பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 மார்ச், 2017

இந்த புன்னகை என்னவிலை?.

"ஆதாரம் இல்லாத  சேதாரம்".

நண்பர்களே,


ஆதாரம் என்றால்  என்னவென்று நம் எல்லோருக்கும் தெரியும். 

அதாவது கண்ணுக்கு தெரியும்படியான ஒரு பொருள் என்று.

எந்த ஒரு நிகழ்விற்கும் கண்ணுக்கு தெரியும்படியான ஒரு ஆதாரம் இருப்பதை நாம் அறிவோம்.

எழுத்து வடிவிலான குறிப்புகள், தசத்தாவேஜிகள்,  அல்லது  காணொளி போன்றவற்றையும் ஆதாரங்களாக கருதலாம்.

வழக்கு மன்றங்களில்  கண்ணில் பார்த்த சாட்சிகள் எனும் பேரில் ஆதாரங்கள் ஏற்கபடுகின்றன.

எப்படி பார்த்தாலும் எந்த ஒரு செயலுக்கும் - நிகழ்விற்கு, வினைமாற்றத்திற்கும்  கண்ணுக்கு தெரியும்படியான  ஒரு ஆதாரம் என்பது அத்தியாவசியமாகிறது.

ஒரு பயணம் மேற்கொள்வதானால், பயண சீட்டு, பயணம் செய்யும் வாகனம்,பயணம் செய்யும் இருக்கை,பயணம் மேற்கொள்ளப்படும் இடங்கள் , தங்குமிடங்கள் விலாசங்கள்,உணவிற்கு செய்த செலவுகள்,  போன்றவை கண்ணுக்கு தெரியும்படியான ஆதாரங்களாக கருதப்படுகின்றன.

அதேபோல எந்த விஷயமானாலும் அவற்றிற்கு  ஓரளவேனும் கண்களால் பார்த்தும் கைகளால் தொட்டும் அறிந்துகொள்ளக்கூடிய ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆனால் எந்த ஒரு ஆதாரத்தையும் கண்ணில் காட்டாமல், தொட்டுணர செய்யமல் , ஒரு சிறிய குறிப்பை மட்டுமே சொல்லி அல்லது எழுதி காண்பித்து அவற்றிற்கும் சேர்த்து நம்மிடம் பணம் வசூலிக்கும் பல வியாபாரங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இது ஏதோ பெரும்செல்வந்தர்கள் ஈடுபடும் வர்த்தகத்தில் மட்டுமே நடைபெறுவதாக நினைக்கக்கூடாது.

சாமானிய மக்களும் அடிக்கடி இல்லை என்றாலும் பல சமயங்களில் சென்று வாங்கும் கடைகளில் ஆதாரமே இல்லாமல் நம்மிடம் பெரும் பணத்தை வசூலிக்கும் நடைமுறை இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

யாரும்  எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் , கடைக்காரர் சொல்லும் கூடுதல் பணத்தை கொடுத்துவிட்டு , கொடுத்த கூடுதல் பணத்திற்குண்டான எந்த பலனையும் அடையாமல் வீடுதிரும்பும் நிலை நமக்கு வெகு சாதாரணமான விஷயமாக ஆகிவிட்டது.

இங்கே உற்பத்தி வரி, வணிக வரி,வருமான வரி,வாட் போன்றவற்றை சொல்லவில்லை, ஏனென்றால், அவற்றிற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.  உற்பத்தி செய்யப்பட்ட பொருள்,வணிகத்தில் ஏற்பட்ட லாபம், வாங்கிய பொருள், ஈட்டிய வருமானம் என்று.

ஆனால் இதுபோன்று எந்த ஆதாரமும் இல்லாமலேயே பெரும் பணத்தை மக்களிடம் வசூலித்து வளமுடன் நடைபெறும் ஒரு வியாபாரம் இந்த உலகில் இருக்கின்றது என்றால் அது தங்க நகை வியாபாரம் மட்டுமே.

அங்குதான் ஆதாரமே இல்லாத சேதாரம் என்ற பெயரில் மக்களிடமிருந்து பெரும் பணம் வசூலிக்கப்படுகிறது.

எந்த பொருள் உற்பத்தியிலும் , ப்ராஸஸிலும்  அதன் கழிவுகளை நாம் பார்க்க முடியும்.

மீன் சுத்தம் செய்தால்கூட, அதன் தலை, செதில்கள், கழிவுகளை நாம் கண்ணில் பார்க்க முடியுமே...

ஆனால் தங்க நகைகள் உற்பத்தியில் மட்டும் அதன் கழிவுகளை நாம் பார்க்கமுடிவதில்லை, நம் கண்களிலும் காட்டப்படுவதில்லை, ஆனால் அதற்கான பணத்தை மட்டும் நம்மிடமிருந்து வசூலித்துவிடுகின்றார்கள்.

பல வருடங்களுக்கு முன் நகை கடைக்கு சென்ற நான் சேதாரம் என்ற பெயரில் கேட்கப்பட்ட தொகையை கொடுக்க வேண்டுமானால் அந்த சேதாரத்தை எனக்கு காட்டவேண்டும் என கூறினேன்.

கடைக்காரர் சொன்னார், அது நகை செய்யும்போது சிறு துகள்களாக உதிரும் தங்கம் என்றார்.

சரி  எனக்கான இந்த நகையை செய்யும்போது  சிதறிய  அந்த சிறு துகள்களை எனக்கு தாருங்கள்  என கூறினேன்.

அதை கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்றனர்.

பரவாயில்லை அதை எனக்கு கொடுங்கள், இல்லை என்றால் சேதாரம் என்ற பெயரில் பில்லில் போட்டிருக்கும் பெருந்தொகையை எடுத்துவிட்டு , நகையின் எடைக்கேற்ற பணம் , செய்கூலி, மற்றும் வரியை மட்டும் பெற்றுக்கொள்வதானால் நான் வாங்குகிறேன் இல்லை என்றால் எனக்கு இந்த நகை வேண்டாம் என்றேன்.

சட்டை தைக்கும்போது ஏற்படும்  சேதாரம் வேண்டாம் என விட்டுவர இது ஒன்றும் தையல் கடை அல்லவே.

அவர்களும் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள், நானும் விடுவதாக இல்லை. 

இறுதியில் ஆதாரம் இல்லாத சேதாரதத்தொகையை கழித்துவிட்டு வேறு ரசீது பெற்றுக்கொண்டு பொன்நகையோடு  மட்டுமல்ல உள்ளம் மகிழ்ந்த புன்னகையோடும்   கடையை விட்டு வெளியில் வரும்போது அந்த சேல்ஸ் மேன் என்னிடம் சொன்ன வார்த்தை:

"30 ஆண்டு கால அனுபவத்தில் உங்களை போன்ற "கஷ்ட்ட"மரை நான் பார்த்ததே இல்லை" 

இதை அறிந்த  நண்பர்கள் , அடுத்தமுறை அவர்கள் நகை கடைக்கு போகும்போது அவசியம் நான் அவர்கள்கூட கடைக்கு     வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டனர்.

செய் கூலிகூட சில வேளைகளில் வரம்பு மீறி வசூலிக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன்.

ஒருவேளை இந்த பொன்நகை  வியாபாரத்தின் ஆதாரமே அவர்கள் வசூலிக்கும்   செய்கூலி மற்றும்  சேதாரமாக இருக்குமோ? 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

  1. என்னது சேதாரமா...? ம்...ம்
    அப்புறம், ஆதாரமா..? எங்க ஊருக்கு வாங்க. அதிகமில்லை. ஒரு 75 நாள் வச்சி 'செஞ்சிரு' வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பே சிவம், வருகைக்கு மிக்க நன்றி.

      அதென்ன 75 நாள் கணக்கு? எனக்கு புரியலையே.

      உங்க ஊருக்கு வர சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் தம்பிக்கு எந்த ஊரு என்றே சொல்ல வில்லையே?

      கோ

      நீக்கு
  2. தொழில் நுணுக்கத்தை வெளியில் கூறிவிட்டீர்கள் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      நாலுபேருக்கு நல்லது நடக்கணும்னுதான் சொல்லிட்டேன் .

      வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      கோ

      நீக்கு
  3. பதில்கள்
    1. அட்ரஸ் வேணுமா? தனப்பால்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. வணக்கம்
    அற்புதமான கதைக்களம் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. செய்கூலியும், சேதாரமும்தான் ஆதாரம்!! அவர்களுக்கு!

    இப்போது சேதாரம் என்று போடக் கூடாது என்று பலரும் சொல்லி வருவதாகத் தெரிகிறது...அதற்குக் காரணம் கோ என்றும் சொல்லப்படுகிறதாமே! சேதாரம் சேர்க்கக் கூடாது என்றால் அதை எப்படியேனும் செய்கூலியில் சேர்த்துவிடுகிறார்கள்...

    கீதா: இதுவரை நகையே வாந்தியதில்லை. ஒரே ஒரு முறை தாலிக் கொடி அறுந்ததனால் மாற்ற வேண்டிய சூழல்! அப்போதும் இதே விவாதம்தான் நான் வைத்தேன். கழித்துக் கொண்டுதான் கொடுத்தார்கள்...பொன்நகை விட புன்னகையே எனக்கு...ஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு தெரியாத வித்தையே இல்லை. ஏதோ அடிக்க இருந்த கொள்ளை லாபத்திலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டிருப்பார்களே தவிர நாட்டப்பட்டு இருக்க வாய்ப்பில்லை.

      வருகைக்கு மிக்க நன்றிகள். கீதா, உங்களுக்கு புன்னகையே பெரிய பொக்கிஷமாகி குவிந்திருக்கும் என நினைக்கின்றேன் அதனால்தான் பொன்நகை மீது ஆர்வமில்லைபோலும், புன்னகை பொங்கட்டும்.

      கோ

      நீக்கு