பின்பற்றுபவர்கள்

சனி, 25 அக்டோபர், 2014

போனா வராது.... ஆனா....வரும்

 தலைப்பை இன்னொருமுறை வாசித்து பார்தால், அதன் தொடர்புடைய பல விஷயங்களை நாம் பட்டியல் இடலாம்( அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப.)


எனினும் பொதுவாக நடைமுறை சாத்திய கூறுகளை அடிப்படையாக கொண்டு இரண்டு விஷயங்களை நாம் கண்டிப்பாக சொல்லலாம் - "போனால் வராது" என்று.

அவற்றுள் ஒன்றுஉயிர்.

இன்னொன்று காலம்.

முதலில் சொன்னது கூட சில சமயங்களில் சிலருடைய வாழ்கையில் நடந்ததுண்டு.

பல செய்திகளை நாம் நினைவு கூற முடியும்.

அதாவது, மரித்துப்போன ஒருவர் மீண்டும் உயிர்  பெற்ற நிகழ்சிகளை நாம் செய்தி தாள்களில் வாசித்திருப்போம்.

உதாரணத்துக்கு:

ஸ்டீவென் தோர்ப்  எனும் 17 வயது இளைஞன் மரித்துபோய்விட்டான்  என  நான்கு டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டு , அவன் உடலை எடுத்து போகும்படி அவனது பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனாலும் மகனில் மரணத்தை ஏற்றுகொள்ளும் மனநிலமையில் இல்லாத அவனது தந்தை , அந்த மரித்த உடலுக்கு செயற்கை சுவாச இயந்திரத்தை பொருத்தும்படி செய்த வற்புறுத்தலின் பேரில் அந்த உடலுக்கு செயற்கை சுவாச எந்திரம் பொருத்தப்பட்டது.

உணவோ மருந்தோ எதுவும் அங்கே அவசியமற்றதானது.

சரியாக 4 வாரங்களுக்கு பின்னர் அதே டாக்டர் ஆச்சரிய படும்வண்ணம் அந்த இளைஞன் மீண்டும் உயிர் பெற்று வீட்டுக்கு சென்ற உண்மை சம்பவம் இங்கிலாந்தில் காவன்ற்றி எனும் மாகணத்தில் நடந்துள்ளது.(போனால் வருமா?... வந்தது.)-- இணைய  தள செய்தி.

அதேபோல Fabrice  Muamba  எனும் 24 வயது கால் பந்தாட்ட வீரர் ஆயிரகணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மயங்கி விழுந்து மரித்துபோனார் (??), ஏறக்குறைய 77 நிமிடங்கள் அவரது இதயம் இயங்க மறுத்தது, டாக்டர்களும் மறுத்தனர் - அவர் உயிரோடிருக்கின்றார்   என சொல்வதற்கு.

ஆனால் நடந்தது என்ன ?  78வது நிமிடம் மீண்டும் அவர் உயிர் பெற்றார்- அவரின் இதயம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது  - உலகறிந்த உண்மை.

இப்படி, போனால் வராது எனும் கூற்றுக்கு உயிர் கொஞ்சம் விதிவிலக்காவதுண்டு அவ்வப்போது.

ஆனால் அடுத்த விஷயமான காலம் - அதாவது நேரம் , இது போனால் திரும்புமா?

ஒருகாலும் இது நடக்காது என்பதுதான் நம் எல்லோரின் ஏகோபித்த கூக்குரலாக இருக்கும்- உண்மைதான்.

அனால் .........

ஐரோப்பிய , மற்றும் அமெரிக்க நாடுகளில் போனாலும் வரும் இந்த காலம் - நேரம்.

ஆச்சரியமாக இருக்கின்றதா?

எனக்கும் இங்கே வந்த புதிதில் பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.

1895 ல் NEWZELAND நாட்டை சேர்ந்த  ஜார்ஜ் ஹட்சன் எனும் வான சாஸ்திர விஞ்ஞானி  தனது பொழுது போக்கான  பூச்சிகளை  சேகரிப்பதும் அவற்றை ஆராய்ச்சி செய்வதற்குமான நேரம் குறைவாக இருப்பதாக கருதி அக்டோபர் மாதத்தில் - கோடை காலம் விடுமுறை பெரும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி திருப்பி வைத்துக்கொண்டால், நமக்கு இன்னும் ஒருமணிநேரம் சூரிய வெளிச்சம் கிடைக்குமே  அதில் இன்னும் கொஞ்சம் நேரம் தனது பொழுதுபோக்கான  இந்த    பூச்சிகளை சேகரிப்பதில் ஈடுபடலாமே என நினைத்து இந்த  தமது என்ணத்தை அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் முன்வைத்தார்.

அதிலே பூச்சிகளை நான் பிடிப்பதுபோல் அவரவர் தங்களுக்கு தேவையான ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடலாம் , அதனால் உற்பத்தி பெருக்கமும் நாட்டின் வளமும் பெருகுமே என்று தனது முன்மொழிவிற்கு இந்த கோணத்திலும் விளக்கம் சொன்னார்.

இந்த யோசனை ஆட்சியாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

நாடைவில் இந்த வழக்கம் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் கவர்ந்து இப்போது நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.


அவ்வகையில் அக்டோபர் மாத கடைசி ஞாயிற்று  கிழமையான நாளை விடியற்காலை 2.00 மணிக்கு ஐரோப்பாவில் உள்ள அனைத்து கடிகாரங்களும் மீண்டும் அதிகாலை ஒரு மணியைதான் காட்டும்.

வழக்கமாக காலை 6.00 மணிக்கு துகிலெழும்  நான் நாளை  7.00 மணிக்கு எழுந்தாலும் என் கடிகாரம் 6.00 மணி என்று தான் காட்டும்.( இன்று இரவே எங்கள் கடிகாரங்களை நாங்கள் ஒரு மணி நேரம் பின்னுக்கு தள்ளி தயார் நிலையில் வைத்துவிடுவோம்.

மனிதன் நினைத்தால் .....காலத்தையும் கட்டுக்குள் வைத்துகொள்ளலாம்வெல்லலாம்.     சரிதானே?

நன்றி

மீண்டும் (சி)ந்திப்போம் .

கோ 





























8 கருத்துகள்:

  1. சார்! சுவையான /தெரியாத புதிய தகவல்!
    ஆச்சரியமாக இருக்கிறது!

    மீண்டும் எப்போது ஒரு மணி நேரம் முண்ணுக்கு
    தள்ளி வைப்பீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கு மிக்க நன்றி,

      மார்ச் 2015 மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை விடியற்காலை 1 மணிக்கு மீண்டும் நேரம் முன்னுக்கு தள்ளி வைக்கப்படும்.

      ஞாபகப்படுத்தனுமா?

      கோ

      நீக்கு
  2. வணக்கம் கொ,
    ம்ம் காலத்தையும் கட்டுக்குள் வைக்கலாம்,
    சரி இந்த ஆண்டும் கடிகாரம் முள் முன் வரும், நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன்,
    அக்டோபர் மாதம் தானே,,,,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மாறமாட்டேன்,
    நிறைய மாறி,
    நிறைய பட்டு,
    ம்ம்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கடிகார முள் மாற்றி விட்டீர்களா அரசே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மாற்றிவிட்டோம்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்மா .

      கோ

      நீக்கு