மலரும் முள்ளும்.
தூரத்தில் இருந்த என்னை
புன்னகித்து அருகில்
புறப்பட்டு வா என
அழைத்தது ஒரு
அழகிய ரோசா பூ.
ஆவலுடன் அருகில் சென்றால்
தன் கூறிய முற்களை காட்டி
முறைத்து பயமுறுத்தியது.
மனித குலத்தில் ஒரு பாலார் (!!)
மட்டுமே செய்யக்கூடிய இந்த
செயல் எப்படி உன்னையும்
தொற்றிக்கொண்டது ?
இந்த குணத்தை உன்னையும்
விட்டு வைக்காமல் உன்னோடு
ஒட்டுப்போட்டது யார்?
வினவவில்லை,
மனதில் நினைத்துக்கொண்டே,
கொஞ்சம் உற்றுப்பார்த்தேன்.
ஆமாம் உண்மையிலேயே
கூறிய முற்கள்தான்- அவை
கூறிய செய்தி உண்மைதான்.
ரோசாவிற்கு முற்கள்
பாதுகாப்பானது என்று
யாரோ சொன்னது
நினைவில் நிழலாட ,
அதன் முற்களைவிட
என் விழிகளை அதிக
கூர்மையாக்கி
மிகவும் அருகிலும் அல்லாமல்
தூரமாக விலகியும் செல்லாமல்
முறைத்திருந்தாலும்
முகம் சுழித்தாலும்
அதன் முகத்தில்
தெரியும் அந்த கபடற்ற
சிகப்பு ரோசாவின்
அழகில் மனம் லயித்து
வைத்த கண் வாங்காமல்
வறண்ட விழி மூடாமல்
காற்றில் ஆடும் அந்த
சுகந்த மண ரோசாவை
கண்டு என் மனம்
மகிழ்ந்திருந்த வேளையில்
காற்றை துளைத்துக்கொண்டு
பறந்து வந்தது அங்கே
கரு வண்ண வண்டொன்று.
வந்தது வண்டா?
அல்லது வாண்டா?
கனபொழுதும் தாமதிக்காமல்
கால்களை நீட்டி சிறகு மடக்கி
நடு மலரின் மடல் மடியில்
நங்கூரம் பாய்ச்சி
நகராமல் நின்றது.
என்ன நடக்கின்றது இங்கே ?
பூவும் எதிர்க்க வில்லை தமது
முற்களும் முறைக்கவில்லை.
வந்த வண்டு வாய் குழல்
கரம்கொண்டு
மொண்டு பருகியது பூவின்
மொத்த சேமிப்பையும்.
பட்ட பகலில் இப்படி ஒரு துணிகரம்
கேட்பார் யாருமில்லையே!
அப்படி என்றால்
முற்கள் ரோசாவின்பாதுகாப்பு
என சொல்வதென்ன
பொய்யோ?
இல்லை,
மலர் விழித்திருக்கும் வேளையில்
முற்கள் உறங்க சென்றனையோ?
ஏகாந்த மலரின்
ஏமார்ந்த முகம் பார்க்க
ஏனோ மனம் வாடியது.
ஒருவேளை
வண்டோடு ஏதேனும்
ரகசிய ஒப்பந்தம் இருக்குமோ
அதனால்தானோ என்னவோ
எதிர்பின்றி உடன்பட்டது
என என் மனதிலும் பட்டது.
நாட்கணக்கில் சேமித்திருந்த
நலமிகும் பொக்கிஷத்தை
விரும்பி பருகிய கரு வண்டு ,
திரும்பிக்கூட பார்த்திடாமல்
திசைமாறி பறந்து சென்றது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த
சிறாரில் ஒருத்தியால்,
இதழ் விறிக்கபடாதிருந்த மொட்டொன்று
இமைக்கின்ற நேரத்தில் பட்டென்றுப்
பறிக்கப்பட்டு தன் பையுக்குள் புதைத்ததை
பார்த்து என் நெஞ்சம் பதைத்தது.
முற்கள் அவளை முறைத்து
தடுத்ததாகவும் தடயமில்லை
அந்த முற்கள் அவளுக்கு
ஒரு தடையாகவும் இருக்கவில்லை.
அப்படி என்றால் ரோசாவிற்கு
முற்கள் பாதுகாப்பனவை என
முன்னுரைத்தது முரணோ?
தனது குடும்பத்து சகோதரி ஒருவளை
(மலர்கள் ஆண்பாலா? பெண்பாலா?)
பூப்பெய்துமுன்னே பறித்தவருக்கு
பறிகொடுத்து பரிதவித்த அந்த
ரோசாவின் பரிதாபம் கண்டு
மனம் பதைபதைத்ததைவிட
முற்களின் மீதே
மூர்க்கமானது என் மனம்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
ரசித்தேன்... இயற்கையின் வினோதம்...!
பதிலளிநீக்குஅரசருக்கு வணக்கம்,
பதிலளிநீக்குபுன்னகைத்த பூ அடுத்து முறைத்ததா?
ஏனிந்த முரண்,
இயற்கையின் நியதி அதனை நாம் நமக்காய் மாற்றியதால் வந்த பதைபதைப்பு
முற்களின் மீதே
மூர்க்கமானது என் மனம்.
தேவையற்ற மூர்க்கம்
இது வாழ்வியலின் சுழற்சி,
தங்கள் பார்வையில் பாவப்பட்ட ரோஜா,,,,,,,,,,,,,
தங்கள் பதிவு நிறைய செய்திகளைக் ,,,,,,,,,,,,
அருமை, வாழ்த்துக்கள்.
நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி.
நீக்குபாவப்பட்ட ரோசா என்மீது கோவப்பட்டது ஞாயமா?.
என் பதை பதைப்பு அந்த மலருக்காகத்தானே?
கோ
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனப்பால்
பதிலளிநீக்குரோஜாக்களைத் தோட்டத்தில் செடிகளில் பார்ப்பதுதான் பிடித்திருக்கிறது...அவை பொக்கேக்களாகவும், தலையிலும் மாலைகளாகவும் உதிர்ந்து காலின் அடியில் மிதிபடுவது ஏனோ பிடிப்பதில்லை...ரோசா மட்டுமில்லை எல்லா மலர்களுமே...
பதிலளிநீக்குரோஜாவைப் பற்றிய ராஜாவின் ஆதங்க வரிகள் எங்கள் மனதில்...
சின்ன வயதில் இருந்தே பூ வைக்கும் பழக்கம் இல்லை என்று சொன்ன நீங்கள் பூ சுற்றும் பழக்கம் இருக்கிறதா இல்லையா என சொல்லாமல் விட்டு விட்டீர்களே.
நீக்குகோ
பதிவை பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். எனக்கும் இந்த ரோசாக்கள் காலில் மிதிபடுவது பிடிக்காதுதான்.
பதிலளிநீக்குபூவை பற்றியெல்லாம் ஆறடி நீல கூந்தல் இருப்பவர்கள் பேசுவது சால சிறந்தது, நான் என்னை சொல்கிறேன், நமக்கு இருப்பது கிராப்புதானே, என்னை சொல்கிறேன்.
கோ