நண்பர்களே,
"தட்டுங்கள் திறக்கப்படும்",
"கேளுங்கள் கொடுக்கப்படும்",
"தேடுங்கள் கண்டடைவீர்கள்",
"உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு",
"உன்னிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாதவனுக்கு கொடு"
போன்ற உயரிய பொன் மொழிகளைபோலவே,
" தன்னைப்போல் பிறனையும் நேசி" என்பதும் மகத்தான ஒரு பொன்மொழி.
இந்தபோதனை கேட்பதற்கு மிகவும் எளிமையான காரியம் போல தோன்றினாலும் அதை கடைபிடிப்பது நடைமுறை படுத்துவது என்பது மிகமிக கடினமான ஒன்று எனவே எனக்கு தோன்றுகிறது.
அது எப்படி நம்மை நாம் நேசிப்பதுபோல அயலாரை நேசிக்க முடியும்?
இதை ஆங்கிலத்தில் "LOVE YOUR NEIGHBOUR AS YOU LOVE YOURSELF "
இந்த கருத்தின் போதனையை அருளுரையாக வழங்கிகொண்டிருந்தபோது அங்கே கூடி இருந்தவர்கள் எனக்கு "பிறன்" யார் (WHO IS MY NEIGHBOUR) என கேட்டனர்.
அதற்க்கு கிறிஸ்த்து ஒரு உவமானம் சொல்லி விளக்கும்பொருட்டு:
ஒரு வழிப்போக்கன் தனது பயணத்தின் இடையில் கள்வர்களால் தமது உடமைகளை இழந்ததோடு அவர்களால் நைய புடைக்கப்பட்டு, குற்றுயிரும் கொலையுயிருமாக உயிருக்கு போராடிகொண்டிருந்த தருணத்தில் அந்த வழியாக வந்த சமூகத்தில் உயரிய அந்தஸ்த்துமிக்க ஒருவர் இந்த அடிபட்டு உதவியற்று இருக்கும் பயணியை கண்டுகொள்ளாமல் விலகி சென்றாராம்.
ஒரு வழிப்போக்கன் தனது பயணத்தின் இடையில் கள்வர்களால் தமது உடமைகளை இழந்ததோடு அவர்களால் நைய புடைக்கப்பட்டு, குற்றுயிரும் கொலையுயிருமாக உயிருக்கு போராடிகொண்டிருந்த தருணத்தில் அந்த வழியாக வந்த சமூகத்தில் உயரிய அந்தஸ்த்துமிக்க ஒருவர் இந்த அடிபட்டு உதவியற்று இருக்கும் பயணியை கண்டுகொள்ளாமல் விலகி சென்றாராம்.
அதன்பிறகு அந்தவழியே வந்த மற்றுமொரு உயரிய கௌரவமிக்க மனிதர் இவரை பார்த்தும் எந்த ஒரு உதவியும் செய்ய மனதற்று விலகி சென்று விட்டாராம்.
மூன்றாவதாக ஒரு மனிதன் அந்த வழியே வரும்போது, நடு காட்டில் அடிபட்டு, உயிருக்கு போராடி-போராடி களைத்துபோய் நினைவிழந்து இருந்த அந்த சக மனிதன் மேல் இரக்கம் கொண்டு, மனதுருகி, அவனுக்கு வேண்டிய தன்னால் ஆன முதல் உதவியை செய்து அவனது காயங்களை துடைத்து, தனது வழி பயணத்தின்போது குடிக்கவும் உண்ணவும் கொண்டுவந்திருந்த பழச்சாறையும் உணவினையும் அவனுக்கு கொடுத்து, தான் பயணித்த அந்த கழுதையின்மேல் அந்த அடிபட்டவனை அமர்த்தி கொஞ்சம் தூரத்தில் இருந்த ஒரு விடுதியில் ஒப்படைத்து , இவரை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி தனது பணத்தை அந்த விடுதி காப்பாளரிடம் கொடுத்து மேற்கொண்டு எவ்வளவு செலவு ஆனாலும் செய்யுங்கள் நான் திரும்பி வரும்போது நீங்கள் மேற்கொண்டு செலவு செய்த பணத்தை கொடுத்துவிடுகின்றேன் என சொல்லி அந்த மனிதனை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தாராம் அந்த மூன்றாவது மனிதன். இத்தனைக்கும் இவர் அந்த காலத்தில் அந்த சமயத்திலும் சமூக பார்வையிலும் தாழ்ந்த சமூகத்தை சார்ந்தவராம்.
இப்படியாக ஒரு உவமையை சொல்லிவிட்டு இந்த மூவரில் அந்த அடிபட்டவனுக்கு "பிறன்" யார் என கிறிஸ்த்து கேட்டாராம். அதற்க்கு கூடியிருந்த மக்கள் ஏகோபித்த குரலில் "அந்த அடிபட்டவனுக்கு இரக்கம் காட்டியவனே" என சொன்னார்களாம். அதற்க்கு கிறிஸ்த்து "ஆம் நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என போதித்தாராம்.
இந்த உவமையின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் பாடம், யாராவது உதவி வேண்டிய நிலையில் இருப்பதை பார்த்தாலோ அறிந்தாலோ நாம் மனமுவந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்பதே.
ஆனால், இப்போது யாராவது அடிபட்டு சாலை ஓரத்திலோ வேறு எங்கேனும் இருப்பதை பார்பவர்கள் உதவும் மனம் இருந்தாலும், பின்னர் போலீஸ் , கேஸ்,கோர்ட்டு, சாட்சி, வாய்தா போன்ற நடைமுறை சிக்கல்கள், சட்ட பிரச்சனைகளால் தமது அன்றாட வாழ்க்கை பாதித்துவிடுமோ என அஞ்சி உதவ முன்வருவதில்லை.
அப்படியும் மனிதாபிமானமுள்ள சிலர் வருவது வரட்டும் முதலில் உதவி செய்வோம் என துணிந்து உதவுவதை ஆங்காங்கே பார்க்க முடிகின்றது.
இந்த மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக்கபடவேண்டுமாயின், சட்டங்கள் திருத்தப்படவேண்டும், போலீசும் உதவுபவர்களை தொந்தரவு செய்யாமல், அவர்களை குறித்த விவரங்களை சேகரிக்காமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில் உயிர் காக்கும் மருத்துவ மனைகளும் தங்களின் கொள்கைகள், விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அடிபட்டு உயிருக்கு போராடும் மனிதர்களை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டவேண்டும்.
இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் மக்கள் அடிபட்டவர்களுக்கு உதவ முன்வந்தாலும் காவல்துறையின் அறிவுரை என்னவென்றால் , அடிபட்டவரோ, அல்லது மயக்கமுற்று சாலையில் விழுந்திருப்பவரோ யார் என்று தெரியாத பட்ச்சத்தில் அவர்களிடம் என்ன ஆயுதங்கள், இருக்கின்றது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கபட்டவரா அல்லது வேறு சமூக விரோத சக்தியா என்று தெரியாததால் அவர்களின் அருகே செல்லாமல் கொஞ்சம் தொலைவிலிருந்தே அவசர உதவி துறைக்கு தகவல் சொல்லுங்கள் மற்றவற்றை அவர்கள் பார்த்துகொல்வார்கள் என்று.
மாறிவரும், வெடிகுண்டு , தீவிரவாத கலாச்சாரமும் இதற்க்கு காரணம்.
மாறிவரும், வெடிகுண்டு , தீவிரவாத கலாச்சாரமும் இதற்க்கு காரணம்.
பொதுவாக இங்கே அவசர தேவை துறைக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டால் எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு துரிதமாக வந்துவிடுவார்கள்,
போக்குவரத்து பாதிப்போ சாலை நெரிசலோ எதுவும் இங்கே ஆம்புலன்ஸுக்கு நெருக்கடியாக வாய்ப்பில்லை. சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் வருகின்றதென்றால் அனைத்து வாகனங்களும் ஓரமாக நின்று வழிவிடும் நாகரீகம் அறிந்த - நிறைந்த நாடு என்பதால்.
.
இப்போது மாறிவரும் சமூக நிலைமையில் அவர்கள் சொல்லுவதும் ஞாயமாகவே தெரிகின்றது.
இந்த பதிவை இன்று எழுதுவதற்கான காரணம், இன்று மாலை வேலைவிட்டு பேருந்தில் பயணித்துகொண்டிருந்தபோது , ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி திடீரென பேருந்தில் மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டார், விழுந்தவர் தமது கைகளையும் கால்களையும் இழுப்பு நோயாளியைப்போல வெடுக்வெடுக்கென இழுக்க ஆரம்பித்துவிட்டார்.
பேருந்தில் இருந்தவர்களுள் யாருமே உதவ முவரவில்லை , ஓட்டுனரும் செய்வதறியாது பேருந்தை நிறுத்திவிட்டார்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு என்ன நடந்ததென்பதே கொஞ்சம் நேரம் கழித்துதான் தெரியவந்தது, பேருந்து முழுவதும் நல்ல கூட்டம்.
எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு ஆசிய பெண்மணி எழுந்து அந்த பாதிக்கப்பட்டவரின் அருகில் சென்று அவரது நாடி துடிப்பை பரிசோதித்துவிட்டு,அவரிடம் பேச ஆரம்பித்தார்,
ஆனாலும் ஒரு பதிலும் இல்லை. சற்று நேரம் எந்த ஒரு அசைவும் இல்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் தமது கைகளையும் கால்களையும் முறுக்கிய படி இழுக்க ஆரம்பித்தார்.
நானும் அருகில் சென்று எதோ எனக்கு தெரிந்த சில முதலுதவிகளை(பயிற்சி பெற்றிருந்ததால்) செய்யலாம் என முன்னுக்கு சென்று அவரில் நாக்கு கடிக்கபட்டிருக்கின்றதா, அவர் ஒரு பக்கமாக ஒருக்களித்தபடி படுத்திருக்கின்றார என பார்த்துவிட்டு, ஏற்க்கனவே உதவி செய்துகொண்டிருந்த பெண்மணியிடம் விழுந்திருப்பவரின் நிலைமை கவலைக்கிடமில்லை என்று உறுதி செய்துகொண்டு, ஓட்டுனரிடம் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லவேண்டும் என சொல்லும்போதே ஒரு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
ஆம்புலன்ஸ் வந்துவிட்டது என சொல்லகேட்ட அந்த அந்த பெண்மணி அதிலிருந்து வந்த துணை மருத்துவ ஊழியரின் குரல்கேட்டு எழுந்து அவர் பின்னால் சென்று ஆம்புலன்சில் தானாக ஏறி அமர்ந்துகொண்டார்.
அந்த சுகவீனப்பட்ட பெண்ணுக்கு உதவ முன் வந்த அந்த பெண்ணிடம் நான் நன்றி சொல்லி அவரின் மனிதாபிமானத்தை பாராட்டும்போது அந்த பெண்மணி சொன்ன விஷயம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
அதாவது உதவிசெய்ய சென்ற பெண்மணி தான் ஒரு நர்ஸ் என்றும் கீழே விழுந்து வலிப்பு நோய் போல தமது கைகளையும் கால்களையும் வெடுக் வெடுக்கென இழுத்துகொண்டிருந்த பெண் தாம் வேலைசெய்யும் மருத்துவமனைக்கு அடிக்கடி வருபவரென்றும் அவ்வப்போது இதுபோன்று பொது இடங்களில் பலரது கவனத்தை ஈர்க்க நாடகமாடுவதாகவும் , வலிப்பு நோய் இருப்பவர்கள் வலிப்பு வரும் சமயத்தில் தமது கண்கள் திறந்த நிலையில் (நிலைகுத்தி) இருக்குமெனவும் தமது நாக்கை கடித்துகொள்வார்கள் எனவும் நாம் சொல்வது அவர்களுக்கு கேட்காது எனவும் ஆனால் இந்த பெண்ணிடம் அது போன்ற எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவரது பையில் இருந்த மாத்திரைகளுள் எதுவும் வலிப்பு நோய் சம்பந்தப்பட்டவை அல்ல என்றும் இது முழுக்க முழுக்க ஒரு நாடகம் எனவும் அவர் சொல்ல இப்படியுமா? என வியப்பில் ஆழ்ந்தது என் சிந்தனை.
இதுபோன்ற சிலரால், உண்மையிலேயே பாதிப்புக்கு உள்ளாகும் பலரும் கேட்பாரற்று உதவியற்று போகும் அவல நிலைமைக்கு தள்ளபடுகின்றனர் என்பதே உண்மை.
ஏன் இப்படி செய்கின்றனர் என்பதற்கு இது ஒரு சைக்கலாஜிகல் டிஸ் ஆர்டர் என்பதையும் அந்த நர்ஸ் பெண்மணி சொன்னார்கள் .
அப்போது பயணிகள் எல்லோரும் முதலில் கொண்ட பரிதாபம், அனுதாபத்திற்கு மாறாக ஒரு ஏளன பெருமூச்சி விட்டதினால் பேருந்தின் உஷ்ணம் பலமடங்காக கூடியது.
அந்த பெண் எல்லோருக்கும் போட்ட குல்லாவை நினைத்து நான் என் குல்லாவை கழற்றி தலையை சொரிந்துகொண்டேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
நல்ல பதிவு . தன்னை போல் பிறரையும் நேசிப்பது மிகவும் கடினமான காரியம். அதற்க்கு எல்லாம் ஒரு தனி மனம் வேண்டும் .
பதிலளிநீக்குசரி , உங்கள் பதிவை படித்தவுடன் ஒரு சந்தேகம் வந்து விட்டது. நீங்க உதவி செய்யுங்க என்று சொல்லு கின்றீர்களா ? இல்லை வேண்டாம் என்று சொல்லுகின்றீர்களா?
உடனடியாக உதவிக்கு ஏற்பாடு செய்வதும் உதவுவதற்கு சமம்தானே?
நீக்குபாதிக்கப்பட்டவர்கள் மேல் இறக்கம் கொண்டு மனதுருகுவதும் மனிதாபிமானம்தனே?
இப்போது உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விரும்பத்தகாத செயல்களால் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று தெரியாததால் நேரடியாக சென்று உதவுவது உபத்திரவமாக மாற வாய்ப்புள்ளதால், கொஞ்சம் யோசிக்கவேண்டியுள்ளது.
மேலும் உங்கள் கேள்விக்கு என் பதில் என்னவாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமே.
வருகைக்கு நன்றி நண்பரே.
நட்புடன்
கோ
நாடகமா...?
பதிலளிநீக்குயாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...!
தனப்பால்,
பதிலளிநீக்குஇதுபோன்ற நாடக நடிகர்களால் உண்மையில் உதவிதேவைபடுவோர்கள் சந்தேகிக்கபடுகிரார்கள்.
வருகைக்கு நன்றி.
நட்புடன்
கோ
தாங்கள் சொன்னது போல் பிறை நேசித்தல், அதனால் துன்பம் இவையெல்லாம் தொடரும். நம் நெருங்கிய உறவாக கருதுவோம் அனைவரையும், துன்பம் குறையும். நடிப்பவர்கள் நடிக்கட்டும், நாம் நடிக்கவேண்டாம். மாறாதா? நன்றி.
பதிலளிநீக்குபோலிகளால், அக்மார்கும் கண்ணுக்குப் புலப்படாமல் போகின்றதே! யேசு மஹான் எனவே அவரால் முடிந்தது...நாம் எல்லோரும் மிக மிக சாதாரண மனிதர்கள்.....என்றாலும் சிறிதளவேனும் அதைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்....இதற்கு அன் கண்டிஷனல் லவ்விற்கு மனதைப் பயிற்சி அளிக்க வேண்டும்....மனிதனுக்கு கஷ்டமான ஒன்று!!! ஆனால் முயற்சிக்க வேண்டும்....
பதிலளிநீக்குஅன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குபதிவினை பாராட்டியமைக்கு நன்றி.
சரியா சொன்னீங்க, இது கொஞ்சம் கஷ்ட்டம்தான். அன் கண்டிஷனல் லவ் இந்தகாலத்தில் பார்க்க முடியாதது மட்டுமல்ல நடைமுறை படுத்துவதும் முடியாததாகவே இருக்கின்றது.
முயற்சிப்போம் ஒரு நாள் திருவினையாகலாம்.
நட்புடன்
கோ