பின்பற்றுபவர்கள்

சனி, 11 ஜூலை, 2015

"மரகத நிமிடங்கள்"

தாழ்மை உயர்வு!

நண்பர்களே,

நம் வாழ்க்கையில் ஒரு சில மகான்களையும், ஆதர்ஷ புருஷர்களையும், உலகறிந்த பல நல்ல தலைவர்களையும், சிறந்த கல்வியாளர்களையும் , மத குருக்களையும்,சமூக சேவகர்களையும் நேரில் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தால அதை நாம் எப்படி கொண்டாடுவோம் என்பது நமக்கு தெரியும் .


அப்படி  அவர்களை சந்தித்ததினால் நாம் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றோ, அல்லது கொடுத்து வைத்தவர்கள் என்றோ, அல்லது பாக்கியம் செய்தவர்கள் என்றோ  நம்மை நாமே புகழ்ந்துகொள்வோம்.

அதில் தவறேதும் இல்லையே.

அதேபோல நாம் அவர்களை நேரில் சந்திக்காவிட்டாலும் நமது தொலைபேசியின் வாயிலாக அவர்களை அழைத்து அவர்களோடு பேச கிடக்கும் அந்த ஒரு சில நிமிடங்களை நம் வாழ் நாளின் சிறந்த நிமிடங்களாக போற்றி மகிழ்வோம்.

அதையும் தாண்டி அவர்கள் தங்களது தொலைபேசியின் வாயிலாக நம்மை அழைத்து பேசுவதாக அமையபெரும் அந்த பொன்னான தருணங்களை எந்த பொன்னேட்டில் பதிப்பது? அவை நம் வாழ்க்கையில் மரகத நிமிடங்கள்

அப்படி ஒரு , தமிழக  எல்லைகளை, இந்திய எல்லைகளை தாண்டி உலகளாவி தமது கல்வியாலும், அறிவாற்றலினாலும், சேவை உள்ளத்தினாலும், தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றவே தமது வாழ்வினை அர்பணித்து, தம்மால் வழங்கப்படும் கல்வி உலகதரத்தின் முன் வரிசையில் ஒய்யாரமாய் இடம் பிடிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு , தேனீயையும் மிஞ்சும் சுறு சுருப்போடும், இளமையோடும் இங்குமங்குமாக பறந்து சென்று கல்விபணி ஆற்றிகொண்டிருக்கும், ஒரு பெரிய அதே சமயத்தில் தான் எப்போதும் உங்களில் ஒருவன்தான் என்று தமது, அன்பாலும், நட்பாலும், தமது பெருந்தன்மையாலும் நிருபித்து எல்லோரிடமும் , மனித நேயத்துடன்,சகோதரத்தன்மையுடன், பழகும் ஒரு மா மனிதர் ஓரிரு நாட்களுக்கு முன் இந்தியாவிலிருந்து, கல்வி மேம்பாட்டு பணிகளுக்கென்று பல ஆய்வு மேடைகளை தமது நுண்ணிய அறிவாற்றலால் அலங்கரிக்கும்பொருட்டு அமெரிக்க நாட்டிற்கு சென்றவர், அங்கிருந்து தமது தொலைபேசிமூலம், இதுவரை என்னோடு எப்போதும் பேசி அறியாத   அந்த மாமேதை நண்பர்களின் மூலம் எம்மை குறித்து தெரிந்துகொண்ட செய்திகளின் அடிப்படையில் சில மணிதுளி நேரம் என்னோடு அளவளாவி, என் ஊர், என் சுற்றம், என் உறவினர்கள் குறித்தும், எனக்கும் அவருக்கும் தெரிந்திருந்த சில பேரை பற்றியும் எனக்கு தெரிந்த அவர்களின் சொந்தக்காரர்களை பற்றியும், அவருக்குத்தெரிந்த என் சொந்தக்காரகளை பற்றியும் அன்பொழுக, கரிசனையுடன்,பொறுமையாக பேசிக்கொண்டிருந்த அந்த தருணங்கள் என் வாழ் நாளில் என்றுமே மறக்க முடியாத தருணங்களாக செம்பொன் தட்டில் முத்திரை குத்தப்பட்டுவிட்டது.

எப்போது ஊருக்கு வருகிறேன் என்ற தகவலையும் பேச்சினிடையே பல முறை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு , வரும்போது கண்டிப்பாக சந்திக்கும் படி அன்பு கட்டளையையும் இட்டு என்னை ஆசிர் வதித்தார்.

இது எனக்கு கடவுளின் கிருபை என்றும் சொன்னால் அது மிகை ஆகாது.

இத்தனை சிறப்புகளுக்கும் சொல்லப்படாத இன்னும் பல சிறப்புகளுக்கும் சொந்தக்காரராகிய அவர் யார்?

பெருந்தலைவர் காமராஜர்,பெரியார்,பேரறிஞர் அண்ணா, புரட்ச்சி தலைவர் எம் ஜி ஆர், டாக்டர் கலைஞர்  போன்ற ஒப்பற்ற தலைவர்களின் கல்வி சேவைகளால்  பெரிதும் கவரப்பட்டு கிராமப்புற மக்களுக்கும் வானுயர கல்வியினை வழங்கவேண்டுமென்று அரும்பாடுபட்டு பல முற்கிரீடங்களை சுமந்து  இன்று தமிழகத்தின் ஒப்பற்ற மாவட்டமாக , தமது பாரம்பரிய, வரலாற்று, கலாச்சார மையமாக திகழும் வேலூர் மாவட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கல்வி வானில் துருவ தாரகையாக மின்னிக்கொண்டிருப்பவர்.

அரசியலார், கல்வியாளர், பொருளாதார மேதை,சட்ட மேதை, சிந்தனையாளர், பேச்சாளர்,எல்லாவறிற்கும் மேலாக மனித நேயமிக்க மா மனிதர், வேலூர் பொறியியல் பல்கலைகழகத்தின் தாளாளரும் வேந்தருமான பெரு மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய,  

 THE LIVING  LEGEND டாக்டர் கோ.விஸ்வநாதன்.

Image result for G.VISWANATHAN

அவரின் தொலைபேசி அழைபிற்கு அன்பிற்கு  நான் என்ன தவம் புரிந்தனன்? 

இது வெறும் இரண்டு "கோ" களுக்கு இடையில் நிகழ்ந்த  "கோ" இன்சிடென்ட் அல்ல கடவுளின் மேலான கிருபை.

அழைத்து பேசி ஆசி வழங்கிய உமக்கு மிக்க நன்றி ஐயா!

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

13 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்...

    வேலூரில் மாமனிதரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் பாக்கியம் தான்.

      வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பரே.. மேன் மக்கள் மேன் மக்களே...

    பதிலளிநீக்கு
  3. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I get
    actually enjoyed account your blog posts. Any way I'll
    be subscribing to your augment and even I achievement you access consistently rapidly.



    Feel free to visit my homepage: villadilembang

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அரசே,
    தங்களை அன்புடன் ஆசீர்வதித்த அவர், மேன்மக்களே,
    தன் ஆசானிடம் பாராட்டு பொறுவது என்பது மிகப்பெரிய விருது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேன் மக்களுள் ஒருவரே.

      அவரிடம் இருந்து கற்க வேண்டியவை ஏராளம்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      கோ






      நீக்கு
  5. இரண்டு நால் தொடர் பயணம் காரணமாக
    இப்போதுதான் பதிவை வாசிக்க சமயம் கிடைத்திருக்கிரது.

    வாழ்த்துகள் சார்.
    எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.
    டாக்டர் கோ.விஸ்வநாதன் அவர்கள் உங்களுடன் பேசியதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ் வருகைக்கு மிக்க நன்றி.

      பயணம் நல்லபடி அமைந்திருக்கும் என நினைக்கின்றேன்.

      மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

      கோ

      நீக்கு
  6. கோ, கோவுடன் பேசிய மரகத மணித் துளிகள்..நல்ல விவரணம்....நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க..!!

    பதிலளிநீக்கு