கொடிய நாளும் - கொடி
நாளும்.
1914 ஆம் ஆண்டு
ஜூன் மாதம் 28 ஆம் நாள்.
ஆஸ்திரியாவின்
பட்டத்து இளவரசர் பிரான்க்ஸ் பெர்டினாந்த்(Franz
Ferdinand ) தனது காதல் மனைவி சோபியாவுடன்
(Sophia)
சராஜீவோ எனும்
இடத்தில இருந்த ராணுவ அணிவகுப்பை
பார்க்கும்பொருட்டு, காரில் சென்றுகொன்டிருக்கின்றர்.
ஏற்கனவே
போசிநியாவசமிருந்த சரஜீவோ
எனும் பகுதியை ஆஸ்திரியாவுடன் இணைத்துகொண்டதை
செர்பியர்கள் கடுமையாக எதிர்த்துவந்தனர்.
இந்த
நிலையில் செர்பியாவின் தேசிய தினமான அதே
ஜூன் 28 ஆம் நாள் 1914 ஆம்
ஆண்டு, ஆஸ்திரியாவின் பட்டத்து இளவரசர் பிரான்க்ஸ் பெர்டினாந்த்
செர்பியா வருவதறிந்த போசிநியாவின்
செர்பிய சிறுபான்மையை சார்ந்த ஏழு இளைஞர்கள்:
ஆஸ்திரியாவின்
மீதிருந்த கடும்கோபத்தினால் அரசுமுறை பயணம் மேற்கொள்ள, ராணுவ
அணிவகுப்பு மரியாதையை ஏற்க
வருகைதரும் பிரான்க் பெர்டினாந்தை கொலை செய்வதென முடிவெடுத்து
அதற்க்கான செயல் திட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு
தேவையான கையெறி குண்டுகள் மற்றும்
துப்பாக்கிகளை செர்பிய தீவிரவாத அமைப்புகளிடமிருந்து
ரகசியமாக பெற்றிருந்தனர்.
இளவரசரின்
கார் ஒரு குறிப்பிட்ட இடம்
வந்தடைந்ததும் தீவிரவாதியில் ஒருவன் தான் வைத்திருந்த
கையெறி குண்டை இளவசரின் கார்
மீது எறிந்தான் ஆனால்
குறி தப்பியது இளவரசரும்
தப்பினார்.
உடனே
அந்த தீவிரவாதி மடக்கி பிடிக்கப்பட்டு கைது
செய்யபடுகிறான், மற்ற 6 பேரும் தப்பித்து
விட்டனர்.
இந்த
சம்பவத்திற்கு பிறகு உடனடியாக தனது
பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது
நாடு திரும்ப , மாற்று திட்டத்தை வகுத்து,வேறு பாதை வழியாக
செல்ல திட்டமிடபடுகிறது.
இந்த
வேறு பயண பாதை விவரம்
கார் ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படவில்லை , எனவே அவர் வந்த
வழியிலேயே திரும்பி செல்கின்றார்.
விதி
இவரை பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்ததை யாரும் அறியவில்லை.
ஒரு
குறிப்பிட்ட தூரம் வரை சென்ற
பிறகு கார் ஓட்டுனரின் தவறு
சுட்டிகாட்டபடுகிறது.
உடனே
அவர் காரை நிறுத்துகின்றார் ரிவர்ஸ்
செய்ய.
அந்த
வழியாக, தான், இளவரசரை கொல்லாமல்
தப்பிக்கவிட்டு
விட்டோமே என வருத்தத்துடன், தப்பிவிட்ட
6 தீவிரவாதிகளில் ஒருவனான 19 வயது நிரம்பிய கவ்ரிலோ
பிரின்சிப் எதிரில்
வந்துகொண்டிருந்தான்.
இளவரசரின் கார்
நிற்பதை பார்த்தவுடன் தனது துப்பாக்கியை எடுத்து
இளவரசரை குறிவைத்து
சுடுகின்றான்.
இந்தமுறை
குறியும் தப்பவில்லை, இளவரசரின் உயிரும் தப்பவில்லை.
மீண்டுமாக
தனது துப்பாக்கியால் காரின் முன்னிறுக்கையில்
அமர்ந்திருந்த போசினிய
கவர்னர் ஆஸ்கர் போடியோரக் (Oskar
Potiorek) எனபவரின்
மீது
குறிவைக்கின்றான், ஆனால் தவறுதலாக இளவரசரின்
காதல் மனைவி சோபியாவின் வயிற்றில்
குண்டு பாய்ந்து இருவரும் தங்களது திருமண நாளான
அன்றே துடிதுடித்து இறந்துபோனார்கள்.
இளவரசர்
இறப்பதற்குமுன் தன் காதல் மனையியை
பார்த்து சொன்ன
வார்த்தைகள் "என் அன்பிற்கினிய சோபியா,
நீ சாகவேண்டாம் நம் பிள்ளைகளுக்காக நீ
உயிருடன் இருக்கவேண்டும்".
ஆனால்
இருவரும் கவர்னர் மாளிகைக்கு கொண்டு
செல்லபடுகின்றனர்,
கவர்னர் மாளிகையை அடைந்த உடனே சோபியா இறந்துவிடுகின்றார் அதை தொடர்ந்து பத்தாவது நிமிடம் இளவரசரின் உயிரும் பிரிந்தது.
கவர்னர் மாளிகையை அடைந்த உடனே சோபியா இறந்துவிடுகின்றார் அதை தொடர்ந்து பத்தாவது நிமிடம் இளவரசரின் உயிரும் பிரிந்தது.
உடனடியாக
கொலைகாரன் கைது செய்யபடுகின்றான். , பின்னர்
அவனை சார்ந்த மற்ற 5 பேரும் ஏற்கனவே
கைது செய்யப்பட்ட மற்றொருவனோடு சிறையில்
அடைக்கபடுகின்றனர்.
இந்த
அரசியல் கொலையே நிகழ்ந்த
முதல் உலகபோருக்கான முதல் அடியை எடுத்துவைக்க
காரணமாக அமைந்தது.
இதை
தொடர்ந்து, ஆஸ்திரிய, செர்பியா மீது போர்தொடுக்கின்றது, அதை
தொடர்ந்து, போசிநியாவுடன் ரகசியமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்
அடிபடையில் ஜெர்மனியும் போரில் இறங்குகின்றது.
40 ஆண்டுகளாக,
அரசியல், பொருளாதார, எல்லை பிரச்சினைகளால் எதிரிகளான
அண்டை நாடுகள் இந்த தருணத்தை
பயன் படுத்திகொண்டு போரில் இறங்குகின்றன.
இதில்
குறிப்பாக, இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து,பிரான்ஸ் , ஆஸ்திரியா- ஹங்கேரிய நாடுகள் மிக
பலமுள்ள நாடுகளாக மும்முரமாக
இந்த போரில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ்
தலைமையில் பிரிட்டன், இத்தாலி, ரோமானிய,மற்றும் அமெரிக்க
நாடுகள் ஒருபக்கமாகவும் அவர்களை எதிர்த்து ஜெர்மனி
, பல்கேரியா , ஆஸ்திரியா, துருக்கி போன்ற நாடுகளும் சண்டை
இட்டன.
சீக்கிரம்
முடிந்துவிடும் என பல நாடுகளும்
நினைத்திருந்தனர் ஆனால் இந்த போர்
சுமார் 4 ஆண்டுகள் தொடர்ந்தது.
1914 ஜூன் 28ஆம்
நாள் ஆரம்பித்து 1918 நவம்பர் 11 ஆம் நாள் முடிவடைந்தது.
இதில்
இங்கிலாந்தும் பிரான்சும் இணைந்து ஜெர்மனியை தோற்கடித்ததின் விளைவாக 11ஆம்
நாள் 11ஆம் மாதம் பகல்
11 மணிக்கு போர் முடிவுக்கு வந்தது.
போர்
முடிந்த இந்த நாளை பிரிட்டனும்
ஜெர்மனியும் அதன் நேச நாடுகளும்
மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
பிரான்சும்
இங்கிலாந்தும் தயாரித்த போர் முடிவு ஒப்பந்தத்தில்
ஜெர்மனியும் கையொப்பமிட்டது.
போர்
முடிவுக்கு வந்த இந்த நாளை
ஆண்டுதோறும் ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து
போரில் மடிந்த எண்ணற்ற போர்வீரர்களின்,
நினைவு தினமாக அனுசரிக்கின்றனர்.
போர்முடிந்த
கலவர பூமியில் புதிதாக எங்குபார்த்தாலும் முளைத்து
பூத்து குலுங்கிய சிகப்பு நிறத்தில் காணப்படும்
ஒருவகை மலரான "பாப்பி" எனும் மலரினால் செய்யப்பட்ட
மலர் வளையங்களையும் அந்தமலரினால் செய்யப்பட்ட அலங்காரங்களையும் அந்த போர்வீரர்களின் நினைவு
இடங்களில் வைத்து மரியாதை செய்வார்கள்.
அது
போன்றதொரு வீர வணக்க நாளான
கடந்த செவ்வாய் கிழமை நடந்த ஒரு
நினைவு நாள் கொண்டாட்டத்தின் போது,
இந்த வருடம் புதிதாக வேறு இரண்டு நிற
பாப்பிகளையும் அந்த நிகழ்ச்சி மேடையில்
அலங்கரித்து வைத்திருந்தது பார்வை யாளர்களின் கவனத்தை
மிகவும் கவர்ந்தது.
அவற்றுள்
ஒன்று வெள்ளை நிறம் மற்றொன்று
ஊதா நிறம்.
அதற்கான
விளக்கம் அனைவரையும் கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
சிகப்பு
நிறம் போரில் ஈடுபட்டு தாய்
நாட்டுக்காக தன் உயிரை கொடுத்தவர்கள்,
ஊனமுற்றோர்கள், தன்னலமில்லா சேவை புரிந்தவர்களுக்கு மரியாதையாகவும்,
வெள்ளை நிறம், போரில் விருப்பமில்லாமல்,
சமாதனத்திற்காக பாடுபட்டவர்களுக்கு மரியாதை செயய்வதற்காகவும், ஊதா
நிறம் அந்த போரில் ஈடுபடுத்தப்பட்ட
கால்நடைகளின் நினைவாகவும் வைக்கபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதும் கூடியிருந்தவர்களின் கண்கள் அருவிகளானது.
இதில்
சுமார் 10 மில்லியன் ராணுவ
வீரர்களும் 6 மில்லியன் பொதுமக்களும் இறந்ததாகவும்,சுமார் 20 மில்லியன் பேர் காயங்களும் உடல்
ஊனமும் அடைந்ததாகவும் வரலாறுசொல்கின்றது.
சுமார் 1 மில்லியனுக்கும் மேலான இந்திய ராணுவ
வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் அவர்களுள் சுமார் 74 ஆயிரம் இந்திய சிப்பாய்கள்
தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர்.
யாரோ
ஒருவரின் மரணம் எத்தனை மனித
மற்றும் விலங்குகளின் உயிரை பலிவாங்கிவிட்டது.
பிரிட்டனுக்காக
போர்புரிந்து இறந்துபோன 8,88,246 பிரிட்டிஷ்
இராணுவ வீரர்களின் நினைவாக 8,88,246 செராமிக் பாப்பிகளைபிகளை உருவாக்கி அவைகளை ஒரே இடத்தில்
வரிசை வரிசையாக அலங்கரித்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு
ஆண்டும் இந்த நாளில் 11/11 11 மணிக்கு
எல்லா அரசு மற்றும் தனியார்
நிறுவன அலுவலகங்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி
செலுத்துவது வழக்கம்.
இது ஏறக்குறைய நம்ம ஊர் கொடிநாள் போல.
இது ஏறக்குறைய நம்ம ஊர் கொடிநாள் போல.
இந்த
ஆண்டு மௌன அஞ்சலியின்போது நமது
தாயக வீரர்களையும் நினைத்து அவர்களுக்காக வீர அஞ்சலி செலுத்தினேன்.
இனி இந்த பூமி போரில்லா சமாதானம் பூத்துகுலுங்கும் பூமியாக திகழ வேண்டிகொள்வோம்.
இந்த முதல்
உலக போர் துவங்கி இந்த
ஆண்டு 100 வது ஆண்டு நினைவாண்டு
என்பதால் இந்த பதிவு.
நன்றி.
மீண்டும்
ச(சி)ந்திப்போம்.
கோ.
என்ன அருமையான சரித்திரத் தகவல்கள்! முதல் உலகப் போருக்கானக் காரணம்! கொடி நாளைப் பற்றியத் தகவல்! கொடிய நாள் தான். ஓ 100 வது ஆண்டா?!! ம்ம் இனிமேலாவது இந்த பூமி போரில்லாத பூமியாக மாற மனிதர்கள் நாம் மாற வேண்டுமே முதலில்! மனித நேயம் பரவ வேண்டுமே! வேண்டுவோம்! புத்தம் புது பூமி வேண்டும்! யுத்தம் இல்லாத பூமி வேண்டும்!
பதிலளிநீக்கு11ஆம் நாள் 11ஆம் மாதம் பகல் 11 மணிக்கு போர் முடிவுக்கு வந்தது.// சீசர் இடுகையில் வரும் தங்கள் தந்தையின் மறைவு (இரவு 11 மணி) என்றாலும் ஒற்றுமை?!!!
நல்ல இடுகை! நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா! மிக்க நன்றி!
திரு துளசிதரன் அவர்களுக்கு.
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
இடுகையை உன்னிப்பாக வாசித்து வாழ்த்தியதற்கும் என் தந்தையாரின் நினைவு நாளை நினைவில் வைத்து உங்களின் பின்னூட்டத்தில் பின்குறிப்பாக இணைத்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எங்கே கொஞ்சம் நாளா ஆள காணோம்.
நன்றி.
கோ
அருமையான தகவல் நண்பா! நன்றி! படிக்கும் போதே இந்த போர் நமக்கு தேவையா என்று என்ன தோன்றியது.
பதிலளிநீக்குஅவ்வளவு அழகாக திட்டமிட்டும் அந்த ஓட்டுனரிடம் சொல்லாத காரணத்தினால் வந்த விளைவு, "செய்வன திருந்த செய் " என்ற கருத்தை நினைவூட்டியது.
ஊதா என்றவுடனே அவரை பூ தான் நினைவிற்கு வரும், அது அந்த விலங்குகளுக்கும் என்பது இன்றுதான் தெரிந்தது.
தொடர்ந்து எழுதவும்.
விசு,
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி.
எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.
எதற்கு சண்டைகள்?
யார் இந்த போர்களுக்கு சூத்திரதாரிகள்?
மக்கள் விழிப்படையவேண்டும் அவர்களின் சிந்தைகள் விரிவடைய வேண்டும்.
நன்றி,
இணைப்பில் வருக.
நட்புடன்
கோ
வணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் ஆசை நிறைவேறட்டும்,
வாழ்த்துக்கள்.
நன்றி.
ஆசை நிறைவேற,ஆசையுடன், ஆசி வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குகோ