பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

சமூகத்தின் சாயல்

என்ன ?

Image result for picture of a society

இசை கலைஞன் என்றறிந்து:

வீணையை பரிசளித்தது
வியந்துபோனேன்
விரல்களை பறித்துக்கொண்டது
பதறிப்போனேன் 

கவிஞன் என்றறிந்து:

எதுகையை எமக்களித்தது
எக்காளமிட்டேன்
மோனையை முறித்துப்போட்டது
முடங்கிப்போனேன்

பயணி என்றறிந்து:

படகினை கொடுத்தது(ம்)
பரவசமானேன்
துடுப்பினை துண்டித்துப்போட்டது
துடித்துப்போனேன்

பசி என்றறிந்து:

இலை எமக்காய் விரித்துப்போட்டது
இளகிப்போனேன்
விருந்தினை அது சுவைத்தது
இடிந்துப்போனேன்

தாகம் என்றறிந்து:

நீரூற்றை காட்டியது 
பருகச்சென்றேன்
குரல்வளையை நெருக்கிக்கொண்டது
குமுறிப்போனேன்

தெளிவு வேண்டுமே:

போதிமரம் புத்திபுகட்டியது
சமூகத்து சாயல் எதுவென்று.

அது:

"மடியினில் மல்லிகைக்கூடை
மனதினில் கருவாட்டு வாடை" என்று

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      சமூகத்தை பாராட்டியமைக்கு மிக்க நன்றி

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. போதிமரம் புத்திபுகட்டியது
    சமூகத்து சாயல் எதுவென்று.

    அது:

    "மடியினில் மல்லிகைக்கூடை
    மனதினில் கருவாட்டு வாடை" என்று//

    மிக மிக அருமையான வரிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

    தங்கள் சமூகம் வந்த எந்தன் சமூகத்தை பாராட்டிய உங்கள் சமூகத்துக்கு மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அரசே,
    சமூகத்தைக் காலம் தாழ்ந்து கண்டு கொண்டிடர்கள் போலும்,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு