆர்வத்தில் தவறில்லை என்றாலும் தாங்கள் சொல்லி யிருப்பது போல் பள்ளி நிர்வாகமும், மாணவிகளும் கலந்து ஆலோசித்து ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து விழிப்புணர்வை தெரியப்படுத்தி இருக்கலாம. பள்ளி நிர்வாகம் தடுத்ததில் தவறில்லை. பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் பேசியிருக்கலாம். விழிப்புணர்வைத் வெளிக்காட்ட இது ஒன்றுதான் வழி என்பது இல்லையே! பல வழிகள் யாரையும் பாதிக்காதபடி இருக்கும் போது எதற்காக இப்படி.....
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே!
அன்பிற்கினிய நண்பர்களே,
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்,விழிப்புணர்வினை காட்ட பல வழிகள் உள்ளன.கல்விக்கூடத்தை கல்வி கேள்வி ஒழுக்க விளைநிலமாக மட்டுமே பயன்படுத்தவேண்டும்,
விழிப்புணர்வு பேட்ஜ்களைபள்ளி நேரமில்லாத வேளைகளில் அணிந்து தங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி பெற்றோரும் அறிவுறுத்தி இருக்கலாம்.
தாத்தாவிற்கு ஒரு மாரல் சப்போர்ட் வீட்டுக்குள்ளேயே அளித்திருக்கலாம், பள்ளிவரை அதும் சீருடையின் மாண்பை குலைக்கும் வகையில் பள்ளியின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் நடந்துகொண்டது கொஞ்சம் துரதிஷ்டவசமானதுதான்.
நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கின்ற காலத்தில்,ரெடிமேட் வெள்ளை சட்டையில் கருப்பு நிற சிறிய துணியில் அந்த சட்டை தயாரித்த நிறுவனத்தின் - பிராண்ட் பெயர் சட்டை பையில் வெளியில் தெரியும்படி தைத்திருந்தாலே எம்ப்ராய்டரி செய்திருந்தாலோ அதை அணிய அனுமதிகிடையாது.....ம்ம்ம்ம்ம்ம் அது அந்த காலம்.
உங்கள் பள்ளிகளில் எப்படி.
நட்புடன்
கோ.
பள்ளி எடுத்த முடிவு சரி தான். ஏனெனில் அடுத்த பேட்ஜ் என்னவாக இருக்குமோ ..யாரறிவார்!!
பதிலளிநீக்குதருமி ஐயா அவர்களுக்கு வணக்கம்.
பதிலளிநீக்குஆம் ஐயா தங்களின் கருத்துதான் எமதும்.
பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி,
கோ
எங்கப்பா என் பின்னூட்டம் காணோம்,
பதிலளிநீக்குபின்னூட்டம் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் , மீண்டும் அனுப்ப முடியுமானால் அனுப்புங்களேன்.
நீக்குகோ