Followers

Sunday, October 26, 2014

பாரதி இன்றிருந்தால்....!!??சமீபத்தில் வெளிவந்த சில தீபாவளி திரைப்படங்களை பார்த்து விமர்சன செய்தி சொன்னார்கள்  நண்பர்கள்.

 அவற்றில் சில சத்தமின்றி  'சுட்டவை' என்று ஓங்கி "கத்தி" கூக்குரலிட்டு சொன்னார்கள்.


  இவற்றை பார்கின்றபோது, " தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இச்ஜகதினை அழித்திடுவோம்" என்று பாட்டுகொரு புலவன் - முண்டாசு கவிஞன், வெள்ளையனின் சிம்மசொப்பணம்- பாரதியார்,

பாட்டில் - ஏட்டில்  சொன்னதையே  கொஞ்சம் அரிதாரம் பூசி என்னவோ அரிதான(எல்லா சினிமாக்களுக்கும் சொலவதுபோல்  - வித்தியாசமான ) கதை சொல்லவதாக நினைத்து எடுக்கப்பட்டிருக்கும் படங்களை காசு கொடுத்து , நேரம் செலவழித்து பார்த்தபின்னர் "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட   மாந்தரை நினைத்துவிட்டால்"........ என பெரிதும் வருத்தப்பட்டனர்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பாரதியாரைதான் துணைக்கு கூப்பிடவேண்டும்.

இந்த நேரத்தில் , கல்லூரி நாட்களில் நடந்த கவிதை போட்டியன்று, ஐந்து நிமிடங்களுக்கு முன் தலைப்பை தந்து கவிதை எழுதும்படியான போட்டிக்காக எழுதி ( பரிசு பெற்ற) கவிதையின் தலைப்பு ஞாபகத்திற்கு வந்தது.


என்ன தலைப்பு?


"பாரதியார் இன்றிருந்தால்........"

கவிதை இதோ;

பாட்டுக்கு பாரதியே!
பைந்தமிழின் சாரதியே!
பாடுகின்றேன் உனக்கக்காக!- கவிதை
பாமரனை மன்னிப்பாய்!

ஓடி விளையாட சொன்னாய் - நாங்கள்
ஓடாமலே விளையாடுகின்றோம்
ஓசி கணினியில்!

பாடிட சொன்னாய்   பாடல்களை-நாங்கள்
பாடுகின்றோம் சினிமா பாடல்களை.

ஒளிபடைத்த கண்ணினாய் வா என்று
பாடினாய்
நாங்கள் ஒளி இழந்து ஒதுங்குகின்றோம்
ஒன்றுமில்லை
மெட்ராஸ் தான்.

பாப்பா பாட்டு பாடிய நீ
பாரதத்தில் இன்றிருந்தால்
பாப்பாக்கள் உன்னை கண்டு
பாடிடுமே என் சொல்ல?

பேனாவால் நடுங்க வைத்தாய்
பேராசை கொண்ட வெள்ளையரை - இன்று
கானா எழுதிருப்பாயோ பாராட்டி
  கஜானா - கருவூலக கொள்ளையரை .

சாதிகள் இல்லையென்று
ஜாதகம் கூறிசென்றாய்- இங்கே
நாதி அற்றவன் கூட
நாசுக்காய் வடிக்கின்றான்
ஆளுக்கொரு ஜாதி.

பெண்ணடிமை கொடுமை நீக்க
பேரிடி முழக்கமிட்டு
எங்களது சுதந்தரத்தை
எங்கேயோ தொலைத்து விட்டாய்.

உம்மைப்போல்..

ஆட்டுக்கடா மீசை வைத்தும்
ஆணை இட்டும் பலிக்கவில்லை
ஆட்டுக்கல்லும் குழவியும் தான்
ஆண்களது சொத்துக்கலாம்.(எனை தவிர)

சங்கத்தமிழ் மறவன்
சரித்திரங்கள் மாறுமுன்னே
மங்காத சுதந்தரத்தை
மறுபடியும் பெற்றுத்தா.

முப்பதுகோடி முகமென்று
முன்னாளில் நீ பாடினாய்
இன்னும் எத்ததனை கோடி
பெருகிவிட்டோம்
சென்சஸ் துறைக்கே
சஸ்பன்சாம்.

கோடியில் தெரிந்ததெல்லாம்- உமக்கு
மக்கள் தொகை ஒன்று தான்.- இன்று
எங்கும் கோடி எதிலும் கோடி
கோடிக்கு குறைவாய்-நர்சரி 
குழந்தைகளுக்கும் தெரியாது.

முனிவன்போல் இருந்த நீ
முழுமையாய் இன்றிருந்தால்
சினிமாவிலும் சேர்ந்திருப்பாய்- கொஞ்சம்
சில்லரையும் சேர்த்திருபாய்.

கொக்கு மக்கு என்று
குறைஞான பாட்டுக்கு இடையில்
சொக்குபொடி வார்த்தை கொண்டு
சொகுசான பாட்டெழுதி  இருப்பாய்.
  
சிங்கள தீவினிற்கு பாலம் அமைக்க
சிந்தித்து திட்டங்கள் கூறிச் 
சென்றாய்- இன்று
மங்காத தமிழ் மறவர் படும் துயரை
மனக்கொண்டு பார்க்காமல் ஓடிடுவாய்.

பொற்காலம் வருமென்றாய்-நாட்டில்
பொறுக்காத துயர்கண்டு
தற்கொலைக்கும் துணிந்திருப்பாய் 
நல்லவேளை இன்றில்லை.பாரதியின் ஆன்மா
பரமனின் மடியில் இளைப்பாரட்டும்.

வாழ்க பாரதியின் புகழ்!
வாழ்வாங்கு வாழ்க நம் 
பாரதத்தின் புகழ்!

ஜெய் ஹிந்த்.

நன்றி,

மீண்டும்  (சி)ந்திப்போம் .


கோ

17 comments:

 1. என்ன ஒரு உண்மை...அன்றும் சரி, இன்றும் சரி.. மனதை தொட்ட வரிகள். தொடர்ந்து எழுத்து நண்பா.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. விசு,

   என்றும் என் எழுத்துகளை ரசிப்பதோடல்லாமல் அன்றுபோல் இன்றும் பலரோடு பகிர்ந்து மகிழும் உங்கள் பரந்த மனதிற்கு எந்தன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

   எத்தனை பேருக்கு இந்த இனிய மனம் வாய்க்கும்; உங்கள் மலர் மனதின் மனோரஞ்சித (விசு)வாசம் என்றும் என் வலை பதிவின் பக்கங்களில் வீசும் என்பதில் ஐயமில்லை.

   நன்றி விசு.

   கோ

   Delete
 2. potti nadappatharkku ainthu nimidathukku munpu thalaippu solli ezuthiya kavithaiyaa ena santhekam varukirathu!
  enna avvalvu nalaa irukku athutaan!
  rompa nallaa ezuthi irukkuringa sir!

  appothu parisu petrathukku ippo enathu vazthukkal sir!

  ReplyDelete
  Replies
  1. மகேஷ்,

   போட்டியன்று, அதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் ஒரு அறையில் அமரவைத்து கதவுகளை மூடிவிட்டனர்.(தனிமை வழங்கவேண்டி என நினைக்கின்றேன்).

   போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் கரும்பலகையில் தலைப்பை எழுதினார்கள்.

   பிறகு மாணவர்கள் தலைப்பை ஒட்டி கவிதை எழுத வேண்டும்.

   கவிதையின் கருத்துக்கள் யார் மனதையும் புண் படுத்ட கூடாது, தரம் தாழ்ந்த வார்த்தைகளையோ , சொற்றொடர்களையோ பயன் படுத்த கூடாது,அனுமதிக்க பட்ட நேரத்திற்குள் எழுதி தரவேண்டும், எந்த குறிப்புகளையோ, புத்தகங்களையோ பார்த்து எழுத கூடாது போன்ற நிபந்தனைகளின் மத்தியில் எழுதிய கவிதை அது.

   காலம் கடந்து வந்தாலும் உங்கள் பாராட்டு காலம் உள்ளவரை நிலைக்கும்.

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   சீசர் விரைவில்....

   நன்றி.

   கோ.

   Delete
 3. வணக்கம்
  அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் அத்தோடு பாடலையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரூபன்,

   உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மகிழ்கிறது உள்ளம்.

   நன்றி

   கோ.

   Delete
 4. நண்பரே முதல் முறை தங்கள் வலைப்பக்கம்! நண்பர் விசு அறிமுகப்படுத்திய இந்தச் சுட்டி! இன்று மட்டுமல்ல இன்னும் பல வருடங்கள் சென்றாலும் இது பொருந்தும்! அருமையான வரிகள்!

  பெண் சுதந்திரம் வரிகள்....சினிமாவிலும் சேர்ந்திருப்பாய்...சில்லரையும் சேர்த்திருப்பாய்....சாதி பற்றிய வரிகள் அருமை...அருமை....

  அது சரி உங்கள் காலத்திலேயே கானா பாடல் ரொம்ப பாபுலரா? அப்படியென்றால் நீங்கள் இளைஞர்??!!!!!!! இல்லை நாங்கள் அரை கிழங்கள் அரை செஞ்சுரி அடித்தாயிற்று...அத்னால் தான்...ஹஹ்ஹ தொடர்கின்றோம்.....நண்பர் விசுவிற்கு மிக்க நன்றி! சொல்லணும்.....உங்கள் அறிமுகம் க்டைத்ததற்கு......அவர்தான் ராஜபாட்டை போட்டுக் கொண்டிருக்கின்றாரே!...

  ReplyDelete
  Replies
  1. என்ன? இதுதான் முதல் வருகையா? அப்படியானால் நீங்கள் இன்னும் நண்பன் "கோ" வின் பேய் கதையை படிக்கவில்லையா? ஐயாகோ. உடனே சென்று இவர் எழுதிய "ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்" படித்து பாருங்கள். நான் எழுத இருக்கும் பேய் அறைந்த கதையின் முன்னுரை தான் இது.

   Delete
 5. துளசிதரன் ஐயாவுக்கு,

  நமஸ்காரங்கள்.

  தங்களின் வருகை எந்தன் பாக்கியம்.

  தெளிவான உங்கள் விமர்சனம் , என் நெஞ்சில் துளசி வீசுகின்றது, முகத்தில் தென்றல் பூசுகின்றது, உங்கள் எழுத்துக்கள் உங்களின் புலமை பேசுகின்றது.

  நண்பர் விசு அமைத்துகொடுத்த இந்த நட்புபாலம், கால சுனாமிகளை சங்காரிக்கும் சரித்திரம் போற்றும் சங்கதிகளை சம்சாரிக்கும் என நம்புகின்றேன்.

  கானா பாடல்கள் திரையிசையில் கலவாத காலமயிருந்தாலும் பள்ளி நாட்களிலேயே நண்பர்களோடு இட்டுக்கட்டி பாடி கேட்ட அனுபவம் இருக்கின்றது.

  ஆங்கில பாடங்களை
  அழகாக எடுத்துரைக்கும்
  அன்பான ஆசான்களே -உமக்கு
  அருள் நன்றி கூறுகின்றோம்.
  எந்நாளும் உமது பணி
  ஓங்கிட வேண்டுகின்றோம்
  பல்லாண்டு வாழவென்று
  வாழ்த்தியே வணங்குகின்றோம்.
  (பள்ளியில் நடந்த வில்லுபாட்டுக்கு எழுதியது- கானா மெட்டில்)

  நன்றி.

  KO  ReplyDelete
  Replies
  1. துளசிதரன் ஐயா, கீதா அம்மையார்,(அம்மை யார்?) அவர்களுக்கு,

   தங்களை மயக்குவதற்காக விழுந்த வார்த்தைகளல்ல இவை, உங்கள் வார்த்தையில் நான் மயங்கியதால் எழுந்த வார்த்தைகள்.

   தொடருவோம்.

   நன்றி.

   கோ.

   Delete
 6. துளசி ஐயா , கீதா அம்மையாருக்கு ,

  பதிலளித்து, நட்பை விரிவாக்கியதற்கு நன்றி, விரிசல் விளையாமல் விவரம் பரிமாற்றம் செய்வோம்.

  மற்ற பதிவுகளை பார்தீர்கள? குறிப்பாக - புஷ்பவனத்தில் புஸ்வானவேடிக்கை..

  தங்களின் விமர்சனங்கள் என் எழுத்துகளுக்கு விளக்கொளி கொடுக்கும் என நம்புகிறேன்.

  நன்றி.
  KO

  ReplyDelete
 7. அருமையான பதிவு,ஐயா.

  ReplyDelete
 8. பிரேம்,

  நீங்கள் படித்து மகிழ்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

  நன்றிகள் பல.

  கோ

  ReplyDelete
 9. வணக்கம் கோ,
  ஆட்டுக்கடா மீசை வைத்தும்
  ஆணை இட்டும் பலிக்கவில்லை
  ஆட்டுக்கல்லும் குழவியும் தான்
  ஆண்களது சொத்துக்கலாம்.(எனை தவிர)
  இது கொஞ்சம் ஒவரா இல்ல உங்களுக்கு,
  அது சரி என்னைத் தவிர,,,,,,,,,
  கிரைண்டரும், மிக்சியுமா?
  அப்ப நல்லா இருக்கும்,
  எனக்கு அப்பவே தெரியும்.
  பா வரிகள் பாரதி படித்தால் வணங்குவான் உம்மை,
  வெறும் வார்த்தையல்ல உண்மை.
  நன்றி.

  ReplyDelete
 10. வெறும் வார்த்தையல்ல உண்மை ????

  பாராட்டு அதிகம்... நன்றி

  கோ

  ReplyDelete
 11. கோ,
  அப்படியா?????????

  ReplyDelete
 12. அப்படித்தான் தோன்றுகின்றது.

  கோ

  ReplyDelete