Followers

Sunday, March 8, 2015

பூனைக்கு "மணி" அடித்தது யார்?

சொகுசு

நண்பர்களே,

சில நேரங்களில் நம்மில் சிலர் அவனுக்கென்னப்பா  ராஜா வீட்டு கன்னுக்குட்டி என  சொல்லவதை கேட்டிருப்போம். வேறு சிலர் இந்த பிறப்புக்கு ஒரு பணக்காரன் வீட்டு நாயாகவோ அல்லது பூனையாகவோ பிறந்திருக்கலாம் என சலித்துகொள்வதை கேட்டிருப்போம்.


அது என்னவோ சரியாகத்தான் தோணுதுங்க.

இங்கே மனுஷனுக்கே சாப்பிட சோறு இல்ல ஆனால்  செல்வந்தர்களின் வீட்டு செல்ல பிராணிகளுக்கு விலை உயர்ந்த - பிரத்தியேகமாக  தயாரிக்கப்பட்ட உயர்வகை உணவுகள் பாதுகாப்புகள், அரவணைப்புகள்.

மேலை நாடுகளில் நாய்களுக்கென்று, அழகு நிலையங்கள் உள்ளன. அவற்றை அந்த அழகு நிலையங்கள் பதபடுத்தபட்ட பாதுகாப்பு மருந்துகள் கலக்கப்பட்ட நீரில் அதற்க்கான ஷாம்பூ, மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து குளிக்க வைத்து, பின்னர் மித மான சூட்டில் அதன் உடலை உலரவைத்து, உடலெங்கும் விட்டமின்கள் அடங்கிய கிரீம்கள் தடவி,பற்களை துலக்கி, நகங்களை பக்குவமாக வெட்டி, பிறகு அவற்றிற்கு முடி வெட்டி அழகு படுத்தி பாதுகாப்பாக அழைத்து வந்து உரியவரிடம் சேர்பிக்கும்  நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணம்.

Image result for pictures of dog grooming parlours

அதேபோல குழந்தைகளை அவர்க்குண்டான கிரஷில் கொண்டுபோய் பேபி சிட்டிங்க்கு விட்டுவிட்டு தாய்மார்கள் வேலைக்கு செல்வதுபோல் இங்கே செல்ல பிராணிகளுக்கும் பிரத்தியேகமான பேபி சிட்டிங் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அங்கே அவைகளுக்கு நடை பயிற்சிக்காக வெளியில் கொண்டுபோவதும், வேளாவேளைக்கு ஆரோக்கிய மான அந்தந்த பிராணிகளின் வழக்க மான உணவுகளை கொடுப்பதும் அவற்றை குறிப்பிட்ட நேரம் வரை தூங்க வைப்பதும், அவற்றிற்கு விளையாட்டு காட்டுவதும், இடையிடையே, மியூசிக் , தொலைகாட்சி பெட்டியில் கார்டூன்  நிகழ்ச்சிகளை காட்டி மாலையில் கொண்டுபோய் (சொகுசு கார்களில்) உரியவர்களிடம்  ஒப்படைக்கும் முறைமைகளும் மிக மிக சர்வ சாதாரண நிகழ்வுகள்.

மனிதர்களை காட்டிலும் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு  மதிப்பும், பாதுகாப்புக், செல்வாக்கும் அதிகம்.

இங்கே நாய்களை நாய்கள் என்று சொன்னால் அதன் எஜமானர்களுக்கு மூக்குக்குமேல் கோபம வரும், அவற்றை பெயர் சொல்லியோ அல்லது அவன் அல்லது அவள் என்றோ தான் சொல்லவேண்டும்.பிள்ளைகளை உங்கள் மகன்  அல்லது உங்கள் மகள் என்று சொல்வது கூட தவறில்லை ஆனால் உங்கள் நாய் அல்லது உங்கள் பூனை என்று சொல்லிவிட்டால் அது மரியாதை குறைவாக கருதபடுகிறது.

ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் நாய் பூனை மட்டுமல்லாது, எலி,பாம்பு, முள்ளம்பன்றி போன்ற குட்டி பிராணி, ஓணான்,பல்லி,போன்ற பிராணிகளையும் வீட்டிலேயே வைத்து வளர்த்து வருகின்றனர்.

விடுமுறையில் வெளி நாடு செல்லும்போது கூடவே நாய்களையும் பூனைகளையும் அதற்கான பாஸ்போர்ட்டுடன் உடன் அழைத்து செல்லும் வழக்கமும் உண்டு.

இப்படியாக செல்ல பிராணிகளின் மேல் அளவுகடந்த அன்பும் பாசமும்கொண்டு  தனது வீட்டில் ஒரு அழகான பூனை குட்டியை பாலூட்டி, சீராட்டி பராமரித்து வளர்த்து வந்தாள் ஒரு செல்வந்தரின் ஒரே மகளான 24 வயதான பெண்.

அந்த பூனை குட்டிக்கு வயது 14 மாதங்கள் அதன் பெயர் பாரா(பாராஹ்?) அதன் நிறம் கருப்பு. அதற்க்கு வீட்டில் ராஜ மரியாதைதான்.

அந்த பூனைக்குட்டி தனது மகளின் படுக்கையில் தான் பெரும்பாலும் படுத்துகொள்ளும், மகளோடு எப்போதும் விளையாடிகொண்டிருக்கும். வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் அந்த பூனைக்குட்டியின் பாதுகாப்பு கருதி வீட்டில் பொருத்தப்பட்ட  கண்காணிப்பு கேமராமூலம், தமது செல்போனிலேயே பூனையின் செயல் பாடுகளை  பார்த்துகொள்ளும்படியாக  ஒழுங்கு செய்திருந்தனர்.

பூனை சில நேரங்களில் சரியாக சாப்பிடவில்லை என்றால் உடனே மருத்துவரை அழைத்து ஆலோசனை கேட்டு அதன்படி மருந்து மாத்திரைகள், டயட் போன்ற கவனிப்புகளை செய்து வந்தனர்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செல்வ செழிப்புடன்  வாழ்ந்து வந்த சமயத்தில் , விதி விளையாட ஆரம்பித்தது.

ஒருநாள் யாரும் இல்லாத சமயத்தில் அந்த பூனை வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கின்றது, அது செல்லும்போது வேறு ஏதோ "பூனை குறுக்கால" போயிருக்குமோ என்னவோ தெரியவில்லை கண்காணிப்பு கேமராவின் பதிவின்படி பூனை  தோட்டத்துபக்கம் போயிருக்கின்றது. அதற்க்கு பின்னர் அதன் சுவடுகள் தெரியவில்லை.

மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் ஏற்கனவே மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்த ஒட்டு மொத்த குடும்பமும் நேராக காவல் நிலையம் சென்று, தங்களின் பூனையின் அங்க அடையாளங்களை சொல்லி, அதன் புட்கைபடம் ஒன்றை சேர்த்து புகார்கொடுத்துவிட்டு வந்து பூனையின் நினைவிலேயே, சாப்பிடகூட இல்லாமல் தூங்கவும் செல்லாமல், காவல் நிலையத்திலிருந்து நல்ல தகவல் வரும் என விழித்திருந்தனர்.

Image result for picture of a black kitten

ஆனால் எதிர்பார்த்த எந்த தகவலும் வரவில்லை.

இவ்வாறு சில நாட்கள் வரை  காத்திருந்தவர்களுக்கு ஒரு பேரிடிஎன அந்த கருப்பு பூனை பாரா சம்பந்தமான ஒரு கருப்பு செய்தி வந்தது.

இவர்கள் சொன்ன அடையாளத்தில் அதே வயதில் ஒரு பூனையின் உயிரற்ற சடலம் ஒன்று அவர்கள் வீட்டிலிருந்து சுமார்  மூன்று கிலோ மீட்டார் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையிலிருந்து தகவல் வந்ததை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் மீளா துயரத்தில் ஆழ்ந்தனர்.

மகள் அய்லிஷ் மனம் இடிந்துபோனாள், தனது உயிருக்கு உயிராக வளர்த்துவந்த தமது அன்பிற்குரிய "பாரா" வை "பாராமல்" அழுது அழுது கண்கள் வீங்கிபோனது, குரல் தேய்ந்துபோனது. இனி சிந்துவதற்கு கண்ணீரும் மிச்சமில்லாமல் போனது.

மகளின் துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத 56 வயதான தந்தை நீல்(Niel) போலிசாரிடம் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது இயற்கையான மரணம் இல்லை இது ஒரு கொடூரமான கொலை , இதை தீவிரமாக விசாரிக்கும்படி வேண்டிக்கொண்டார்.

போலிசும் இது யாரோ  தெரியாமல் சாதாரண ஏர் கன்னில் சுட்டிருக்கின்றனர், மேற்கொண்டு எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று சொல்லி கேசை- பைலை  மூடிவிட்டனர்.

போலீசு இந்த கேசில் தீவிரம் காட்டவில்லை என்று எண்ணி, நீல் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடி தமது புகாரை விசாரித்து விவரம் சேர்க்கும்படி கூறி இருக்கின்றார்.

இப்போது தனியார் துப்பறியும் நிபுணர்கள் தீவிர ஆராச்சிக்கு பிறகு ஒரு 15 பக்க ஆய்வறிக்கையை கொடுத்திருக்கின்றனர்,

அதில் பூனை பாராவை ஏர் ரைபிளில் சுட்டு கொன்றவர்களின் முழு விவரம், புகைப்படம், மற்றும் பாராவை கொடுமைபடுத்தி கொன்ற வீடியோ ஆதாரங்களை சேகரித்து கொடுத்திருக்கின்றனர்.

அந்த அறிக்கையையும் சாட்சி ஆவணங்களையும் போலீசிடம் கொடுத்தும், இதில் எந்த வித உண்மையும் இல்லை இவை எல்லாம் ஜோடித்த விஷயங்கள்- கட்டுக்கதை என போலீசு நிராகரித்து விட்டது.

இந்த தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட தொகை £10,000.00 நம்ம ஊர் காசுக்கு 10 லட்சம்.

காவல் துறையோ, இந்த  குற்ற வழக்கை  குறித்து நாங்கள்  எல்லா  விசாரணைகளையும் பூரணமாக செய்து முடித்துவிட்டோம் என கூறிவிட்டது.

 வீட்டில் வளர்க்கப்படும் பிரியமான பிராணிகளுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற ஒழுக்க கேடான நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட இன்னும் இரண்டு மடங்கு  பணம் கூட செலவு செய்ய தயங்கி இருக்க மாட்டேன் என இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் வசிக்கும் தந்தை நீல் சொல்கின்றார்.

கடைசி வரை பூனைக்கு "சாவு மணி அடித்தது" யாரென்றே உறுதி செய்யபடாமலே இந்த வழக்கு மூடப்பட்டது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகத்தான்  இருக்கின்றது.

ம்ம்ம்ம்... பூனையின் மரணத்தை துப்பு துலக்க பத்து லட்சம் ரூபாய் செலவுசெய்யும் அளவுக்கு மிருகங்களின் மேல் உள்ள அக்கறையும் கருணையும் , கரிசனையும் ஒரு பத்த ரூபாய் அளவுக்கேனும் மனிதர்களின் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 comments:

 1. சக மனிதரிடம் அன்பாக நடந்து கொள்ள முடியாத போது... இவை ஒரு வித பாச பைத்தியம்...

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,

   ஒருவேளை சக மனிதர்களிடமிருந்து எதிர்பார்த்த அன்பு கிடைக்காததால் இப்படி விலங்குகளின் மீது அபரிமிதமாக அன்புடன் இருப்பார்களோ?

   வருகைக்கும் தங்களின் பின்னடைவில்லா பின்னூட்டத்திற்காகவும் மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete
 2. உண்மைதான் நண்பரே
  சக மனிதர்கள் மீதும் கொஞ்சம் கரிசனம் வைப்போம்

  ReplyDelete
  Replies
  1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete
 3. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றான், எல்லா உயிர்களிடத்தும் தான்,. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஒரே வரியில் பின்னூட்டம் அளித்திருந்தாலும் சரியான வரியாய் அளித்த மகேஸ்வரிக்கு நன்றிகள் பல.

   நட்புடன்

   கோ

   Delete
 4. இங்கே நாய்களை நாய்கள் என்று சொன்னால் அதன் எஜமானர்களுக்கு மூக்குக்குமேல் கோபம வரும், அவற்றை பெயர் சொல்லியோ அல்லது அவன் அல்லது அவள் என்றோ தான் சொல்லவேண்டும்.// இங்கும் அப்படித்தான்....எங்க வீட்டுல....

  ஆனால், இறுதியில் ஏதோ நிறைய பூஜ்ஜியம் போட்டு ஒரு நம்பர் சொல்லிருக்கீங்களே அதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்....தனியார் துப்பறிவது....எல்லாம்.

  நாங்களும் விலங்குகளை மிகவும் மதிக்கக் கூடியவர்கள். உயிர் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. உருவம் தான் வேறு. சக மனிதர்களையும் மதிக்கத் தெரிய வேண்டும் மனித நேயமும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   பூனைக்கு பால் ஊற்ற வந்ததற்கு மிக்க நன்றி.

   பத்து லட்சம் ரூபாய் கொஞ்சம் அதிகம்தான்.

   தனியார் துப்பறியும் நிறுவனமும் பிழைக்க வேண்டாமா?

   நட்புடன்

   கோ

   Delete
 5. ம்ம்ம்ம்... பூனையின் மரணத்தை துப்பு துலக்க பத்து லட்சம் ரூபாய் செலவுசெய்யும் அளவுக்கு மிருகங்களின் மேல் உள்ள அக்கறையும் கருணையும் , கரிசனையும் ஒரு பத்த ரூபாய் அளவுக்கேனும் மனிதர்களின் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.///

  pathivai muditha vitham arumai sir.
  aacharyamaaka irukkirathu angku naaykal paraamarikkum vithangalai patri kelvipadumpothu.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ மகேஷ்,

   எப்படி இருக்கின்றீர்கள், தேர்வுகள் முடிந்து விட்டனவா?

   வருகைக்கு மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   Delete