Followers

Saturday, December 27, 2014

புத்தாண்டும் புகை மண்டலமும்புத்தாண்டு 2015 பிறக்க இருக்கின்றது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும் வருடபிறப்பு அனைவருக்கும் சிறப்பான ஒரு நல்ல  ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.


எத்தனை மேடு பள்ளங்களை பழைய ஆண்டில் கடந்து வந்திருப்போம். எத்தனை படிப்பினைகளை கற்றிருப்போம்,எத்தனை அறிவுரைகளை மற்றவர்களுக்கு அளித்திருப்போம்.

எத்தனை சோதனைகள் வேதனைகளை  அனுபவித்திருப்போம். எத்தனை சுகங்களை இன்பங்களை மகிழ்ச்சியை பெற்றிருப்போம்.

இந்த வருடத்தின் இந்த கடைசி நாட்களில் அவற்றை எல்லாம் கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம்.

நமக்கு கிடைத்து பிறருக்கு கிடைக்காத எத்தனையோ பாக்கியங்களில் நமக்கு கிடைத்த உணவு நமக்கு கிடைத்த உடல் நலம் நமக்கு கிடைத்திருக்கும் ஆயுள் நீட்சி, பாதுகாப்பு,மன நிம்மதி, குடும்ப வாழ்க்கை,நண்பர்கள் ........ இவைகளை எண்ணி நாம் என்றென்றும் இறைவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோமா என சற்று நேரம் சிந்திக்க நமக்கு இந்த வருடத்தின் இந்த கடைசி சில நாட்கள் உதவட்டும்.

நாம் அறிந்தவண்ணம் இந்த 2014 ஆம் ஆண்டில் உலகில் நிகழ்ந்த எத்தனையோ இடர்பாடான நிகழ்வுகளில் நம்மில் பெரும்பான்மையானோர் பாதிப்புக்குள்ளாகவில்லை என்றாலும் அத்தகைய பாதிப்புக்கு நேரிடையாக உள்ளானோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் மனதில் அஞ்சலி செலுத்துவோம்.

ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் நம்மில் பலர் புதுவருட தீர்மானங்கள் எடுப்பது வழக்கம்.

அவ்வகையில் பலரும் தங்களுக்கும் இந்த சமூகத்துக்கும் நல்லது நிகழும் வகையில் பல நல்ல தீர்மானங்களை எடுத்து அவற்றை கடைபிடிப்பது வழக்கம்.

ஒருவர் செய்யும் இந்த தீர்மானம் சில வேளைகளில் நேரிடையாக அவர்களுக்கும் மறைமுகமாக இந்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமைவதாகவும் இருக்கும்.

அவற்றுள் ஒன்று புகை பிடித்தலை விட்டுவிடும் தீர்மானம்.

இந்த கெட்ட பழக்கம் புகைப்பவரை மட்டுமல்லாது, சுற்றி இருப்பவரை மட்டுமல்லாது, தங்களின் குடும்பங்களையும் அவர்தம் பிள்ளைகளையும் வெகுவாக பாதிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..

இப்படி ஒருவரின் புகை பழக்கத்தால் அவரின் உடல் நலம்- உயிர் நலம் எப்படி பாதித்தது , பின்னர் அவரின் குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை நேரில் கண்டு உணர்ந்தவன் - விரிவான விளக்கம் தேவை இல்லை என நினைக்கின்றேன்.

உலகம் எரிபொருள்களின் மூலம் உண்டாகும் புகை மண்டலத்தினால் ஓசோன் படலம் ஓட்டை கண்டு அதனால் புற ஊதா கதிர்கள் நேரடியாக பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அதனால் மனித குலத்துக்கு பேராபத்து விளையும் என்று  விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அதேபோல்தான், ஒரு மனிதனின் புகை பழக்கம், அவனது நுரையீரலில்  புகை மண்டலத்தை உருவாக்கி அவனது நல வாழ்வை சீரழிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.வரபோகின்ற புத்தாண்டில் பெரியதாக ஒன்றும்  நம்மால் யாருக்கும் எந்த நன்மையையும் செய்ய முடியாவிட்டாலும்  குறைந்த பட்சம் (தன்னலமாக இருந்தாலும்) புகை பழக்கம் இருப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து வெளிவர தீர்மானிக்க -தீர்மானிக்க வேண்டும்.


இந்த புகை பழக்கத்தினை இங்கிலாந்து கவிஞன் (??) இப்படியாக குறிப்பிடுகின்றான்.

"முதலில் புகைத்தேன்

இதயத்தில் புல்லரித்தது!

தொடர்ந்து புகைத்தேன் 

நுரையீரலில் செல்லரித்தது!!"

வருகின்ற புத்தாண்டு எந்த விதத்தினாலேயும்  நமது உடலும்  இந்த உலகமும் புகைமண்டலங்கள் அற்ற பிரதேசங்களாக  திகழ வேண்டுமென்பதே இந்த பதிவின் வேண்டுதல்.

அன்பிற்கினிய நண்பர்களுக்கும் உங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


மீண்டும் ச(சி)ந்திப்போம் புத்தாண்டில்!! 

நன்றி!

நட்புடன்

கோ 

16 comments:

 1. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. கரந்தையார் அவர்களுக்கும் தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   நட்புடன்

   கோ

   Delete
 2. பல தீர்மானங்கள் நிறைவேறட்டும்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தனபால் அவர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

   நட்புடன்

   கோ

   Delete
 3. மிகச்சிறப்பான வேண்டுதல்! புகையில்லா உலகம் அமைந்தால் பொலிவுதான்! எண்ணம் பலிக்கட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தளிர்,

   ஆம் வேண்டுதல் பலித்தால் நல்லதுதான்.

   உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   வருகைக்கு நன்றி

   நட்புடன்

   கோ

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. நண்பரே.. வேலைப்பல்லு sorry வேலைப்பளு win காரணமாக சரியாக வலையில் உலவ முடியவில்லை புதிய வருடத்தில் என்னைப்போன்ற அப்பாவிகளுக்கு நல்லதொரு புத்திமதியை தந்தமைக்கு முதற்கண் நன்றி

  இதுவரையிலும் இல்லாத இந்த கேடு கெட்ட பழக்க வழக்கங்கள் இனியும் எம்மை காத்து கருப்பு அண்டாது இருக்க இறைவன் அருள் புரிவானாக......

  தங்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துகள்.

  2015

  ReplyDelete
 6. நண்பரே,

  இறைவன் உங்களுக்கு எல்லா நலனும் வழங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை.

  இங்கே புத்தாண்டு துவங்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கின்றது.

  அபுதாபியில் கொண்டாட்டம் துவம்கி இருக்கும்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  நட்புடன்

  கோ

  ReplyDelete
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல நாளில் ஒரு நல்ல கருத்து . கவிதை மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு முரளி,

   உங்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

   நட்புடன்,

   கோ,

   Delete
 8. மிகவும் தேவையான ஒரு தீர்மானம். புகைப்பிடிப்பவர்கள் எல்லோரும் இந்த தீர்மானத்தை எடுத்தால், நினைத்துப்பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சொக்கன் அவர்களுக்கு,

   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆம் நீங்கள் சொல்வதுபோல் புகை மண்டலம் அற்ற பூமியை பார்க்க மிகவும் ரம்மியமாகத்தான் இருக்கும்.

   புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   நட்புடன்

   கோ

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. கோ,
  இதே கோ வாக தொடரட்டும் இனியும்.
  நன்றி.

  ReplyDelete
 11. அப்பாவும் இப்படித்தான், இப்பவும் அப்படித்தான், எப்பவும் அப்படியேத்தான்.

  கரிசனைக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி.

  கோ

  ReplyDelete