பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வைதேகி காத்திருப்பாள்!!

                                                                         உயர் உள்ளல் 

சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

சென்னை பேசின்  பிரிட்ஜில்   உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்று, அதே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணணி அறிவியலில் பட்டம் பெற்று,
தமது பரீட்ச்சை மதிப்பெண்களின் அடிப்படையிலும், நன்னடத்தையின் அடிப்படையிலும்  சென்னை ஐ ஐ டி யில் கணணி துறையில் முதுகலை  மற்றும் ஆராய்ச்சித்துறை பட்டங்களையும் பெற்று பம்பாயை தலைமையாய் கொண்டு சென்னையில் இயங்கும் ஒரு பிரபல வெளி நாட்டு நிறுவனத்தின் கார்பரேட் அலுவலகத்தில் உதவி சி ஈ ஒ வாக பணியில் அமர்ந்து மூன்றாயிரம் பேர்கள் வேலைசெய்யும்  ஏழு அடுக்கு கட்டடிடத்தில் படிப்படியாக முன்னேறி இப்போது இணை சி ஈ ஒ வாக வேலை செய்து கொண்டிருக்கும் இருபத்து ஏழு வயது நிரம்பிய திருமணமாகாத இளைஞன் ராகவன் தம்பி.(ராகவனின் தம்பி இல்லீங்க அவர் முழு பெயர் ராகவன் தம்பி).


இவரும் நம்மில் பலரைப்போல பதிவுகள் எழுதி அவற்றை சமூக வலை தளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர்.

அவரின் பதிவுகள் பெரும்பாலும் அறிவியல் தொழில் நுட்பம், அந்நிய செலவாணி,உலகின் பல்வேறு நாடுகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவற்றின் அடிப்படை நுண்ணறிவும்  இந்திய கண்டுபிடிப்புகளின் அறிவுத்திறனுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் போன்றவை தொடர்பானதாக இருக்கும்.

அவரின் இந்த பதிவுகள் வளர்ந்து வரும் அல்லது நவீன தொழில் நுட்ப்ப உலகில் வளர துடிக்கும் இளைஞர்களுக்கு பேருதவியாக அமைந்திருந்தது.

அவர் எழுதும் பதிவுகளின் பின்னூட்டத்தை பார்ப்பார் அவற்றை மதிப்பார் ஆனால் அவற்றுக்கு பதில் அளிக்க நேரம் ஒதுக்குவதை பார்க்கிலும் வேறு பிரயோசனமான பதிவுகள் எழுதவே அவர் எப்போது தமது ஓய்வு நேரங்களை பயன்படுத்துவார்.

அதே அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த அறிவும் அழகும் நிறைந்த 23 வயது நிரம்பிய யுவதியின் பெயர்தான் வைதேகி.

வைதேகி நம்ம தம்பி, ராகவன் தம்பியின் நேரடி கண்காணிப்பில் உள்ள அவரது மூன்று பிரதான ப்ராஜெக்ட்களுள் ஒன்றான  நியூசிலாந்து தொலை தொடர்பு நிறுவனத்தின் ப்ராஜெக்ட் குழுவில் இருந்த சுறுசுறுப்பும் ஸ்மார்ட்டும் நிறைந்தவராக நற்பெயர் பெற்றிருந்தவர்.

காலப்போக்கில் வைதேகிக்கு நம்ம தம்பி ராகவன் மேலே இருந்த மரியாதை காதலாக மாறியது.

அவரை மானசீகமாக, தனக்கு இருந்த அந்த ஒரு தலையில் உள்ள ஒரு மூளையின் ஒரு மூலையில் ஒருதலையாக காதலித்து வந்தார்.

சொல்லப்போனால் அவரை தமது வருங்கால கணவனாகவே பாவித்து ஒவ்வொரு நாளும் அவருக்கு காலை மாலை வணக்கங்களை சொல்லும்போதும், தான் அவரின் மனைவி என்பதாகவே நினைத்து மகிழ்வார்.

ராகவனின் எல்லா பதிவுகளையும் ஆரம்பத்தில் இருந்து ஒன்றுவிடாமல், அவற்றிற்கான பின்னூட்டத்தை அளிப்பதில் முன்னோட்ட வாசகராக திகழ்ந்து வந்தார், எனினும் ராகவனின் பதில் கிடைக்காமல் ஆரம்ப காலத்தில் மனம் மகிழவில்லையென்றாலும், ராகவனின் பதிலளிக்காத கொள்கையினை அறிந்து மன அமைதி கொண்டாள்.

பல வேளைகளில் அலுவலக கான்பிரன்ஸ் நேரங்களில் ராகவனுக்கு மிக அருகில் அமர்ந்து அவனை ரசிப்பதையும் ராகவனின் பெயரை பலமுறை ராகவனுக்கு கேட்டுவிடாதபடி தமது வாய்க்குள்ளேயே சொல்லிக்கொள்வதும், நடைபெறும் டிஸ்கஷனை குறிப்பு எடுப்பதுபோல் ராகவனின் பெயரை குறிப்பு நோட்டு புத்தகத்தில் கிறுக்கி கொண்டிருப்பதுமாக இருப்பாள்.

அது போல் ஒரு கான்பிரன்ஸ் கூட்டத்தில் தமது நியூசிலாந்து ப்ராஜெக்ட் முடிந்தபின்னர் அதன் வெள்ளோட்டத்தை ஆர்டர் கொடுத்த  நிறுவனத்திற்கு நேரில் சென்று டெமான்ஸ்ட்ரேஷன் செய்து காண்பித்து இறுதி ஒப்புதல் வாங்க தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் வைதேகியை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது, அந்த கூட்டத்திலேயும் ராகவனின் பெயரையே பலமுறை வைதேகி தமது  நோட்டு புத்தகத்தில்  கிறுக்கி கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.


நியூசிலாந்து போகுமுன்னே தமது விருப்பத்தை ராகவனிடம் சொல்லிவிட நினைத்தவள்.

வேண்டாம், ஒருவேளை அப்படி சொல்லி அது யாருக்காவது தெரியவந்து , வைதேகியின் மேல் உள்ள காதலால்தான் இவளை நியூசிலாந்து அனுப்ப சிபாரிசு செய்திருப்பாரோ என்று யாரேனும் ராகவன் மேல் சந்தேகிக்க நேருமே என எண்ணி , போய் வந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம்  என்று நினைத்து ,பயணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்தாள்.

தேவையான தச்தாவேகிகள், ப்ரொஜெக்டின் மென்பொருள் அடங்கிய மைக்ரோ எஸ்.டி கார்ட், மற்றும் அதன் பிரதிகளை பாஸ்வோர்ட் ப்ரொடெக்ட் செய்யப்பட்ட மின் அஞ்சல் அட்டாச்மெண்டாக சேகரித்துக்கொண்டு கூடவே ராகவன் பெயரை அவ்வப்போது  கிறுக்க பயன்படுத்திய நோட்டு புத்தகத்தையும் தமது மேசை மீது வைத்துவிட்டு, நாளை காலை அலுவலகம் வந்து இவற்றை எடுத்துக்கொண்டு, மேலும் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையம் என்று அங்கிருந்து பாம்பே தலைமை அலுவலகம் சென்று சி ஈ ஒ விடம் சில தச்தாவேஜிகளை பெற்றுக்கொண்டு அதற்கு அடுத்த நாள் நியூசிலாந்து சென்று அதன் தலைநகராம் வெலிங்டனிலிருந்து பிறகு நியூசிலாந்தின் தொழில் மற்றும் வணிக நகரமான ஆக்லந்திலுள்ள தமது கஸ்டமர் நிறுவனத்தில்  தமது ப்ரோஜக்டின் வெள்ளோட்டத்தை செயல் முறை விளக்கம் காட்டி உரையாற்றிவிட்டு வருவாதாக திட்டமிட்டு (ஐட்டனரி) வீட்டிற்கு சென்றாள்.


வீட்டிற்கு சென்ற வைதேகி  நாளை செல்லபோகும் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த நேரத்தில் வைதேகியின் அம்மா அவளிடம்,"இதோ பார் வைதேகி சொல்றத நல்லா கேளு, இந்த பயணம் முடிந்து வந்ததும் உனக்கு திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து விடுவோம் , இந்த முறை நீ எந்த சாக்கும் சொல்லாமல் திருமணத்திற்கு சம்மதிக்கணும், ஒவ்வொரு நாளும்  நாங்க மடியில நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கோம், வயசு வேற நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுது,  அதனால இந்த பயணம் முடிஞ்ச கையோட உனக்கு வரன் பார்க்க ஏற்பாடு செய்யபோகிறோம்" என்று மூச்சிவிடாம பேசி முடித்தார்கள்.

வைதேகியோ, வரன் தேட அவசியமே இல்ல எல்லாம் தயாராக இருக்கின்றார், நான் தான்   ஊரிலிருந்து வந்த உடன் அவரிடம் பேசபோகின்றேனே என தன் மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.

இரவு உணவிற்கு பின் படுக்க சென்றவளுக்கு தூக்கமே வரவில்லை. இதில் அவளது மனதில் ஒரு விபரீத எண்ணமும் தோன்றியது.

ஒருவேளை நான் ஊருக்கு சென்று திரும்பும் இந்த பதினைந்து நாட்களில் ராகவனுக்கு வேறு யாராவது ப்ரபோஸ் செய்து அதை இவர் ஏற்றுக்கொண்டால்... அல்லது இவருக்கு அவர் வீட்டில் வேறு யாரையாவது பேசி முடித்து விட்டால்... நினைக்கவே பகீர் என்றிருந்தது.

கடிகாரத்தை பார்த்தாள்.. நேரம் இரவு பத்துமணி.

மனசை தைரியபடுத்திக்கொண்டு, ராகவனின் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டாள் ...

மொபைல் என்கேஜிடாக இருந்தது.  இந்த நேரத்தில் யாருடன் பேசிகொண்டிருப்பார்?  இவருக்கு வேறு யாரேனும் காதலியாக இருப்பார்களோ?

பல முறை முயன்றும் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஒரு அரை மணி நேரம் கழித்து  எப்படியோ ஒருவழியாக அவரது வீட்டு தொலைபேசி வாயிலாக ராகவனின் குரலை கேட்க்க முடிந்தது.


"ஹலோ.... மிஸ்டர் ராகவன் இருக்காரா?"

 "எஸ் திஸ் இஸ் ராகவன் ஸ்பீகிங், நீங்க ...."

"சா...ர்ர்ர் , திஸ் இஸ் வைதேகி."

"ஹூ..?"

"வைதேகி ரமணன்... டெலிகாம் ப்ராஜெக்ட் டீம் லீடர்".

"ஓ... யா... தி ஒன்  ரெப்ரசண்டிங்  தி ...."

"யா ..சார்.."

"ம்ம். சொல்லுங்க என்ன இந்த நேரம், ஏதாவது டீடைல்ஸ் ஆர்  ஹெல்ப் ...."

வைதேகி தான் சொல்ல வந்ததை சொன்னாளா   இல்லையா அல்லது எப்படி சொன்னாள் என்பதை பிறகு பார்ப்போம்.


தொடரும்....

கோ.




6 கருத்துகள்:

  1. வைதேகி தான் சொல்ல வந்ததை சொன்னாளா இல்லையா அல்லது எப்படி சொன்னாள் என்பதை பிறகு பார்ப்போம்.///

    அடடா சஸ்பென்ஸா . ம்ம்ம்
    நல்ல ஆரம்பம் சார்!
    கதை விருவிருப்பா போரச்சே பாதியில முடிச்சிட்டீங்கலே ஃபீலிங்ஸ்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      ரொம்ப பீல் பண்ணாதீங்க , இதோ அடுத்த பாகம் வந்தாச்சு.

      படிச்சிட்டு சொல்லுங்க.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. கதைய அருமையான இடத்தில் நிறுத்தி விட்டு .......என் பின்னோட்டமும் அடுத்த பதிவில் தொடரும்...

    பதிலளிநீக்கு
  3. அவரை மானசீகமாக, தனக்கு இருந்த அந்த ஒரு தலையில் உள்ள ஒரு மூளையின் ஒரு மூலையில் ஒருதலையாக காதலித்து வந்தார்.//

    ஹ்ஹாஹஹ் ஹப்பா காதல் கதையிலும் கூட ஒரு சிறு நகைச் சுவை கலந்தோடும் வரிகள்...
    ம்ம்ம் பாவம் வைதேகி....என்பது மட்டும் புரிகின்றது கதையிலிருந்து.....

    சே சஸ்பென்ஸ் இப்படி அருமையான இடத்தில்.....ம்ம்ம் அதுதானே தொடர் கதையின் ஸ்வாரஸ்யமே...இல்லைனா அடுத்த பதிவுக்கு யாரு வருவாங்க...அது சரி இத்தனை பிசியான சிஇஓ பதிவு எழுதக் கூட சமயம் இருக்கா...ம்ம்ம்ம் அமிதாப் போன்றவர்களே எழுதும் போது....

    அழகான நடை...வழக்கம் போல்...ஆனால் வைதேஹியின் அழகான நடை தொய்ந்துவிடும் போன்று தோன்றுகின்றதே...ம்ம் வெயிட்டிங்க்...

    பதிலளிநீக்கு
  4. அன்பிற்கினிய நண்பர்களே,

    தங்களின் பின்னூட்டம் கண்டு கொஞ்சம் தள்ளாட்டம் , ரொம்ப ரசிச்சி எழுதி இருக்கின்றீர்களே.

    வைதேகியின் நடை தளரும் அளவுக்கு என்ன நடந்துடபோகுது?

    பதிவு எழுதறவங்க எல்லாரும் வே.இ.ப வா?

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    அடுத்த பாகத்தை படித்து விட்டு வாருங்கள்..

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  5. வே.இ.ப வா? என்ன கோ,
    உங்களுக்கு மட்டும்

    பதிலளிநீக்கு