மறு சுழற்சி மனமகிழ்ச்சி!!
நண்பர்களே,
கடந்த மாதம் நாம் அனைவரும் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் அனைத்தையும் கொண்டாடினோம்.
அதிலும் "போகி" எனும் சிறப்பான ஒரு பாரம்பரிய அர்த்தமுள்ள நாளின் அர்த்தத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், பழையன கழிதலும் புதியனபுகுதலுமாகிய தூய்மை, புதுசு, சுத்தம் போன்ற கொள்கைகளை கடைப்பிடித்து அதன்படி, வீட்டிலிருந்த பழைய தட்டுமுட்டு சாமான்கள், பழைய பாய், தலையணை,பழைய காகிதங்கள்,பழைய துணிமணிகள் பழைய குப்பைகள்(மனதில் இருந்ததையும் சேர்த்துதான்) நெருப்பிலிட்டு கொளுத்தி, பின்னர் வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி அலங்கரிக்கவும் அவற்றை பயன்படுத்தவும் கற்றுகொடுக்கும் ஓர் உயரிய பண்பாட்டு - நாகரீக தினமாக அந்த போகி பண்டிகை நம் நாட்டில் அமைந்திருக்கின்றது.
அதே போல பழக்கம் பெரும்பான்மையான மேலை நாடுகளிலும் புழக்கத்தில் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகை அல்ல எனினும் இங்கே இந்தபழக்கம் நம்மை காட்டிலும் கொஞ்சம் மிகையாகவே காணபடுகின்றது என்று சொன்னால் அதுவும் மிகை அல்ல
அதாவது நாம் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்று பழைய பொருட்களை களைந்து புதிய பொருட்களை வாங்குவதுபோல், இவர்கள் வருடத்தின் நான்கு பருவங்கள் தோறும் தங்களின் வீடுகளிலுள்ள பொருட்களை களைந்து அந்தந்த பருவங்களுக்கேற்ப புதிய பொருட்களை வாங்கி புழங்குவார்கள்.
அதாவது, குளிர்காலம் வந்து விட்டால், கோடை காலத்திற்கென வாங்கபட்ட, துணிமணிகள்,நகைநட்டுக்கள்(பொன்னாபரணங்கள் தவிர்த்து),காலணிகள்,திரை சீலைகள்,தோட்ட உபகரணங்கள், குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் போன்ற வற்றை களைந்து விட்டு வரபோகின்ற குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
அதேபோல குளிர்காலம் முடிந்தபிறகு , குளிர்காலத்திற்கு பயன்படுத்திய - ஒரு சிலவற்றை தவிர ஏனைய பொருட்களை களைந்து விடுவார்கள்.
பெரும்பாலனவர்கள், ஒரு சட்டையையோ, அல்லது ஒரு டிரவுசரையோ பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தமாட்டார்கள்.
இது தெரியாமல், நான் ஒருமுறை ரொம்ப பெருமையாய் " இந்த சட்டை நான் கல்லூரியில் படிக்கும்போது வாங்கியது இன்னும் நன்றாகவே இருக்கின்றது" என்று சொல்ல அனைவரும் என்னை "ஒரு மாதிரியாக" - ஆச்சரியமாக பார்த்த பார்வை இன்னும் நினைவில் நிழலாடுகின்றது.
பழயன வற்றை களையும் இவர்கள், நம்மைப்போல் அவற்றை தீயிலிட்டு கொளுத்துவது கிடையாது, மாறாக, அவற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு உகந்ததாக தயார் செய்து அவற்றை தங்கள் வீட்டின் முன் " ஹெல்ப் யுவர்செல்ப்" என்று எழுதி வைத்துவிடுவார்கள் .
அந்த பக்கமாக செல்பவர்கள் அவற்றுள் தங்களுக்கு தேவையான வற்றை எடுத்து சென்று பயன்படுத்துவார்கள், அப்படி எடுத்தவை போக மிச்சமுள்ள பொருட்களை அருகிலிருக்கும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக இயங்கும் சாரிட்டி கடைகளுக்கு கொண்டு சென்று கொடுத்துவிடுவார்கள்.
இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது, கிழிந்த கந்தலான உடைந்த உபயோகத்திற்கு தகுதி இல்லாதவற்றை குப்பையில் போட்டுவிடுவார்கள். உபயோகிக்க தகுதிவாய்ந்த தரமான பொருட்களையே மற்றவர் உபயோகத்திற்காக கொடுப்பார்கள்.
இங்கே "ரி- சைக்கிள்" என்பது ஒரு தாரக மந்திரமாக திகழ்கின்றது. எனவே பழைய துணிமணிகளையோ, பொருட்களையோ வாங்குபவர்கள், வசதி குறைந்தவர்களாகத்தான் இருக்கவேண்டிய அவசியமில்லை.
அதேபோல வீட்டுக்கு தேவையற்ற, கடிகாரங்கள், கட்டில், மெத்தை, நாற்காலிகள்,விளக்கு தண்டுகள், மின் விசிறிகள்(சில நேரம் கோடையில் பயன்படுத்தபடுகிறது) லான் மூவர்கள்,"மின் துடைப்பம்" அதாங்க வேக்யூம் கிளீனர்கள் , குழந்தைகளை வைத்து தள்ளிகொண்டுபோகும் பிராம்கள் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள்,கம்ப்யூட்டர்கள், தொலைகாட்சி பெட்டிகள், மியூசிக் சிஸ்டம்கள்,புத்தகங்கள்,வீடியோ, பாட்டு கேசட்டுக்கள் போன்றவற்றை வீட்டிற்கு வெளியில் வைத்துவிட்டால், வைத்த கொஞ்ச நேரத்திற்குள் அவை தேவைபடுபவர்களால் எடுத்து செல்லப்பட்டிருக்கும்.
சில சமயங்களில் கிடைத்தற்கரிய கலை பொருட்கள்கூட இவ்வாறு இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்னும் சிலர் உள்ளூர் செய்திதாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், அலுவலக வலைத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக தங்களிடம் இந்தந்த பொருட்கள் உள்ளன தேவைபடுபவர்கள் தொடர்புகொள்க என விளம்பரம் செய்தும் பொருட்களை தேவைபடுபவர்களுக்கு இலவசமாகவோ அல்லது ஒரு சிறிய தொகைக்கோ கொடுப்பது இங்கே இருக்கும் ஒரு "மினி போகி "
பழக்கம்.
அவ்வாறே, தங்கள் வீட்டு தோட்டத்தில் காய்த்த பழங்கள், காய்கறிகளையும் தங்கள் தேவைக்குபோக உபரியாக இருப்பவற்றை வீட்டு முற்றத்திலோ அல்லது வெளியிலோ வைத்து தேவைபடுபவர்கள் எடுத்துகொள்ளலாம் என எழுதி வைப்பார்கள் , அப்படி எதுவும் எழுதாமலும் வெளியில் வைத்தாலே அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட பலரும் அவற்றை எடுத்து பயன்பெறுவார்கள்.(கூடவே அவற்றை கொண்டுசெல்ல பிளாஸ்டிக் பைகளும் வைத்திருப்பார்கள் )
இப்படித்தான், ஒரு நாள் பெட்ரோலில் இயங்கும் "லான்மூவர் "
என்றழைக்கப்படும் புல் வெட்டும் இயந்திரதைகொண்டு வீட்டின் முன் பக்கம் இருந்த புல்தரையை வெட்டி சமன் செய்துகொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து வீட்டின் உள்ளே இருந்த ஸ்மோக் அலாரம் அலற ஆரம்பித்தது, என்னவோ எதோ என்று நினைத்து செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அலறி துடித்து பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தால் வீட்டு சமையல் அரை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது, தீர ஆராய்ந்ததில் அன்று செய்த சமையலின் வாசத்தை மேற்கொள்ள வீட்டிற்கு உள்ளே கொளுத்தி வைக்கபட்டிருந்த நம்ம மைசூர் சேன்டல் அகர்பத்தியின் புகையின் கைங்கரியத்தால் அந்த ஸ்மோக் டிடக்டர் சத்தம் போட ஆரம்பித்ததை அறிந்து சமையல் அறையின் சன்னல்களை திறந்து வைத்து விட்டு வீட்டின் முன் பக்கம் செய்து கொண்டிருந்த புல் வெட்டும் வேலையை தொடர வெளியில் வந்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.
அதாவது நான் ஸ்மோக் டிடக்டர் சத்தம் கேட்டு பதற்றத்தில் உள்ளே சென்ற நேரம் புல் வெட்டி(லான் மூவர்) கொஞ்சம் நகர்ந்து வெளி கேட் வரை சென்றுவிட்டிருந்திருக்கின்றது. அதை அந்த வழியாக போன யாரோ நான்தான் எனக்கு தேவையில்லை என்று அதை வெளியில் வைத்திருந்ததாக நினைத்து எடுத்துபோய் இருக்கின்றனர் என்பதை அடுத்த நாள் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் "என்ன புது லான் மூவர் வாங்கினீர்களா, அதான் உங்கள் பழைய லான் மூவரை வெளியில் வைத்திருந்தீர்களா?" என கேட்டபோதுதான் நடந்தது இப்படியாகத்தான் இருக்குமென்று உணர்ந்துகொண்டேன்.
அன்று முதல் வெளியில் எந்த ஒரு பொருளையும் அனாவசியமாக - கவன குறைவாக வைக்க கூடாது என முடிவு செய்தேன்.
இதுபோன்று தங்களுக்கு தேவையில்லாத அதே சமயத்தில் மற்றவர்களுக்கு உதவக்கூடிய பொருட்களை சேவை நிறுவனங்கள் நடத்தும் சேரிட்டி மையங்களுக்கு கொடுக்கும் பழக்கம் அல்லது வீட்டிற்கு வெளியில் குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் அல்லது பழைய பொருட்கள், துணி மணிகளை வாங்கி உபயோகிக்கும் பழக்கம் அல்லது செயல் முறை நம்ம ஊர்களில் இருக்கின்றதா? இருந்தால் நன்றாக இருக்குமோ?
நன்றி.
மீண்டும் சிந்திப்போம்
கோ
நம்ம ஊர்களில் உள்ளே வந்தே எடுத்துப் போகிறார்கள்... ஹா... ஹா...
பதிலளிநீக்குதனப்பால்,
நீக்குஉங்க ஊர்லதான் நல்ல பூட்டு கிடைக்குமே, பின்னேஎப்படி வீட்டுக்குள்ள வந்து எடுக்க முடியும்?
பூட்டு சைனால இருந்து வாங்கி திண்டுக்கல்னு பேரு போட்டுடறாங்களா என்ன?
வருகைக்கு மிக்க நன்றி.
நட்புடன்
கோ
Request to the blogger: when narrating practices found elsewhere, please give country/state/city, where it is in vogue.
பதிலளிநீக்குஇது ஒரு நல்ல பழக்கம். இங்கு இந்தியாவில் இந்தப் பழக்கம் சுத்தமாக இல்லை. மட்டுமல்ல...இங்கு வீட்டிற்கு வெளியில் வைத்தாலும் சரி, உள்ளே கூட வந்து எடுத்துக் கொண்டு விடுவார்கள்...ஹஹஹ் திருடுதல்???!!!
பதிலளிநீக்கு..ஹஹஹஹஹஹ் இதுதான் இந்தியா/இந்தியர்கள்….இந்தியர்கள் எப்படித் தெரியுமா? கடையில ஏதாவது ஒரு பொருளை வாங்கச் சென்றால் அப்பொருளுடன் இலவசமாக ஏதாவது கிடைத்தால் அது உபயோகமாக இருக்கா இல்லையானு கூட யோசிக்க மாட்டாங்க வாங்கிடுவாங்க…ஏன்னா அதோடு ஒரு 2 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு ஸ்பூன் கிடைக்குதே….ஹஹஹ் . அதனாலதான் எங்க டிவில எல்லாம் இலவச விளம்பரம் நிறைய வரும்….ஆங்காங்கே புத்தாண்டு, பொங்கல், தீபாவளி மேளா …அதிரடி சேல் என்றெல்லாம்… ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்…இப்படி போர்ட் எல்லாம் போடுவாங்க …..அதே போல அரசியல் தலைவர்கள்/அரசாங்கம் இலவசமாகக் கொடுக்கும் டிவி, க்ரைண்டர், வேஷ்டி சட்டை எல்லாம் பணம் உள்ளவங்க கூட வாங்கிக்குவாங்க அது எப்படி இருந்தாலும், வேலை செய்யுமானு எல்லாம் பாக்க மாட்டாங்க….ஆனா அமெரிக்காவுல, லண்டன்ல மாதிரி நீங்க சாமான் இலவசமா வெளில வைச்சீங்கனா அது கேவலம்….இது எப்படி?! நாங்க மானமுள்ளவங்க ஹஹஹஹ
அருமையான பழக்க வழக்கம் நண்பரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே . அருமையான பழக்கமும் கூட. இந்த பழக்கத்தை வைத்தே நான் வாழும் ஊரில் உள்ள சிறப்பை வைத்து நானும் " இலவசமா ச்சே சீ.. என்ற அத்தலைப்பில் ஒன்று எழுதி விட்டேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விசு.
நீக்குகருத்துக்கு நன்றி திரு கரந்தையார் அவர்களே.
பதிலளிநீக்குநட்புடன்
கோ
haahaahaa .
பதிலளிநீக்குமகேஷ்,
நீக்குஎன்ன சிரிப்பு பலமாக இருக்குது.?
தொடரட்டும் உங்கள் சிரிப்பலைகள்.
நட்புடன்
கோ
அரசருக்கு வணக்கம்,
பதிலளிநீக்குபார்த்துங்க முக்கியமான பொருளை மறந்து வெளியில் வைத்து விட்டேன் என்று கோட்டை விட்டு விடாதீர்கள்.
பதிவு மிகவும் அருமை,
தாத்தா பார்த்தா, இந்த பேரனைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்வார்,,,,,,,,,,
அதனால் என்ன இந்த பாட்டியின் வாழ்த்துக்கள்.
நன்றி.