கில்லரின் கனவில் (எப்படி) நல்லவர்???!!!
மதிப்பிற்குறிய
இரட்டையர்கள் திரு
துளசிதரன் மற்றும் கீதா அவர்களின்
அஹிம்சாவழியிலான அன்பு டார்ச்சருக்கிணங்க:
முகமறியாத(புகைப்படம் அல்ல) சகோ.கில்லர்
ஜி அவர்களின் பத்து கேள்விகளுக்கான பதில்
எழுத கொஞ்சம் யோசிக்கும் வேளையிலே:
சந்தன மலர்கள் சிந்தியதேன் துளி,
அவை சிதியதேன் என சிந்தித்தேன்
சிந்தனை
தந்தன கற்பனை -அவை
தந்தன நற்சுவை சொற்சுனை.
எங்களின் வரம் தந்த கரம்சந்தே!
எம் நாட்டின் கரம் வந்த மலர்
செண்டே!!
உம் புகழ் என்றும் இப் புவி
உண்டே!- உன்
பொன் மொழிகள் சிக்கில்லா
நூல்கண்டே!!
மகாத்மா
எனும் அடைமொழி உமக்கு- அதில்
மறுமொழி
சொல்ல எவர்க்குமில்லை கிறுக்கு.
இகத்தினில்
உமக்கில்லை ஈடு- என்
அகத்தினில்
கட்டினேன் உமக்கொரு வீடு.
நனவில்
நாற்பத்தெட்டில் நடந்ததது
நினைவிருக்கும்
நிச்சயம் அண்ணல்
ஜிக்கு- இருந்தும்
கனவில்
கூட கருணை செய்தாய்- மீண்டும்
கண்(GUN
) இல்லா இந்த கில்லர் ஜி
க்கு.
வெள்ளையனை
கண்டும் சிறு பயமில்லை
அன்று
வெறும் உடல் அறையாடை சூடி கொண்டாய்
நன்று
கொள்ளையர்கள்
குழுமியுள்ள கட்சிகளின் பட்சம் -நாட்டு
வெள்ளைஎல்லாம்
கருபாச்சே நாட்டில் பெரும் அச்சம்.
எத்தனையோ
நல் மனிதர் தாயகத்தில்
என்றிருந்தும்
கேள்விதந்தாய் என்னகத்தில்
மெத்த படித்த மேதை உந்தன்
கேள்விகளை.
மேற்கொள்ள
நான் செய்தேன் பல வேள்விகளை.
பதிலுரையில் பிழையிருப்பின் மன்னிப்பாய்
பதிவாளன்
போல் பார்த்திடாதே
உன்னிப்பாய்.
பாலகன்
நான் பாவம் எனை எண்ணிப்பார்
படைப்புலகில்
நான் புது கன்னித்தாய்.
"ஆம்"
" இல்லை" அதற்குமேல் பதிலளித்து
பழகாதவன்- சில(??)
ஆசான்கள்
போல் ஆறுபக்க பதிலளிக்க விழையாதவன்.
ஆனமட்டும்
முயற்சிக்கிறேன் கொஞ்சம் காது
கொடு- பதில்
அபத்தம்
என்று நீ அறிந்தால் கில்லரிடமே ஓடிவிடு.
படிக்கின்ற
போதே பலகேள்விகளை சாய்சில் விட்டவன்
பாஸ் மார்க்கு வந்தாலே போதுமென்று பார்டர்
தொட்டவன்
இடித்துரைப்பேன் எண்ணிக்கையை
கொஞ்சம் குறைக்க
இடி தாங்கியா நான் இந்த
பத்துக்கும் பதிலுரைக்க?
முதல் கேள்வி:
நீ மறு பிறவியில் எங்கு
பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?
இரண்டுக்கு
மேல் இப்போது வேண்டாம்
ஏழுகப்புறம் எப்பவும்
வேண்டாம்.(ஏழு உண்டா?)
புரண்டு
படுக்கும்போதேல்லாம்
புது பிறவிதானே -இதில் எதற்கு
தனியாக
மறுபிறவி.
சரி மகாத்மா,
மானுடனாக மீண்டும் பிறக்க வாய்ப்பொன்று
அமையுமானால்
மறுக்காமல்
வாய் விட்டு வேண்டுவேன்
வானுயர
புகழ்மிக்க வள்ளுவன் பிறந்திட்ட
பாருக்குள்ளே
நல்ல நாடெந்தன் பாரதமே வேண்டுமென்று.
இரண்டாம்
கேள்வி:
ஒருவேளை
நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம்
உன்னிடம் இருக்கின்றதா?
இந்தியாவின்
ஆட்சியாளனாக? நானா?
குடிமகனாகவே
வாழ அருகதை இல்லாமல் தானே
இப்போ....
புரியவில்லையா?
நீங்க போய் ரொம்ப வருஷம்
கழிந்து எங்க அப்பாவும் போயிட்டாரு.
அப்போ இறப்பு சான்றிதழ் வாங்கப்போன
என்னிடம் அந்த ஆர் ஐ
, சான்றிதழ் கொடுக்க பணம் கேட்டார்,
தந்தையை இழந்த பத்தாவது நாளே,
என்னிடம் பணம் கேட்ட, இரக்கமற்ற அவருக்கு
கண்டிப்பாக கொடுக்க முடியாது நீங்கள்
என்னென்ன தச்தாவேஜிகள் கேட்டீர்களோ அத்தனையும் இதோ இருந்தும் ஏன்
நான் பணம் தரவேண்டும் என்று
கேட்டதற்கு இரண்டு மாதங்கள் அலைகழித்து
பின்னர் கொடுத்தார்கள்.
அப்படிபட்ட
, அடிபட்ட நானாவது ஆட்சியாளனாவது - சும்மா
தமாஸ் பண்ணாதீங்க மகாத்மா.
அப்படி
ஆட்சியாளனாவதென்றால் வேறு யாருடைய தயவோ
கூட்டோ இல்லாம ஆகமுடியுமா? அப்போ
அவங்க பண்றத கண்டுக்காம
இருக்கணுமே? அது என்னால
முடியாது, அனுபவைத்தவன்.
கேள்விய
நீங்க இப்படி கேட்டிருக்கணும்- சர்வாதிகாரியானால்
என்று.
கேள்வி
மூன்று:
இதற்கு
வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத்
தெரிவித்தால் என்ன செய்வாய்?
இதில் எதிர்ப்பு தெரிவிக்க என்ன இருக்கு, அவனவன்
இந்தியாவில நல்லா படிச்சும் வேல இல்லாம ஒருசில
அரசு அதிகாரிகளால் கஷ்டப்பட்டு நிலம் நகைய வித்து
வெளி நட்டல ஏதோ கொஞ்சம்
கஷ்டமில்லாம வாழறாங்க.
அவங்க லீவ்ல ஊருக்கு வரும்போது
விமான நிலையத்திலேயே அவர்கள் படும் கஷ்டத்த
நினைத்தால் யாரு
ஆண்டால் நமக்கென்ன நாம உழைத்தால் தான் நமக்கு பூவா
என்றுதான் நினைப்பார்கள்.
"ஆமாம் சாப்டீங்களா ? கொஞ்சம் ஆட்டுப்பால் கொண்டாரட்டுமா?""
"ஆட்டுபாலா? ஏதோ
பாதாம் மில்க்னு இருக்காமே , கிடைக்குமா?"
ம்ம்ம்
கேள்வி
நான்கு:
முதியோர்களுக்கென்று
ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
விட மாட்டீங்க போல இருக்கு.
சரி சும்மாங்காட்டியும் , நான் ஆட்சியாளனா கற்பனை
பண்ணி பதில் சொல்லறேன்.
முதியவர்களின்
சொத்துக்கள் எல்லாம் அரசாங்கத்தின் வசம்
,அவர்களின் பாது காப்பில் இருக்கும்.
முதியவர்கள்
வியாதிப்படும்போது, கஷ்டப்படும்போது அரசாங்கம் ,பிள்ளைகள் இருக்கும் முதியவர்களை நன்றாக கவனிக்கும் படி
கட்டளை இட்டு இலாக்க அமைத்து கண்காணிக்கும், மருத்துவ
செலவுகளை அரசு ஏற்கும்.
அரசு மருத்துவமனைகள் ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன்
செயல் படும், நாட்டின் ஜனாதிபதிமுதல்
(அவரும் முதியவராகதான் இருப்பார்) ஏழை கூலிதொழிலாளர் வரை
ஒரேமாதிரிதான வசதி.
சொத்துக்களோ
பிள்ளைகளோ இல்லாத முதியவர்கள் அரசின்
பெற்றோர்களாக கருதபடுவார்கள்.
"நீ சொல்றத கேட்க்கும் போது
எனக்கு அங்கேயே தங்கிடனும்போல இருக்கு."
"யு ஆர் வெல்கம் மகாத்மா
உங்களுக்கும் அதே கவனிப்புதான், தேசபிதாவும்
மற்ற எல்லா மாதா பிதாக்களும்
ஒன்றுதான் எனது அரசாட்சியில்."
"ஐயோ! மகாத்மா இப்பவே கண்ணகட்டுதே
இன்னும் ஆறு கேவிகளிருக்கே.
நீங்க என்னமோ ஒன்னு ரெண்டு
கேள்விகள்தான் கேட்டிருபீங்கோ, இந்த ஒட்டக பாலு
குடிக்கிறவன் தான் சும்மா கொச்சகொச்சனு
கேள்வி கேட்டிருப்பான்( கொஞ்சம் அன்பு ஜாஸ்தி
ஆனா நான் அப்படிதான்) கொல்லனாச்சே."
கேள்வி
ஐந்து ::
அரசியல்வாதிகளுக்கென்று
புதிய திட்டம் ஏதாவது?
கண்டிப்பாக.
முதலில் "பைப்பு" இருந்தாதான் "பம்ப்பு" இருக்கும்.
முதலில் "பைப்பு" இருந்தாதான் "பம்ப்பு" இருக்கும்.
"என்னப்பா
சொல்லறே?"
சாரி கொஞ்சம் தூக்க கலக்கத்துல
ஏதோ ஒளறிட்டேன்.
அதாவது " படிப்பு" இருந்தாதான் " பண்பு" இருக்கும்.
எனவே அரசியல் வாதிகள் குறைந்த
பட்சம் முறையாக 1-10, +2, மூன்றாண்டு பட்டபடிப்பு, அதிலும்,குறிப்பாக,அறிவியல்,
விஞ்ஞானம், சமூகவியல்,அரசியல், மொழி,.....போன்ற பாடங்களில் 60% க்கு
குறையாமல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்திருக்க
வேண்டும்.
இத்தனை
தகுதிகளும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதிகளின் ஆய்வுக்கு
உட்படுத்தி ஒப்புதல்
பெறபட்டிருக்கவேண்டும்
அவர்களது
குறைந்தபட்ச வயது 30 ஆகவும் அதிகபட்ச
வயது 50 ஆகவும் இருக்கவேண்டும்.
வாழ்க்கையில்
2 முறைகளுக்கு மேல் எந்த பதவியிலும்
இருக்ககூடாது.
அவர்களது
குடும்ப உறவுகள்,சமூக உறவுகள்
தனிமனித ஒழுக்கம் முதலானவை பரிசீலிக்க பட வேண்டும்.
அரசியல்
வாதியின் தண்டனை சாதாரண மக்களுக்கு
கொடுக்கும் தண்டனையை விட 3 மடங்கு அதிகமாக
இருக்க வேண்டும்.
சிறந்த
மக்கள் தொண்டாற்றும் ஊழியனுக்கு சிறப்பு பாராட்டு செய்யப்படும்.
இவர்களின் ஊதியம் அரசு வங்கிகளின்
மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
பணம் எடுக்க இவர்களே வங்கிக்கும்,
ஏ டி எம்
பூத்துக்கும் வரவேண்டும்.
இவர்கள்
வரும் பாதயில் போக்கு வரத்து
நிறுத்துதல், பொது மக்களுக்கு இடையூறு
விளைவித்தல் , கட்சி பேரணி, ஊர்வலம்
போன்றவை அறவே கூடாது.
மேலே சொன்ன அனைத்தும் அரசியல்
வாதிகளுக்கான திட்டங்களின் ஒரு பகுதிதான்.
"இதெல்லாம்
முடியுமா?"
"நானே ஆட்சியாளனாக ஆகமுடியும்னா இதுவும்
முடியும் மகாத்மா."
கேள்வி
ஆறு:
மதிப்பெண்கள்
தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?
அப்படி
ஒரு சட்ட திருத்தம் கொண்டுவரப்படுமேயானால்,அதை வரவேற்பேன்.
மாணவர்களின்
தன்னம்பிக்கைக்கு அவர்களின் மேல் முறையீடு ஒரு
நல்ல சான்று.
தகுதியான
விதைகள் தான் பண்பட்ட நிலங்களில்
ஊன்றப்பட வேண்டும் அப்போதுதான் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தனது அறிவு, குறைத்து மதிபிடபட்டுள்ளது
என எந்த மாணவன் சேலஞ்
செய்கின்றானோ அவனே சிறந்த மாணவன்.
கேள்விஏழு :
விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?
கண்டிப்பாக.
எல்லாதுறைகளிலும்
இந்தியா முன்னேற மேலை நாடுகளுடன்
போட்டி மட்டுமல்ல அவர்களையும் காட்டிலும் சிறந்து விளங்க எல்லா
வகையிலும் ஊக்கபடுத்துவேன்.
சந்திர
மண்டலம் சென்று , செவ்வாய் கிரகம் சென்று, நட்சத்திரங்களை
எண்ணி கணக்கிடுபவன் மட்டுமே விஞ்ஞானி அல்ல.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் எந்த பொருளையும், மிக நுட்பமாக , எளிமையாக , குறைந்த செலவில், மிகுந்த பலனளிக்கும் வகையில், நீடித்து உழைக்கும்படியும்,சுகாதார, மருத்துவ ஆய்வுகளையும், இயற்கை முறையில் வேளாண்மை பெருகதக்க ஆய்வுகளை மேற்கொள்ளும் எல்லா விஞ்ஞானிகளையும் ஊக்கு விக்கும் வகையில்.எந்த சிறு யோசனயானாலும் அவற்றை மதித்து அந்த சிபாரிசுகளை மேலும் ஆய்வு செய்து சாத்திய கூறுகளை கண்டறிய எளிய, பரவலாக பயன்படக்கூடிய பல ஆய்வுகூடங்களை அமைப்பதோடு, மேலை நாட்டு தொழில் நுட்பங்களை ஆராய்ந்து அறியும்பொருட்டு பல நூல்களை தருவித்து இளம் விஞ்ஞானிகள் கற்று தெளிய வழிவகை செய்யப்படும்.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் எந்த பொருளையும், மிக நுட்பமாக , எளிமையாக , குறைந்த செலவில், மிகுந்த பலனளிக்கும் வகையில், நீடித்து உழைக்கும்படியும்,சுகாதார, மருத்துவ ஆய்வுகளையும், இயற்கை முறையில் வேளாண்மை பெருகதக்க ஆய்வுகளை மேற்கொள்ளும் எல்லா விஞ்ஞானிகளையும் ஊக்கு விக்கும் வகையில்.எந்த சிறு யோசனயானாலும் அவற்றை மதித்து அந்த சிபாரிசுகளை மேலும் ஆய்வு செய்து சாத்திய கூறுகளை கண்டறிய எளிய, பரவலாக பயன்படக்கூடிய பல ஆய்வுகூடங்களை அமைப்பதோடு, மேலை நாட்டு தொழில் நுட்பங்களை ஆராய்ந்து அறியும்பொருட்டு பல நூல்களை தருவித்து இளம் விஞ்ஞானிகள் கற்று தெளிய வழிவகை செய்யப்படும்.
கற்றோருக்கு மட்டுமல்லாமல்
நம்ம "மூலிகை பெட்ரோல்" ராமன் போன்றோரையும்,
உண்மையிருந்தால்,ஊக்குவித்து உபயோகிப்பேன்.
தேவைபட்டால் வெளி
நாடுகளுக்கும் அவர்கள் அனுப்பபடுவார்கள் கற்று திரும்ப(???)
மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அறிவியல்,விஞ்ஞானம்,
தொழில் நுட்பம் தொடர்பான ஒரு விழிப்புணர்வு உண்டாகவும் வழிவகுப்பேன்.
கேள்வி எட்டு:
இதை உனக்குப் பிறகு
வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
"மகாத்தமா, நீங்க
ரொம்ப நேரமா தடிய ஊன்றிக்கொண்டு நின்றுகொண்டே இர்கின்றீர்கள், அந்த இரண்டு பெண்களும்
உங்களை கைத்தாங்கலாக பிடித்துக்கொள்ள இல்லை.
கொஞ்சம் இந்த இருக்கையில் அமருங்கள், இதோ நான் போய் கொஞ்சம் மல்லா கொட்டை கொண்டுவரேன் நீங்க கொறிக்க".
கொஞ்சம் இந்த இருக்கையில் அமருங்கள், இதோ நான் போய் கொஞ்சம் மல்லா கொட்டை கொண்டுவரேன் நீங்க கொறிக்க".
"மல்லா கொட்டையா?"
"ஏதோ பீசா ,பாஸ்தா,
பர்கர்னு என்னென்னமோ இருக்காமே."
"இருக்குதுங்க மகாத்தமா
, ஆனால் அதெல்லாம் சுதேசி இல்லிங்களே? எல்லாம் வெளிநாட்டு சரக்கு."
"என்ன சரக்கா?"
(பூரண மது விலக்க
ஆதரிச்சவராச்சே அதான் சரக்குனு சொன்னதும் ஷாக் ஆயிட்டாரோ , ஆனா இவரோட ஹாப்பி பர்த்டே
அன்றைக்கும் ஷட்டருக்கு கீழே சரக்கு கிடைக்கும்னு
இவருக்கு தெரியாதுபோல)
"அதாங்க மகாத்தமா
மேல்நாட்டு உணவுகள்."
"இப்பபோய்
அந்நிய நாடு சுதேசினு பேசகூடாது, உலகமே நமதுதான், அப்போ வெள்ளகரனுங்க கட்டாய படுத்தி
நம்ம பொருட்கள நிராகரிச்சு அவங்க பொருள்கள
திணிச்சதால் கொஞ்சம் கோவபட்டுட்டேன்".
பேசிக்கொண்டிருந்தபோது
மொபைல் போன் அடிச்சது அதில ஷகீரா பாட்டு தான் காலர் டியூன், கூப்டது சென்னையில் இருந்து ஒரு இங்க்லீஷ் வாத்தியாரு.
" ஹலோ கோ வா"?
"ஆமாங்க"
" எப்படியிருக்கீங்க"
மனசுக்குள்ள எப்படி
இருந்தா இவருக்கென்ன இங்கே வாய் வலிக்கிற அளவுக்கு தூக்கம் சொக்குற நேரத்தில எப்படி
இருக்கீங்கன்னு கேக்ராறேனு நினைத்துகொண்டேன்.
" நல்லா இருக்கேன்
சார், மேடம் எப்படி இருக்காங்க?"
மேடம் எப்படி இருந்தா
எனக்கென்ன, ரெண்டுபேரும் சேர்ந்து மகாத்மாகிட்ட என்ன மாட்டிவிட்டுட்டு, எரியிற நெருப்புல
நெய் ஊத்தறாங்க.
தொலைபேசி இணைப்பு
துண்டிக்கப்பட்டது, ஒருவேளை நம்மள வேவுபார்க்க கூப்டாங்களோ என்னமோ. அந்த துளசி ஆண்டவனுக்கே
வெளிச்சம்.
"ஆமாம் இப்போ
பேசுனியே அது என்னது"
" அது பேரு
செல் போனு"
"அப்படீனா"
"நாம செல்
லும் இடங்களெல்லாம் கூடவே கொண்டுபோற போனு"
" ஓ இதெல்லாம்
கூட நம்ம நாட்ல தயார் பண்றாங்களா?"
"அய்யோ......
அய்யோ , இது ஐ போனுங்க, அமெரிக்க தொழில் நுட்பம்"
"ஐய்யா அடுத்த கேள்விக்கு
போகலாமா?"
"கொஞ்சம்
இருப்பா, நான் கேட்ட எட்டாவது கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலியே"
"மன்னிக்கணும்,
கேள்விய மறந்துட்டேன்."
அதாம்ப்பா, இதை
உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
"ஓ .... கண்டிப்பாக செய்வாங்க ஏனா அடுத்து
வர ஆட்சியையும் எங்க ஆட்சிதானே, எங்களுக்கு ரெண்டுமுறை பதவி வகிக்க தகுதி உண்டே"
கேள்வி ஒன்பது:
மற்ற நாடுகளில்
இல்லாத ஏதாவது புதுமையாக?
"ஐயா ஒரு பத்து
வருஷத்துக்கு முன்னாடி இந்த கேள்விய கேட்டு இருந்தீங்கனா,கொஞ்சம் நிறைய சொல்லியிருப்பேன்."
"இப்போ உலகம் ரொம்ப
சுருங்கிடுச்சுங்க,"
"முன்ன நீங்க பாரிஸ்டர்
பட்டம் படிக்க இங்லாந்து செல்ல ஆறு மாசம் கப்பல்ல போயிருப்பீங்க, இப்போ சென்னையிலிருந்து
நேரடி விமான சர்விஸ்ல 10 மணிநேரம் தான்".
"கலிபோர்னியாவில
ஒருத்தரு(??) ஒரு ப்ளாக் எழுதினார்னா அவர் போஸ்ட் பண்ண ரெண்டாவது நிமிஷம் ஒரு 50 பின்னூட்டம்
வருது , அதுபோல உலகத்துல இருக்கிற அனைத்தும் கலாச்சாரம் உட்பட அடுத்த நொடியே இங்க வந்துடுதுங்க."
"அப்படி இருக்க
நான் எத புதுமையா சொல்றது".
"ஆனால் உலக நாடுகளே
இப்போ இந்தியாவ கொஞ்சம் புதுமையா பார்க்கிற
விஷயம், தூய்மை குறித்த விழிப்புணர்வும், சட்டம் மீதுள்ள வலுவான
நம்பிக்கையும்தான்."
"மற்றபடி, ஆண் பெண்
உறவு, திருமணம் பந்தம் , அதன் புனிதம் பற்றி கவலை படாதது, ஆண் பெண் இருபாலாரும் பியூட்டி
பார்லர் போறது, புகை பிடிப்பது, பார், பப், போறது, ஆபாசமா திரைப்படம் எடுக்கறது, பாய்
பிரண்டு கார்ல் பிரண்டு , லெஸ்பியன் உறவு (தகவல் உபயம்- சொல்லவதெல்லாம் உண்மை ) குழந்தைகள்
முதல் கல்லூரி பெண்கள் வரை கற்பழிப்பது, கொலை செய்வது இது எல்லாமே இங்கே ரொம்ப மலிஞ்சிபோச்சு,
இந்த அழகுல மற்ற நாடுகள்ல இல்லாத புதுமை சொல்ற மாதிரி ஒன்னும் இல்லைங்க ஐய்யா."
கேள்வி பத்து:
எல்லாமே நீ சரியாக
சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய்
உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று
இறைவன் கேட்டால்?
"இறைவனிடம் சொல்வேன்"
"கொஞ்சம் பெரிய
மனசு வைங்க , நீங்க சொல்லறது சரிதான், இந்த பிறவியில ரொம்ப பாவம் செய்தது என்னமோ வாஸ்தவம்
தான், அதற்காக என்னை மன்னிச்சிடுங்க".
"அதே சமயத்தில எவ்வளவு பாவம் செய்தாலும் அதற்க்கு
பிராய சித்தம் உண்டல்லவா?"
"இவ்வளவு நேரம்
ஒரு முதியவரான எங்கள் மகாத்மா அந்த பாலைவனத்து
கொலைகாரன் கனவுல வந்து கேட்டதா சொல்லி அதுல என்னையும் மாட்டவைத்து வேடிக்கை பார்க்கும்
"அந்த" ரெண்டு பேரின் கொடுமைகளை அனுபவித்து கடினமான அவரது ஒன்பது கேள்விகளுக்கும்
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பதில் சொன்னத என் பாவத்துக்கு பரிகாரமா கருதி இன்னும் ஒரே
ஒரு முறை எனக்கு மீண்டும் மனித பிறவிய கொடுத்து, எங்கள் வள்ளுவன் பிறந்த அந்த பூமியிலேயே,
இந்த பிறவியில் எனக்கு கொடுத்த அதே தாய் தகப்பன் , சகோதர சகோதரிகள் , குடுபத்தினர்,
மனைவி பிள்ளைகள், நண்பர்களோடு வாழ இன்னும் ஒரே ஒருமுறை சந்தர்ப்பம் கொடுங்க ப்ளீஸ்."
"வேண்டுமென்றால்
நான் இப்போ எவ்வளோ திருந்திவிட்டேன் என்பதை இவ்வளவு நேரம் நான் உரையாடிகொண்டிருந்த
எங்கள் தேச பிதா மகாத்மா - மோகன் தாஸ் கரம் சந்த் காந்திடம் கேட்டுகொள்ளுங்கள்".
"இத்தனை சொல்லியும்
உங்கள் முடிவை நீங்கள் மறு பரிசீலனை செய்ய முடியாவிட்டால்,.
மனித பிறவி எனக்கு
வேண்டாம், அதற்கு பதில் எனக்கு எப்போதும் உங்களுடன் இருக்கும் "தேவ தூதன்"
பிறவியை தாருங்கள்" என கேட்பேன்.
அப்பா சாமி கில்லர் யாருயா நீரு? காந்திஜீயோட சத்தியசோதனைய விட உம் சோதனை பெரும் சோதனைய்யாபோச்சே!!!!.- நல்லா இருயா. .
நன்றி!
வணக்கம்!!
வாழ்க நம் தேசபிதா
மகாத்மாவின் புகழ்.!
மீண்டும் ச(சி)ந்திப்போம்!!!
ஹஹ்ஹாஹ்ஹ்ஹ்ஹாஹஹஹஹஹஹஹ் இன்னும் எத்தனை ஹஹ...ஓ! மை காட்! ஸாரி ஓ! அவர் காட்!
பதிலளிநீக்குரொம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம். சிரிச்சு சிரிச்சு....அதோட சீரியஸ் பதில்களையும் மிகவும் ரசித்தோம்!
ஆரம்பம் அட்டகாசம். கவிதை ஆஹா போட வைத்தது! ஹப்பா இத்தன்னை திறமை உள்ள ஒருவர் எங்களுக்கு நண்பராகக் கிடைத்ததற்கு கோடானு கோடி நன்றிகள் விசு நண்பருக்கு!
அது சரி நீங்க இந்தியா வந்தீங்களா இல்லை இந்தியாவை ஒரு காலத்துல ஆண்ட நாட்டுல இருக்கீங்க....அவங்ககிட்டருந்து சுதந்திரம் வாங்கித் தந்த மஹாத்மா அங்கேயே வந்தாரா ?!!!!!! நம்ம நாட்ட ஆண்டவன் இப்ப எப்படி இருக்கான்....நாம் கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கித் தந்த, கையாலாகாத அரசியல்வாதிகள் கையில் இருக்கும் நம்ம நாடு இப்ப எப்படி இருக்குனு ஒப்பிட்டுப் பார்க்க வந்திருப்பாரோ? பார்த்து நொந்து போயிருப்பார்.....அதான் நம்ம நாட்டின் நிலையைப் பார்த்து......உங்களிடம் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ?!!!
ஸோ மறுபிறவி எடுத்து அதுல எங்கள காச்சப் போறீங்கனு சொல்லுங்க..... இல்ல இப்பவே ஆப்பா.....ஹஹஹஹ்
சூப்பர் சூப்பர் ! ரொம்ப அழகா எழுதிருக்கீங்க நண்பரே! (ஐயா வேண்டாமே ப்ளீஸ்)
நாங்கள் உங்களை இழுத்து விட்டதில் தப்பில்லை! இல்லை என்றால் இவ்வலவு அருமையான ஒரு பதில் பதிவு கிடைத்திருக்குமா சொல்லுங்கள்!
எங்கள் கோரிக்கையை மனதில் கொண்டு பதில் கொடுத்தமைக்கு உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல!
உங்கள் எழுத்தை எல்லாம் வாசிக்கும் போது நாங்கள் எழுதுவது எல்லாம் சும்மா.....வெத்து வேட்டு என்றுதான் தோன்றுகின்றது.
மிக்க நன்றி மிக்க நன்றி,
துளசிதரன், கீதா
திரு துளசிதரன் மற்றும் கீதா அம்மையார் அவர்களுக்கு,
நீக்குதங்களின் அங்கீகாரமும் வாழ்த்தும் என்னை அகங்காரம் கொள்ளுமளவிற்கு இருந்தது.
பாராட்டுக்கு பாத்திரமானவனா? இல்லை..இல்லை .. வலைஉலகின் நான் இன்னும் பாதிவேக்காட்டு மாணவனே.
நீங்கள் இருவரும் எழுப்பிய சிரிப்பொலி இமயத்தில் மோதி எதிரொலித்ததால் இங்கே ஈர காற்றின் தாக்கத்தின் அளவுகோல் கணிசமாக உயர்ந்தது.
மறுபிறவியில் வர இருப்பது ஆப்பு வைக்க அல்ல பயப்பட தேவையில்லை,நீங்களும் என்னோடுதான் இருக்கபோகின்றீர்கள் ஏஞ்சல்கள் போல, அதற்கும் சேர்த்தல்லவா வரம் கேட்டிருக்கிறேன்.
நீங்கள் சொன்னதுபோல மகாத்மா இங்கே வந்திருந்தார், மனுஷர் ஓவர் கோட்டு அணிந்திருந்தார் கொஞ்சம் குளிர் அதிகம்.
அவரை பார்த்த இந்தநாட்டு அரசாங்கம் அவருக்கு குடிஉரிமை கொடுத்து கௌரவித்தது, ஆனால் அதை ஏற்க்க மறுத்துவிட்டார் - அங்கதான் நின்னாரு நம்ம மகாத்தமா.
இருவரும் சுகமா?
வருகைக்கு மிக்க நன்றி.
சிறிய வேண்டுகோள்: எப்படி சொல்வது.......சரி வேறு ஒரு சந்தர்பத்தில் சொல்கின்றேன். ஆமாம் நீங்கள் தான் 007 ஆச்சே கண்டுபிடியுங்கள் என்னவாக இருக்குமென்று.
வாழ்த்துக்கள்
நன்றி
கோ
வணக்கம் ஐயா நான் கில்லர்ஜி நலம், நலமென்றே கருதுகிறேன். இனிய நண்பர் துளசிதரன் அவர்கள் ஏற்றி விட்ட ஆட்டோவில் வந்தேன் அது இங்கு கொண்டு வந்து நிறுத்தியது தளம் கண்டு கொண்டேன் சந்தோசமே... காரணம் காந்திஜிக்கு கவிதை எழுதலாம் கில்லர்ஜிக்குமா ? அருமை ஐயா வணங்குகிறேன் ஒவ்வொரு கேள்விக்கும் தொலைநோக்கு பார்வையுடன் பதில்களின் ஊடே காந்திஜியுடன் டாவடித்து (அதாங்க விளையாட்டு) இருப்பது அருமை, மட்டுமல்ல புதுமையும் கூட ஆனால் ? என்னிடம் தாத்தாஜி (அதாங்க காந்திஜி) இப்படி விளையாடவில்லை எனக்கும் பயம்தான் முதல் முறை சந்தித்தனால் கூட இருக்கலாம். தங்களின் தொடர்பு கிடைத்தமைக்கு நன்றி திரு. து. & திருமதி.கீ. அவர்களுக்கு.
பதிலளிநீக்குஎனது பதிவுக்கு வருகை தந்து தாத்தாஜியிடம் நான் பேசியதை கேட்க அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி
இதோ இணைப்பு
http://www.killergee.blogspot.ae/2014/11/1.html
அடைமொழி பெயருக்கு அணுவளவும் பொருத்தமில்லா, அன்பு G க்கு,
பதிலளிநீக்குவணக்கங்களும் , வாழ்த்துக்களும்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
புதுமையான உங்கள் புரட்ச்சியில் அடியேனை இணைத்தமைக்கு திரு துளசிதரன் மற்றும் கீதா மேடம் இருவருக்கும் எனது நன்றிகள்.
நான் மகாத்மாவிடம் உரையாடிய மொழி தமிழ்தான், எனக்கே ரொம்ப ஆச்சரியத்துடன் கேட்டேன் எப்படி என்று.
மகாத்தமா சொன்னார் என்னை சந்திப்பதற்குமுன் அருகிலிருந்த மகானிடம் வரம் கேட்டாராம் "கோ" விடம் தமிழில் பேசும் வரம் வேண்டுமென்று, மேலும் கவிதைகூட ரசித்து கேட்டார்.
மகாத்மாவிடம் நீங்கள் சொல்லிய பதில்கள் சிந்தனைக்குரியவை.
வாழ்த்துக்கள்
நன்றி
கோ
கனவில் வந்த காந்தி
பதிலளிநீக்குமிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து
புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr
("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)
புதுவை வேலு மற்றும் யாதவன் நம்பி, வணக்கம்.
பதிலளிநீக்குமகாத்மா மூலம் இந்த சிறு ஆத்மாவையும் எட்டி பார்த்ததற்கு மிக்க நன்றி.
கோ
பதிலளிநீக்குவண்ணமிகு வலைச் சரத்தில்
வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!
வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
புதுவை வேலு,
பதிலளிநீக்குமலரும் பூவிற்கு
மணக்கும் பூவின்
மகரந்த வாழ்த்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.
.
நட்புடன்
கோ