Followers

Thursday, July 2, 2015

"ஐ"ரோப்பாவில் மெட்ராஸ் "ஐ".

கண்கள்  இரண்டால்....

நண்பர்களே,

கண்களை பாதிக்கும் பலவிதமான நோய்களுள் அதிகமான வலியையும் தொற்றையும் ஏற்படுத்தும் நோய், கண்வலி.

இந்த நோய் பெரும்பாலும் காற்றில் பரவும் கிருமிகள் மூலமே மனிதர்களுக்கு பரவுகின்றது என்பது எல்லோரும் அறிந்ததே.

கண் வலி வந்தவர்களுக்கு தெரியும், அவர்கள் பட்ட பாடு. தூங்கி எழுந்ததும் கண் இமைகளை திறக்க கடினமாக இருக்கும் அப்படியே ஒட்டி இருக்கும் இமைகளை சிரமப்பட்டு திறந்தாலும் வெளிச்சச்த்தை பார்க்க முடியாமல் கண்கள் கூசும்.

அப்படியே எல்லா வலிகளையும் பொறுத்துக்கொண்டு திறந்திருக்கும் வேளையில் காற்றில் பரவி இருக்கும் தூசு, மாசு, மற்ற கிருமிகள் ஈர பதத்துடனும் பசை மாதிரியான திட - திரவ நிலையில் இருக்கும் கண்களில் உடனே ஒட்டிக்கொள்ளும் ஆபத்தும் அதனால் கண் வலி இன்னும் தீவிரம் அடையவும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான கண் நோய்கள் பெரும்பாலும் கோடை காலங்களிலே மக்களை அதிகம் பாதிக்கின்றன.

கோடை காலங்களில் வெடித்து சிதறும் தாவரங்களின் போலன் எனப்படும் மகரந்த துகள்கள் கண்களில் படுவதாலும், அதிக சூட்டை கண்களால் தாக்கு பிடிக்க முடியாததாலும் இது போன்ற கண் வியாதிகளுக்கு நம் கண்கள் உள்ளாவது தவிர்க்க முடியாததாகின்றது.

மேலும் இது ஒரு விரைவு தோற்று நோய்.  இந்த விதமான கண் நோய் இருப்பவர்களின் அருகில் நாம் சென்றாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல் கண்ணாடிகள் போன்றவற்றை பயன்படுத்தினாலும் நமக்கும் கண் நோய் வருவது உறுதி.

இந்த நோய் பெரும்பாலும் உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும் வேறு வேறு விகிதத்தில், வீரியத்தில் வந்துகொண்டு இருந்தாலும் இதனை "மெட்ராஸ் ஐ" என்று ஏன் கூறுகின்றார்கள் என்பது இன்னும் புரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

துஷ்டனை கண்ண்டால் தூர ஒரு அடி என்று சொல்வதை கேட்டிருப்போம் ஆனால் கண் நோய் வந்தவர்களிடத்தில் இருந்து  நாம் முடிந்தவரை எத்தனை அடி விலகி இருக்க முடியுமோ அத்தனை அடிகள் விலகி இருப்பது நல்லது , இல்லையேல், "கல்லடி" பட்டாலும் பரவாயில்லை "கண்ணடி" படக்கூடாது அதுவும் கண் நோய் வந்தவரின் கண்ணடி படவே கூடாது என்னும் பொய்யா மொழியின் உண்மை என்னவென்று அது நமக்கு உணர்த்திவிடும்.

சரி இந்த கண் நோய் வந்தவர்களை எப்படி அடையாளம் கண்டு விலகி இருப்பது.

அதற்குத்தான் ஒரு எளிய வழி இருக்கின்றதே.

நம்ம ஊரில் யாரேனும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எல்லா நேரங்களிலும் (நம் அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள், பார்வை அற்றோர் மெய்காப்பாளர்கள் தவிர) கருப்பு கண்ணாடி அணிந்திருந்தால் குறைந்தது 85 இலிருந்து 90 சதவீதம் அவர்களுக்கு கண்நோய் உள்ளது என்பதை புரிந்துகொண்டு அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
   
இப்போது ஏறக்குறைய ஐரோப்பா முழுவதும் கோடை காலம் நிலவுகின்றது எனவே தங்கள் கண்களை பாது காத்துக்கொள்ள பெரும்பாலும் எல்லோரும் கருப்புகண்ணாடி அணிந்துகொண்டிருக்கின்றனர்.  அவர்களை பார்க்கும்போது ஐரோப்பா முழுவதுமே மக்கள் மெட்ராஸ் ஐயினால் பாதிக்க பட்டவர்கள் போலவே காட்சி அளிக்கின்றனர், யாரை கண்டாலும் அவர்களை விட்டு பல அடி தூரம் விலகி செல்லும்படி மனசு எச்சரித்துக்கொண்டே இருக்கின்றது, ஏனென்றால் யாருக்கு கண்நோய் இருக்கின்றது என்பதை உணர முடியாத வகையில் எல்லோரும் அணிந்திருக்கின்றனர்.

சரி நடந்து போகும்போது அவர்களை தவிர்த்துவிட்டு விலகி செல்லலாம், ஆனால் ஒரே வாகனத்தில் பயணம் செய்ய நேரிடும்போது அதுவும் அருகருகே அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது எப்படி விலகி செல்ல முடியும்?

கடந்த சில வருடங்களுக்கு முன் நியூயார்க்   நகரில் உள்ள ஒரு மாலில் இருந்த கண்ணாடி கடைக்கு சென்று அங்கே வைக்கபட்டிருந்த விதவிதமான கருப்பு கண்ணாடிகளை போட்டு முகம் பார்க்கும் கண்ணாடியில் நம் "மூஞ்சிக்கு" அது ஒத்து வருமா என பார்த்துகொண்டிருந்தேன்.

எங்கே வெளி நாடு சென்றாலும் அங்கே நான் வாங்கும் பொருட்களில் கருப்பு கண்ணாடியும், கை கடிகாரமும், டி ஷர்ட்டுகளும்  தொப்பியும் கட்டாயமானவை.

Image result for picture of statue of liberty with sun glasses on

ஏறக்குறைய சுமார் அரை மணி நேரமாவது அந்த கடையில் உள்ள பல கருப்பு கண்னாடிகளை போட்டு போட்டு பார்த்துவிட்டு  கடைசி வரை அந்த கடையில் எந்த கண்ணாடியும் வாங்காமல் கடைக்கார "பெண்ணிடம்" கடைக்கண் பார்வையாலேயே நன்றி சொல்லிவிட்டு ஏற்க்கனவே (பாரீசில் சென்னை பாரீசு கார்னர் இல்லைங்க பிரான்சில் உள்ள பாரீசில் வாங்கிய) இருந்த கருப்பு கண்ணாடியுடன் வெளியில் வந்தேன்.

 பிறகு அங்கிருந்து விமானம் மூலம் வெர்ஜீனியா  மாகாணம் சென்று அங்கே ரிச்மண்ட், வில்லியம்ஸ் பர்க் பிரதேசம் சென்று அருகிலிருந்த கடற்கரையில் ஒரே ஜெகஜோதியான கூட்டத்தோடு கூட்டமாக கண்ணுக்கு குளிர்ச்சியான "பல விதமான" காட்சிகளை கண்டும் கடல் நீரில் நீராடியும் முடித்து விட்டு வெர்ஜீனியாவில் இருந்து காரில் வாஷிங்டன் வந்தேன்.

அங்கேயும் ஒரு சில கண்ணாடி அங்காடிகளில் கருப்பு கண்ணாடி வாங்க பலவற்றையும் போட்டுப்பார்த்து அங்கே ஷோ கேசில் வைக்கபட்டிருந்த வற்றுள்   மிகவும்  பிடித்துப்போன ஒரு அழகிய  இத்தாலிய படைப்பான "அர்மானி " கருப்பு கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொண்டு வாஷிங்டன் விமான நிலையம் வந்து சேர்ந்தேன்.

அங்கே வந்த சிறிது நேரத்திற்க்கெல்லாம் என் கண்கள் எரிய ஆரம்பித்து விட்டது, கண்களின் நிறம் கிளிமாஞ்சோறு கிளி பிரியாணி கிளி மூக்குபோல சிவந்துவிட்டது.

கண்ணில் இருந்து நீர் வழிய ஆரம்பித்து விட்டது, (உடனே பாட  ஆரம்பிக்காதீங்க, உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று.)


நல்ல வேளையாக  ஏர்போர்ட்டில் இருந்த மருந்துகடையில், கண்ணைகாட்டி அதற்க்கான சொட்டு மருந்தை வாங்கி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டுக்கொண்டே இருந்தேன்,  இருந்தாலும் புதிதாக வாங்கிய கருப்பு கண்ணாடியை அணிய தவற வில்லை.

வாஷிங்டனிலிருந்து லண்டன் செல்லும் விமானம் வந்து விட்டது பயணிகளை அழைக்கின்றனர். வரிசையில் இருந்த என் முறை வந்ததும் பாஸ்போர்டு வாங்கி என் கை ரேகைகளை பதிவு செய்தவாறே என் கருப்பு கண்ணாடியை கழற்ற சொன்னார்கள் , கண் நோய் போன்று தொற்று நோய்கள் இருப்பவர்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்  என்ற தகவல் தெரியாமலேயே  கருப்பு கண்ணாடியை கழற்றினேன்......,,

ஏர்போர்ட்டில் என் "கண்ணால்" ஏற்பட்ட நெருக்கடி என்னவென்று "என்னால்" இப்போது சொல்லமுடியாது "பின்னால்" சொல்கிறேன்.,  ஏன்னா இப்போ கொஞ்சம் கண்ணை  மூடபோறேன் , நீங்களும் கொஞ்சம் கண்ணை மூடி என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 comments:

 1. பயணிக்க முடிந்ததா...? இல்லையா...?

  ReplyDelete
  Replies
  1. திடுக்கிடும் திருப்புமுனை தகவலுக்கு தொடர்க.

   கோ

   Delete
 2. அரசருக்கு வணக்கம்,
  அந்த கடையில் ஒன்னுமே வாங்காமல் கடைக்கண் பார்வைக்கு தான் இந்த கண் வலி போலும்,
  இப்பவேவா?
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவம் அப்படி(??)யாக இருக்கும் பட்சத்தில் உண்மையாக இருக்குமோ?

   கோ

   Delete
 3. ennathu europe and americavilum madras eye taanaa?  amam sir antha kan noy #madras la taan mothala virus kandupidichiruppangkalo?  london poy sernthirkalaa illaiyaa?
  enna achu?
  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்

   இங்கே எல்லாம் மெட்ராஸ் கறிதான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, மெட்ராஸ் ஐ இல்லை,

   கோ

   Delete
 4. கண்ணாடியினால முன்னாடி எனக்கும் சில விபரீதங்கள் நடந்து உள்ளது. நீங்கள் பின்னாடி என்ன சொல்ல போறீங்க என்பதை அறிய முன்னாடி சீட்டில் அமர்ந்து கொண்டு .....

  ReplyDelete
 5. வருகைக்கு மிக்க நன்றி நண்பா

  முன்னாடி போட்ட கண்ணாடி இப்போ அடுத்தபதிவாக பின்னாடி

  கோ

  ReplyDelete
 6. கறுப்பு கண்ணாடியினால் வந்த பிரச்சனை...என்னா ஒத்திக்கோ ஒத்திக்கோனு சொல்லி க்வாரண்டைன் பண்ணி விட்டார்களா விமான நிலையத்தில்??!!!

  ReplyDelete

 7. அப்படி எல்லாம் நடக்க விட்டுடுவோமா?

  நாம எல்லாம் யாரு?

  கோ

  ReplyDelete