பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 ஜூலை, 2015

"கலாமுக்கு (கண்ணீர்) சலாம்"

இற(ர)ங்கல் வேண்டி........

மேதகு எங்கள் மேன்மையின் நாயகனே......
உமக்கு இரங்கல் தீர்மானம் ....


Image result for picture of apj abdul kalam

இல்லை இல்லை இறங்கல் தீர்மானம். 
தயவாக ஏற்றுக்கொண்டு  இறங்கி வா. 

எங்கள் எல்லோர் மனங்களையும்
அன்பால், பண்பால்,எளிமையால் - 
ஞான வலிமையால் 
தொட்டுப்பார்த்த பெருந்தகையே!
சடுதியில் எங்களை 
விட்டுப்போனதேன்?

எப்போதும் 

உன் சிந்தையும் செயல்களும்
உயர் உள்ளலாய் இருந்ததினால்
உயரத்தின் உச்சமான 
உயர் வானம் ஏகிவிட்டாய்.

வானம் உள்ளளவும் உன் நினைவிருக்கும்
என்று எல்லோருக்கும் இவ்வுலகம் 
வஞ்சனை இன்றி சொல்லும் கூற்றை
உனக்கு
நானும்  சொல்வதில் நாணமில்லை எனக்கு

ஏனென்றால்,

வாழும்போதே வானம் உனக்கு
வசமானதால், வானம் உள்ளளவும் -உன்
வாசம் எங்கள் நினைவுகளில் வீசும்
உம் மூச்சிக்காற்று  , எம் செவிகளில்  பேசும்.

வானத்தை நங்கள் அண்ணாந்து 
பார்க்கும் ஒவ்வொரு தருணமும்
உன்னைத் தான் பார்போம், 
நிலவாய், சூரியனாய், விடிவெள்ளியாய்.

இருந்தாலும் உன்னை 
அவசர படுத்திவிட்டான்
அந்த அசூர காலன்

மக்களின் எந்த நல்ல தீர்மானத்திற்கும்
இரக்கம் காட்டும் உம் இயல்பு குணம்
இந்த இ"ற"ங்கல் தீர்மானத்திற்கும் கொஞ்சம்
இரக்கம் காட்டி இறங்கி வர மாட்டாயா?

பெருந்தகையே!

உங்கள் ஆன்மா
இறைவனின் திருவடி நிழலில்
இனிதே இளைபாரட்டும்.
2020 இந்தியா உன் கனவை
நினைவாக்கட்டும்.

நீர் நாட்டின் முதல் குடிமகனானபோது  நான் அனுப்பிய  வாழ்த்து உன்னை சேரவில்லை,, பிறந்தநாள் வாழ்த்தும் சேரவில்லை  இந்த தீர்மானமாவது உன்னை வந்து சேரட்டும் - " கலாமுக்கு சலாம்"

கண்ணீருடன்....

கோ.

10 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,
    உங்கள் இந்த தீமானம் அவருக்கே,
    நாமும் நம் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துவோம்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் அஞ்சலியில் பங்கு எடுத்தமைக்கும் மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த அஞ்சலிகள்! எளிய மாமனிதர்.

    அவரது கனவு நனவாக, நாமும் அடுத்து வரும் தலைமுறைகளும் நம்மால் இயன்றளவு செய்ய முனைந்து இந்தியாவை உலக அரங்கில் எல்லோரும் தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு கல்வியிலும், பொருளாதரத்திலும் உயர்த்தி வைத்தோம் என்றால் அதுவெ நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி, மரியாதை!

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள் கோ.
    தன்னை தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - என்பதற்கு எடுத்துக்காட்டு Dr. கலாம் ஐயா !

    அனைவரயும் கவர்ந்த மிக மிக எளிமையானவர் இருப்பினும் எல்லார் மனங்களில் மிக மிக மேன்மையாய் வீற்றிருப்பவர்...




    சின்ன செய்தி:
    தந்தை 103-ல், தாயார் 93-ல், மகன் 83-ல்

    பதிலளிநீக்கு