பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 ஜூலை, 2015

"கலர்முகம் கரிமுகம்"

ஸ்மைல் ப்ளீஸ்....!!!!

தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க நரிமுகம் மறைமுகம்

ஒருவேளை தன் மனைவியின் புகைப்படத்தை பலர் பார்க்கும் படி முகப்பில் மாட்டி வைக்க பிடிக்கவில்லைபோலும்; அதற்காக ஏன் என் காலை பிடித்து கெஞ்ச வேண்டும் என்று புரியாத முதலாளியிடம்,
கொஞ்சம் சன்னமான குரலில் அந்த நேர்மையான மனிதர் சொன்னாராம், "ஐயா இன்று நீங்கள் என் மீது காட்டும் தயவிலும் கரிசனையிலும் தான் எங்கள் இரண்டு குடும்பங்களின் மானமும் மரியாதையும் கவுரவமும் அடங்கி இருக்கின்றது"

"என்ன சொல்கின்றீர்கள், புகை படத்திற்கும் குடும்ப மரியாதைக்கும் என்ன சம்பந்தம்" என கேட்ட முதலாளிக்கு இந்த  நேர்மையான கணவன் சொன்ன பதில் முதலாளியை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாம்.

அப்படி என்ன அந்த கணவன் சொன்னாராம்?

நீங்களே கேளுங்களேன். 

"ஐயா, நாங்கள் இருவரும் கணவன் மனைவிதான் , ஆனால், அவர் என் மனைவியோ நான் அவரின் கணவனோ இல்லை, நாங்கள் எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும்,  ஊர் உலகத்துக்கும் தெரியாமல் கொண்டிருக்கும் வேறு விதமான உறவு, தயவுசெய்து எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்"

செய்வதறியாது வாயடைத்துப்போன அந்த முதலாளியால் ஒருகணம் அவரின் கண்களை அவராலேயே  நம்ப முடியவில்லை.

இந்த மனிதனுக்குள் இத்தனை முகங்களா?

Image result for pictures of masks


சரி, " இது உங்களுக்கு தவறென்று தெரியவில்லையா, கேவலம்  அல்லவோ , உங்கள் மனைவியோடு  வேறொருவர் இதுபோன்று உங்களுக்கு தெரியாமல் உறவு வைத்திருந்தால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா, இந்த மாதிரியான செயலை நீங்கள் இப்போதே கைவிட்டு சில விஷயங்களில் மட்டும் நேர்மையாக இல்லாமல் எல்லா விஷயங்களிலும் நேர்மையும் நாணயமும் நம்மை சார்ந்த குடும்பங்களுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற வாக்குறுதியை பெற்றுக்கொண்டு,

கடையின் பின்புற வழியாக அந்த "கணவனை" அனுப்பிவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து வெளியில் வந்து, வந்திருந்த காவலர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் தமது புகாரை திரும்ப பெற்று கொள்வதாகவும் கூறி, உண்மையான காரணத்தை சொல்லாமல், வேறு காரணங்களுக்கா தமது புகைப்பட ஆசையை கைவிடுவதாக கூறி எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு, தமது கன்னத்தில் கை வைத்து, இப்படியுமா....... மனிதர்களின் முகங்கள்?.... என சிந்திக்க ஆரம்பித்தவரின் சிந்தனை அடுத்து தம்மிடம் "ரெண்டு பிரியாணி பார்சல்" என்று கேட்டு வந்த "கணவன்" போல் காட்சிதந்தவரின் குரல் கேட்டு கலைந்தது.

"மடி சாய்ந்து இளைப்பாற- உன்
மனம் புகுந்து  சுகம்கான
படி பலவும் தாண்டுவேன் - உறவு
பலம் காண வேண்டுவேன்"

என கனவுகளோடு காரில் முக்காடு போட்டு அமர்ந்திருந்த அம்மணிக்கு ஓட்டலின் உள்ளே நடந்ததும்  இனி நடக்க போவதும் எதுவும் தெரியாது.

கல கலவென்ற ஈஸ்ட்மேன் கலராக கலையான முகத்தோடு சென்ற "கணவன்" இப்போது கரி பூசப்பட்ட முகமாக காருக்கு திரும்பினார்.

உறவுகள், எதார்த்தங்களை நினைவில் கொண்டு, கண்ணியமானதாக அமைந்திருந்தால் இதுபோன்ற அவபெயர்களில் இருந்து தப்பி இருக்க முடியும் அந்த "கணவனுக்கு"

மனம் ஒரு குரங்குதான், அன்பும் அரவணைப்பும் எங்கு அதிகமோ அங்குதான் இந்த மனம் தாவும் , சில வேளைகளில் சில  பலஹீனங்கள் கூட  பலமாய் வந்து ஆட்கொள்ளகூடும் இருந்தாலும், நடைமுறை எதார்த்தங்களை மனதில் திடமுடன் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி செல்வது அவசியமாகிறது. அது சிலருக்கு சில வேளைகளில் பெருத்த சவாலாகவும் அமைவதுண்டு.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடம்.

பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நண்பர்களின் கூடுகையின்போது அலசப்பட்ட விடயங்களுள் காற்றில் தவழ்ந்து வந்து காதில் பட்ட ஒரு செய்தியின் தாக்கம் இந்த பதிவின் ஆக்கம்.

(சிறுவயதில் ஒரு உபன்யாசத்தின்போது  ஒரு  பிரசங்கியார் சொல்ல கேட்டது இந்த கதை).

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

13 கருத்துகள்:

  1. சார்,
    தங்களின் இந்த தொடர் பதிவு வாசிக்க நல்லா இருந்தாலும்
    சற்று இந்த கடைசி பாகம் மட்டும்
    மண்டைக்கு எட்டல:-)
    அதுக்கு பசியும் ஒரு
    காரணமாக இருக்குமோ:-) ஹிஹிஹி.

    நா சாப்பிட போரேன் நீங்க மதிய உணவு சாப்பிட்டாச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ் , உங்களுக்கு பசி மட்டுமில்ல ஒரு வேலை வயசும் காரணமாக இருக்குமோ ? எதற்கும் போய் சாப்டுட்டு வந்து மீண்டும் படித்து பாருங்கள் அப்படியும் புரிய வில்லை என்றால் நம்ம தனப்பால் கிட்ட கேளுங்க விளக்க முடியுமான்னு.

      நான் சாப்டுட்டேன்- கேட்டதற்கு நன்றி.

      வருகைக்கு மிக்க நன்றி

      கோ

      நீக்கு
    2. மகேஷ்,

      சின்னப்பசங்க இத படிச்சிருக்க கூடாதோ?

      கோ

      நீக்கு
    3. இரவு உணவு முடிச்சாச்சு.
      அடுத்து தூங்கும் சமயம்.
      காலையில் வருகிறேன் சார்.
      எதாவது புரியுதானு பார்க்கலாம்:-)

      நீக்கு
    4. சின்னப்பசங்க இத படிச்சிருக்க கூடாதோ?//


      ஹி ஹி
      அப்போ இது 18++ பதிவா?
      சும்மா ஜோக்குக்கு:-)

      நீக்கு
  2. இதை இதைத்தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம்...மஹேஷின் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்த பதிலை வாசித்ததும் எழுதி இருந்ததை கட் செய்து போட்டோம்...

    பதிலளிநீக்கு
  3. உங்களை போன்றோர் அவ்வளவு சீக்கிரத்தில் யூகித்து விடுவீர்கள் என்பதால்தான் மகேஷுக்கு அப்படி பதிலளித்தேன் ....ஹி.... ஹீ ......எப்படி?

    வருகைக்கு மிக்க நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை போன்றோர் அவ்வளவு சீக்கிரத்தில் யூகித்து விடுவீர்கள் என்பதால்தான் மகேஷுக்கு அப்படி பதிலளித்தேன் ....ஹி.... ஹீ ......எப்படி?///

      ஆமா
      என்ன வெச்சு எதுவும் காமடி கீமடி பன்னலியே,
      ஹிஹிஹி:-)

      நீக்கு
    2. மகேஷ்,

      நாங்க காமடி எல்லாம் பண்ணமாட்டோம்,, ஒன்லி கீமடிதான்.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே,
    இது மன்னர்கள் காலம் அல்ல,
    நல்லதே நினைப்போம்,
    தாங்கள் நடத்திய பாடம் அருமை,
    பதிவு எல்லாம் நல்லா இருக்கு
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

      மன்னர்கள் காலங்களில் எப்படி? ஏதேனும் இலக்கிய சான்றுகள் இருந்தால் பதிவாக்குங்களேன்.

      கோ

      நீக்கு