பின்பற்றுபவர்கள்

சனி, 20 டிசம்பர், 2014

நம்ம ஊரு போல வருமா?

அன்பிற்கினிய நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர்களுள் சிலரிடமிருந்து   அன்பு கட்டளை  எமக்கு வந்தது.


அதில் (என் பார்வையில்) இந்த நாடு எப்படி என்பதை எழுதி அனுப்ப சொன்னார்கள்.

நானும் எழுதி அனுப்பினேன் - கொஞ்சம் சாம்பிள் தான். இதில் பல விஷயங்கள் இப்போ நம்ம ஊருக்கும்  பொருந்தும் என நினைக்கின்றேன்.

 என்னவாக இருக்கும்?

இதோ உங்களுக்காக.

சிறிது நேரம் கவிதை பேசி
சிந்தைக்கினிமை சேர்க்கவேண்டி
சிறியவர் யாம் என்ற நாளில்
சிந்தித்ததின் விளைவாக

சிந்தனை சிந்திய சில துளிகளை
சிறைபிடித்து  கொண்டுவந்தேன் - நற்
சிந்தை மிகும் உம் முன்னே
சீலமுடன் விடுவிக்க.

கற்பனைகள் சிறகடித்து
காற்றுவழி சென்றபோது
தற்செயலாய் தட்டுப்பட்ட
தங்கத்தமிழ் சொல்லெடுத்து

எதுகையோடு மோனைதனை
ஏற்றவிகிதத்தில் யாம் கலந்து
தேம்ஸ் நதி சாரலோடு - டூலிப்
பூச்செண்டை அலங்கரித்து


எடுத்து வந்தோம் உம் சமூகம் -அதை
தொடுத்துரைப்போம் செவி மடுப்பீர்.

இந்த நாட்டு கீர்த்திதனை
ஏடெடுத்து எழுதுகையில் 
என்னென்னவோ தோனுகிறது -எமது
எழுதுகோலும் நானுகிறது.

நாணுகின்ற விஷயங்களை
நாசுக்காய் தவிர்த்துவிட்டு -கண்கள்
காணுகின்ற மாட்சிதனை
கதைக்கின்றோம் கவிதையாக்கி.

வேலையின் நிமித்தமாய் - இந்த
மேலைநாடு யாம் வந்தோம்
காலைமுதல் மாலைவரை
கணக்கு துறையில் பணிபுரிவோம்

வேலைக்கு செல்லும்போதும்
வேலைவிட்டு வரும்போதும்
சாலைகளில் காணுகின்ற 
சங்கதிகள் சில இங்கே.

எங்கு பார்த்தாலும்  "பச்சை"
யாம் உரைப்பது மரங்கள் புல்வெளிகளை(?!)
தங்கு தடையின்றி "தண்ணீர்" 
யாம் உரைப்பது ஆறுகள் நீரோடைகளை(?!)
நல்ல வளம் தானே?


கன்னியரும் காளையரும்
"திறந்த" மனம் கொண்டதினால் -இங்கே
 நூலாடை தேவையில்லை- வெறும்
நூல்(!!) போதுமே ஆடையாக.

யாம் உரைப்பது "சிக்கென" இருப்பதை அல்ல
"சிக்கனமாய்" இருப்பதைத்தான்
நல்ல விஷயம் தானே?

காதிற்கு காதணி
மூக்கிற்கு மூக்குத்தி
கண்டதுண்டு யாம்
கண் திறந்த நாள் முதலாய்

ஆதிநாள் மனிதனன்று
அணிந்ததற்க்கும் மேலாக
கண்கூசும் இடங்களெல்லாம்
கண்டபடி ஒட்டைகுத்தி

காணுகின்றார் அதில் அழகு(?)
ஆபரணங்கள் அதிகம் பூட்டி.
ஆபாசம் யாம் சொல்லவில்லை- மனித
ஆராய்ச்சியினை சொல்லுகின்றோம்.
  ஆராய்ச்சி அவசியம் தானே?


உடலெங்கும் வண்ண படங்கள்(??)
உவகையுடன் குத்திக்கொள்கின்றனர்
வியந்துபோனேன்  இதையெல்லாமா ... .என்று.
"பச்சை" க்கு அர்த்தம் சரிதான்.
வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் தானே?



தலை முடியின் தலையெழுத்து
தாறுமாறாய் போனதினால்
நிலை தடுமாற்றம் எமை
நித்தம் வந்து சேர்வதுண்டு.
    மாற்றங்கள் தேவைதானே?




அந்தரங்கம் என்பதற்கு
அர்த்தமில்லை இவ்வூரில்
 (இப்போ நம்மூரிலுமென கேள்விபட்டேன்)
மந்திரிச்ச கோழிபோலே
மயங்குகிறார் ரோட்டோரமே

நாகரீகம் சொல்லவில்லை
நட்பின் ஆழம் சொல்கின்றோம்
உடுக்கை இழந்தவன் கைபோலே
உதவ வேண்டுமல்லவா?


திருமண அழைப்பிதழ்.

அதில் 
ஆணின் பெயர் ஆணுக்குரிய இடத்தில்
பெண்ணுக்குரிய இடத்திலும் ஒரு ஆணின் பெயர்
தலை சுற்றியது.


வேறொரு திருமணம்.

அதில் 
 தோழி பெண் மணமகளின் மகளாம்.
பல ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்தபின்
பகிரங்க திருமணமாம்.
மணமகனின் தந்தைக்கு 
அடுத்த கோடையில் திருமணமாம்.
    போத்திகினும் படுத்துக்கலாம்.......

பாரதி பாடிய 

"பாருக்குள்ளே" நல்ல நாடு
இதுதானோ? அல்லது இதுவும் தானோ?

(படங்கள் யாவும் கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

7 கருத்துகள்:

  1. கரந்தையார் அவர்களுக்கு,

    நன்றி நன்றி மிக்க நன்றி

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான வரிகள் நண்பரே! அதுவும் திருமண அழைப்பிதழ் குழப்பம்...

    பாரதி பாடிய பாருக்குள்ளே நல்ல நாடு?!! எந்த நாடு?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      இப்போ ஏறக்குறைய பெரும்பாலான நாடுகளும். பாருக்குள்ளேதான் இருக்கின்றன.

      வருகைக்கு மிக்க நன்றி

      கோ

      நீக்கு
  3. அந்த டாட்டுஸ் குத்தியவர் தான் தாங்களோ?

    பதிலளிநீக்கு
  4. ஐயோ.... எப்படி கண்டுபிடிச்சிங்க அது நான்தான்னு? துப்பறியும் துறை உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

    (குத்தியவரா குத்தபட்டவரா யாரை கண்டுபிடித்தீர்கள்?)

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரசரே,
      தாங்கள் எனக்கு ஒதுக்கிய துறைக்கு நன்றிகள்,
      பாருங்கள் இது எனக்கு மிகவும் பிடித்த துறை.
      நன்றி.

      நீக்கு