பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கமர்கட்டு - செம மார்கட்டு

 ஞானஸ்நானம்!!!

நண்பர்களே,

இங்கே  அலுவலக சக ஊழியர்கள், தங்களது விடுமுறையில் எங்கேனும் வெளி ஊர்களுக்கோ அல்லது வெளி நாடுகளுக்கோ   சென்று மீண்டும் வேலைக்கு திரும்பும் அன்று
தாங்கள் சென்றிருந்த ஊரிலிருந்து  அல்லது நாட்டிலிருந்து சில இனிப்பு , அல்லது பிஸ்கட், சாக்லேட், போன்ற உணவு பொருட்களை வாங்கிவந்து அதை அலுவலக கம்யூனிட்டி அறையில் அது எங்கிருந்து வாங்கப்பட்டது, அதில் என்னென்ன மூலபொருட்கள் கலந்திருக்கின்றன(ஒருசிலருக்கு ஒரு சில பொருட்கள் ஒவ்வாதவைகளாக - அலர்ஜி இருக்க கூடும் என்பதால்) என்ற குறிப்புடன் "ப்ளீஸ் ஹெல்ப் யுவர்செல்ப்" என எழுதி மேசை மீது வைத்து விடுவார்கள்.

எங்கள் அலுவலக அமைப்பு: அந்த தளத்தில் சுமார் 12 பிரிவுகள் (டிபார்ட்மெண்ட்), இரண்டு மூலைகளில் இரண்டு கம்யூனிட்டி அறைகள்.

ஊருக்கு போய் வந்தவர் எந்த பக்கம்  இருக்கும் பிரிவில் வேலை செய்கின்றாரோ  அந்த பக்கம் இருக்கும் அறையில் அவர் கொண்டு வந்த உணவு பொருளை வைப்பார்.

அந்த தளத்தில் உள்ள  யார் வேண்டுமானாலும் அதை எடுத்து சாப்பிடலாம், வேறு தளத்தில் உள்ளவர்கள் இந்த தளத்திற்கு வந்தாலும் அவர்களும் அதை எடுத்து சாப்பிடலாம். 

அதேபோலத்தான் எங்கள் தளத்திலிருந்து வேறு எந்த தளத்திற்கு சென்றாலும் அங்கே இதுபோன்ற உணவு பொருட்கள் இருந்தால் அதை நாமும் எடுத்து சுவைக்கலாம்.

இது போன்ற ஒரு பழக்கம் நம்ம ஊர்களிலும் இருக்குதா என்று தெரியவில்லை.

ஒருவேளை கொஞ்சம் வேண்டப்பட்டவர்கள் அல்லது மேனேஜர்  , சூப்ரவைசர் போன்றவர்களுக்கு  மட்டுமே கொண்டுவந்து கொடுக்கும்  வழக்கம் இருந்திருக்கலாம்.

ஆனால் இந்தியாவில் நாங்கள் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில் ஒரு நண்பர் - சர்விஸ் எஞ்சினியர் - தமது நிச்சயதார்த்தத்துக்கு முன் திருப்பதி சென்று இருந்தார்.

அங்கிருந்து திரும்பும்போது உலகபுகழ் பெற்ற  திருப்பதி லட்டு வாங்கிவந்திருந்தார்.


அதை  ஒரு தட்டில் உடைத்து வைத்து அலுவலக ரிசப்ஷனிஸ்ட் டெஸ்கில் வைத்துவிட்டு எல்லோரையும் எடுத்துகொள்ளும்படி கூறிவிட்டு அன்று அவருக்கு வெளியில் வேலை இருந்ததால் சென்றுவிட்டார்.

அலுவலகத்தில் இருந்த நாங்கள் எல்லோரும் மிகவும் ருசித்து அந்த நெய் மணக்கும் லட்டை சாப்பிட்டோம்.

லட்டு தீர்ந்துவிட்டிருந்தாலும்   அந்த தட்டில் அதன் சுவடுகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்தது.

இந்த நேரம் பார்த்து விற்பனை அலுவலர் மார்த்தாண்டம்("கல்யாணபரிசு")  உள்ளே வந்தார். வந்தவரின் கண்ணில் முதலில் தென்பட்டது, லட்டின் குழந்தைகளான பூந்தியின் மிச்சங்கள்.

என்ன இது என்று கேட்க்க, ரிசப்ஷனிஸ்ட் விவரம் சொல்ல, எனக்கு எங்கே என கேட்டார் மார்த்தாண்டம்.

அதற்க்கு , "அடடே எல்லாம் தீர்ந்து விட்டதே" என மற்றொரு நண்பர் சொல்ல, அதெப்படி எனக்கு கொடுக்காமல் நீங்கள் மட்டும் சாப்பிடமுடியும் என சொல்லிக்கொண்டே, லட்டு வாங்கிவந்தவர் விட்டுச்சென்ற அவரது பையை ஆராய்ந்தபோது அதில் இன்னும் மூன்று லட்டுகள் இருந்ததை கண்டு அவற்றை வெளியில் கொண்டுவந்து அதே தட்டில் உடைத்து வைத்து எங்களையும் சாப்பிடசொல்லி அவரும் சுவைத்து சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து வெளியில் சென்றுவிட்டார்.

இந்த லட்டு பிரசாதவிநியோகம் காலை 10 லிருந்து பதினோரு மணிக்குள்  நடந்திருக்கும்.

சுமார் மூன்று மணியளவில் அலுவலகம் திரும்பிய சர்விஸ் எஞ்சினியர் , ஏற்கனவே  திட்டமிட்டபடி தமது ஊருக்கு செல்வதற்காக அவசர அவசரமாக தமது பையை எடுத்துகொண்டு புறப்பட தயாராகும்போது, பையின் பாரம் வெகுவாக குறைந்திருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

பையில் வைக்கபட்டிருந்த லட்டுகளை காணவில்லை 

பதட்டத்தில் அங்குமிங்குமாக தேடி பிறகு ரிசப்ஷனிஸ்ட் கிட்ட வந்து பரபரப்புடன் கேட்டிருக்கின்றார்.
  
மீண்டும் தட்டில் லட்டு வைத்து பகிர்ந்துண்டதை ரிசப்ஷனிஸ்ட் சொல்ல , கடுப்பாகிப்போன நண்பர் யார் இப்படி செய்தது, இதை எங்கள் வீட்டுக்கும் எங்கள் சம்மந்தி வீட்டுக்கும் வாங்கி வைத்திருந்த கோயில் பிரசாதம் இதைபோய் இப்படி எடுத்து சாப்பிட்டு இருக்கீங்களே என மிகவும் வருத்தமாக , கோபமாக சொல்லிவிட்டு வேகமாக வெளியே புறப்பட்டு செல்ல இருந்தவரின் முன்னால் நம்ம மார்த்தாண்டம் வந்து நிற்க எஞ்சினியர்  கொஞ்சம் கடுப்புடன்,  "என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?"  

"என்ன பண்ணிட்டேன்?"

"ஊருக்கு கொண்டுபோக வைத்திருந்த லட்டை எடுத்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு தீர்த்துட்டீன்களே?,  எவ்வளவு நீளமான வரிசையில் கால் கடுக்க நின்று இதை வாங்கிவந்தேன் தெரியமா அதுவும் ஒருத்தருக்கு ரெண்டுக்கு மேல கிடியாதுன்னு சொன்னாங்க நான் எப்படியோ கெஞ்சி கூத்தாடி இவற்றை வாங்கிவந்திருந்தேன் இத  போய் ...இப்படி .."

ஆமாம் அது எங்களுக்குத்தானே வாங்கிவந்தீங்க?

உங்களுக்கு இரண்டும் எங்க வீட்டுக்கு மூன்றுமாக வாங்கிவந்திருந்தேன். இப்போ வீட்டுக்கு கொண்டுபோக ஒன்னுமில்லையே?

உடனே தனது தவறை உணர்ந்த மார்த்தாண்டம் எஞ்சினியரிடம் மன்னிப்புகேட்டதோடு அவரை தமது பைக்கில் அமரவைத்து அந்த நகிரிலேயே மிகமும் பிரசித்திபெற்ற இனிப்புகடைக்கு அழைத்து சென்று பலவிதமான இனிப்புகளை கிலோ கணக்கில் வாங்கி கொடுத்து அவரை பஸ் ஏற்றி வழி அனுப்பிவிட்டு வந்திருக்கின்றார்.

என்ன இருந்தாலும் திருப்பதி லட்டுக்கு இணையாக வேறு எந்த லட்டு இருக்க முடியும்?

 அந்த நிகழ்ச்சியை  அவ்வப்போது எங்கள் அலுவலகத்தில் கொண்டு வந்து வைக்கப்படும் இனிப்புகளை பார்க்கும்போது நினைத்து மனதுக்குள் சிரிப்பதுண்டு.

அதேபோல கடந்த முறை நான் இந்தியாவிலிருந்து விடுப்பு முடித்து வரும்போது எங்களுக்கு வேண்டிய  லட்டு, ஜிலேபி, பால் கோவா, பாதுஷா(என் பேவரிட்), மிக்சர் போன்றவற்றை வாங்கி வந்தேன்.

அலுவலகத்துக்கு என்று பிரத்தியேகமாக எதுவும் வாங்கவில்லை , ஏனென்றால் நம்ம ஊர் பலகாரம் எதை இவர்களுக்காக வாங்குவது ?  இங்கேயே வந்து ஏதேனும் சாக்லட் வாங்கி கொண்டுபோகலாம் என்று நினைத்து  பிரத்தியேகமாக எதுவும் வாங்கவில்லை.

ஆனால் அலுவலகம் செல்லும் நாளுக்கு முன் கடைக்கு போக முடியாததால்   ஒன்றையும் வாங்கவில்லை, எனினும் ஏதேனும் கொண்டுபோனால்தானே நன்றாக இருக்கும் என யோசித்தபோது, ஊரில் வாங்கிய இரண்டு கமர்கட் பேக்கட் இருந்தது நினைவுக்கு வர , சரி இதை கொண்டுபோகலாம் என முடிவு செய்து எனது அலுவலக பையில் அவற்றை வைத்தேன்.

அதை அலுவலக கம்யூனிட்டி அறையில் வைத்து அதன் அருகில் " இந்தியன் ஸ்வீட் வித் , கோகனட், ஜாக்ரி , ஸ்பைஸ் அண்ட் லவ். - ப்ளீஸ் ஹெல்ப் யுவர்செல்ப்" என எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

அதை எடுத்து சுவைத்தவர்கள் என்னிடம் வந்து அது என்ன  .. என கேட்க ஆரம்பித்தவுடன்,  ""கடவுளே அதுல கல்லோ  மண்ணோ, முடியோ.. இருந்திருக்ககூடாது "என மனசுக்கும் வேண்டியபடி, என்ன என்று கேட்டேன்.

"ஆஹா இந்த ஸ்வீட் ரொம்ப நல்ல இருக்கே , இதுக்கு என்ன பெயர் ரொம்ப க்யூட்டா டேஸ்ட்டா இருக்கே" என்றவுடன், என்ன திடீர்னு இப்படி பெயர் கேட்டுட்டாங்க, ஏதேனும் அவங்க வாயில நுழையரமாதிரி கவர்ச்சிகரமா ஏதேனும் சொல்லணுமே அதுவும் ரொம்ப யோசிக்காம சட்டுன்னு சொன்னாதானே நம்புவாங்க என்று நினைத்து 

"திஸ் இஸ் கால்ட்.....  கேமரன் கேட் (CAMERON - KATE) .வெரி பேமஸ் இன் இந்தியா"



இந்த ரெண்டு பெயர்களும் இங்கே கொஞ்சம்  பிரபலம் என்பதால் 'இரண்டையும் சேர்த்து இந்த உருண்டைக்கு' சட்டென சூட்டிவிட்டேன்.

"கேமரன் கேட்..???!!!!"

" ஓ ... வெரி ஸ்வீட், தேங்க்   யூ பார் திஸ் லவ்லி கேமரன் கேட்"

என பாராட்டி விட்டு சென்றனர்.

 "யூ ஆர் மோஸ்ட் வெல்கம்" - இது நான்.

எனக்கு இந்த குளிரிலும் (மைனஸ் 3 டிகிரி) கொஞ்சம் வேர்த்தது.

இது நடந்து பல மாதங்கள் ஆனபோதும் இப்பவும் ஒரு சிலர் என்னிடம் "அடுத்து எப்போ இந்தியா செல்வீர்கள், வி லைக் தட் கேமரன் கேட் "  என சொல்லும்போது நம்ம ஊர் கமரகட்டுக்கு வந்த வாழ்வை- மௌசை  எண்ணி உள்ளுக்குள் சிரித்துகொள்வேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.





11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனபால்,

      பாவம் அந்த நண்பர், எனினும் திருப்தி லட்டு யாருக்கு என்று முன்னமே தீர்மானிக்கப்பட்டு அதன் திரு நெற்றியில் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்கு தானே போய் சேரும். அவ்வகையில் அந்த லட்டு நண்பரின் குடும்பத்துக்கு கொடுத்து வைக்கவில்லை போலும்.

      ஒருவேளை மீறி சாப்பிட்டிருந்தால் தெய்வ குத்தம் ஆகியிருக்குமோ?

      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. நண்பரே! அடடா! அதானா, இங்கே வந்த உங்கள் அவ்வூர் நண்பர்கள், உங்கள் ஊர் ஆட்கள் இங்கே வந்து இங்கு கேமரன் கேட் என்று கேட்க, கடை ஆட்கள் திரு திருவென முழிக்க.....அவர்கள் பாவம் ஏமாந்து போனார்களே நண்பரே! ஹஹஹ ம்ம் இப்போது தெரிந்து போனது....நண்பர் "கோ" தான் இதற்கு காரணம் என்று...இப்போது தெரிந்து விட்டதால், இனி நாங்கள் கடைக்காரர்களுக்குச் சொல்லி ஒரு போர்ட் வைக்கச் சொல்லி விடுகின்றோம் ...இங்கு கேமரான் கேத் (என்று "கோ" பெயர் சூட்டிய) - கமர் கட் கிடைக்கும் என்று.....ஹஹஹாஹ்.....

    நல்ல பதிவு! இங்கெல்லாம் யாருக்கு இப்படி வாங்கி வருகின்றார்கள் உறவினர்களுக்கு மட்டும் ஃபாரின் சாக்கலேட்டுகள் , (உறவினர்களுக்கு கொடுக்க என்று சிறு சிறு ஜெம்ஸ் போல....டெக்கான் மிட்டாய் போல இப்படித்தான்) வாங்கி வருவார்கள்....ஹஹ் இப்போதே எல்லாமே இங்கு கிடைக்கின்றன....ஆஃபீஸுக்கு ம்ம்ம் ஏதேனும் ஃப்ரென்ட்ஸ் கு வாங்கி வருவார்கள். ஆனால் நீங்கள் சொல்லுவது அங்குதான் இங்கெல்லாம் இல்லை பொதுவாக வைப்பது என்பதெல்லாம்...

    பதிலளிநீக்கு
  3. ஹா...ஹா.....ஹா...

    ஆனாலும் கமர்கட்டுக்கு ஈடு, இணை ஏது?

    எந்த நாட்டில் பணியிலிருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு,

      கமர்கட்டின் சுவை அறிந்த உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க அநன்றி.

      "எந்த தேசம் எந்தன் தேசம்" மற்றும் "பொங்கலோ பொங்கல்" வாசியுங்களேன், ஒருவேளை உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்ககூடும்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நட்புடன்.

      கோ

      நீக்கு
  4. சர்விஸ் எஞ்சினியர் பாவம் சார்:-)

    திருப்பதி லட்டு எவ்வல்வுதான் சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது சார்.
    ஆனால் முன்பு போல சுவை இல்லை என்பது ஒரு வருத்தத்திர்க்குரிய விஷயம்.
    ஒரு காலத்தில் பத்துருபாயாக இருந்த லட்டு இப்போது 25 ரூபாய்க்கு விர்க்கபடுகிரது.
    லட்டு சைசிலும் சுவையிலும் முன்பு போல் கிடையாது சார்:-)

    ***

    அவங்க வாயில நுழையரமாதிரி கவர்ச்சிகரமா ஏதேனும் சொல்லணுமே அதுவும் ரொம்ப யோசிக்காம சட்டுன்னு சொன்னாதானே நம்புவாங்க என்று நினைத்து
    "திஸ் இஸ் கால்ட்..... கேமரன் கேட்///

    ஹாஹாஹா
    பதிவை ரசித்தேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி.

      சர்வீஸ் எஞ்சினியர் பாவம் தான் எனினும் யாருக்கு குடுப்பனை இருக்குதோ அவங்களுக்கு தானே லட்டு போய் சேரும்?

      இப்போது லட்டின் அளவும் ருசியும் தரமும் கொஞ்சம் குறைந்துவிட்டது என நீங்கள் சொல்வதை கேட்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கின்றது.

      நன்றி

      கோ

      நீக்கு
  5. கமர்கட்டும் முன்பு போல் இல்லை. இருந்தாலும் சுவைதான்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு மிக்க நன்றி

    எந்த பொருளும் அதன் முந்தய தன்மையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழந்து வருவதை எண்ணி வருத்தமே.

    பழமையை மீட்க்க நீங்கள் தான்(அரசு) கொஞ்சம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நான் வெறும் கோ தான் நீங்கள் மதியுள்ள கோ .

    மற்ற பதிவுகளையும் கொஞ்சம் விமர்சியுங்களேன்.

    கோ

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அரசே,
    எனக்கும் கமர்கட் மிகவும் பிடிக்கும்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத்தான் பிடிக்காது.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு