இடி மேல் இடி.....
நண்பர்களே,
உலகில் அவ்வப்போது நிகழும் பல அசம்பாவிதங்கள், பேரிடர்கள், சாலை, ரயில்,கப்பல்,விமான விபத்துகளை குறித்து, நாம் அனைவரும் பெரும் துயருக்கு ஆளாகின்றோம்.
விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் நமக்கு, ரத்தபந்தாமோ, சொந்தமோ, நட்போ இல்லாதபோதும் அவர்களின் இன்னல்களை, காயங்களை, மரணத்தை குறித்து மனதளவில் நாம் மிகவும் வருத்தபடுகின்றோம், அவர்களின் மறு வாழ்விற்காக, சுகத்திற்க்காக, அல்லது மரணித்தவர்களின் ஆன்ம இளைபாறுதளுக்காக,அவர்களின் குடும்ப மக்களின் ஆறுதலுக்காக நாம் நம் மனதிலும், குடும்பமாகவும், சமூகமாகவும் பிரார்த்திக்கின்றோம்.
இனி இதுபோன்ற கொடுமைகள் உலகில் எவருக்கும் ஏற்பட கூடாது என்றும் மனதார வேண்டிக்கொள்வோம்.
இப்படி விபத்துகளுக்குள்ளானவர்களோடு எந்த சம்பந்தமும் இல்லாத நமக்கே இதுபோன்ற இழப்புகளை, துயரங்களை தாங்கிகொள்ளமுடிவதில்லையே, இந்த பேராபத்தில் சிக்கி, உடலுருப்புகளையும், உயிர்களையும் இழந்தவர்களின் குடும்பத்தினரின் , ரத்த சம்பந்த பட்டோர், மனைவி, கணவன் பிள்ளைகள், அப்பா, அம்மா சகோதர சகோதரி போன்றவர்கள் எப்படி தாங்குவார்கள்?
சமீபத்தில் நிகழ்ந்த எல்லா பெரும் விபத்துகளிலும் சிக்கி, தங்கள், உடலுருப்புகளையும், உயிர்களையும் இழந்த அனைத்து மக்களுக்கும் இந்த நேரத்தில் எமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பங்களுக்கு எமது ஆறுதலையும் இந்த பதிவின் வாயிலாக பகிர்ந்துகொள்கிறேன்.
இது போன்று கடந்த மாதம் ஒன்பதாம் தேதி, அர்ஜென்டினா நாட்டின் வடமேற்கு பகுதியில் வில்லா காஸ்ட்லி என்னும் இடத்தில் நடந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கான படபிடிப்பின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மோதி விபத்துக்குள்ளான நிகழ்வை நாம் எல்லோரும் அறிந்திருப்போம்.
அந்த இரண்டு ஹெலி காப்டர்களிலும், உலகனின் தலை சிறந்த ஒலிம்பிக் பதக்கங்கள் பரிசுபெற்ற வீரர்கள் இருந்தார்கள் என்றும் அவர்கள் அத்துனைபேரும் சம்பவ இடத்திலேயே மரணித்துபோனார்கள் எனவும் நாம் அறிந்திருப்போம்.
அந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் 28 வயதே நிரம்பிய பிரஞ்சு தேசத்த்தை சார்ந்த ஒலிம்பிக் வீரர் அலெக்ஸ் வாஸ்டின்.
இவர் இந்த தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு தேர்ந்தேடுக்கபட்டிருந்த நேரத்தில் மிகவும் சோகமாக , துயரத்துடன் இருந்திருக்கின்றார்.
எனினும் தமது சோகங்களை மறைத்துக்கொண்டு அல்லது கொஞ்சம் மறக்க வேண்டி படபிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார்.
படபிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில தான் இந்த பேராபத்தான விபத்து இவர்களை மேற்கொண்டு அனைவரயும் பலிகொண்டிருக்கின்றது.
இந்த செய்தியை தொலைகாட்சி வாயிலாக பார்த்து தெரிந்துகொண்ட இவரது தகப்பனார் மிகவும் அதிர்ந்துபோய் சொல்லொண்ணா வேதனை அடைந்திருக்கின்றார்.
புத்திர சோகம் எப்பேர்பட்டது என்பதை நாம் எல்லோரும் ஓரளவிற்கேனும் அறிந்திருப்போம்.
அந்த ஓய்வுபெற்ற முன்னாள் குத்துசண்டை பயிற்சியாளரான தந்தையின் சோகம் எல்லை கடந்த சோகமாக அமைந்துவிட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
தான் பெற்று எடுத்து பேணி வளர்த்து ஒரு சாதாரண மகனாக வளர்க்காமல் , ஒலிம்பிக் என்னும் மாபெரும் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று பதக்கம் வென்று சாதனை படைக்கும் பிள்ளையாக பயிற்சி அளித்து வீட்டிற்கும் தமது தாய் நாட்டிற்கும் பெருமை தேடித்தரும் பிள்ளையாக வளர்த்து ஆளாக்கிய அந்த தகப்பன் தன் மகன் இந்த தொலைகாட்சி நிகழ்ச்சிக்கான படபிடிப்பிலும் கலந்துகொண்டு இன்னும் பெரும் புகழும் ஈட்டுவான் என்று எண்ணி கொண்டிருந்த அந்த தகப்பன் இப்போது தனது மகனின் மரண செய்தியை தொலைகாட்சி செய்தி வாயிலாக அறிந்தபோது அடைந்த துக்கத்தையும் சொல்லொன்னா துயரத்தையும், சோகத்தை என்னவென்று சொல்லுவது.
செய்தியை ஊர்ஜிதபடுத்திக்கொண்டு அதை முறைப்படி அறிவிக்க காவல் துறையினர் தமது வீட்டின் கதவை தட்டுமுன்னே விஷயத்தை அறிந்திருந்த அந்த தகப்பன், வந்திருந்த காவலர்களிடம் சொன்ன செய்தி கேட்போரின் நெஞ்சங்களை பிளந்து / பிழிந்து ரத்தம் சிந்த வைத்தது.
அதாவது இரண்டு மாதங்களுக்கு முன் வாஸ்டினின் இளைய தங்கையும் குத்துசண்டை வீராங்கனையுமான 21 வயதான தனது செல்ல மகள் செல்லி ஒரு கார் விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டாளாம் அந்த மரணம் தங்களது மனதிலும் வீட்டிலும் படரவிட்டிருந்த சோக சுவடுகள் ஆறும் முன்னே இப்போது மகனின் மரண செய்தி.
இப்படி அடுத்தடுத்து தமது குடும்பத்தில் நிகழ்ந்த சோகங்களை தாங்கமுடியாமல் மனமுடைந்து அழுதுகொண்டே அந்த தகப்பன் மேலும் சொல்லி இருக்கின்றார், " எங்கள் குடும்பம் சபிக்கப்பட்ட குடும்பமாகிவிட்டதோ" இப்படி அடி மீது அடி விழுந்ததுபோலல்லாமல் இடிமீது இடியாகவந்து எங்கள் குடும்பத்தில் விழுந்து எங்களை இப்படி மீளாதுயறத்திற்கு ஆளாக்கிவிட்டதே என்று.
இந்த பதிவின் துவக்கத்தில் சொல்லி இருந்த வண்ணம், அலெக்ஸ் வாஸ்டின், படபிடிப்பிற்க்கு செல்வதற்கு முன்னால் சோகமாக, வருத்தமாயிருந்தாரே அதற்க்கு காரணம் தமது அன்பு தங்கையின் அகாலமரணமே, துயரத்தில் இருந்த மகனின் மரணம் அந்த குடும்பத்தை இன்னும் துயரத்தின் ஆழத்தில் புதைத்து விட்டது என்பதை நினைக்கும்போதே உள்ளம் வேதனையால் ரத்தம் சிந்துகின்றது.
இவ்வாறு ஒரு குடும்பத்தில் பாசத்திற்குரிய ஒரு பிள்ளையை இழந்தாலே அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக மனதிலும் மனையிலும் ஒரு நீங்கா வெற்றிடத்தை ஏற்படுத்தும்போது ஒரே குடும்பத்தில் அதுவும் இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளை இழந்த குடும்பங்களுக்கு குறிப்பாக பெற்றோருக்கு யாரால் ஆறுதல் சொல்லமுடியும்?இந்த இழப்புகளை யாரால் ஈடு செய்யமுடியும்?
இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து பேர்களின் ஆன்மாக்களும் இறைவனின் இன்னடியில் இனிதே இளைபாராட்டும் என்றும் குறிப்பாக இரண்டு பிள்ளைகளையும் அடுத்தடுத்து இழந்து புத்திர சோகத்தில நித்திரை இன்றி தவிக்கும் அந்த அன்பு தகப்பனுக்கு எல்லாம் வல்ல இறைவன் இந்த உலகம் தரகூடாத தெய்வீக ஆறுதலை அளித்து இந்த துயரத்தின் வீரியம் காலபோக்கில் கொஞ்சம் கொஞ்சமாககுறைந்து மனதில் அமைதியை அளிக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்.
LET THEIR SOULS REST IN PEACE
நன்றி!
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
ஆழந்த பிரார்த்தனைகள்...
பதிலளிநீக்குதனப்பால்
நீக்குதங்களின் பிரார்த்தனைகளின் பலன்கள் உரியவருக்கு சேரட்டும்.
நன்றி
கோ
மனம் மிகவும் வேதனை அடைந்தது. இது போன்று இறந்த பல வீரர்கள் நினைவுக்கு வந்தார்கள் நமது நாட்டில். எத்தனை பேர்..ம்ம்
பதிலளிநீக்குதங்களின் அந்த இறுதி வார்த்தைகளில் எங்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!
தங்களின் சார்பாகவும்தான் அந்த வேண்டுதல்.
நீக்குகோ
நன்றி
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குமனம் மிகவும் கனத்து கிடக்கிறது,
நன்றி.
வருகைக்கு நன்றி கனத்துதான் போகிறது மனம். பரம பிதாவின் பரமபதம் இவை.
பதிலளிநீக்குகோ