Followers

Saturday, February 28, 2015

"பிச்சைபுகினும் "

கற்கை நன்று

நண்பர்களே,

தமிழ் இலக்கணத்தில் ஒரு பதம் உண்டு அது "இழிவு சிறப்பும்மை" என்பதாகும்.

Thursday, February 26, 2015

பழையன புகுதலும்!

மறு சுழற்சி மனமகிழ்ச்சி!!

நண்பர்களே,

கடந்த மாதம் நாம் அனைவரும் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் அனைத்தையும் கொண்டாடினோம்.

Saturday, February 21, 2015

மௌன விரதம்.


நா காக்க !!

நண்பரோடு தொலைபேசியில் அளவலாவிக்கொண்டிருந்தேன். அப்போது  வேறொரு நண்பரின் நலம்  குறித்து விசாரிக்கையில் , அவர் கடந்த சில நாட்களாக விரதம் மேற்கொண்டிருப்பதாக தகவல் அறிந்தேன்.

Friday, February 20, 2015

சமூகத்தின் சாயல்

என்ன ?

Image result for picture of a society

இசை கலைஞன் என்றறிந்து:

வீணையை பரிசளித்தது
வியந்துபோனேன்

Thursday, February 19, 2015

நடந்தது என்ன - 3

துப்பு துலங்கியது !!

தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க இங்கே  சொடுக்கவும்.


ஐந்தாம் தளத்தில்  தான் துப்புரவு செய்ய வந்தபோது சாராவும் சோபியாவும் ஒன்றாக(!!??) இருந்ததினால் நான் மற்ற டேபிள்களை சுத்தம் செய்துவிட்டு அவர்கள் தட்டு டம்பளர்,கோப்பைகளை ஐந்தாம் தளத்து டிஷ் வாஷரில் போட்டு ஆன் செய்துவிட்டு திரும்பும்போது சோபியாமட்டும் தனியாக இருந்ததால் நான் சோபியாவை......

Wednesday, February 18, 2015

நடந்தது என்ன - 2

அதன் பின்னணி...

தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க இங்கே  சொடுக்கவும்.

ஈ மெயிலில் வந்திருந்த செய்தி....

"பிரைவேட் அண்ட்  கான்பிடன்ஷியல்"

காணவில்லை .- Missing...

பெயர் :சோபியா

Tuesday, February 17, 2015

நடந்தது என்ன ?

உண்மை சம்பவம்(!!)

வழக்கம் போல் அன்று (திங்கட் கிழமை) காலை உணவிற்கு பின் அலுவலகம் செல்ல புறப்படுவதற்கு முன் அன்றைய வானிலை அறிக்கையை அறிந்துகொள்ள - (மழை வருமா- வெயில்  அடிக்குமா? குடை கொண்டுபோகனுமா- அதற்கேற்ற மேலாடை போன்றவற்றை  ஆயத்தமாக கொண்டுசெல்ல) தொலைக்காட்சி  சானலை மாற்றினேன்.

வானிலைக்கு முன் செய்தி  வாசித்துகொண்டிருந்தார் ஒருவர்.

Image result for picture of tv news

அவற்றுள் ஒன்று, தேன் நிலவுக்கு மனைவியை அழைத்துச்சென்ற இடத்தில் கொள்ளை காரர்களால் புது மனைவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் மேல் முறையீட்டின் மூன்றாம் கட்ட விசாரணை, இன்று நகரின் மையபகுதில் அமைந்திருக்கும்,மாஜிஸ்ட்ரேட் கோர்டில் காலை 10 மணிமுதல்  நடைபெற போவதாக சொன்னார்கள். (அந்த நீதி மன்ற வளாகம் நான் பணிபுரியும் அதே ரோட்டில் ஆறு கட்டிடங்கள் தள்ளி இருக்கின்றது)

அடப்பாவமே, தேன் நிலவிற்கு  போன இளம் தம்பதியருக்கு ஏன் இந்த கொடூரம் நடக்கவேண்டும் என்ன உலகம் இது என்று நினைத்து முடிப்பதற்குள், அடுத்த செய்தி.

20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் நிர்வாண சடலம் நகரின் தென் கோடியிலிருக்கும் ஒரு பண்ணை வீட்டின் குதிரை லாயத்திலிருந்து கடந்த சனிக்கிழமை இரவு  கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அந்த பண்ணையாரின் மகனை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் , அவரை இன்று அதே மாஜிஸ்ட்ரேட்  கோர்டில் பனிரெண்டு மணிக்கு ஆஜர்படுத்தபடுவதாகவும் செய்தி சொன்னார்கள்.

முதல் செய்தியில் அந்த கணவன் மனைவியின் திருமண புகைப்படத்தை காட்டினார்கள், ஆனால் இரண்டாம் செய்தியில் கொலையுண்ட பெண்ணின் முழு விவரங்கள் எதுவும் ஊர்ஜிதபடுத்தபடாத நிலையில் அந்த  பெண்ணின் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

தோராயமான வயதும் 5.00 அடி உயரமும் ஒல்லியான உருவமும் வெள்ளை  இனத்தவர் என்றும் தலைமுடியின்  நிறம் ப்ளாண்ட் - சுருட்டை என்று மட்டுமே சொன்னார்கள்.

இவற்றை கேட்க்கும் போது  கலிகாலம் நெருங்கிவிட்டதோ என எண்ண தோன்றியது.

அதை தொடர்ந்து அன்றைய வானினை அறிக்கையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், இடையிடையில் ஓரிரு முறை மழை தூறும் எனவும், குளிர் சராசரியாக 2லிருந்து 4 டிகிரி யாகவும் மாலையில் கனத்த மழையும் இருக்குமென சொல்லி முடித்து, அன்றைய போக்கு வரத்து தடைபட்டிருக்கும் சாலைகளின் பெயர்களையும் அறிவித்திருந்தனர்.

இங்கே வானிலை அறிக்கை சொல்பவர்கள் கண்ணகி பரம்பரையை சார்ந்தவர்கள்.. என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?

ஆமாங்க, இவர்கள் மழை வரும் என்று சொன்னால் மழை வரும், அப்படி வரவில்லை என்றால் பின்னாலேயே ஒரு பெரிய ஆப்பு வரும் தவறாக அறிவுறுத்தப்பட்டதால் பல வித பாதிப்புகளும் இழப்பும் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்படும்.

வரும்... ஆனா... வரா..து  அப்படியெல்லாம் இருக்காது.

சரி செய்தி கேட்டுவிட்டு தொலைகாட்சியை அனைத்து விட்டு பேருந்து நிறுத்தம் சென்றேன்.

அங்கே வழக்கமாக இருக்கும் மூன்று அல்லது நான்குபேர்கள் தவிர சில புதிய ஆட்களும் நின்றுகொண்டிருக்க விவரம் சொன்னார்கள் அவர்கள் வழக்கமாக செல்லும் பேருந்து இன்று தடம் மாறி பயணிப்பதாக.

பேருந்தில் ஏறி பயணம் செய்யும்போது(பேருந்து பயணம் பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) அன்றைக்கான செய்தித்தாளை புரட்டிகொண்டிருந்தேன்.

அதில் இந்திய வம்சாவளியில் வந்த ஒரு பள்ளி மாணவன் நாடு தழுவிய கணித திறனாய்வு போட்டியில் நாட்டிலேயே முதல் மாணவனாக வெற்றிபெற்ற செய்தி படித்து பேரானந்தம் அடைந்தேன்.

அதை தொடர்ந்து பள்ளி மாணவி தனது தலையில் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்ச்சையின்போது இழந்த முடியினை மறைப்பதற்காக பொய் முடி(விக்) அணிந்து வந்தாள் என சொல்லி பள்ளி நிர்வாகம் அவளை பள்ளியை விட்டு இடை நீக்கம் செய்த செய்தியையும் அதை எதிர்த்து அந்த பெண்ணின் பெற்றோர் பள்ளி கல்வி இயக்குனரிடம் முறையிட்டதையும்  படித்து என்ன இது இப்படியுமா செய்வார்கள் என நினைத்து மேலும் படிக்கையில் அந்த பெண்  பலரது பார்வையையும் கவனத்தையும் தன பால் இழுக்கும் படியான ஆரஞ்சும் சிகப்பும் கலந்த நிறத்தில் அமைந்த தலைமுடியை அணிந்திருந்ததே காரணம் என்று சொல்லி பள்ளி நிர்வாகம் இடை நீக்கத்தை திரும்ப பெற மறுத்ததையும் படித்து என்னத்த சொல்றது, பெற்றோர் இதை கவனித்து ஆரம்பத்திலேயே சரி செய்திருந்திருக்கலாமே  என நினைத்தவேளையில் நான் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நின்றது.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலகம் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிட நடை தூரம்தான், சாலையின் மறுபுறம் தான் அலுவலகம், சாலையை கடக்க சுரங்க பாதையை கடக்க வேண்டும்.

இப்போது அலுவலக வாசலை நெருங்கிய எனக்கு பெரும் அதிர்ச்சி. ஏழு மாடி கொண்ட அந்த கட்டடிடத்தின் முன்பு அலுவலகம் சுற்றி உள்ளே நுழையாதீர் என்ற வாசகம் அடங்கிய நீண்ட பிளாஸ்டிக் ரிப்பன் போலீஸ் துறையினால் கட்டப்பட்டு இருந்தது. அலுவலக முன்பும் அதனை சார்ந்த இடங்களிலும் சுமார் ஆறு காவல் துறை வண்டிகளும் சைரன் பொருத்தப்பட்ட  ஓரிரு சிறிய கார்களும் தூரத்தில் ஒரு ஆம்புலன்சும் நின்றுகொண்டிருந்தது.

Image result for picture of stop and search


அந்த இடத்தை பார்ப்பதற்கே கொஞ்சம் அச்சமும் திகிலுமாக இருந்தது.

அதே சமயத்தில் எங்கள் அலுவலக வளாகத்தில் நுழையும் அனைத்து ஆட்களையும் அவர்களது அடையாள அட்டையை பார்த்தபின்னரே உள்ளே செல்ல அனுமதித்துகொண்டிருந்தனர்.

Image result for picture of police stop ribbon

நானும் அதன்படியே உள்ளே சென்றேன். உள்ளே லிப்டில் செல்லும்போது எல்லோரும் ரகசியமாக எதோ பேசிக்கொண்டு சென்றனர். எனக்கு என்ன எது என்று ஒன்றுமே  விளங்கவில்லை.

நேராக என் சீட்டுக்கு  வந்து கணணியை ஆன் செய்து எப்போதும்போல, முதல் வேலையாக ஈமெயில் இன் பாக்சை திறந்தேன், அதில் இன்றுகாலை 7.48 க்கு வந்த ஒரு மெயில் என்  கவனத்தை ஈர்த்தது.


தொடரும்....


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

Friday, February 13, 2015

வெஸ்ட்டும் ஈஸ்ட்டும்.

கைகோர்த்தது.
நண்பர்களே,

பொதுவாக உலகத்திலுள்ள திசைகளை சூரிய உதயத்தையும் அதன் அஸ்த்தமனத்தையும் வைத்து எட்டு திசைகளாக வகுத்திருந்தாலும் குறிப்பாக நான்கு திசைகளையே பிரதானமாக குறிப்பிட்டு பேசுவதுண்டு.

Thursday, February 12, 2015

பாத்ரூமில் தோலுரித்த பாம்பு

பாம்பின் சட்டை பாம்பறியும்

நண்பர்களே,  

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி கேட்டிருப்போம்.
படை நடுங்குமோ என்னமோ தெரியாது, ஆனால் நம்மில் பலருக்கு தொடை நடுங்கும் என்பது வெட்ட வெளிச்சம்.

Wednesday, February 11, 2015

மாமரம்

முதற்கனி 

உன்னை விதையாய் பார்த்தபோது
விளங்கும்படியான விந்தைகள்
எனக்குள் தோன்றவில்லை.

Tuesday, February 10, 2015

"தமிழ் வந்த கதை - உயிர்புகுந்தது!!"

உணர்வானது!!

தொடர்கிறது ...

முதலில் இருந்து வாசிக்க இங்கே சொடுக்கவும்:  தமிழ் வந்த கதை

ஆண் குரங்குகள் நன்றாக பழுத்த சுவை மிக்க கனிகளை , இயற்க்கை சூழல் நிறைந்த அடர்ந்த காட்டுபகுதிலிருந்து பறித்து வந்து

Monday, February 9, 2015

"தமிழ் வந்த கதை -மந்திர காண்டம்"


.அமுதென்று பேர்


தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க தமிழ் வந்த கதை இங்கே சொடுக்கவும்.

பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு பல வருடங்கள் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, பயிற்சி பட்ட படிப்பு, துறை சார்ந்த கூடுதல் தகுதி படிப்புகள்  போன்ற பல படிப்புகளில்  ஈடுபட்டிருந்தாலும் தமிழ் படிப்பதென்பது  பன்னிரெண்டாம் வகுப்போடு முற்று பெற்றது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை எனக்கு தமிழ் சொல்லிகொடுத்த பல அறிஞர்களை நான் நன்றியோடு நினைத்துபார்க்கின்ற வேளையில், நமது எல்லோருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஓரிரு ஆசிரியர்களே நமக்கு மிகவும் பிடித்த- மனதை கவர்ந்த ஆசிரியர்களாக இருக்க கூடும். அவ்வகையில்....

ஒரு தமிழாசிரியர் , வகுப்புக்கு உள்ளே நுழைந்தால், அவர் அந்த வகுப்பு முடியும் வரை அனைத்து மாணவர்களையும் தமது பாடம் நடத்தும் யுக்தியால்  மகுடிக்கு மயங்கும் பாம்புகள் போல  மயங்கவைப்பார்.

திருக்குறளை நடத்தினார் என்றால் அவர் வகுப்பு முடியும் போது  அவர் அன்றைக்கு நடத்திய அந்த குறிப்பிட்ட அதிகாரத்தில் உள்ள அத்தனை குறள்களும் வகுப்பிலிருந்த  அத்தனை மாணவர்களுக்கும்  மனப்பாடம் ஆகி இருக்கும்.

அது எப்படி சாத்தியமாயிற்று?

அங்கே தான் அவரின் பாடம் நடத்தும் விதம் மிளிரும்.

திருக்குறள் என்பது ஒரு வகையில் கவிதைதானே.

அதில் எதுகையும் மோனையும் உண்டல்லவா, அவற்றை சொல்லும்போதே அதற்க்குண்டான ஏற்ற இரகங்களுடனும் எந்தெந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து வாசிக்க வேண்டுமோ அந்தந்த இடங்களில் அதற்குண்டான அழுத்தத்தோடு வாசித்து காண்பிப்பார்.

உதாரணத்துக்கு....  ஏழு வார்த்தைகளை கொண்ட திருக்குறளின் முதல் நான்கு வார்த்தைகளடங்கிய வரியை ஒரு தொனியிலும் அதற்க்கு அடுத்த வரியில் உள்ள ஐந்தாவது  வார்த்தையை வேறு தொனியிலும் பின்னர் எஞ்சிய இரண்டு வார்த்தைகளை முதல் வரியை உச்சரித்த தொனியிலும் வாசித்துகாட்டுவார்.

அப்படியானால் முதல் வரியின் முதல் வார்த்தையும் இரண்டாம் வரியின் முதல் வார்த்தையும் ஒன்றுக்கொன்று ஓசையில் சம்பந்தபட்டிருப்பதை எளிதாக உணர்த்தி காட்டி திருக்குறளை நடத்துவார்.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்;அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."

இதில் முதல் வார்த்தை "அன்பி"  ஐந்தாவது வார்த்தை முதல் வார்த்தையினோடு சம்பந்தப்பட்ட ஓசையுடைய "என்பு" எனவே ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு சீர்களும், அந்த அதிகாரத்திலுள்ள பத்து குறள்களும் எல்லா மாணவர்களுக்கும்  அத்துப்படி எனவே தமிழிலில் ஆர்வம் உயர்ந்தது பத்துப்படி.

பிறகு,

"எடும்/ எடும்/ எடுமென /எடுத்ததோர்/ இகலொலி/  கடலொலி/ இகக்கவே
விடும்/ விடும்/ விடுமென /கரிக்குழாம்/  விடுவிடுமெனும்/ ஒலி /மிகைக்கவே.
செறிவரு...." 

 இப்படியாக ஜெயங்கொண்டான் எழுதிய கலிங்கத்து பரணியை அவர் நடத்தும் போது, யானை படைகளும், குதிரை படைகளும், காலாட்படைகளும், அம்பும், ஈட்டியும், வேலும், வில்லும், புழுதியும் , சில நேரங்களில் எதிரியின் உடலிலிருந்து வழியும் குருதியின் வாசனையை கூட நாங்கள் உணரும் வகையில் அத்துணை வேகத்தோடும், ஆவேசத்துடனும்,உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் அதே சமயத்தில் கவிதை   வரிகள் எங்கள் மனதில் வரிவரியாய் தழும்புகளாக தடம் பதியும் வண்ணம் அவர் நடத்தும் அந்த பாங்கை எண்ணி எண்ணி இன்றும் வியக்கின்றேன்.

விதி வசத்தால், அரசனான கணவனை பிரிந்து, அரண் மனை வாழ்வை இழந்து, தும்மல் வந்தாலும் துடித்துபோய் சேவை செய்த ஏவலாளிகளின்  பராமரிப்பு இழந்து, பால் வேண்டாம், பழம் வேண்டாம், தேன் வேண்டாம், என சலித்த்துக்கொண்டாலும் வற்புறுத்தி கிட்டத்தட்ட வாயிலேயே ஊட்டி விட்டு, சாமரம் வீசி துயில செய்த பணிப்பெண்களின் பராமரிப்பை இழந்து, தவமாய் தவமிருந்து, தான் பெற்ற , அரசிளங்  குமரனை, அவனின் பிறப்பின் அந்தஸ்த்தை அவனுக்கு எடுத்துகூற ஒரு முகாந்தரமும் அற்ற நிலையில், ஒரு வேளை  உணவிற்காக தன்னையும் தனது பச்சிளம் பாலகனையும் அடிமைகளாக அமர்த்தி வேலைவாங்கும் அந்தணனின் வீட்டிலே , வெட்க்கி, தலைகுனிந்து வேதனையில் வாழ்ந்துவரும் அவளின் தனயனை தர்பை புல் அறுத்துவர காட்டுக்கு அனுப்புகின்றான் விலைக்கு வாங்கிய அந்த அந்தணன்.


எவ்வளோ சொல்லி தடுக்க பார்த்த அவளின் கூக்குரல் அம்பலம் ஏறகூடுமோ?

காலையில் காட்டுக்கு சென்றவன், மாலையாகியும் வீடு திரும்பவில்லை பகலவனும் வீடு திரும்பிவிட்டான் தன் பாலகன் மட்டும் திரும்பவில்லையே,  அந்தணனிடம் அனுமதி பெற்று காட்டை நோக்கி ஓட்டம் எடுத்தாள்  அவள்.

காலை தன் மகனோடு காட்டுக்கு சென்ற மற்ற சிறுவர்கள் எதிரில் வருவதை கண்டு அந்த கூட்டத்தில் தன் மகனை தேடும் அவளுக்கு அந்த "கருப்பு" செய்தி காதில் பாய்ந்தது காய்ச்சிய இரும்பென. 

  தர்பை புல்லறுக்க சென்றவன்  அரவம் தீண்டி மரித்தனன் என கேட்டு தன் கர்ப்பப்பையில் யாரோ கடபாரையில் குத்துவதை உணர்ந்தவள், காலை முதல் இப்போதுவரை அன்னம் , ஜலம் அருந்தாமல்  பசியோடு அருந்தவ புதல்வனின் வருகைக்காய் காத்திருந்ததால் உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளம் சோர்ந்த நிலையிலும் கண்கள் நீர்சொரிய அந்த கானகத்தை நோக்கி அவள் ஓட்டமும் நடையுமாக போகின்ற வேளையிலே, அவளின் ஒவ்வொரு அடியும் அந்த கானக சதுப்பு மண்ணில் ஒவ்வொரு குழியாக வடிவம் பெற அவளின் கண்ணீர் அந்த குழிகளில் நிரம்பி வழிவதாக அமைந்த அந்த காட்சியின் மீட்சிதான்  .....

" ஆறெலாம் அடிகள் வைத்த அடி எல்லாம் விழிநீர்......." எனும் சந்திரமதி புலம்பல் பகுதியி வரும் வரிகள்.

பாடம் நடத்தும்போது, நாங்கள் எல்லோருமே, சந்திரமதிபோலும், நாங்கள் எல்லோரும் லோகிதாசனை போலும் நாங்கள் எல்லோருமே அந்த கானகத்திக்கு பயணம் மேற்கொள்வதுபோலும் உணரத்தக்க வகையிலே  அந்த பாடலுக்கு, அந்த சூழலுக்கு ஏற்றார்போல ஒரு மெட்டமைத்து , ஏற்ற இறக்கங்களோடு, குரல் தழுதழுக்க பாடி நடத்தி முடிக்க மாணவர்கள் எல்லோரின் கண்களிலும் சந்திரமதியின் கண்ணீர் அளவுக்கு நிகராக கோர்த்திருக்கும் கண்ணீரோடு  , இடைவேளை நேரத்திற்கான மணி அடித்ததும் மீண்டும் வகுப்புக்கு வர அடித்த மணியின் ஓசையும் கூட எங்கள் காதுகளில் விழ தவறிவிடும் வகையில் அந்த ஆசிரியர் எங்களுக்கு  பாடம் நடத்திய பாங்கை எண்ணி இன்றும் உள்ளம் சிலிர்க்கின்றேன்.

அதே போல சிவ பக்த்தனான வேடவர் குல திண்ணப்பன் , இறைவனின் மேலிருந்த அளப்பரிய பக்தியின் மிகுதியால், அன்றலர்ந்த மலர்களால் சிவ லிங்கத்தை அலங்கரித்து, அன்று வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எந்த மாமிசம் ருசி மிகுந்திருக்கின்றது என அறிய அதை  தான் கடித்து தெரிந்துகொண்டு அந்த கடிபட்ட மாமிசத்தை கடவுளுக்கு படைத்து மகிழ,


இந்த பக்த்தனின் பக்த்தியை சோதிக்கும் பொருட்டு தமது ஒவ்வொரு கண்ணாக இறைவன் இழப்பதாக காட்டி அதற்க்கு பக்த்தனின் மறு செயல் (reaction) என்னவாயிருக்கும் என சோதிக்க முற்பட்ட இறைவனுக்கே வியப்பளிக்கும் வண்ணம் தமது கண்களை ஒவ்வொன்றாக பிடுங்கி இறைவனுக்கே  "கண் தானம்" செய்த திண்ணப்பன், கண்ணப்பனாக மாறிய கதையை பாடமாக நடத்தும்போது, வகுப்பறையில், அன்றலர்ந்த மலர்களின் வாசம் வீசும், மாமிசத்தின் வாடை வீசும், எங்கள் கண்களை நாங்கள் பிடுங்கி இறைவனுக்கு செலுத்துவதாக உணர்வோம், அப்படி இருக்கும் அவர் பாடம் நடத்து முறைமை.

இன்னும் தொடராதா இவரின் வகுப்பு என நினைக்கும்போது மணி அடிக்கும்,மனம் துடிக்கும்,

 மீண்டும் அடுத்த நாள் எப்போது வருமென காக்கவைத்த "மந்திர நாட்கள்" அவை.

அடுத்த நாள் வரை நாமும் தான் காத்திருப்போமே.

தொடர்ச்சியை பிறகு பார்க்கலாமே...

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


"தமிழ் வந்த கதை".

தமிழ் வெல்க!!

நண்பர்களே,

 எம்மை இழுத்துவந்து, அறிமுகபடுத்தி  முகப்பை திறந்துவிட்ட- இந்த விசாலமான வலைதலத்தினூடாக  கடந்த ஐந்து மாதங்களாக சுமார் 56 பதிவுகள் எழுதி அதை பண்பட்ட - அறிவார்ந்த சக பதிவாளர்கள் மற்றும் வாசகநண்பர்களின் சமூகவானில் நிலாவென  உலாவர செய்த

Sunday, February 8, 2015

" தமிழன் அன்றும் இன்றும்".

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட வரிகளில் சில இங்கே.

Friday, February 6, 2015

கமர்கட்டு - செம மார்கட்டு

 ஞானஸ்நானம்!!!

நண்பர்களே,

இங்கே  அலுவலக சக ஊழியர்கள், தங்களது விடுமுறையில் எங்கேனும் வெளி ஊர்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ   சென்று மீண்டும் வேலைக்கு திரும்பும் அன்று

Tuesday, February 3, 2015

வைதேகி காத்திருப்பாள் -பாகம் - 3

காலம் கனிந்தது!!!!!

தொடர்கிறது....

முதலில் இருந்து படிக்க  இங்கே சொடுக்கவும். வைதேகி காத்திருப்பாள்.

 "இன்னொருமுறை..."

Monday, February 2, 2015

வைதேகி காத்திருப்பாள் - பாகம் 2

மனம் திறந்தது மலர் தூவியது.

தொடர்கிறது....முதலில் இருந்து படிக்க  இங்கே சொடுக்கவும். வைதேகி பாகம் 1

"சார்... பிளீஸ் .. நான் சொல்லவந்தது......, எப்படி சொல்றதுன்னு ... தெறி...."

"மிஸ் ரமணன் ..சொல்லுங்க தயங்காம."

Sunday, February 1, 2015

வைதேகி காத்திருப்பாள்!!

                                                                         உயர் உள்ளல் 

சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

சென்னை பேசின்  பிரிட்ஜில்   உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்று, அதே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணணி அறிவியலில் பட்டம் பெற்று,