உண்மை சம்பவம்(!!)
வழக்கம் போல் அன்று (திங்கட் கிழமை) காலை உணவிற்கு பின் அலுவலகம் செல்ல புறப்படுவதற்கு முன் அன்றைய வானிலை அறிக்கையை அறிந்துகொள்ள - (மழை வருமா- வெயில் அடிக்குமா? குடை கொண்டுபோகனுமா- அதற்கேற்ற மேலாடை போன்றவற்றை ஆயத்தமாக கொண்டுசெல்ல) தொலைக்காட்சி சானலை மாற்றினேன்.
வானிலைக்கு முன் செய்தி வாசித்துகொண்டிருந்தார் ஒருவர்.
அவற்றுள் ஒன்று, தேன் நிலவுக்கு மனைவியை அழைத்துச்சென்ற இடத்தில் கொள்ளை காரர்களால் புது மனைவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் மேல் முறையீட்டின் மூன்றாம் கட்ட விசாரணை, இன்று நகரின் மையபகுதில் அமைந்திருக்கும்,மாஜிஸ்ட்ரேட் கோர்டில் காலை 10 மணிமுதல் நடைபெற போவதாக சொன்னார்கள். (அந்த நீதி மன்ற வளாகம் நான் பணிபுரியும் அதே ரோட்டில் ஆறு கட்டிடங்கள் தள்ளி இருக்கின்றது)
அடப்பாவமே, தேன் நிலவிற்கு போன இளம் தம்பதியருக்கு ஏன் இந்த கொடூரம் நடக்கவேண்டும் என்ன உலகம் இது என்று நினைத்து முடிப்பதற்குள், அடுத்த செய்தி.
20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் நிர்வாண சடலம் நகரின் தென் கோடியிலிருக்கும் ஒரு பண்ணை வீட்டின் குதிரை லாயத்திலிருந்து கடந்த சனிக்கிழமை இரவு கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அந்த பண்ணையாரின் மகனை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் , அவரை இன்று அதே மாஜிஸ்ட்ரேட் கோர்டில் பனிரெண்டு மணிக்கு ஆஜர்படுத்தபடுவதாகவும் செய்தி சொன்னார்கள்.
முதல் செய்தியில் அந்த கணவன் மனைவியின் திருமண புகைப்படத்தை காட்டினார்கள், ஆனால் இரண்டாம் செய்தியில் கொலையுண்ட பெண்ணின் முழு விவரங்கள் எதுவும் ஊர்ஜிதபடுத்தபடாத நிலையில் அந்த பெண்ணின் புகைப்படம் வெளியிடப்படவில்லை.
தோராயமான வயதும் 5.00 அடி உயரமும் ஒல்லியான உருவமும் வெள்ளை இனத்தவர் என்றும் தலைமுடியின் நிறம் ப்ளாண்ட் - சுருட்டை என்று மட்டுமே சொன்னார்கள்.
இவற்றை கேட்க்கும் போது கலிகாலம் நெருங்கிவிட்டதோ என எண்ண தோன்றியது.
அதை தொடர்ந்து அன்றைய வானினை அறிக்கையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், இடையிடையில் ஓரிரு முறை மழை தூறும் எனவும், குளிர் சராசரியாக 2லிருந்து 4 டிகிரி யாகவும் மாலையில் கனத்த மழையும் இருக்குமென சொல்லி முடித்து, அன்றைய போக்கு வரத்து தடைபட்டிருக்கும் சாலைகளின் பெயர்களையும் அறிவித்திருந்தனர்.
இங்கே வானிலை அறிக்கை சொல்பவர்கள் கண்ணகி பரம்பரையை சார்ந்தவர்கள்.. என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?
ஆமாங்க, இவர்கள் மழை வரும் என்று சொன்னால் மழை வரும், அப்படி வரவில்லை என்றால் பின்னாலேயே ஒரு பெரிய ஆப்பு வரும் தவறாக அறிவுறுத்தப்பட்டதால் பல வித பாதிப்புகளும் இழப்பும் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்படும்.
வரும்... ஆனா... வரா..து அப்படியெல்லாம் இருக்காது.
சரி செய்தி கேட்டுவிட்டு தொலைகாட்சியை அனைத்து விட்டு பேருந்து நிறுத்தம் சென்றேன்.
அங்கே வழக்கமாக இருக்கும் மூன்று அல்லது நான்குபேர்கள் தவிர சில புதிய ஆட்களும் நின்றுகொண்டிருக்க விவரம் சொன்னார்கள் அவர்கள் வழக்கமாக செல்லும் பேருந்து இன்று தடம் மாறி பயணிப்பதாக.
பேருந்தில் ஏறி பயணம் செய்யும்போது(பேருந்து பயணம் பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) அன்றைக்கான செய்தித்தாளை புரட்டிகொண்டிருந்தேன்.
அதில் இந்திய வம்சாவளியில் வந்த ஒரு பள்ளி மாணவன் நாடு தழுவிய கணித திறனாய்வு போட்டியில் நாட்டிலேயே முதல் மாணவனாக வெற்றிபெற்ற செய்தி படித்து பேரானந்தம் அடைந்தேன்.
அதை தொடர்ந்து பள்ளி மாணவி தனது தலையில் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்ச்சையின்போது இழந்த முடியினை மறைப்பதற்காக பொய் முடி(விக்) அணிந்து வந்தாள் என சொல்லி பள்ளி நிர்வாகம் அவளை பள்ளியை விட்டு இடை நீக்கம் செய்த செய்தியையும் அதை எதிர்த்து அந்த பெண்ணின் பெற்றோர் பள்ளி கல்வி இயக்குனரிடம் முறையிட்டதையும் படித்து என்ன இது இப்படியுமா செய்வார்கள் என நினைத்து மேலும் படிக்கையில் அந்த பெண் பலரது பார்வையையும் கவனத்தையும் தன்பால் இழுக்கும் படியான ஆரஞ்சும் சிகப்பும் கலந்த நிறத்தில் அமைந்த தலைமுடியை அணிந்திருந்ததே காரணம் என்று சொல்லி பள்ளி நிர்வாகம் இடை நீக்கத்தை திரும்ப பெற மறுத்ததையும் படித்து... என்னத்த சொல்றது, பெற்றோர் இதை கவனித்து ஆரம்பத்திலேயே சரி செய்திருந்திருக்கலாமே என நினைத்தவேளையில் நான் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நின்றது.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலகம் சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிட நடை தூரம்தான், சாலையின் மறுபுறம்தான் அலுவலகம்; சாலையை கடக்க சுரங்க பாதையை கடக்க வேண்டும்.
இப்போது அலுவலக வாசலை நெருங்கிய எனக்கு பெரும் அதிர்ச்சி. ஏழு மாடி கொண்ட அந்த கட்டடிடத்தின்முன்பு அலுவலகம் சுற்றி உள்ளே நுழையாதீர் என்ற வாசகம் அடங்கிய நீண்ட பிளாஸ்டிக் ரிப்பன் போலீஸ் துறையினால் கட்டப்பட்டு இருந்தது. அலுவலக முன்பும் அதனை சார்ந்த இடங்களிலும் சுமார் ஆறு காவல் துறை வண்டிகளும் சைரன் பொருத்தப்பட்ட ஓரிரு சிறிய கார்களும் தூரத்தில் ஒரு ஆம்புலன்சும் நின்றுகொண்டிருந்தது.
அந்த இடத்தை பார்ப்பதற்கே கொஞ்சம் அச்சமும் திகிலுமாக இருந்தது.
அதே சமயத்தில் எங்கள் அலுவலக வளாகத்தில் நுழையும் அனைத்து ஆட்களையும் அவர்களது அடையாள அட்டையை பார்த்தபின்னரே உள்ளே செல்ல அனுமதித்துகொண்டிருந்தனர்.
நானும் அதன்படியே உள்ளே சென்றேன். உள்ளே லிப்டில் செல்லும்போது எல்லோரும் ரகசியமாக எதோ பேசிக்கொண்டு சென்றனர். எனக்கு என்ன எது என்று ஒன்றுமே விளங்கவில்லை.
நேராக என் சீட்டுக்கு வந்து கணணியை ஆன் செய்து எப்போதும்போல, முதல் வேலையாக ஈமெயில் இன் பாக்சை திறந்தேன், அதில் இன்றுகாலை 7.48 க்கு வந்த ஒரு மெயில் என் கவனத்தை ஈர்த்தது.
தொடரும்....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
ஆகா
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்
உங்கள் காத்திருத்தல் வீண்போகாது என்று நம்புகின்றேன்.
நீக்குநட்புடன்
கோ
திகிலான அச்சத்துடன் இருக்கிறேன்... inbox......?
பதிலளிநீக்குதனப்பால்,
நீக்குதொடர் பிடித்திருந்ததா?
ko
ம்ம்ம் என்னவாக இருக்கும்...இதோ போகின்றோம் அடுத்த பதிவிற்கு...
பதிலளிநீக்குபோய் பாருங்கள் என்னதான் நடந்ததென்று
பதிலளிநீக்கு