Followers

Friday, March 6, 2015

பொக்கிஷங்கள்

இன்றுபோல் என்றும் வாழ்க!!

நண்பர்களே,

உலகில் பிறந்த எந்த மனிதனும் தாம் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றே நினைப்பான்,  யாரும் அற்ப ஆயுளில் தங்கள் வாழ்வு முடிய விருப்பபட மாட்டார்கள்.


அதே போல மற்றவர்களை வாழ்த்தும்போதும் நூறாண்டு காலம் வாழ்க என்று தான் வாழ்த்துவார்கள்.

வாழ்த்துவதற்கு எல்லையாக வரம்பாக நூறு ஆண்டுகளைதான் அதிக பட்ச்சமாக உலகில் எல்லோரும் பயன்படுத்துவார்கள்.

ஒரு சிலரிடம் ஆசி பெற்றால் நல்லது என்றும் ஆசீர்வாதம் என்றும் நினைத்து நாம் ஒருசிலரை தேடிசென்று ஆசி பெறுவதும் வழக்கம்.

இதில் ஒரு உலக - இயற்கையின் விளையாட்டு  என்ன வென்றால் நூறாண்டுகள் வாழ்க என்று வாழ்த்தியவர்களே அற்ப ஆயுளில் மரித்துபோவதுதான்.

மோதிர விரலில் குட்டுபட்டால் நல்லது என்று ஒருசிலரை பெருமை படுத்தும் வகையில் குறிப்பிடுவதும் உண்டு, 

அவ்வாறு மதிப்பிடப்படும் பெரியவர்களிடமும் ஆசிபெறுவது நமது மரபாகவும் இருக்கின்றது, அப்படி அவர்களிடம் ஆசி பெற்றால் ஆயுள் உட்பட அனைத்து சௌபாக்கியங்களும் வாழ்வில் ஏற்படும் என்பதும் பலரது அசைக்க முடியாத நம்பிக்கை.

பொதுவாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது யாரின் முன்னிலையில், அல்லது யாரின் தலைமையில் அல்லது யார் யாரின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடக்கவேண்டும் என்றும் அப்படி இன்னாரின் தலைமையில் திருமணம் நடந்தால் தம்பதியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

அதே போன்று பிறந்த குழந்தைக்கு யாரை அழைத்து அல்லது யாரின் கரங்களால் தொட்டிலிலிட்டு பெயர் சூட்டபடவேண்டும் என்றும் அதற்காக ராசியானவர் என்று சமூகத்தால் பரவலாக அறியப்பட்ட பெரியவர்களை கொண்டு இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு.

அப்படி ஒருசிலரின் கரங்களால் தொட்டு ஆசீர்வதிக்கப்படும் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் நீண்ட பல காலங்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் இது போன்ற ஆசிர்வாதங்கள் பலரின் வாழ்வில் பெருமளவிற்கு பயனளித்தாலும் , எல்லா குழந்தைகளும் 100 ஆண்டுகள் வாழ்வது என்பது சாத்த்தியமாவதில்லை.

அதே சமயத்தில் விரல் விட்டு எண்ணி விடுமளவிற்கு ஒரு சிலருக்கு இது போன்ற வாழ்த்துக்கள் பலித்து அவர்கள் நூற்றாண்டுகளும் அதற்க்கு மேலும் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கும் செய்திகள் நமக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அவ்வகையில் ஒரு பெண் குழந்தை பிறந்த சமயம் அவரை பலரும் அன்போடு வாழ்த்தி சகல சௌபாக்கியங்களும் பெற்று நோய் நொடி இன்றி சந்தோஷமாக நூறாண்டுகள் வாழ்க என நல்ல மனதோடு வாழ்த்தி சென்றார்கள்.

இந்த வாழ்த்து வழங்கப்பட்ட நாள் மார்ச் ஐந்தாம் தேதி 1898 ஆம் வருடம்.

அதாவது 117 ஆண்டுகளுக்கு முன்னர்.

அந்த வாழ்த்துக்கள் அப்படியே பலித்து அந்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது 117 வது பிறந்த நாளை மிக உற்ச்சாகத்துடன் கேக் வெட்டி தான் தங்கி இருந்த நர்சிங் ஹோமில் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்.

இன்றைய தேதியில் உலகளாவிய தகவல் பதிவு மற்றும் ஆவண பாதுகாப்பு மையத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி இந்த பெண்மணியே உலகின் அதிக வயதுள்ள பெண்மணி (THE WORLD'S OLDEST WOMAN) என்ற அந்தஸ்த்தையும்  பெருமையையும்  பெறுகின்றார்.

நம்மில் எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். 

நம் கையில்  என்ன இருக்கின்றது , ஆயுள் ரேகை மட்டும் தான் இருகின்றது ஆனால் அதன் போக்கை - நீளத்தை  தீர்மானிப்பவர் நம்மை படைத்தவரே.

சரி இப்போ இந்த பாட்டிமா எங்கே இருக்கின்றார் ?

இவர் ஜப்பானில் உள்ள ஒசாக்கா மாநிலத்தில் மிகவும் உற்ச்சாகமாக , நினைவாற்றல் நிறைந்தவராய் கண்ணாடி அணியாமலும் ஆரோக்கியமாக இருக்கின்றார், அவர் பெயர்  மிசாவோ ஒகாவா. (MISAVO OKAWA)

Image result for PICTURE OF THE WORLD'S OLDEST WOMAN

அவரிடம் நீண்ட நாட்கள் வாழும் ரகசிய சூத்திரம் என்ன என்று கேட்டதற்கு,ஜப்பானின் உணவான "ஷூஷியும் , நிம்மதியான தூக்கமும்" என்று சொல்லி இருக்கின்றார்.

அது சரி "ஷூஷியை" எப்படியும் வாங்கிவிடலாம் அடுத்து சொன்ன அந்த "நிம்மதியான தூக்கத்தை" எங்கிருந்து வாங்குவது?  

இத்தகைய கால கண்ணாடிகளை(REFERENCES) இந்த உலகம் பொக்கிஷம் போல பாதுகாக்கவேண்டும் "இவர்கள்" அல்லவா நமது கண்கள்கானும்  மனித வரலாறுகளின் பசுமையான  கலை இலக்கிய பண்பாட்டு, நாகரீக களஞ்சியங்கள்?

"இவர்கள்" என குறிப்பிடப்படுபவர்கள்   நம் எல்லோரின்  பெற்றோர்களும் நமது தாத்தா பாட்டிகளும் தான்.

மிசாவோ ஒகாவா பாட்டிமா இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே உற்சசாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் நலமுடன் வாழ   நாமும் தான் வாழ்த்துவோமே.

"MANY MORE HAPPY RETUNS OF THE DAY  பாட்டிமா!"

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ 8 comments:

 1. மிசாவோ ஒகாவா பாட்டிமா இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்

  ReplyDelete
  Replies
  1. கரந்தையார் அவர்களுக்கு,

   வருகைக்கும் பாட்டிக்கு சொன்ன வாழ்த்துக்கும் நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete
 2. பாட்டி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
  Replies
  1. பாட்டிமாவுக்கு திண்டுக்கல் பேரனின் வாழ்த்து மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ஜப்பானில் இருந்து தகவல் வந்துள்ளது.

   மிக்க நன்றி தனப்பால்.

   நட்புடன்

   கோ

   Delete
 3. மிசாவோ ஒகாவா பாட்டிமா இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே உற்சசாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் நலமுடன் வாழ நாமும் தான் வாழ்த்துவோமே.// வாழ்த்துவோம்.....தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. அன்பிற்கினிய நண்பர்களே,

  வருகைக்கும் பாட்டிக்கு சொன்ன வாழ்த்துக்கும் நன்றி.

  நட்புடன்

  கோ

  ReplyDelete
 5. வணக்கம் கோ,
  பாட்டியம்மாவுக்கு வாழ்த்துக்கள்,
  தங்களுக்கும் தான்,,,,,,,,,,,,,,,
  நன்றி.

  ReplyDelete
 6. நன்றிங்க , உங்களைபோன்ற பா .....ட்டிகளின் ஆசிகள் கண்டிப்பாக தேவைதான்.

  கோ

  ReplyDelete