பின்பற்றுபவர்கள்

வியாழன், 20 நவம்பர், 2014

லேடிக்கு தாடி எப்படி?

தாடிக்கு பின்னால் லேடி !?


ஆண்களுக்கான ப்ரோஸ்டேட், புற்றுநோயை குறித்த விழிப்புணர்வை உலகுக்கு உருவாக்கும் பொருட்டு
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்கள் சில ஆண்கள் தங்கள் முகத்தில் மீசை வளர்ப்பார்கள்.

இதற்கு மொவம்பேர் என்று பெயர் என்பது உங்களுக்கு தெரியும்.

இதற்கு முன் மீசை வளர்க்காதவர்களின் முகத்தில் உள்ள மீசையை பார்க்கும் அவர்களின் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என்ன இது புதுசா மீசை? என கேட்கும்போது அதற்கான காரணத்தை சொல்லி ஆண்களுக்கு வரும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதோடு நன்கொடையும் வசூலித்து இதற்கான அமைப்பிற்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த மொவம்பர் அறக்கட்டளை இதுவரை இங்கிலாந்தில் மட்டும் சுமார் 346 மில்லியன் பவுன்ட்களை நன்கொடையாக பெற்று சுமார் 800 பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை உலகிலுள்ள 21 நாடுகளில்  மேற்கொண்டு வருகிறது.

இதில் பங்கு கொள்ளும் தன்னார்வ இளைஞர்கள், பொதுமக்கள்-ஆண்கள்  இந்த மாதத்தின் முதல் நாள் கிளீன் ஷேவ்  செய்த முகத்துடன் தங்கள் ஒத்துழைப்பை உறுதிசெய்யும் விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட்டு களத்தில்  இறங்குவார்கள்.

தொடர்ந்து 30  நாட்களுக்கு   மீசை வளர்த்து  அதை   பற்றி கேட்போரிடம் அதற்கான விளக்கம் சொல்லி, மொவம்பர் அறக்கட்டளையின் சேவையை , புற்றுநோய் பரிசோதனை குறித்த தகவல்களையும் சொல்லி நற்பணி புரிவார்கள்.

இப்படி இந்த சீரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆண்களுக்கு "மொ சகோதர்கள்" என்றும் , இதுபோன்ற ஆண்களுக்கு துணைபுரிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெண்களுக்கு "மொ சகோதரிகள் " என்றும் பெயர்.

சரி இதெல்லாம் உங்களுக்கு யாராவது  மீசை இல்லாத (??) நபர்கள் சொல்லியிருப்பார்கள்.

அப்படி மீசை இல்லாதவர்களே மீசையை பற்றி சொல்லி இருக்கும்போது, தாடி உள்ள நாம் (அடடே நம்ம ஐடெண்டிடிய  சொல்லிட்டோமோ?) ஏன் தாடி முளைக்குமுன்னே  கிறுக்கிவைத்த தாடிய கொஞ்சம் சொல்லகூடாது/

தாடி வளர்த்திருந்த ஒருவரிடம்," என்னங்க தாடி வளர்த்துனு  இருக்கீங்கன்னு" கேட்டதற்கு.

"அவளிடம் உன் இதயத்தை தாடி தாடி என கேட்டேன் அவள் இதோ அதோ  என போக்குகாட்டி என்   இதயத்தை எரித்துவிட்டாள் , எரிந்த இதயம் சூடு  தாங்காமல் வெளியில் எறிந்த புகை என் கன்னத்தில் ஒட்டிக்கொண்டது இப்போது கருப்பாக காட்சி அளிக்கின்றது, இன்னும் கொஞ்சம் காலம் கழிந்து அது சாம்பலாகி வெள்ளையாக காட்சி அளிக்கும் என்றானாம்.


சரி அது இருக்கட்டும் நாம் வந்த வேலைய பார்ப்போம்.

பெண்ணுக்கு தாடி உண்டா?

 தாடியை குறித்து எனக்கு தாடி முளைத்த நேரத்தில் எழுதிய ஒரு பதிவு என் தாடிக்குள்ளிருந்து எட்டிபார்கிறது.

இதோ அது உங்களின் பார்வைக்கு:

தாடி 

பொதுவாக இது பெண்களுக்கல்ல 
பெண்களால் என்பது
உலகம் உரைக்கும் 
 ஒப்புக்குச்சப்பான் வியாக்கியானம்.

பருவம் அடைந்த ஆணின் முகத்தில்
படர்ந்து வளரும் பருவபயிர் தாடி.

முகத்தில் தாடி என்றாலே
முடிந்தது காதல் என்ற 
முடிக்கு வருவதை தடுக்க
முடியாமல் போவதுண்டு 
பலவேளையில்

தாடி விட்டவரெல்லாம் - காதலை
தவரவிட்டவர் தான் என்று 
தவறாகவே நினைப்பதை
தவிர்க்கவே உங்களை 
நாடி வந்த பதிவு இது.

தானாக வளருமிதை
தவறாமல் மழிக்காவிட்டால் 
இது போன்ற தவறான கூற்றுக்கு
 இலக்காகிவிடுவதும்
இயல்பாக நடப்பதுதான்.

அறம் பொருள் இன்பமென
சரம் சரமாய் குறள் எடுத்து
ஏழு கடலைத்தனை செய்திகளை
எளிமை கடுகிற்குள் போட்டடைக்க

முனைப்புடன் ஈடுபட்டு-தன்
முக சவரம் செய்யகூட
முற்றிலும் நேரமின்றி
முழுநேரம் சுவடிக்குள்
மூழ்கிவிட்ட காரணத்தால் 

முகம் மறைக்குமளவிற்கு
முழ நீள தாடி நம்
வள்ளுவனுக்கு.

மற்றபடி காதல் செய்ய - அதில்
காணாமல் போக
ஏது நேரம் இந்த ஐயனுக்கு?

எனவே
காதல் தோல்வி காரணமாக
கடுகத்தனையும் வாய்ப்பில்லை- இது
கண்டிப்பான என் நம்பிக்கை.


கற்பாறை மூடபழக்கம்
கடும் சம்மட்டி கொண்டு தாக்கி
பகுத்தறிவு பயிர்  வளர்த்து -மக்களை
பண்படுத்தி பலபடுத்தி

பாமரனின் வாழ்வுதனில் -புது
பாசனம் புரண்டோட
வாசகம் கொள்ளா புரட்சி
சாசனம் செய்ததோடு

தன்னோடு கொண்டிருந்த
தலையாய சமூகப்பணி
மண்ணோடு மறையும் வரை
மழுங்காமல் செய்ததினால்

மழிக்ககூட நேரமின்றி
மார்புவரை வளர்ந்ததாடி 
தெரியாமல் கூட சொல்லகூடாது
பெரியார் தாடி பெண்ணுக்கென்று.







அர்த்தத்துக்கு புது
அர்த்தம் சொல்லும் 
அர்த்தமுள்ள கவிஞர் இவர்

உலகுக்கு

அர்த்தமுடன் கவிதை சொல்ல
அக்கறையாய் சிந்தித்து

சமூகத்தின்

அகச்சவரம் செய்வதற்கே
அவகாசம் போதவில்லை

இதில் தமது

முகச்சவரம் செய்வதற்காய் நேரம்
முடக்குவதில் அர்த்தமில்லை என்றெண்ணி
அதன் போக்கிலேயே விட்டதினால்
ஆரோக்கியமாய் அது வளர்ந்து 
அரை அடியை தொட்டது.


மற்றபடி வாலி பத்தில்
அவரது மனதை 
தொட்டவருக்கோ 
தொடராமல் விட்டவருக்கோ
விட்டதல்ல இந்த தாடி
என்பதாய் என் மனதில்
பட்டது.

தரணி அறிந்த தாடி தாகூர் தாடி.

கீதாஞ்சலி உருவாக்க- அதை
கீர்த்தியுடன் வடிவாக்க
கடும் தவம் புரிந்து
கண்மூடா விழித்து-அதை
கச்சிதமாய் அச்சேற்றி
காசினியில் உலவ விட்டதோடு

இந்திய வங்காள நாடுகளில்
இன்று  வரை பாடுகின்ற
இரவா தேசிய கீதங்கள்
இயற்றி தந்த மா மகன்

இறக்கின்ற நாள்வரை 
இதயம் நிறைந்த  தேச நலம்
 இருந்திட்ட காரணத்தால்

உறங்குகின்ற நேரம்கூட 
உயிர்நாட்டின் நலம் நினைத்து
புற அழகை புறக்கணித்து- இம்
மண்ணுக்குழைத்த பெருமகனின்

 பெருந்தாடி


பெண்ணுக்கென்று கொச்சை படுத்த-என் 
எண்ணம் என்றும் எழுந்ததில்லை.

இப்படியிருக்க பெண்ணுக்கு எப்படி தாடி?

நெருக்கமுள்ள ஆண்களை உரிமையுடன் விளிக்கும்போது
வாடா போடா தாடா (பேய்டா )என்பதுபோல்

 பெண்களை 

வாடி போடி எனும் வரிசையில்
தாடியும் சேர்வதால்
தாடி கண்டிப்பாய் 
பெண்களுக்கே.

நன்றி 

வணக்கம்

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

9 கருத்துகள்:

  1. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ புதுவை நண்பனே1

      மகாத்மாவின் பத்துக்கும் பக்குவமான உங்கள் பதில்கள் மிக அருமை.
      பத்தாவது பதிலுக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.
      ஒருவேளை புதுவை சொந்த ஊராக இருப்பதால் தண்ணீரின்மேல் உங்களுக்கு ரொம்ப தாகமோ இல்லை மோகமோ?
      அருமையான பிறப்பு கேட்டிருக்கின்றீர் எண்ணப்படி அமையட்டும், அதற்குமுன் இப்பிறவியில் எனக்கு ஹலோ சொல்ல நீங்கள் வந்தது மன மகிழ்ச்சி தருகிறது.

      எழுத்தின் ஓட்டம், வீச்சி அருமை.

      தொடருங்கள் நட்பையும்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. நன்றி புதுவை வேலு,

    இன்றுமட்டுமல்ல என்றென்றும் உங்கள் ஹலோவை எதிர்பார்கின்றேன்

    தகவலுக்கு நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
  3. தாடியைக் குறித்து தங்களது விளக்கவுரையும், கவிதையும் அருமை ஐயா எணது புதிய பதிவு ‘’என் நூல் அகம்’’ காண அழைக்கிறேன்
    அன்புடன் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லருக்கு, வணக்கம்,

      என் தாடியை இதமாக வருடி விட்டதற்கு நன்றி.
      தங்களின் நூலகத்தை நோக்கி பயணிக்கிறேன்.

      வருகைக்கு நன்றி.

      வாழ்த்துக்களுடன்

      கோ

      நீக்கு
  4. எப்படி எங்கல் கமென்ட் விட்டு போச்சு? போட்ட கமென்ட் எங்க போச்சு?
    அவளிடம் உன் இதயத்தை தாடி தாடி என கேட்டேன் அவள் இதோ அதோ என போக்குகாட்டி என் இதயத்தை எரித்துவிட்டால், எரிந்த இதயம் சூடு தாங்காமல் வெளியில் எறிந்த புகை என் கன்னத்தில் ஒட்டிக்கொண்டது இப்போது கருப்பாக காட்சி அளிக்கின்றது, இன்னும் கொஞ்சம் காலம் கழிந்து அது சாம்பலாகி வெள்ளையாக காட்சி அளிக்கும் என்றானாம்.// அஹஹஹஹ செம...

    ஆஹா வள்ளுவரும், வாலியும், தாகூரும், பெரியாரும் எப்படி தாடி வளர்த்திருப்பார்கள் என்று கவிதையில் உங்கள் அனுமானத்தை மிகவும் ரசித்தோம்....

    பெண்களுக்கு எப்படித் தாடி.என்பதைச் சொனீர்கள் பாருங்கள்.....ஹஹாஹ் எதுகை மோனைக்காக....

    சரி விடுங்க...உங்கள் தாடிக்கு என்ன காரணம்? கண்டிப்பாக விழிப்புணர்வு க்காக இல்லை என்பது தெரியும்....அஹஹஹ்

    பதிலளிநீக்கு
  5. திரு துளசிதரன், மற்றும் கீதா அம் .... அவர்களுக்கு,

    தாடி குறித்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

    என் தாடிக்கான விளக்கம் கேட்டிருந்தீர்கள்,கூடவே இது விழிபுணர்வுக்கு இருக்காது என்று நீங்கள் அனுமானித்திருந்தீர்கள்.

    தங்களின் அனுமானத்தில் அணுவளவு திருத்தம்:

    எனது தாடியம் விழிப்புணர்வை நோக்கிதான்.

    புணர்வு என்றால் சேர்க்கை.

    என் மீது பலர் விழிகள் சேரவேண்டும், என் மீது பலரின் பார்வை விழவேண்டும் என்பதற்காக விடப்பட்ட தாடிதான் இது.

    விழி +புணர்வு = விழிப்புணர்வு.

    எப்படி........?

    தங்களிடமிருந்து விமர்சனம் வராததால் ஒருவேளை மீண்டும் கணனியில் பவர் பிரச்சினையோ என நினைத்திருந்தேன்.

    மீண்டும் இணைப்பு கிட்டியதில் மட்டில்லா மகிழ்ச்சி.

    வருகைக்கு நன்றி,

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  6. கோ,
    வணக்கம்,
    என்ன தங்கள் மேல் பலர் பார்வை விழுந்ததா?
    நல்ல இலக்கணவிளக்கம்,
    பெண்ணுக்கென்று கொச்சை படுத்த-என்
    எண்ணம் என்றும் எழுந்ததில்லை.//
    இதை நான் ஏற்க வில்லை,,,,,,,,
    பெண்ணுக்காய் தாடி வளர்த்தவர் ஏராளம்,
    ஏன் தாங்கள் சொன்னவர் பின் பெண்ணில்லையோ என்ன நிச்சயம்.
    ஆனால் வாடி போடி எனவே தாடி நல்லா இருக்கே உங்கள் ,,,,,,,,,,,,,
    தாடிக்காக தாங்கள் எடுத்த கவி அருமை, உங்கள் தாடியின் விளக்கம் ,,,,,
    பலர் விழிகள் ,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    ரொம்ப சீரியஸ் ஆகாதீங்க, கோபபட்டால் பெண்களுக்கு தாடி முளைக்குமாம்., உங்களுக்கும் வேண்டுமென்றால்...

    கோ

    பதிலளிநீக்கு