Followers

Saturday, February 28, 2015

"பிச்சைபுகினும் "

கற்கை நன்று

நண்பர்களே,

தமிழ் இலக்கணத்தில் ஒரு பதம் உண்டு அது "இழிவு சிறப்பும்மை" என்பதாகும்.


அதாவது இழிவென கருதும் ஒன்றை அல்லது ஒருவரை இணைத்து சிறப்பான மற்றொன்றோடு சேர்த்து சொல்லபடுவதை இப்படி இழிவு சிறப்பும்மை என்று குறிக்கப்பட்டுள்ளது. விளக்கம் போதுமானதா என தெரியவில்லை, எனவே இதோ ஒரு உதாரணம்: கல்வி கற்றலின் சிறப்பை - அதன் மேன்மையை - அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்க்காக " கற்கை நன்றே கற்கை நன்றே  பிச்சை புகினும்   கற்கை நன்றே" எனும் ஒரு பாடல் இருப்பது நமக்கு தெரியும்.

இதில் வருகின்ற "பிச்சைபுகினும்" எனும் சொற்றொடரில் பிச்சை என்பது ஒரு  இழிவான செயல் என்றாலும் கற்க போதுமான வசதி இல்லை என்றாலும் கற்பதை விட்டுவிடக்கூடாது அதற்காக பிச்சை எடுத்தாகிலும் கல்வி கற்றாக வேண்டும் என்பதை  வலியுறுத்தவே இங்கு "பிச்சைபுகினும்" எனும் சொற்றொடர் பயன் படுத்தப்பட்டுள்ளது.

கற்பதற்காக பிச்சை எடுத்தால் பரவாயில்லை, ஆனால் பெரும்பான்மையான பிச்சை எடுப்பவர்கள், தங்களின் வறுமையின் நிமித்தம், வயிற்று பசியை போக்கிக்கொள்ளவே இந்த இழிவான செயலில் ஈடுபடுகின்றனர்.

 இவர்களுள் சிலர், வயது முதிர்ந்த நிலையிலும்,உடல் வலுவிழந்த நிலையிலும்,வேறு சிலர்,தங்களின் உடல் வேறு எந்த வேலையும் செய்ய தகுதி இல்லாமல் ஊனமுற்ற நிலையிலும் இந்த இழிவான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கடந்த சில ஆண்டுக்கு முன் சைனாவில் -பீஜிங் நகரத்தில்  உடல் ஊனமுற்று பிச்சை எடுத்துகொண்டிருந்தவர்களை பார்த்து கண்ணீர் விட்ட நிகழ்வை வேறொரு சந்தர்பத்தில் சொல்கின்றேன்.

இந்த பிச்சையை ஒருசிலர் கேட்டு வரும்போது அதை "யாசகம்" என்றும் சொல்லுவார்கள், அதாவது, ஊரின் ஒதுக்கு புறத்தில் காலை முதல் மாலை வரை தியானத்தில் இருந்துவிட்டு, மக்களின் மன குறைகளை கேட்டு ஆன்மீக போதனைகளின் மூலம் அவர்களுக்கு ஆறுதல் கொடுத்து வருபவர்கள், சிலர் தங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியங்கள் பூசைகள்,பரிகாரங்கள் போன்றவற்றையும் செய்து, மாலை அல்லது இரவு வேளைகளில் அந்த ஊரின் தெருக்களுக்கு வந்து ஓரிரு வீடுகளில் கொடுக்கப்படும் உணவினை  பெற்று  உண்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் சென்று தியானம் மேற்கொண்டுவிட்டு உறங்க சென்று விடுவார்கள். இது போன்று யாசகம் கேட்டு வருபவர்கள் சிலரை நான் பல வருடங்களுக்கு முன் பார்த்திருக்கின்றேன். 

அவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான வார்த்தை கோர்வைகளை பயன்படுத்தி தங்களின் வருகையை வீட்டின் உள்ளே இருப்பவர்களுக்கு தெரிவிப்பார்கள். 

அதில் ஒருவர் சொல்லும் வார்த்தைகள் எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது, அது:"முருகா ஷண்முகா, வேலாயுத கடவுளே அப்பா பரமேஸ்வரா" என்பதாகும்.

இந்த குரலை கேட்டால் வீட்டில் உள்ளவர்கள் , பிச்சை காரர் வந்திருக்கின்றார் என்று சொல்ல மாட்டார்கள் மாறாக, சாமியார் வந்திருக்கின்றார் என்றே சொல்லி அவருக்கு உணவளிப்பார்கள்.

அதே சமயத்தில் பேருந்து நிலையத்தில் பலரும் பிச்சை  எடுப்பதை பார்த்திருக்கின்றேன், அவர்களுள் சிலர் கொஞ்சம்   அதிகார தொனியிலும் நம்மிடம் கேட்பார்கள், கொடுக்காவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டிவதையும் கேட்டிருக்கின்றேன்.

ஒரு நாள் நம்ம ஊரில், ஒருமுறை, நன்றாக வெள்ளையும் சொள்ளையுமாக ஆடை அணிந்த ஒரு அலுவலக ஊழியர் பேருந்திற்காக நின்றுகொண்டிருந்தார், அங்கே வந்த ஒரு அதிகார பிச்சைகாரர் அந்த அலுவலக ஊழியரிடம் பிச்சை கேட்க்க அவரும் இல்லை என்று சொல்ல உடனே அந்த பிச்சை காரர் அந்த ஊழியரை கெட்ட வார்த்தைகளில் திட்டியதோடு திடீரென அவரை கட்டிபிடித்துவிட்டார்,பதறிப்போன அந்த ஊழியர் தன்னை  விடுவித்துக்கொண்டு தன் ஆடையை பார்க்க அவர் அணிந்திருந்த அந்த தூய்மையான ஆடை கரி துணிபோல காட்சி அளித்தது, என்ன காரணம் என்றால், அந்த பிச்சைகாரர் ஏற்கனவே தனது உடலெங்கும்  அடுப்புகரி தூளை பூசியிருந்திருக்கின்றார், யாராவது தமக்கு பிச்சை கொடுக்க வில்லை என்றால் அவர்களை இதுபோன்று கட்டிபிடித்து அவர்களை அசிங்கபடுத்துவாராம்.  அன்று முதல் அந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த பிச்சை காரரை பார்த்தால் மக்கள் கொஞ்சம் உஷாராக நடந்துகொண்டு அசிங்கத்தை தவிர்க்க ஆரம்பித்தனர்.

நாம் எதெற்கெடுத்தாலும் மேல் நாட்டினை மேற்கோள் காட்டி பேசுவதும் அவர்களின் பழக்க வழக்கங்களை , நாகரீகத்தை கடைபிடிப்பதும் வழக்கம்.

என்னதான் மேலை நாடுகள் பொருளாதார நிலைமையில் நம் நாட்டை விட பலமடங்கு வளர்ந்திருந்தாலும் அந்த நாடுகளிலும் வறுமை, வேலை இல்லா திண்டாட்டம், வீடற்றவர்கள், தெருவில், பூங்காவில் படுத்துறங்குபவர்கள், பிச்சை எடுப்பவர்கள் என இருக்கத்தான் செய்கின்றனர்.

Image result for pictures of beggars in england

இருந்தாலும் இங்கே பிச்சை எடுப்பவர்கள், கொஞ்சம் நாகரீகமாக, தமக்கு தெரிந்த ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசித்து, அல்லது பாட்டுப்பாடி தங்களின் நோக்கத்தை தெரிவிப்பார்கள்.


காசு கொடுப்பவர்களுக்கும் கொடுக்கதவர்களுக்கும் "இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்"(have  a  good  day) என்று சொல்லுவார்கள்.

சமீபத்தில் நான் வேலைக்கு செல்ல கடக்கும் ஒரு சப் வேயில் அமர்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த ஒரு நபரின் கையில் ஒரு வாசகம் எழுதப்பட்ட ஒரு போர்ட் இருந்தது அதை பார்த்ததும் எனக்கு புன் சிரிப்பு  வந்தது .

அப்படி என்ன அந்த வாசகத்தில் இருந்தது?

"உதவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் புன்னகியுங்கள்"(smile  at-least)

எங்களை கேவலமாக நினைத்து ஒதுக்காதீர்கள், ஒரு புன்னைகையையாவது வீசி  நாங்களும் மனிதர்கள்தான் என்பதை அங்கீகரியுங்கள் மாறாக எங்களை ஏதோ வினோத ஜந்துக்களை பார்பதுபோன்றோ அல்லது எங்களை தீண்டதகாதவர்கள்போல் நினைத்து புறக்கணிக்காதீர்கள் என்னும் பல விஷயங்களை அந்த வாசகம் பார்போருக்கு பறை சாற்றி கொண்டிருந்தது.

மேலை நாட்டினை எத்தனையோ விஷயங்களில் காப்பி அடிக்கும் நாம் இதுபோன்ற வறுமையிலும் மற்றவர்களை வாழ்த்தும் பண்புகளையும் உதவாதவரையும் பழிக்காத மன பக்குவத்தையும்    "பிச்சைபுகினும் கற்கை நன்று"

Image result for pictures of weird quotes with beggars in england நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

பின் குறிப்பு: இவை எங்கே என்று கேட்பவர்களுக்கு ; இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாட்டு நடப்புக்கள்.

10 comments:

 1. பசி வந்தால் புன்னகையும் பறந்து போகும்...

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,

   அதனால்தான் என்னவோ, பசி நேரத்தில் இவர்களை கடந்து செல்பவர்கள் இவர்களை பார்த்து புன்னகிப்பதில்லையோ?

   வருகைக்கு மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete
 2. இவர்களைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
  இன்று பிச்சைகாரர்களாய் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் நல்ல நிலையில் வாழ்ந்தவர்களே. காலத்தின் கோலத்தால் இப்படி ஆகி விட்டனர்.முடிந்த வரை அவர்களை மனிதர்களாய் நடத்த அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை,உதாசீனப்படுத்தக் கூடாது.அவர்களும் மனிதர்களே.
  நல்ல பதிவு அய்யா.

  ReplyDelete
  Replies
  1. சகோ. அனிதா,

   நீங்கள் சொல்வது உண்மையே.

   இவர்கள் ஒருகாலத்தில் கௌரவமுடன் வசதியாக வாழ்ந்தவர்களே.
   நானும் பலரை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கின்றேன்.

   வருகைக்கும் பதிவை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete
 3. நல்ல பகிர்வு. என் சிறு வயதில் மௌனச்சாமியார் ஒருவர் வந்து யாசகம் பெற்றுச் செல்வார். ஒரு வார்த்தைப் பேச மாட்டார். ஒரு சத்தமும் செய்ய மாட்டார். ஆனால் தினமும் மாலை சரியாக ஆறு மணி சுமாருக்கு தெருவில் தாண்டிச் செல்வார். யாசகம் இடுபவர்கள் அவரின் வழியை மறித்துத் தருவார்கள்.

  ReplyDelete
 4. ஸ்ரீராம்,

  சின்ன வயது ஞாபகத்தை பகிர்ந்தமைக்கும், பதிவை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

  Hope you are well.

  நட்புடன்.

  கோ

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு. பிச்சை, பீட்சை வித்தியாசம் உண்டு என்பார்கள். சாமிக்கும் ஆசாமிக்கும் என்று நினைக்கிறேன். எதுவாயினும் மனிதம் காக்கப்படனும். முயற்சிப்போம். நன்றி. என் வலைப்பக்கமும் வரலாமே, சில தகவல்கள் உண்டு.

  ReplyDelete
 6. மகேஸ்வரி,

  வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  சாமிகளுக்கும் ஆசாமிகளுக்கும் வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை இப்போது.
  இந்த இரண்டுபேரிடமும் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டியிருக்கின்றது.

  தங்கள் ஆசானை குறித்து வாசித்தேன் அருமை.

  என்னுடைய ஆசானை பற்றி அறிய " தமிழ் வந்த கதையை" படித்துவிட்டு வாருங்கள் தங்கள் பின்னூட்டத்துடன், காத்திருக்கிறேன்.

  நட்புடன்

  கோ

  ReplyDelete
 7. இதில் வருகின்ற "பிச்சைபுகினும்" எனும் சொற்றொடரில் பிச்சை என்பது ஒரு இழிவான செயல் என்றாலும் கற்க போதுமான வசதி இல்லை என்றாலும் கற்பதை விட்டுவிடக்கூடாது அதற்காக பிச்சை எடுத்தாகிலும் கல்வி கற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தவே இங்கு "பிச்சைபுகினும்" எனும் சொற்றொடர் பயன் படுத்தப்பட்டுள்ளது.// ஆம் நண்பரே எங்கள் பேராசியையும் இதையேதான் சொல்லுவார்! கற்க வேண்டும் என்றால் காலில் விழுந்தாவது கற்க வேண்டும். அங்கு தன்மானம் எல்லாம் பார்க்கக் கூடாது என்பார்.
  இப்போதெல்லாம் பிச்சை புகினும் எப்படி எப்படி எல்லாமோ நடக்கின்றது...நல்லதொரு குடும்பத்தில் பிறந்து, நன்கு படித்து நல்ல வேலையில் இருந்து பின்னர் வாழ்க்கை சுழற்றி அடித்து நடுத்தெருவிற்கு கொண்டுவந்து "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்று பாடுபவர்களும் எங்களுக்குத் தெரிந்து உண்டு. மனது மிகவும் வேதனிக்கும். அதுவும் தெரிந்தவர் என்றால்.....இன்னும்...பசி என்றால் பத்தும் பறக்கும் தானே! ....
  நல்லதொரு பதிவு நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   பதிவினை பாராட்டியமைக்கு நன்றி.

   ஆமாங்க நீங்க சொன்ன மாதிரியான ஆட்கள் குறித்து நானும் கேள்விபட்டிருக்கின்றேன், மனசு வேதனைபடுகிறது.

   நட்புடன்

   கோ

   Delete