Followers

Friday, March 10, 2017

நாய்விற்ற(வன்) பணம்.

ரொம்ப லொள்ளு...


நண்பர்களே,

திருடாமல், வஞ்சிக்காமல், பொய் சொல்லாமல், யாரையும் ஏமாற்றம் செய்யாமல்,    நேர்மையான எந்த வேலையானாலும் சலிப்பு இல்லாமல்,
சங்கடம் பார்க்காமல், செய்து பொருளீட்ட வேண்டும் எனும் நோக்கிலும்   நம்ம ஊரில் சொல்லப்படும் ஒரு கூற்று "நாய் விற்ற பணம் குரைக்காது " என்பது.

ஆனால் மீன் விற்ற பணம் நாறுமே என்று  ஒருவிதண்டாவதாம் பேசுபவர்கள் சொன்னாலும் அந்த பணத்தின் மதிப்பும் உழைப்பின் பெருமையும் குறையாது என்பதும் நிதர்சனம்.

அதே சமயத்தில் மற்றவரிடம் இருந்து துணிகரமாக அபகரித்த பணத்தை, அல்லது கொள்ளை அடித்த , அல்லது சமூக சீர்கேடான செயல்கள்மூலம் ,   லஞ்சம்,திருட்டு கணக்கு, வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த பணத்தை   யார் வைத்திருந்தாலும் அதனால் எத்தனை  நல்ல(??)   சமூக நல காரியங்களை  செய்தாலும் அந்த பணம் சபிக்கப்பட்ட பணமாகவே கருதப்படும்.  

பணம் என்றல் பிணமும் வாயை திறக்கும் என்ற கூற்று  கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று  என்றாலும், பணம் இருந்தால்  பிணத்தையும் வாழவைக்கும் (சில நாட்களுக்கு) எனும் புதுமொழி இந்த காலத்திற்கு பொருத்தமானதாகவும் அமைகிறது.

இந்த உலகில், பணத்தை விரும்பாதவர், (சராசரி மன நிலைமையில்இருக்கும் மனிதரில்)   யார்? 

ராபின் ஹூட் போன்ற கதாபாத்திரங்களும், பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து அதை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதாக சொல்லப்பட்டு அவர்களை அவதார புருஷர்களாக சித்தரிப்பதுகூட ஏற்புடையதல்ல.

இந்நிலையில் , ஆட்சியில் இருப்பவர்கள்-இருந்தவர்கள் அரசு நல திட்டங்கள் என்ற பெயரில் ஆங்காங்கே நல திட்டங்களை அறிவிப்பதும் அதற்கேற்ப ஒரு சில மக்களுக்கு இலவசமாக மிதிவண்டி, மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் , மடி கணினி போன்ற பொருட்களை கொடுப்பதை , கொள்ளையடித்த பணத்தில் கொடுக்கப்பட்டவை என்று புறம் தள்ள முடியாது.

அது அரசின் கஜானாவில் இருக்கும் மக்களின் வரிப்பணத்தில் , அரசின் ஏனைய வருமானங்கள், மத்திய அரசு வழங்கும் மானியங்கள்,நிவாரண நிதி, முதலீட்டின் மூலம் வருகின்ற வருமானத்தில்   வாங்கப்பட்ட பொருட்களாகவே கருதி அதை புறக்கணிக்காமல் பெற்றுக்கொள்வது ஏற்புடையதாகவே  எனக்கு தோன்றுகின்றது.

ஒருவேளை அந்த பணத்தின் பெரும்பகுதி மக்கள் விரும்பாத மதுவிற்பனை, புகையிலை விற்பனை, அந்நிய தேசங்களின் உற்பத்திப்பொருட்களை உள் நாட்டில் விற்பனை செய்வது மூலம் பெறப்படும் கழிவுத்தொகை போன்றவற்றின் தொகுதியாக இருக்குமேயானால்  அதை எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் ஏற்புடைய செயலாக இருக்கும்.

அதே சுடமையத்தில்  அரசு  சார்பாக முன்னெடுக்கப்படும்  எந்த இலவச / சலுகை திட்டங்களுக்கு பின்னாலும்  ஒரு இமாலய ஊழல் திட்டமும் மறைந்திருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

மேலும் தமது அதிகாரம் , பலம், செல்வாக்கு மூலம்  அநியாயமாக , சம்பாதித்து அதை தானும் தனது குடும்பமும் ஏகபோகமாக அனுபவித்து ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தவர்கள், தாம் வாழும் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல(??) காரியங்களை நினைவுபடுத்தும் வகையில் அவர்களுக்கு சிலையை வைப்பதும் அவர்கள் பெயரில் கட்டிடங்கள், பூங்காக்கள், அரங்கங்கள் அமைப்பதும், தெருக்களுக்கு அவர்களின் பெயர்களை சூட்டுவதும் மனித குல வழக்கம்.

இது ஒரு சாராருக்கு ஏற்புடையதாக இருந்தாலும் மறு  சாராருக்கு ஏற்புடையதாக இருக்காது.

மனிதகுலம் செழிக்க அவர்தம் வாழ்வு மேம்பட  தன்னலம் கருதாமல் , கண்ணுறக்கம் பாராமல், பசி நோக்காமல் தாம் முன்னின்று காரியங்களை செய்துமுடிப்பதில் தமக்குண்டானவற்றைமட்டுமல்லாது  தம்மையே இழந்த எத்தனையோ தியாகிகளின் தடம்கள் கூட இல்லாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள் இந்த உலகில் ஏராளம்..

அவ்வாறு இன்றி , தமது பெயர், தமது புகழ், தமது செல்வம், தமது குடும்பம் தனது பரம்பரை என தன்னலத்தோடு வாழும் -  வாழ்ந்த  மனிதர்களுக்கு சிலை வைப்பதும், அவர்கள் பெயர்களை தெருக்களுக்கு , கட்டிடங்களுக்கு சூட்டுவதும் மனித குலத்திற்கே பெரும் அவமானம்.

இது இன்று நேற்றல்ல பல நூற்ராண்டுகளாகவே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி உலகம் முழுவதும் அங்கங்கே நிகழும் நிகழ்வுகளில் இங்கிலாந்தில் நடந்த ஒரு  அவமான  நிகழ்வினை நாளை பார்க்காலாம்.

அதுவரை.....

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ12 comments:

 1. இங்கிலாந்து அவமானம காண வருவேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா. நலம்தானே.

   இங்கிலாந்தின் அவமானத்தில் உங்களுக்கென்ன அத்தனை ஆர்வம்.

   பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றிகள்.

   கோ

   Delete
 2. என்னாது பதிவு முடியவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. என்னங்க பண்றது, முடிவில்லாமல் நீண்டுகொண்டுபோகும் அவலங்களை , அலம்பல்களை பார்க்கும்போது அதை எப்படி சுருக்கி பதிவிடமுடியும்.

   தொடரும்... நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 3. இவ்வாறாக நினைவுச்சின்னங்கள் வைப்பது பொதுவாக ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   தங்கள் கருத்து ஏற்புடையதே.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 4. Replies
  1. தங்களின் காத்திருப்பிற்கு மிக்க நன்றிகள் தனப்பால்.

   கோ

   Delete
 5. அடடா ஆர்வமாக வாசித்து வந்தால்.
  நாளை பார்க்கலாம் போட்டுட்டீங்கலே:(((
  சரி நாளைக்கு வந்து வாசிக்கிரேன்.

  நலமா சார்?

  ReplyDelete
  Replies
  1. மகேஷ்,

   வருகைக்கும் வாஞ்சையுடன் பதிவினை வாசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்.

   கொஞ்சம் காத்திருங்கள் அடுத்த பதிவு இதோ வந்துவிட்டது.

   நலம்தான். வேலை எப்படி போகிறது?

   கோ

   Delete
 6. நினைவுச்க் சின்னங்கள், மணிமண்டபம் எல்லாம் எல்லோருக்கும் எழுப்புவது என்பதை ஏற்கம்டியவில்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து மிக்க சரியே.

   வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.

   கோ.

   Delete