பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நடந்தது என்ன - 3

துப்பு துலங்கியது !!

தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க இங்கே  சொடுக்கவும்.


ஐந்தாம் தளத்தில்  தான் துப்புரவு செய்ய வந்தபோது சாராவும் சோபியாவும் ஒன்றாக(!!??) இருந்ததினால் நான் மற்ற டேபிள்களை சுத்தம் செய்துவிட்டு அவர்கள் தட்டு டம்பளர்,கோப்பைகளை ஐந்தாம் தளத்து டிஷ் வாஷரில் போட்டு ஆன் செய்துவிட்டு திரும்பும்போது சோபியாமட்டும் தனியாக இருந்ததால் நான் சோபியாவை......
ஏழாவது மாடிக்கு .....ம்ம்ம்ம்ம்  சொல்லு என்ன ஆச்சு...  ஏழாவது மாடியில் தனி அறையில் இருந்த  அந்த டிஷ்வாஷரில் வைத்துவிட்டு அதை ஆன் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன் என சொல்லி முடிப்பதற்குள்,,

Image result for picture of a opened dishwasher with dishes

அந்த இடத்திற்கு சாரா பதட்டத்துடன் ஓடி வந்து சோபியாவை கட்டி அணைத்தவாறே எல்லோர் எதிரிலேயே உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு துப்புரவு தொழிலாளிக்கும்(!!) எஸ்ட்டேட் மேனேஜருக்கும் நன்றி சொல்லிவிட்டு தொடர்ந்து அவர் பேசுகையி,"" நானும் சோபியாவும் கடந்த இருபத்தி ஒரு ஆண்டாக இணைபிரியாமல் இருக்கின்றோம்.

 என்னுடைய பதினெட்டாவதுபிறந்த நாளன்று என்னுடைய அம்மா - (கடந்த வருடம் புற்று நோயினால் இறந்து விட்டார்கள்)எனக்கு கொடுத்த பரிசு பொருட்களில் இந்த காபி மக்கும்(MUG) ஒன்று. இதிலுள்ள பெண்ணின் உருவத்தை என் அம்மாவே பெயிண்ட் செய்து எனக்கு முன் பிறந்து தனது 6 ஆவது வயதில் ஒரு ரயில் விபத்தில் உயிரிழந்த என் அக்கா சோபியாவின்  பெயரை இந்த பெண்ணுக்கு சூட்டி கொடுத்தது.

 இந்த விஷயம் அலுவலகத்தில் சாராவை அறிந்த சிலருக்கு நன்றாக தெரியும் ஆனால் எஸ்ட்டேட் மேனேஜர் புதியவர் என்பதால் சாரா அவருக்காக மீண்டும் சொல்லவேண்டி இருந்தது.

ஆண்டுகள் பல ஆனபோதும் இன்னமும் இதை என் சகோதரியின் நினைவாகவும் என் அம்மாவின் நினைவாகவும் வைத்திருக்கின்றேன்.

Image result for picture of a mug with girl's painting on

என சொல்ல எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி.

அது சரி இந்த போலீசு ஆம்புலன்சு போலீஸ் வண்டிகள் எல்லாம் உங்கள் அலுவலக வளாகத்தில் இருந்ததே அதற்க்கு என்ன காரணம்?

ஒ....  அதுவா நான் ஏற்கனவே சொன்னேனே, இன்று காலை இரண்டு பெரிய  வழக்குகள் எங்கள் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வருகின்றது என்று அதற்காக போடப்பட்ட பந்தோ பஸ்த்தாம்.

அதுவும் அந்த போலீஸ் சோதனை எங்கள் அலுவலகம் போல அந்த ஏரியாவில் இருந்த எல்லா அலுவலகங்களிலும் நடந்ததாக பின்னர் தெரிய வந்தது.

ஆமாம் உதட்டோடு உதடு...... பின்ன சூடா காபியோ டீயோ மக்குல குடிக்கும்போது ஒதட்ட வச்சி உறிஞ்சிதானே குடிக்க முடியும்?  அய்யோ ஐயோ.....

அதேபோல, இவர்கள் தங்கள் வீட்டிலுள்ள பூனை, நாய்,கணவன் , (அக்றிணை பொருட்கள்) உட்பட எல்லோரையும் பெயர் சொல்லித்தான் நம்மிடம் பேசுவார்கள் அப்படி வந்தது தான் இந்த சோபியாவும்.

பி.கு: நண்பர்களே, காணவில்லை என்று அலுவலகத்தில் இருந்து ஈமெயில் வந்தது, அந்த MUG ஒரு செண்டிமெண்ட் சம்பந்தமான பொருள் எனவும், அந்த படத்தில் உள்ள பெண்ணின் பெயர் சோபியா என்பது  மட்டுமே உண்மை  மற்றவை நம்ம உடான்சு.......அதாவது கற்பனைங்க.


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ





6 கருத்துகள்:

  1. சின்ன (முக்கியமான) விசயத்தை எடுத்துக் கொண்டு அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்,

      தொடர் பதிவை தொடர்ந்து படித்து தொடர் பின்னூட்டம் அளித்து தொடர்ந்து நீங்கள் தரும் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

      தொடர்கதை உடான்சையும் விடாமல் ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. அட அட 007 க்கு வேலை வைக்காம செம உடான்ஸ் வுட்டு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்....சரி 007 க்கு வேலையே இல்லை..அதனால .....மூளை மழுங்கி.....அவ்வ்வ்வ் தூக்கம் வருதுப்பா....

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்,
    எல்லாமே உடான்சு தானா???????????
    நன்றி.

    பதிலளிநீக்கு