பாட்டுக்கு பாட்டு
கடந்த இரவு சில நண்பர்களின் குடும்பங்களோடு ஒரு விருந்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நகரத்தை சார்ந்தவர்கள்.
எனவே அவர்களின் பேச்சும், அவர்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் , ஆட்கள் இடங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததால் அங்கு கூடியிருந்த அனைவரும் மிகவும் சுவாரசியமாக தங்களுடைய அந்த கூடுகையை ரசித்து அனுபவித்துகொண்டிருன்தனர்.
அந்த நேரத்தில், கூடியிருந்த ஒவ்வொருவரும் தங்களின் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.
இவ்வாறாக மலரும் நினைவுகளை ஆளாளுக்கு பகிர்ந்துகொண்டு நேரம் மகிழ்ச்சியாக கழிந்தது.
அதன் பின்னர் அவர்களுக்குள் ஒரு சிறு விளையாட்டு: "பாசிங் த பார்சல்"
அதாவது, முன்னரே கட்டிவைக்கப்பட்ட ஒரு பார்சலை வட்டமாக அமர்ந்து, இசை இசைக்கும் போது இடமிருந்து வலபக்கமாக இருக்கும் நபரிடம் கொடுக்க வேண்டும்.
இசை நிற்கும்போது அந்த பார்சல் யாரிடம் இருக்கின்றதோ அவர் அந்த விளையாட்டை முன்னின்று நடத்துபவர் சொல்லும் ஒரு காரியத்தை சபை முன் செய்யவேண்டும்,- பாட்டு பாடுவது, நடனமாடுவது, ஜோக் சொல்லுவது,போன்று.
அதை செய்தவுடன் அந்த பார்சலின் மேல் இருக்கும் பேப்பரை பிரித்து அதனுள்ளே இருக்கும் சிறிய பரிசு பொருளை எடுத்துகொண்டு அந்த விளையாட்டிலிருந்து ஒதுங்கிகொள்ளவேண்டும்.
மீண்டும் இசை இசைக்க ஆரம்பிக்கும் , பார்சல் ஒவ்வொருவராக சுற்றி வரும் இசை நிறுத்தப்படும்போது அந்த பார்சல் யாரிடம் இருக்கின்றதோ அவரிடம் ஏதேனும் செய்யும்படி கூறப்படும் அவரும் அதை செய்தபிறகு அடுத்த பேப்பரை பிரித்து அதிலிருக்கும் பரிசு பொருளை எடுத்துகொண்டு விலகவேண்டும்.
இப்படியாக கடைசிவரை யார் அவுட் ஆகாமலிருக்கின்றாரோ அவருக்கே அந்த கடைசி பேப்பரில் சுற்ற பட்டிருக்கும் அந்த விலைஉயர்ந்த பொருள் (!!) பரிசாக கிடைக்கும்.
அப்படி கடைசி பொருளை தான் பெறவேண்டும் என்பதற்காக அந்த பார்சல் தன்னிடம் வந்த உடனே மின்னல் வேகத்தில் அடுத்தவரிடம் அதை கைமாற்ற முயற்சிப்பார்கள்.
இவ்வாறு அந்த விளையாட்டில் கடைசியாக ஒரு ஆறு வயது சிறுவன் வெற்றிபெற்று பரிசுபெற்றார்.
அதை தொடர்ந்து பாட்டுக்குப்பாட்டு.
இதில் இரண்டு குழுக்கள் வழக்கம் போல பாடல்களை பாடி மகிழ்ச்சி கூட்டினர்.
இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின்போது, கல்லூரி நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வந்தது.
அதை உங்களோடு இப்போது:
முதுகலை இரண்டாம் ஆண்டு, எல்லா மாணவரும் படிப்பில் தீவிர கவனமாக இருந்தனர்.
முதலாண்டில் அரியர்ஸ் இருந்தால் இரண்டாம் ஆண்டு அதை கிளீயர் செய்துகொள்ளலாம் எந்த கால விரயமும் இன்றி, ஆனால் இரண்டாம் ஆண்டில் அரியர்ஸ் வைத்துவிட்டால் குறைந்த பட்சம் ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை வீணாகுமே என்று பயந்து அனைவரும் மிகவும் சீரியசாக படிப்பில் முழு கவனம் செலுத்திகொண்டிருந்த நேரமது.
முக்கியமாக Management Information System என்றொரு புதிய பாடம் அறிமுகம் செய்யபட்டிருந்த நேரமது, அந்த பாடத்திற்கான சரியான புத்தகமும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் நூல்நிலயத்திலுள்ள இது சம்பந்தமான வேறு ஏதேனும் புத்தகங்கள் கிடைத்தால் அதிலிருந்து குறிப்புகள் எடுத்துகொண்டு, பரீட்ச்சைக்கு தயாராகிகொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் எங்கள் பேராசிரியர் எங்களை ஒரு நாள் ரிலாக்க்ஸ் பண்ணும் வகையில் ஒரு இன்ப சுற்றுலா சென்று வரும்படியும் அதில் தானும் வருவதாகவும் கூறி ஒரு இரண்டு தேதிகளை அவரே முன்மொழிந்தார்.
அந்த பேராசிரியர் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் (இப்போது ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலை கழகத்தில் பணியாற்றிவருகிறார்) எனவே மறுப்பேதும் சொல்லாமல் அனைவரும் சுற்றுலாவிற்கு சம்மதித்தோம்.
அந்த இரண்டு தேதிகளில் ஒன்று வெள்ளிக்கிழமை, அதையே நாங்கள் எல்லோரும் தேர்வுசெய்தோம்.
எங்கே போவது?
ஊட்டி, கொடைக்கானல் ?
ஒரு நாளில் போய்வர முடியாது.
பெங்களூர், மைசூர்?
ம்ம்ம்ம்.... அதுவும் சாத்தியமல்ல.
மகாபலிபுரம்?
சென்ற ஆண்டுதான் அங்கே போனோமே? (அதை பற்றி பிறகு சொல்கிறேன்)
சரி ஒரே நாளில் சென்று வரும்படி அதே சமயத்தில் நல்ல இயற்க்கை அழகு நிறைந்த இடமாக ஒரு இடம் இருக்கு.
அது "ஒகனேக்கல்"
அந்த இடம் எங்களில் யாரும் அதற்க்கு முன் பார்த்திராத இடமாகவும் ஒரே நாளில் சென்று திரும்பகூடியதாகவும் இருந்ததால் எல்லோரும் சம்மதித்து அதற்க்கான ஏற்பாடுகளை செய்தோம்.
அந்த நாளும் வந்தது.
நாங்கள் பத்தொன்பது மாணவ - மாணவியர் , ஒரு ஆசிரியர்.
அதிகாலையிலே (கோழி கூவர நேரம்) அனைத்து மாணவர்களும் மாணவியரும் கல்லூரி வளாகத்தில் கூடிவிட்டோம்.
வாகனம் ஒழுங்கு செய்த மாணவர் இன்னும் வரவில்லை ஏனென்றால் வாகனம் தயாராகவில்லை.
என்ன செய்வது, அருகிலிருந்த ஒரு தேநீர் கடைக்கு பெரும்பாலான மாணவர்கள் சென்று விட்டனர்.
மாணவிகளுக்கு துணையாக நானும் இன்னும் சில மாணவர்களும் கல்லூரி வளாகத்திலேயே இருந்தோம்.
பேராசிரியர் கல்லூரி வாட்ச்மேனிடம் எதோ பேசிகொண்டிருந்தார்.
சுமார் 7.30 மணியளவில் இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கல்லூரி வளாகத்தினுள் நுழைந்தன.
அதில் ஒன்றில் நண்பரும் இருந்தார்.
உடனே தேநீர் குடிக்க சென்ற அனைவரும் ஓடி வந்தனர்.
இரண்டு டெம்போ டிரவலர்களில் பயணம் தொடங்கியது.
எங்கள் வாகனத்தில் ஐந்து மாணவியர் ஐந்து மாணவர்கள்.
அடுத்த வாகனத்தில் மூன்று மாணவியர் ஆறு மாணவர்கள் ஒரு ஆசிரியர்.
இனிய பயணம்.
பல சுவாரசிய மான கதைகளை பேசிக்கொண்டு இடையிடையே பாடங்களை பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம்.
சரியாக ஒரு பதினோரு மணிக்கு ஒக்கனேகல் வந்தடைந்தோம்.
ஆஹா,... என்னே ஒரு ரம்மியமான சூழல், அருவி, மலைகள், பாறைமீது தவழ்ந்தோடும் நீரோடை,பரிசல், மரம் செடி கொடிகள் அப்பப்பா, படிப்பை மறந்தோம் பயண களைப்பை மறந்தோம் மனதினில் ஒரு இனம்புரியாத சுகத்தை உணர்ந்தோம்.
நீரோடையை கண்டதும் எல்லோரும் அதை நோக்கி ஓட ஆரம்பித்தோம். கால்களை நனைத்தோம்.
பெரும்பாலானோர் நீராடியும் மகிழ்ந்தோம்.
அங்கே நானும் இன்னும் ஒரு சில நண்பர்களும் ஆயில் மசாஜ் செய்துகொண்டு பின்னர் குளிர்ந்த நீரில் நீராடி மகிழ்ந்தோம்.
அதே ஓடையில் அங்கேயே பிடித்து மசாலா தடவி பொறிக்கப்பட்ட மீன்களை சுவைத்து மகிழ்ந்தோம்.
பின்னர் அவரவர் கொண்டு வந்திருந்த மத்திய உணவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து உண்டோம்.
அதன் பின்னர் பரிசிலில் பயணித்தோம் , கொஞ்சம் திகிலான பயணம் தான், அதிலும் அந்த பரிசிலை ஓட்டுபவர் ஒரு குறிப்பிட்ட இடம் சென்றவுடன் பரிசிலை ரவுண்டு சுற்றி இயக்க சிலருக்கு வந்தது மயக்கம்.
இப்படியாக அந்த நாளின் பெரும் பகுதியை அந்த இயற்க்கை கொஞ்சும் நீர் வீழ்ச்சியிலும் நீரோடையிலும் கழித்து ஊர் திரும்ப வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்.
இப்போது பேச்சு சினிமா பாடல்கள் பக்கம் திரும்பியது.
சரி நாம் இரண்டு குழுக்களாக பிரிந்து பாட்டுக்கு பாட்டு பாடலாம்.
ஒரு குழு பாடி முடிக்கும் போது எந்த எழுத்தில் முடிக்கின்றனரோ அதே எழுத்தில் அடுத்த குழுவினர் தொடங்கவேண்டும்- இது தான் விதி.
சரி மாணவர்கள் மாணவியர் கலந்த குழுக்களாக பிரிக்கலாம் - இது ஒரு சாரார்.
வேண்டாம் வேண்டாம் மாணவர்கள் ஒரு குழு - மாணவியர் ஒரு குழு இந்த முன்மொழிவு மாணவியரிடமிருந்து வந்ததால் அதற்க்கு மறுப்பின்றி ஒத்துக்கொண்டோம்.
சரி முதலில் யார் ஆரம்பிப்பது? லேடீஸ் முதலில்.
என்ன பாடுவது?.....மாணவிகள் பேசிக்கொண்டனர்.
மாணவர் பக்கமிருந்து ஒரு யோசனை சொல்லப்பட்டது, " என்ன பாடுவது எதில் ஆரம்பிப்பது என யோசிப்பதால். நீங்கள் "எ" என்ற எழுத்தில் ஆரம்பியுங்கள் என ஒரு யோசனை சொல்லப்பட்டது.
அப்போது வண்டி கிளம்பி ஒரு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் ஆகி இருக்கும்.
யோசனை பிடித்துபோக , ஒரு மாணவி , " எனக்கொரு மகன் பிறப்பான்..."என பாடினார்.
உடனே மாணவர் பக்கமிருந்த ஒரு நண்பன் ஆர்வ கோளாறின் மிகுதியால்,"அவன் என்னைபோலவே இருப்பான்"
என பாட எல்லா மாணவர்களும் பெருத்த சத்தமெடுத்து சிரிக்க ஆரம்பித்தனர்.
அந்த மாணவிக்கு ஒன்றும் புரியாமல் திகைத்தார்.
பிறகு சட்டென்று அர்த்தம் புரிந்து கொண்டு , வெட்கத்தாலும், வேதனையாலும் அவமானத்தாலும், அழ ஆரம்பித்து விட்டார்.
பாடல் பாடிய அந்த மாணவனும் மற்ற எல்லா மாணவர்களும் எவ்வளவோ சொல்லியும் அந்த மாணவி அழுவதை கொஞ்சமும் நிறுத்தவே இல்லை.
அதனால் பாட்டுக்கு போடப்பட்டது ஒரு பெரிய "பூட்டு".
மற்ற மாணவியரும் எங்களிடம் கொஞ்சம் கோபமாகவே இருந்தனர், " அதெப்படி நீங்கள் அப்படி பாடலாம், நாங்கள் இன்னும் முழுமையாகவே பாட ஆரம்பிக்கவில்லை அதற்குள் நீங்கள் அப்படி பாடியது வேண்டுமென்றே செய்ததுபோல் தான் இருந்தது". என சொல்லி கோபப்பட்டனர்.
மாணவர்களும் சம்பந்தப்பட்ட மாணவனிடம் கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தோம், நல்ல ஒரு சந்தோஷமான சூழ்நிலை இப்படி ஆகிவிட்டதே என்றெண்ணி.
அந்த மாணவன் மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் அந்த மாணவி அவரிடம் மட்டுமல்லாது எங்கள் எவரிடமும் பயணம் முடியும் வரை பேசவில்லை.
பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் வண்டிகளை நிறுத்தி எங்கள் பேராசிரியர் எங்கள் எல்லோருக்கும் கேக் , மற்றும் குளிர்பானங்கள் வாங்கிகொடுத்தார் அதையும் அந்த மாணவி சாப்பிடவில்லை, அந்த மாணவனும் தான்.
பிறகு கொஞ்ச நாளில் அந்த நிகழ்ச்சியை எல்லோரும் குறிப்பாக அந்த மாணவி மறந்து விட்டு சகஜ நிலைமைக்கு திரும்பினார்.
அந்த மாணவனும் அந்த மாணவியும் இப்போது அமெரிக்காவில் குடியும் குடித்தனமுமாக இருக்கின்றனர் என்று கேள்விபட்டேன்.
தனிதனி கும்பங்களாக தனிதனி குடியுமாக.
ஆம் அந்த மாணவி தனது கணவன் மற்றும் குழந்தைகளோடும் , அந்த மாணவன் தனது பட்டத்து ராணியுடனும் அவர்தம் இரண்டு ராசாத்திகளுடனும் அமெரிக்க நாட்டின் இருவேறு பட்டணங்களில் வசிக்கின்றனர்.
அந்த பாடலில் வந்ததுபோல் அவருக்கு மகன் பிறந்தானா? அவன் யாரைப்போல இருப்பான்?...
தகவல் அறிந்தால் சொல்லி அனுப்புகின்றேன்.
நன்றி!
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
அட பாவி !
பதிலளிநீக்கு//வெட்கத்தாலும், வேதனையாலும் அவமானத்தாலும், அழ ஆரம்பித்து விட்டார்//
பதிலளிநீக்குவெட்கத்தால் சரி, அந்த வேதனை .. அவமானம் எல்லாம் உங்கள் கற்பனை என்று என்னால் அடித்து சொல்ல இயலும் !
அந்த வேதனை, அவமானம் என்பதை சம்பந்தப்பட்டவரே என்னிடம் சொன்னார் என்று நானும் அடித்து சொல்ல முடியும்.
பதிலளிநீக்குஅடப்பாவிகளா, இதெல்லாமா கற்பனை செய்ய முடியும்?
கோ
இது பாட்டுக்கு பாட்டு விளையாட்டு அல்ல!
பதிலளிநீக்குபாட்டுக்கு பூட்டு விளையாட்டு!
விளையாட்டு வினையா போச்சு!
என்பார்களே?
அது இதுதானோ?
நன்றியுடன்,
புதுவை வேலு
இது விளயாடுமுன்னே வினையான கதை.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி புதுவை வேலு.
நட்புடன்
கோ
வருத்தப்படுகிறேன்...
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி தனபால்.
நீக்குநானும் வருத்தப்பட்டேன்.
நட்புடன்
கோ
"கோயில் பிள்ளை" பெயர் வித்தியாசமா இருக்கிறது
பதிலளிநீக்குகற்பனையோ நிஜமோ சொன்ன விதம் சுவை .
மூங்கில் காற்று என் விலாசம் தேடி வந்து என் இதயம் வருடியதர்க்காய் மிக்க நன்றி.
நீக்குபெயர் எனது புனைபெயரல்ல.
நிகழ்ச்சியில் கற்பனை கடுகளவு (வேண்டுமென்றால்) இருந்திருக்கலாம், மற்றபடி இது முழுக்க முழுக்க ஒரிஜினல் ஆவின் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி பதிவுதான்.
எமது மற்ற பதிவுகளுக்கும் தங்களின் கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன.
நட்புடன்
கோ
அந்த மாணவிக்கு நகைச்சுவை உணர்வே இல்லை போலிருக்கிறது
பதிலளிநீக்குநகைச்சுவை உணர்வு இருந்தாலும், இடம்- "பொருள்" -ஏவல் என்று ஒன்று இருக்கின்றதல்லவா? அதுவும் சக ஆண் மாணவர்களின் சிரிப்பு சூழ்நிலையை இன்னும் மிகையாக கூட்டியிருக்குமல்லவா?
நீக்குவருகைக்கும் எதார்த்த பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
நட்புடன்.
.
கோ
தமிழா, நானும் அந்த வகுப்பில் படித்தவன் தான். அந்த மாணவி நகைச்சுவை உணர்வு உள்ள மாணவி தான். அந்த நேரத்தில் அனைவரின் எதிரிலேயும் இந்த நிகழ்ச்சி நடந்ததாலும் சரி, மற்றும் மற்ற மாணவர்கள் சிரித்ததினாலும் அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். மற்ற படி இந்த மாணவி நாங்கள் செய்யும் சேட்டைகளை எல்லாம் ரசித்து சிரிப்பவர்கள் தான். அந்த மாணவனின் நிலைமையும் பரிதாபம் தான். அவனை பற்றியும் நினைத்து பாருங்களேன்.
நீக்குநண்பரே,
நீக்குஉங்களுக்கு அந்த மாணவனின் முகம் நினைவிருக்கின்றதா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நட்புடன்
கோ
சுவையான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவாங்க தளிர்,
நீக்குநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சிலரில் நீங்களும் ஒருவர்.
முதன்முதலாக பின்னூட்டம் அளித்து மகிழ்ச்சி கூட்டியதற்காய் மிக்க நன்றி.
எமது மற்ற பதிவுகள் குறித்தும் கருத்து தெரிவியுங்கள்.
சந்திப்போம்.
நட்புடன்
கோ
பாட்டு வேட்டு வைத்துவிட்டது... என்றாலும் ஒரு சுவையான பதிவுகிடைத்ததே!
பதிலளிநீக்குநல்லதுதான்!
தொடர்கிறேன்.
நன்றி!!!
த ம ?
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்குநட்புடன்
கோ
அய்யா கோ அவர்களே என்னை யார் என்று தெரியாமல், தங்கள் தோழி என்று நினைத்துவிட்டீர்கள். நான் அவள் இல்லை. எனக்கு வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் எல்லாம் இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. நன்றி.
பதிலளிநீக்குஎப்படியும் தோழிதான். வெளி நாட்டில் இருப்பவர்கள் பெரிய ஆட்களா?
பதிலளிநீக்குஅப்படி என்ன்றால் நான் எப்படிஇங்கே?
பாட்டுக்கு பாட்டை ரசித்தீர்களா?
கோ