Followers

Saturday, October 18, 2014

அவர் பெயர் தங்கமணி

காதுக்கெட்டிய செய்தி கேட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றேன்.

அப்பா அம்மா இருவரும் இன்று காலை 5.00 மணிக்கு மேல்வீட்டில் இருக்கும் அங்கிள் காரில் ஆஸ்பிடல் சென்றிருக்கின்றனர்.

ஏன் யாருக்கு என்ன ஆச்சி?


அம்மாவுக்கு இரவெல்லாம் கடுமையான வயிற்றுவலி, இரவு 2 மணிக்கு நம்ம குமரன் டாக்டர் வந்து பார்த்து ஊசி போட்டு சில மாத்திரைகளை கொடுத்துவிட்டு , வலி கொஞ்சம் குறைந்து நன்றாக தூங்குவார்கள், நான் நாளைகாலையில் வந்து பார்கின்றேன் என சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு இரண்டு மணி நேரம் வரைதான் தூங்கி இருப்பார்.

மீண்டும் வலிகுறையாமல் அம்மா வேதனையால் துடித்துக்கொண்டிருந்தார்.

அப்பா குமரன் டாக்டருக்கு தொலைபேசிமூலம் தகவல் சொல்ல, அவரும் சரி நீங்கள் உடனே மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுங்கள் நான் அங்கு வந்து பார்கிறேன் என சொன்னார்.

உடனே அப்பா மேல் வீட்டு அங்கிள் உதவியுடன் மிஷன் ஆஸ்பிடலுக்கு போயிருக்கின்றார்கள்.

எங்கள் பெரியம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து எங்களோடிருப்பார்கள்  என கூறினான் பனிரெண்டு வயது அன்பு தனது எட்டு வயது தங்கை மலருக்கு போர்வையை சரி செய்தவாறே.

சரி சாப்பிட ஏதாவது இருக்கின்றதா?

இல்லை பெரியம்மா கொண்டு வருவாங்க.

எப்போ வருவாங்க?

தெரியல.

பள்ளிக்கூடம்?

பெரியம்மா அழச்சிட்டு போவாங்க.

இப்பவே மணி எழாகிவிட்டதே.... சரி நீங்க ரெண்டுபேரும் எழுந்து ஸ்கூலுக்கு ரெடியாகுங்கள், நான் இப்போ வந்துடறேன் என சொல்லி வெளியே சென்று, இருவருக்கும் அருகிலிருந்த நாயர்(வேற யார் கடையிருக்கும்?.....) கடையிலிருந்து, இட்லி,வடை, சாம்பார், சட்டினி வாங்கி வந்தேன்.

நான் சென்று திரும்பிய 40 நிமிடங்களில் அன்பும் மலரும்  குளித்து முடித்து,பள்ளி சீருடைகளை அணிந்துகொண்டு,புத்தக பைகளை தயார் நிலையாயில் வைத்துக்கொண்டு, வாசல் நோக்கி தங்கள் பெரியம்மாவின் வருகைக்காக காத்திருந்தனர்.

நான் வாங்கிவந்த காலை சிற்றுண்டியை முதலில்  பெரிய மனுஷன் தோரணையில் , உங்களுக்கு ஏன் இந்த சிரமம் இப்போ பெரியம்மா கொண்டு வருவாங்க என்று கூறி ஏற்க்க மறுத்தான், பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்த நேரம், பெரிம்மா வந்தார், வெறுங்கையோடு.

பெரியம்மாவை பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் ஓடிபோய் கட்டிக்கொண்டனர்.

என்னை பார்த்து ரொம்ப நன்றிப்பா பிள்ளைங்ககூட இருந்ததுக்கு.

சேதி கேட்டதுமே 7 மணி பஸ் புடிச்சி அரை மணிநேரத்தில வந்துடலாம்னு நினைச்சேன், ஆனால் பஸ் கொஞ்சம் லேட், வழியிலயும் ஓரிரு சாலை விபத்துக்கள் , அதான் இப்பதான் வரமுடிஞ்சது.

இதோ இப்பவே கொஞ்ச நேரத்துல பசங்களுக்கு ஏதாவது செய்றேன் என சொல்லி கிச்சன்  பக்கம் போக இருந்த பெரியம்மாவிடம் , 'நாங்க இப்ப தான் சாப்பிட்டோம், இந்த அண்ணன் தான் இட்லி கொண்டுவந்து கொடுத்தார்கள் என சொல்ல, பெரியம்மா எனக்கு மீண்டும் நன்றி சொன்னங்க.

சரிங்க நான் கிளம்பறேன் என  பிள்ளைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு , நேராக எங்கள் வீட்டிற்கு வந்தேன்.

நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் தயாராகி கல்லூரிக்கு சென்றுவிட்டேன்.

மாலை கல்லூரி விட்டதும் வழக்கமாக போகும் உடற்பயிற்சி கூடத்துக்கு போகாமல் வீட்டிற்கு போக தயாரானேன்.

அதை கண்ட என் சக ஜிம் மாணவர்கள் , 'என்ன ஜிம் வரலிய' என்றனர் .
அவர்களிடம் காலை நடந்தவற்றை கூறி, அவர்களை ஆஸ்பிடலில் சென்று பார்க்க வேண்டும் என கூறினேன்.

அதில் ஒரு நண்பர் சரி போய்ட்டுவா, ஏதேனும் தேவைபட்டால் என்னிடம் சொல் என கூறினார்.

நான் அந்த மிஷன் ஹாஸ்பிடல் நோக்கி என்னுடைய டூ வீலரில் புறப்பட்டேன்.

ஆஸ்பிடல் ரிசப்ப்ஷனில் காலையில் வந்தவர்களின் விலாசம் சொல்லி விசாரித்து அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு  நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

அப்போது, ஆஸ்பிடலின் பிரார்த்தனை மண்டபத்துக்கு அருகில் இருந்த ரத்த வங்கியில் அன்புவின் அப்பா அங்கிருந்த ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து, அவரிடம் சென்று,

ஹலோ அங்கிள் ஆண்டி எப்படி இருக்காங்க , டாக்டர் என்ன சொன்னாங்க என கேட்டேன்.

அதற்க்கு அவர் , ரொம்ப நன்றிப்பா, காலைல பிள்ளைங்கள நல்லா பாத்துகிட்டதாக அவங்க பெரியம்மா மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்தப்ப சொன்னாங்க  என்றார்.

நானோ, அதிருக்கட்டும் அங்கிள், ஆன்ட்டிக்கு என்னனு டாக்டர் சொல்லறாங்க, இப்ப எப்படி இருக்காங்க? என்றேன்.

காலைல ஸ்கேன் பண்ணப்ப வயற்றில  ஒரு கட்டி இருக்கின்றதகவும் அது கொஞ்சம் பெரிய சைஸ்ல இருப்பதாகவும், உடனே ஆபரேசன் பண்ணனும்னு சொன்னங்க, என அவர் சொல்ல , தயங்கியபடியே , பணம் ஏதாவது ..... என்று கேட்டதற்கு , அதெல்லாம் , ஏற்பாடு பண்ணிட்டேன் மற்றபடி , ஆபரேசன்க்கு முன்னாடி குறைந்த பட்ச்சம் இரண்டு  பாட்டில் ரத்தம் தேவைப்படும் அதை இந்த ரத்த வங்கியில் ரிசெர்வ் செய்ய சொல்லி டாக்டர் சீட்டு கொடுத்து அனுப்பினார்.

ஆனால்.... என்று கொஞ்சம் தழு தழுத்த குரலில் , இங்கே போதுமான இருப்பு இல்லை என்றும் , இந்த வகை ரத்த தானம்  செய்பவர்கள் யாரேனும் இவர்களின் பதிவேட்டில் இருக்கின்றார்களா என பார்த்ததில் ஒருவர் மாத்திரமே இருந்தார், அவரும் மூன்று நாட்களுக்கு முன்தான் ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி-ன் போது ரத்தம் கொடுத்தாராம், அவரே முன் வந்தாலும் இவர்கள் அவரிடமிருந்து எடுக்கக்கூடாதம்.

 மேலும் எவ்வளவு சீக்கிரம் ரத்தம் கிடைக்கின்றதோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யணும் இல்லாவிடில் நிலைமை மோசமாகிவிடும் என டாக்டர்கள் கூறினதாக   சொன்னார்.

நானும் அது என்ன வகை ரத்தம் என கேட்க்க, அவர் 'ஒ' நெகடிவ்  என்றார்.

என் ரத்த வகை எனக்கு  அன்று வரை தெரியாது என்றாலும், நான் ரத்தம் கொடுப்பதாக சொன்னேன் , அவரும் வேண்டாம் என எவ்வளவு கூறியும் நான் என் சம்மதத்தையும் விருப்பத்தையும் சொன்னேன், அவர் உங்க வீட்டில் ஏதாவது..... என்று தயங்கினார்.

அதற்க்கு நான் அதபத்தி யோசிக்காதீர்கள் வடநாட்டில் ராணுவத்தில் இருக்கும் என் அண்ணன் அவ்வப்போது ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் விபத்து நேரங்களில் அவர்கள்  ஒருவருக்கு ஒருவர் ரத்தம் வழங்கி நமது சக ராணுவ வீரர்கள் பலவீனமாகதபடி செய்யும் தருணங்களை  சொல்லும்போது எங்கள் வீட்டிலிருக்கும் அத்தனை பேரும்  அந்த செயலை போற்றி பாராட்டி இருக்கின்றோம்.

ரத்தத்தின்-உயிரின் அருமையை என்னைவிட எங்கள் வீட்டில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள், என கூறிக்கொண்டே அவரை ரத்த வங்கி ஊழியரிடம் என்னை அழைத்து செல்லும்படி கூறினேன்.

பெரிய தயக்கத்திற்கு  பின்னால் , என்னை அவர் அறிமுகம் செய்து, இவர் எங்க வீட்டு அருகில் இருக்கின்றார் , கல்லூரி மாணவர் என கூற , அவரிடம் என் சம்மதத்தை எழுத்து மூலமாக கொடுக்க படிவத்தை பூர்த்தி செய்யும் வேளையில், முதலில் உங்களின் ரத்த வகையை கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டும் எனகூறி, ஒரு சிறிய பரிசோதனை செய்துவிட்டு , உங்களுடையது, ஏபி பாசிடிவ், இவர்களுக்கு உங்கள் ரத்தம் பொருந்தாது என கூறினார்.

பெருத்த ஏமாற்றம், இருந்தும் பரவாயில்லை வேறு யாருக்காவது உதவட்டுமே என கூறி என் ரத்ததான விருப்பத்தை தெரிவித்தேன்.

அதுவரை ரத்ததானம் செய்திராத எனக்கு அது ஒரு புது அனுபவமாகவும் ஆன்ம திருப்தியாகவும் இருந்தது.

.எனினும் உடல்நலமில்லாமளிருக்கும் அந்த ஆண்ட்டிக்கு உதவமுடியவில்லையே என்ற மன வருத்தமும் இருந்தது.


இதற்கிடையில் அந்த அங்கிள் , சரி தம்பி நான் வார்டுக்கு செல்கிறேன் இப்போ டாக்டர் ரவுண்ட்ஸ் வரும் நேரம், நீங்க பத்திரமாக வீட்டுக்கு போங்க என சொல்லி கிளம்பினார்.


There are very specific ways in which blood types must be matched for a safe transfusion. See the chart below: 
Blood type chart
Group OO Blood Typediagram linking blood typesO Blood Type
A can donate red blood cells to A's and AB'sA Blood TypeA Blood Type
B can donate red blood cells to B's and AB'sB Blood TypeB Blood Type
Group AB can donate to other AB's but can receive from all othersAB Blood TypeAB Blood Type


ரத்தம் எடுக்கும் போது  அந்த ஊழியர் சொன்னார் உங்க  அங்கிள் கூட வேறு யாருக்காவது உதவட்டும் என்று ரத்தம் கொடுத்தார் என்று, இது அவரின் 32 வது ரத்த தானம் என்றொரு கூடுதல் தகவலையும் சொன்னார்.

ரத்தம் கொடுத்து முடித்தபின்னர் என்னை கொஞ்சம் நேரம் அங்கேயே அமர்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு குடிக்க கொஞ்சம் பழச்சாறு கலந்த பானத்தையும் கொடுத்தனர்.

ஓய்விலும் பழசாரிலும் மனம் ஒன்றவில்லை.

உடனே வண்டியை எடுத்துக்கொண்டு  ஜிம்முக்கு சென்று என் நண்பன் சசியிடம் விஷயத்தை சொல்லி அவனுக்கு தெரிதவர்கள் யாருக்காவது ஓ நெகடிவ் ரத்தம் இருக்கின்றதா என்றும் அவர்கள் தானம் செய்ய முன்வருவார்களா என்றும் விசாரித்தேன்.

கற்பனைக்கும் எட்டாத, கட்டுக்கதைகளுக்கும் கட்டுப்படாத ஒரு ஆச்சரியம் - அதிசயம்- ஆனந்தம் என்னை முற்றிலுமாக ஆட்கொண்டது சசி சொன்ன பதிலைக்கேட்டு.

"என் ரத்தமும் ஓ நெகடிவ் தான் , நானே கொடுக்கின்றேன் எப்போவேண்டும்" என்றான்.

மானசீகமாக இறைவனுக்கு   நன்றி தெரிவித்து விட்டு, கையோடு என் நண்பனை மருத்துவ மனை அழைத்து சென்றேன்.

வார்டில் ஆண்ட்டி படுத்து இருந்தார், அவரின் படுக்கையை சுற்றி அன்புவும் மலரும் அவர்களின் பெரியம்மாவும் இருந்தனர்.

அன்புவின் அப்பா கொஞ்சம் தள்ளியிருந்த  டாக்டரிடம் ஏதோ  பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசி முடியும் வரை காத்திருந்து, அவர் வந்தபின், டாக்டர் என்ன சொன்னார் என்று கூட கேட்க்காமல் ஆவல் மிகுதியில், அங்கிள், கடவுள் இருக்கின்றார்,  கவலைபடாதீர்கள்.

இவர் என் நண்பர் சசி , இவர் ரத்தம் கொடுக்க வந்திருக்கின்றார் என்றேன்.

அங்கிள் நினைத்திருப்பார் சசியின் ரத்தமும் பொருந்தாத பிரிவாயிருக்குமோ என.

அவரிடம்  சொன்னேன், சசியின் ரத்தமும் "ஓ நெகடிவ்" தான் என்று.

அதை கேட்ட அங்கிள் உட்பட அனைவர் முகத்திலும் பெரிய சந்தோசம் பளீசிட்டது.

நாளை மதியம் இரண்டு மணிக்கு ஆபரேஷன் என திட்டமிட்டிருக்கின்றனர் நீங்கள் ஒரு பதினோரு மணிக்கு வந்தால் சரியாக இருக்கும் என்றார்.

சசியும்  சரி நாளைக்கு சனிக்கிழமைதானே, கண்டிப்பாக வந்து விடுகின்றேன்  என சொல்லிவிட்டு சென்றார்.

நானும் கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

மறு நாள் காலை எனக்கு சென்னை  கல்லூரியில் நடைபெற்ற வங்கி பணிக்கான  எழுத்து தேர்வு இருந்ததால் ,பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்து பிடித்து சென்னை வந்துவிட்டேன்.

தேர்வு மையத்தில் என் உடலிருந்தாலும் மனம் என்னவோ மருத்துவ மனையிலேயே மையம் கொண்டிருந்தது.

தேர்வு முடிவு என்னவாயிருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள் - அதை பின்னர் சொல்கின்றேன்.

வீட்டிற்கு திரும்ப இரவு ஆகிவிட்டது.

மறு நாள் அன்புவின் வீட்டிற்கு சென்றேன் , ஆப்பரேஷன் நல்லபடி நடந்ததென்றும் அம்மா இப்போ வேறு ஒரு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லையெனவும், அப்பா அங்கேயே இருப்பதாகவும் அன்பு சொன்னான்.

நான் முதலாவதாக என் நண்பன் சசிக்கும் அடுத்ததாக கடவுளுக்கும் என் மனதிற்குள் நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

(நன்றி சொன்னதில் யாருக்கு முதலில் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- உங்களுக்கு இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்)
.
மறு நாள் திங்கள் கிழமை, வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று , முதலில்  நண்பன்  சசியிடம் போய்,

 "சசி ரொம்ப நன்றி, நீ ஒரு உயிரை காப்பாத்திட்ட , உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல, நீ என் நண்பன்னு சொல்ல்றதுகே ரொம்ப பெருமையாய் இருக்கு உன் உடம்பு கல்லு மாதிரி கடினமாக இருந்தாலும் (கல்லூரியில் நடைபெற்ற  போட்டியில் தொடர்ந்து மூன்றுமுறை ஆன் அழகன் பட்டம் வென்றவர்)  உன் மனசு ரொம்ப மென்மையானது” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்.

நான் சொன்னது எதுவும் புரியாதவர்போல், "கொஞ்சம் இரு , என்ன பேசற எனக்கு எதுவும் புரியல, நான் எப்போ ரத்தம் கொடுத்தேன்" என்றார்.

அவர் சொன்னது இப்போது எனக்கு புரியவில்லை.

“என்ன நீ ரத்தம் கொடுக்கவில்லையா? என்ன சொல்ற?”

துரித அவகாசத்திற்கு பின்னர் சசி சொன்னான்:  "நான் தான் உன்னைகுறித்து பெருமைபடவேண்டும்,எனக்கு அந்த அங்கிளை அறிமுகபடுத்தியதுக்கு".

நிதானமாக நண்பர் சொன்னார்: சனிக்கிழமை,பதினோரு மணிக்கு நான் ஆஸ்பிடல் சென்றேன், பிரார்த்தனை மண்டபத்தின் அருகில் அங்கிள் எனக்காக காத்திருந்தார்.  அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நான் தயார் என்றேன்.

அவர் சரி வாங்க ஒரு டீ குடிச்சிட்டு வந்துடலாம் என்று சொன்னார், நானோ வேண்டாம் அங்கிள்  , நான் வரும்போது தான் பால் குடிச்சிட்டு வந்தேன் என கூறினேன்.

இருந்தாலும் பரவாயில்லை என வற்புறுத்தி என்னை எதிரிலிருக்கும் ஒரு அசைவு உணவு விடுத்திக்கு அழைத்து சென்றார்.

சர்வரிடம், ஒரு டீ என்றார்.

நான் உங்களுக்கு? என்றேன்.

டீ சொல்லிவிட்டு, " ஆப் பிலேட் மட்டன் பிரியாணி,  ஒரு பிலேட் சிக்கன் சிக்க்ஷ்டி பைவ் , சேமிய , பாயா, ஆம்லெட், ஆரஞ்ச்  ஜூஸ் ... என்று இவர் சொல்ல , ஒருவேளை வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு வாங்கி செல்ல ஆர்டர் கொடுக்கின்றார் என நினைத்தேன்.

ஆனால் அவர் சொன்னார் : கொஞ்சம் சீக்கிரம் கொண்டாங்க ஆஸ்பிடல் போகணும் என்றார்.

என்ன இது , மனைவி ஆஸ்பிடலில் ஆபரேஷனுக்காக காத்திருக்கும் இந்த வேளையில், இவர் இத்தனையையும் ஆர்டர் பண்ணி சாப்பிடபோறதா சொல்றாரே என யோசித்துக்கொண்டிருக்கும்போதே , அவர் ஆர்டர் பண்ணின அத்தனையும் மேசைக்கு வந்தது.

சர்வரிடம் எல்லாவற்றையும் என்முன் வைக்கும்படி கூறினார், எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"என்னங்க இது , ஏன் எனக்கு" என கேட்டதற்கு, தம்பி சாப்பிடுங்க என்றார்.

நான் செய்யப்போகும் உபகாரத்திற்கு  கைமாறாக இதை செய்கின்றாரோ என ஒருகணம் அவரை கொஞ்சம் தாழ்வாக எடைபோட்டு விட்டேன். 

பிறகு ஒருவேளை ரத்தம் கொடுப்பதற்க்குமுன் பலம் கூட்ட இதை வாங்கிதருகிராரோ  எனவும் நினைக்க தோன்றியது.

அங்கிள், எனக்கு வேண்டாம், வாங்க ஆஸ்பிடல் போகலாம் நேரம் ஆகப்போகுது என்றேன்.

அவரோ, பரவயில்லதம்பி சாப்பிடுங்கோ என சொல்லி என்னை சாப்பிட வைத்தார்.

வேண்டாவெறுப்பாக சாப்பிட்டு முடித்த பிறகு, அங்கிள் அதற்க்கான பில்லை கட்டி வெளியே வந்தபிறகு, என்னை கட்டிப்பிடித்து, கண்கள் பணிக்க , " ரொம்ப நன்றிப்பா, முன்  பின் தெரியாத எங்களுக்கு பெரிய மனசோடு உதவிசெய்ய முன் வந்த உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல" என்றார்.

இருக்கட்டும் அங்கிள் அதுக்காக இதெல்லாம் எதுக்கு, சரி வாங்க ஆஸ்பிடல் போகலாம் என்றேன்.

அதற்க்கு அவர், நேற்று இரவு என் மனைவியின் நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி , உடனே எமர்ஜன்சியா அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்து எனக்கு தகவல் சொன்னார்கள்.

ரத்தம் கிடைக்காதே என்ன செய்வது என கேட்டதற்கு, வேறு ஆஸ்பிடலில் இருந்து ஒழுங்கு செய்திருப்பதாக சொன்னார்கள்.

ஏறக்குறைய 3 மணிநேரம் நடந்த அந்த அறுவை சிகிச்சையின்போது எந்த ரத்த கசிவு  இன்றியும் வேறு ரத்தம் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லாமல் நல்லபடியாக முடிந்திருக்கின்றது.

அவர் கூற கூற எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் , இவர்மேல் ரொம்ப மரியாதையும் உண்டானது.

பிறகு நான் அவருடன் சென்று மருத்துவரின் அனுமதியுடன் அவர் மனிவியை பார்த்து நலம் விசாரித்துவிட்டு என்னுடைய வாழ்த்துக்களையும் கூறிவிட்டு வந்தேன்.

அவருக்குதான்  எத்தனை பெரிய மனசு என்று பாராட்டினான்.

என் நண்பன் சொல்ல சொல்ல அந்த அங்கிள் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் என்னுள் பல மடங்கு அதிகரித்தது.


என் நண்பன் கேட்டான் அவர் பெயர் என்ன என்று.

நான் சொன்னேன் அவர் பெயர் தங்கமணி என்று.

அதற்க்கு என் நண்பன் சொன்னான் பொருத்தமான பெயர்.

ஆனால் இனி நான் அவரை தங்கமனி(தர்) என்றுதான் அழைப்பேன் என்றான்.

பின் குறிப்பு:

என் நண்பனுக்கு உணவு வாங்கி கொடுத்ததையோ அவர் பலபேரின் உயிரை காப்பாற்ற ரத்ததானம் செய்ததையோ அங்கிள் இன்றுவரை என்னிடம் சொன்னது கிடையாது.

இப்போது மகள் மலருடன் அப்பா அம்மா இருவரும் சுகமுடன் அமெரிக்காவில் இருப்பதாக அறிந்தேன்.

வாய்ப்பு இருக்கும்போது ரத்த தானம் செய்வோம்.

வாழ்வில் ஒருமுறையேனும் செய்வோம்.

சக மனிதரை வாழவைப்போம்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

14 comments:

 1. சமூதாயத்திற்கு தேவையான நல்ல பதிவு. நண்பர் சசியை எனக்கும் நல்ல பழக்கம் அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. விசு,

   உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி, நமது நண்பர் சசியை நினைவில் வைத்திருப்பதிலும் மிக்க மகிழ்ச்சி.

   நட்புடன்,

   கோ.

   Delete
 2. வாய்ப்பு இருக்கும்போது ரத்த தானம் செய்வோம்.

  வாழ்வில் ஒருமுறையேனும் செய்வோம்.

  சக மனிதரை வாழவைப்போம்.

  ReplyDelete
  Replies
  1. திரு ஜெயகுமார் அவர்களுக்கு,

   சிறந்ததை பாராட்டும் கரந்தைக்கு மிக்க நன்றி.

   கோ.

   Delete
 3. pathivin kadaisi varikal arumai sir.
  thodarungal.
  ---

  ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

  இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.

  ---

  ReplyDelete
  Replies
  1. மகேஷ்,

   வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

   கோ.

   Delete
 4. சக மனிதரை வாழவைப்போம்.
  தங்கமான பகிர்வுகள்..

  ReplyDelete
  Replies
  1. ராஜ ராஜேஸ்வரி,

   பதிவினை வரிவிடாமல் வாசித்து உங்கள் கருத்தை தெரிவித்த,சகோதரி ராஜேஸ்வரிக்கு நன்றிகள் பல.

   அன்புடன்.
   கோ.

   Delete
 5. தங்கமான மணிதர்கலை பற்றீய பதிவு. ஏர்க்கனவே படித்திருந்தாலும் புதிதாக படிப்பது போன்றதொரு ஃபீல்.
  நல்ல எழுத்து நடை சார்.

  ReplyDelete
 6. மகேஷ்,

  வருகைக்கு மிக்க நன்றி.

  மீண்டும் படித்தாலும் அதை எனக்கு தெரிவித்து மகிழும் மகேஷுக்கு மீண்டும் நன்றிகள்.

  வேலை தேடும் படலம் எப்படி i இருக்கின்றது?

  கோ

  ReplyDelete
 7. வணக்கம் அரசே,
  ஏனோ மனம் கனத்துக்கிடக்கிறது,
  நல்ல நண்பர் ஒருவர் நமக்கு தெரியும் என்ற மகிழ்ச்சியையும் தாண்டி,
  தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை,
  ஏதேனும் நான் தேவையில்லாத வார்த்தைகள் ,,,,,,,,,,,,,,,,
  வருந்துகிறேன்,
  நல்ல பதிவு,
  தங்கள் அங்கிள் தங்கமான மனிதர் தான், தங்கள் நண்பரும்,
  எத்துணை முறை இதனைப் படித்தேன் என தெரியவில்லை, கசியும் கண்களுடன்,
  பரவாயில்லை என் கண் சுத்தமாகனம் என்று நினைத்தீருப்பீரோ,,,,,,,,,
  நன்றி அரசே

  ReplyDelete

 8. இரக்கம் நிறைந்த உங்கள் மனதில் இந்த பதிவு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மகிழ்ந்தாலும் உள்ளம் கனக்கும் அளவிற்கு எழுதி விட்டதை எண்ணி என் மனமும் சுருதி பிறழ்கின்றது.


  என்னையும் இந்த உலகத்துல நல்ல்ல்ல்ல்லவன்னு சொல்ல ஒருவர் உள்ளதை எண்ணி என் உள்ளம் சிலிர்க்கின்றது.


  பலமுறை இந்த பதிவை நீங்கள் படித்து சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் இந்த உலகத்தில் மனித நேயமிக்க மனிதர்களின் பாதங்களுக்கு நீங்கள் செலுத்திய புஷ்பாஞ்சலியாகவே கருதுகின்றேன்.

  நன்றி

  கோ.

  ReplyDelete
 9. அரசருக்கு வணக்கம்,
  நான் எங்கப்பா உங்களை நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்வர்னு சொன்னேன்,
  தாங்கள் பசுத்தோல் போர்த்தாத அரசர் அல்லவா?

  நன்றி அரசே

  ReplyDelete
  Replies
  1. அதானே பார்த்தேன், நம்மைப்போய் யாராவது அப்படி சொல்ல முடியுமா? ம்ம்ம்ம்ம்..

   கோ

   Delete