Followers

Friday, February 24, 2017

ஹிட்லரை பார்த்தேன்!!

உயிருடன்.??

நண்பர்களே,

அலுவலக கட்டிடத்தில் இருந்து கண்ணாடி ஜன்னல்கள் வழியாக  வெளியில் பார்த்தபோது பல அழகிய தோற்றங்களுடனான
பல அடுக்கு மாடிகட்டிடங்கள், வானுயர்ந்த மரங்கள், வாகனங்கள், குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் ஆண் பெண்  போன்ற பலதரப்பட்ட மனிதர்களின் நடமாட்டங்களையும் பார்க்க நேர்ந்தது.

இப்படி பார்த்துக்கொண்டிருந்த என் கண்களில் தூரத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் நீர்த்தேக்க தொட்டியின் சுவற்றில் தெளிவாக பார்த்து வாசிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் என் கண்ணை மட்டுமல்லாது கருத்தையும் கவர்ந்தது.

அந்த வாசகம்தான் இந்த பதிவின் தலைப்பும் உபதலைப்பும்.

யாரை பார்த்து இப்படி ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும்?

"பேசப்படும்சொல்லைவிட  எழுதப்படும் சொல்லே  வலிமை வாய்ந்தது" என்ற ஹிட்லரின் வாக்கிற்கிணங்க யாரிடமும் பேசாமல் வலிமைபொருந்திய எழுத்து வடிவத்தில் இதை யாரோ அந்த கட்டிட சுவற்றில் எழுதி இருக்கின்றார்கள்.

1889 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஏப்ரல் 20 ல் பிறந்து 1945 ஏப்ரல் 30ல் தற்கொலைசெய்துகொண்ட அடால்ப் ஹிட்லர் , 1933 முதல் 1945 வரையில், தாம் முழுமையாக நம்பிக்கைகொண்டிருந்த பாசிச கொள்கையினால் உந்தப்பட்டு , அதனால் இரண்டாம் உலகப்போரை முன்னடத்தி உலக மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பேராபத்தை விளைவித்தார் என நாம் அறிவோம்.

தமது  சர்வாதிகார ஆட்சி காலத்தில், வரலாற்றில் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன பல லட்சம் மக்களின் உயிர்கள்    தவிர சுமார் 6 கோடி யூதர்களை   சேர்த்து  11 கோடி மக்களை ஈவு இரக்கமின்றி பல சித்திரவதைகளுக்குட்படுத்தி கொடூரமான  வகையில் கொன்று குவித்தும் உலகின் ஏகபோக ஆட்சியாளனாக தன்னை உருவகப்படுத்திக்கொண்டவர்  ஹிட்லர் என்பது வரலாற்று உண்மை.

1945 க்குப்பிறகு    இன்றளவும் , புதிதாக பிறக்கும்  எந்த குழந்தைக்கும் ஹிட்லர் எனும் பெயர் சூட்டபடுவது உலகின் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில்,  அவர் இறந்து சுமாரா 72 ஆண்டுகளாகியும்  அவரை குறித்து பேசுவதும் எழுதுவதும் ஆவணப்படங்களை தயாரிப்பதும், அவரது படங்களை ,சிலையை பொது இடங்களில் வைப்பதும் பெரிய குற்றமாக கருதப்படுகிது.

இந்நிலையில் எல்லோரும் எளிதில் பார்க்கும்படியாக நகரத்தின் மையப்பகுதில், அமைந்திருக்கும்  ஒரு கட்டிடத்தில்; கொட்டை எழுத்துக்களால் தலைப்பிலும் உபதலைப்பிலும் உள்ள வாசகத்தை யாரோ GRAFFITI வகையில்   எழுதி இருக்கின்றர்கள் என்றால், அவர்கள் இந்த உலகத்திற்கு யாரையோ ஹிட்லருடன் ஒப்பிட்டு சொல்லவேண்டும் என்று கருதி இருப்பதாக தோன்றுகின்றது.

அப்படி யாரையோ  ஒப்பீடு செய்ய முயற்சிப்பது ஹிட்லரின் இருண்ட பக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் அதே வேளையில்,

" இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்கவேண்டுமானால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே."

"புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானத்தை மறக்காதே, அது இன்னொருமுறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்"

"நீ நடந்துபோக பாதை இல்லையென்று கவலைப்படாதே, நீ நடந்தால் அதுவே பாதையாகும்"

"முயற்சி எதுவும் சுலபமில்லை, ஆனாலும் எல்லாமே சாத்தியம்தான்"

"எதிர்பார்த்தபோது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்".

"உனக்கு ஒரு சட்டம் பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக அதை கடைபிடி, மேலே  வா....  ... சட்டத்தை மாற்று"

"நீ சூரியனைப்போல் பிரகாசிக்கவேண்டுமானால் அதனைப்போன்ற தீச்சுவாலை உன்னில் கொழுந்துவிட்டு எறியவேண்டும்"

என்பன போன்ற தத்துவார்த்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டவர்காவோ அல்லது அதன்படி இப்போது யாரேனும் நடந்துகொண்டிருப்பவரை சந்தித்ததாலோகூட இப்படியான வாசகத்தை எழுதத்தூண்டி இருக்குமோ?

எப்படி இருந்தாலும் ,

"IF YOU WIN YOU NEED NOT HAVE TO EXPLAIN, IF YOU LOSE YOU SHOULD NOT BE THERE TO EXPLAIN"

எனும் தமது கொள்கைக்கு உயிர்கொடுக்கும்  வகையில் தாம் தோல்வி அடைந்து, நேசப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டு மரணத்தை தழுவியதாக  சொல்லப்படும் சரித்திரம் காணாத சர்வாதிகாரியான ஹிட்லரை இன்றைய தேதியிலும் யாரோ ஒருவர் நினைவு படுத்தி இருக்கின்றார் என்றல் என்ன காரணமாக இருக்கும்?

Image result for hitlers mustache-MODERN ART

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அப்படியே  உங்களில் யாருக்கேனும் உங்களின் அனுபவத்தில் இருந்து இப்படி சொல்லத்தோன்றினால் எனக்கும் சொல்லுங்கள்.

 பின் குறிப்பு: ஹிட்லருடன் என்ன சம்பந்தத்தில் அந்த வாசகத்தை எழுதினர்   எனக்கு தெரியாது, ஆனால் இந்த பதிவை எழுதிய எனக்கும் ஹிட்லருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது என்பதும் இந்த பதிவை எழுத காரணமோ?

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


8 comments:

 1. //எனக்கும் ஹிட்லருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது என்பதும் இந்த பதிவை எழுத காரணமோ?///

  ஒரு வேளை நீங்கள் பெண் ஹிடலருடன் வாழ்ந்து வருவதால் இப்படி எழுதி இருக்கிறீர்களோ? அல்லது ஷேவ் செய்யும் போது மிசையை ஒரு பக்கம் தவறுதலாக கட் செய்து இருப்பீர்கள் அதை சரி செய்ய மற்றொரு பக்கத்திலும் அதற்கு இணையாக கட் செய்து இருப்பீர்கள் கடைசியில் பார்த்தால் ஹிட்லர் மீசை போல இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே,

   பெண் ஹிட்லர் என்பது ஓரளவிற்கு(??) .......என்றாலும் அதுவல்ல சம்பந்தம்..

   ஆசையாசையாய் வளர்த்த மீசை பழுதானதுமல்ல காரணம்.

   அதையும் தாண்டி........ ஹீ ஹீ ஹீ..... நேரம் இருக்கின்றது இன்னும் நிதானமாக யூகிக்க.

   வருகைக்கும் உங்கள் முயற்சிக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

   கோ

   Delete
 2. பதில் நல்ல கருத்துகள் பலவற்றை பகிர்ந்து இருப்பதற்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.

   கோ

   Delete
 3. ஏதோ ஒருவிதத்தில் ஹிட்லர் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதே உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ஐயா,

   தாங்கள் சொல்வது உண்மையே.
   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 4. ஹிட்லருக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்குத் தெரியுமா? இரண்டுபேருமே ஏப்ரல் மாதம் பிறந்து ஏப்ரல் மாதமே இறந்தவர்கள். இதில் பாதி ஒற்றுமை உங்களுக்கும் ஹிட்லருக்கும் உண்டுதானே? அதாவது நீங்களும் ஏப்ரல் மாதம் பிறந்தவர், சரிதானா?
  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   நல்ல தகவலுடன் கூடிய தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

   தங்களின் யூகம் - பாரதிதாசனுக்கு ஹிட்லருக்கு உள்ள சம்பந்தத்தை விட மிக நெருக்கம்.

   மீண்டும் முயலுங்களேன்.

   கோ

   Delete