பின்பற்றுபவர்கள்

புதன், 3 ஜூன், 2015

"வாட் டு யூ மீன்???"

ஐ மீன்....


நண்பர்களே,

நம்மில் எத்தனை பேருக்கு மீன்களை பிடிக்காது, அதுவும்  கண்ணாடி தொட்டிகளில்  துள்ளித்தவழும் அழகழகான வண்ண மீன்களை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.


சின்ன வயதிலேயே மீன்களின் மீது எனக்கொரு  தனியான - தணியாத காதல். 

எங்கள் ஊரின் நடுவில் இருக்கும் அந்த அகன்ற ஆற்றில் ஓடும்  இல்லை.... இல்லை ஓடிய நீரில் இறங்கி அம்மாவின் சேலை ஒன்றை  நானும் என் நண்பன் சந்திர சேகரனும் ஆளுக்கு ஒரு பக்கமாக - பக்குவமாக பிடித்து அதை அப்படியே தண்ணீரில் அழுத்தி சிறிது நேரம் கழித்து ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் ஒரு தினுசாக மேலே தூக்கி தண்ணீர் வடிந்தபின்னர் அதில் பார்த்தால் ஓரிரு சின்ன சின்ன மீன்கள் சிக்கி இருக்கும்.

அவற்றை ஆற்றங்கரையில் சிறிய வட்ட வடிவில் ஒரு குழிபறித்து அந்த குழியில் நிரம்பி  இருக்கும் நீரில் அந்த மீன்களை போட்டுவிட்டு மீண்டும் மீன்பிடிக்க ஆரம்பிப்போம்.

ஒவ்வொரு முறையும் மீன்கள் சிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனினும் தொடர்ந்து முயற்ச்சிப்போம்.

எங்களுக்கு கொஞ்சம் தூரத்தில்   ஆழமான பகுதியில் எங்களைவிட கொஞ்சம் வயதில்  மூத்த  சிலபேர் தூண்டில் வைத்து மீன்களை பிடிப்பார்கள், அவர்கள் பிடிக்க வந்த மீன்கள் பெரிய மீன்கள் அதுவும் அவற்றை உணவிற்காக பிடித்து கொண்டிருந்தனர். 

அவர்களின் தூண்டியலில் மாட்டும் அந்த மீன்களை அவர்கள் சொடுக்கி இழுத்து தூண்டி முள்ளில் சிக்கி இருக்கும்  அவற்றை  முரட்டுத்தனமாக அந்த கூறிய முள்ளில் இருந்து இழுத்து எடுக்கும்போது அந்த மீன்களில் வாயில் இருந்து வரும் ரத்தமும் , அவை ஏற்க்கனவே தண்ணீரில் இருந்து வெளி வந்ததால் ஏற்படும் வேதனையையும் கூடவே இப்போது இழைக்கப்படும் கொடுமையையையும் எனக்கு பார்க்கவே வேதனையாக இருக்கும்.

எனக்கு அப்போது தூண்டில்  போட்டு மீன் பிடிப்பவர்களை கண்டாலே கோபம்தான் வரும்

இறுதியாக மொத்தம் எத்தனை மீன்கள் (குஞ்சிகள்) இருக்கின்றனவோ அவற்றை இருவரும் சமமாக பிரித்து(ஒருவேளை ஒற்றை படையில் இருந்தால், இருப்பதிலேயே மிக மிக சிறிய மீனை மீண்டும் தண்ணீரிலேயே விட்டு  விடுவோம்)

நாங்கள் கொண்டு சென்றிருக்கும் காலி ஹார்லிக்ஸ் பாட்டலில் ஆற்று நீரை நிரப்பி அந்த மீன்களை வீட்டிற்கு கொண்டு வந்து எல்லோரிடமும் காண்பித்து அதை வீட்டில் வைத்து மண் புழு, சாதம், பொறி, பொட்டு கடலை   போட்டு வளர்ப்போம்.

Image result for PICTURE OF FISH IN A HORLICKS BOTTLE

அவையும் தங்களால் முடிந்த வரை போராடி அந்த ஹார்லிக்ஸ் பாட்டலில் தங்களின் வாழ்க்கையை நடத்தும். 

அந்த மீன்களை பற்றி  எங்களோடு படிக்கும் மாணவர்களோடு பேசி மகிழ்வோம்.

இவை எல்லாம் நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும், அந்த பழைய நினைவுகள் என் இதய ஆழத்தில் இருந்து மெல்ல நீந்தி என் நினைவின் மேல் விளிம்பில் இப்போது எட்டிப்பார்க்க காரணம்;

சில மாதங்களுக்கு முன்  சைனாவின் மிகபெரிய  அதே சமயத்தில் மிக அதிக அளவில்  மக்கள்தொகையும் கொண்ட உலக பொருளாதார (பண) மையாமாக திகழும்  புகழ்மிக்க  அதி நவீன தொழில் நுட்ப்ப நகரமாகவும் திகழும் ஷாங்காய் நகரிலுள்ள ஒரு பிரபல உணவு விடுதிக்கு சென்றிருந்தேன்.

Image result for SCENERY OF SHANGHAI

அந்த உணவு விடுதியின் வரவேற்பறையில் சுவரோடு சேர்த்து கட்டப்பட்ட  ஒரு பிரமாண்டமான கண்ணாடி தொட்டியில் பல வண்ண மீன்கள் பலவடிவில் பல உருவத்தில்  காட்சிபொருளாக  வைத்திருந்தனர்.

அவற்றை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் அத்தனை அழகு, வசீகரம்.

அவற்றை பார்க்கும்போது, ச்சே .. ஏன் இந்த மீன்களை இப்படி கண்ணாடி தொட்டியில் அடைத்து வைத்து அவற்றை ஒடுக்கி விடுகின்றனர்? தன்னிச்சையாக கடலிலும், ஆறுகளிலும், ஏரிகளிலும் சுற்றி திரிந்து மகிழ்ந்திருந்த இந்த மீன்களை இப்படி அடைத்து வைப்பது ஒரு வகையில் மீன்களுக்கு இழைக்கப்படும் கொடுமையே, என நினைத்துக்கொண்டே, சின்ன வயதில் நாம் செய்ததும் இது போன்ற கொடுமைதானே?

சரி அது ஏதோ சின்ன வயசில் அறியா பருவத்தில் தெரியாமல் செய்துவிட்டோம் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்த நேரத்தில், சர்வர் வந்து என்ன வேண்டும் சாப்பிட என கேட்க்க,மெனு கார்டில் இருந்த சில ஐட்டங்களை (காட்டி) சொல்லிவிட்டு, வரவேற்பறையில் இருந்த அந்த மீன்தொட்டியையே பார்த்துகொண்டிருந்தேன்.

அப்போது மீண்டும் அந்த மீன்களை குறித்த சிந்தனையும் அவற்றின் மீதான கரிசனையும் என் நெஞ்சில் நிறைந்தது.  

பார்க்க இத்தனை அழகும் வசீகரமுமாக இருக்கும் இந்த மீன்கள் ஏன் தான் இந்தமனிதர்களிடம் இப்படி சிக்கி தங்களது சுதந்தரத்தை தொலைத்துவிட்டு இப்படி காட்சிபொருளாக மாறிபோனதோ, அதைவிட கொடுமை இத்தகைய அருமையான படைப்பை, ஜீவ ராசியை கொன்று எப்படி மனிதனுக்கு சாப்பிட மனம் வருகின்றதோ?

என்னதான் வாழ்க்கை சுழற்சி, ஒன்றை தின்று தான் மற்றொன்று வாழும்படியாக இந்த உலக வாழ்வு அமைந்திருந்தாலும் இத்தகைய உயிரினத்தை கொல்லவும், தின்னவும் எப்படித்தான் மனசு வருகின்றதோ?  என யோசித்துகொண்டிருக்கும்போது, எனக்கான உணவு வந்தது,

அதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டே அந்த மீன்களையும்  பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சரி ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து, பணம்   செலுத்த அந்த சர்வர் கொண்டுவந்த அந்த சிறிய எந்திரத்தில் என் டெபிட் கார்டை நுழைத்துவிட்டு, உணவு நன்றாக இருந்தது,உங்கள் சேவையும் நன்றாக இருந்தது மிக்க நன்றி என சொல்ல அவரும் மகிழ்சிகொண்டார். (புரிஞ்சி  இருக்கும்னு நினைக்கின்றேன்) 

அப்படியே பேச்சுவாக்கில்  அந்த உணவில் கட்லட் போன்று ஒன்று கொடுத்தீர்களே ஆஹா .... ரொம்ப டேஸ்டா இருந்துச்சி, அதை எதில் தயாரித்தீர்கள் என கேட்க்க அவரும் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ஏதேதோ சொல்லி புரியவைக்க முயன்றும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டு, என்னை அவரோடு கொஞ்சம் வரும்படி கூறி அழைத்து சென்ற இடம், அந்த மீன்கள் இருந்த தொட்டியின் அருகில்.

Image result for shanghai aquarium

அதில் அவர் ஏதோ ஒன்றை சுட்டி காட்டி என்னமோ சொல்கின்றார்.

ஒருவேளை நான் கேட்ட கேள்வியை தவறாக புரிந்துகொண்டு, எனக்கு தொட்டியில் இருக்கும் மீன்களை காட்டுகின்றாரோ என நினைத்தேன் , பிறகுதான் தெரிந்தது, நான் சாப்பிட்ட கட்லட் அந்த தொட்டியில் இருந்த மீன்களுள் ஒரு வகை மீனான அந்த இரட்டை வாலும் நீண்ட மீசையும் கொண்ட மீன் இனத்து மீனின் மாமிசத்தில் செய்தது என்று,

அதுவரை மீன்களின் மேல் இரக்கமும் அனுதாபமும் கொண்டவனாக மீன் பிடிப்பவர்கள் மீதும் சாப்பிடுபவர்களின் மீதும் கோப படுபவனுமாக இருந்த எனக்கு அந்த சர்வர் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்ததால், சத்தமாக அவரிடம் கேட்ட கேள்விதான் இன்றைய பதிவின் தலைப்பு.

"வாட் டு யூ மீன்???"

Image result for PICTURE OF FISH CUTLETS

பின் குறிப்பு: சும்மா சொல்லகூடாதுங்க கட்லட் உண்மையிலேயே ரொம்ப சுவையாத்தான் இருந்துச்சுன்னு நான் உண்மைய சொன்னா நீங்க சொல்லுவீங்க  "யூ ஆர் சோ மீன்" என்று.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


9 கருத்துகள்:

  1. ரைட்டு... புரிந்து விட்டது...!

    சுவைக்கு முன்னால்.......?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க தனப்பால் , சுவைக்கு முன்னால், ... மச்சங்கள் பின்னால்........

      கோ

      நீக்கு
  2. "எங்கள் ஊரின் நடுவில் இருக்கும் அந்த அகன்ற ஆற்றில் ஓடும் இல்லை.... இல்லை ஓடிய நீரில் இறங்கி அம்மாவின் சேலை ஒன்றை நானும் என் நண்பன் சந்திர சேகரனும் ஆளுக்கு ஒரு பக்கமாக - பக்குவமாக பிடித்து அதை அப்படியே தண்ணீரில் அழுத்தி சிறிது நேரம் கழித்து ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் ஒரு தினுசாக மேலே தூக்கி தண்ணீர் வடிந்தபின்னர் அதில் பார்த்தால் ஓரிரு சின்ன சின்ன மீன்கள் சிக்கி இருக்கும்.




    அவற்றை ஆற்றங்கரையில் சிறிய வட்ட வடிவில் ஒரு குழிபறித்து அந்த குழியில் நிரம்பி இருக்கும் நீரில் அந்த மீன்களை போட்டுவிட்டு மீண்டும் மீன்பிடிக்க ஆரம்பிப்போம்."

    அழகு .. அழகு..

    இந்த மீனையும் ' மீன்' ஐயும் போட்டு வறுத்தெடுத்துட்டீங்களே...

    ஆமாம் சைனா ஹோட்டலில் சாப்பிட்டுக் கூடவா சந்தேகம் வரலை..

    ஹிட்ச்காக் ரேஞ்சுக்கு கேமரா கோணம், narration..

    ரசித்தேன்.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா இல்ல உங்களுக்கு, பிடிப்பவரைக் கண்டால் கோபம், மீனைக்கண்டால் கருணை, ஆனா சாப்பிட்டா சூப்பரா இருந்துச்சாம்.என்ன நடக்குது இங்க,
    இது தான் பசுத்தோல் போர்த்தாத கோ வா,,,,,,,,,,,,,,
    ஆனாலும் பதிவு சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஸ்வரிக்கு ஒரு செய்தி: சித்திரை பௌர்ணமியின் தங்கம் பதித்த அங்க அழகையும், வானத்து நீல வானில் மிதக்கும் தடாகத்தில் நீந்துகின்ற விண் மீன்களோடு கண்சிமிட்டி களிப்பெய்த, நாளும் பூமியின் நீர்நிலைகளில் நித்தம் ஏங்கி தவமிருக்கும் மச்சங்களுக்கு அச்சம் விளைவிக்கும்பொருட்டு, அவற்றை கோர கூர்முனை தூண்டில் முள் மறைத்து சிறு மண் புழுக்களின் வெட்டப்பட்ட உடல் நுழைத்து அப்பாவி மீன்களை ஏமாற்றி சிறைபிடித்து அதன் வாய் கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட நீரகற்றி மூச்சு திணரவைத்து கொன்று சுவைக்கும் கொடிய செயலுக்கு இன்றும் எதிர் குரல் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன், ஆனாலும் காரசாரமாக கம கம என்று வாசனை மூக்கை துளைக்கும்படியான மீன் குழம்பையும் மீன் வருவலையும் பார்த்து விட்டால், அதை சாப்பிட்டு முடிக்கும்வரை ஒரு யோகியின் மன நிலைக்கு சென்று, மனம் ஒருநிலை படுத்தி ,ஏறக்குறைய ஒரு ஆழ் நிலை தியான நிலையில் இருந்து நினைத்த காரியத்தில் முழு வெற்றியும் திருப்த்தியும் அடையும் வரை மீன்களை குறித்த "மீனிங் புல்" எண்ணங்களை கொஞ்சமும் வரவிடாமல் பார்த்துக்கொள்வேன், என்னங்க செய்றது மனசும் நாக்கும் வேற வேறையா படைத்து விட்டான் ஆண்டவன்.

      ஆனா சும்மா சொல்லகூடாதுங்க , நேத்து வச்ச மீன் குழம்புக்கு இருக்கிற சுவைக்கு , எனக்கு மட்டும் அனுமதி இருந்தால் அரபிக்கடலில் ஒரு அறுபது ஏக்கர கொழம்பு செய்து தரவங்களுக்கு தானமா எழுதிதந்துடுவேன்.

      என்ன குழம்பிட்டீங்களா?

      கோ

      நீக்கு
    2. அப்பாடா, எனக்கு மயக்கமே வருது. அதுசரி, அரபிக்கடலில் அறுபது ஏக்கர் மட்டுமா? முழுசா கொடுத்தாக்கூட மீன் குழம்பு உங்களுக்கு என்னிடம் இருந்து கிடைக்காது. ஆனா நான் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு துண்டு மீனோடு கொஞ்சம் குழம்பு,,,,,,,,,,,,,

      நீக்கு
  4. வாட் டு யூ மீன்?!!! வி மீன் இட்.....அதாங்க உங்க //பார்க்க இத்தனை அழகும் வசீகரமுமாக இருக்கும் இந்த மீன்கள் ஏன் தான் இந்தமனிதர்களிடம் இப்படி சிக்கி தங்களது சுதந்தரத்தை தொலைத்துவிட்டு இப்படி காட்சிபொருளாக மாறிபோனதோ, அதைவிட கொடுமை இத்தகைய அருமையான படைப்பை, ஜீவ ராசியை கொன்று எப்படி மனிதனுக்கு சாப்பிட மனம் வருகின்றதோ?// இந்த வார்த்தைகளைத்தானே கீதா தனது ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.....நீங்களும் அதற்கு இது ஒரு இயற்கை நியதி என்று சொல்லியதும் நினைவுக்கு வந்தது. யு மீன் இட் பட் யு டோன்ட் மீன் இட்!!! அஹஹஹஹஹ் சும்மா....நாங்கள் இதைத் தவறாகச் சொல்லவில்லை...தங்களைக் கலாய்க்கவே! கூடவே மைக்கேல் மதனகாமராஜன்படத்தின் வசனமும் நினைவுக்கு வந்தது....

    மீனைப் பற்றிய உங்கள் பதிவு சூப்பர்! வி மீன் இட்!!!!

    பதிலளிநீக்கு
  5. நண்பர்களே,

    உங்களின் இந்த மீனிங் புல்லான பின்னோட்டம் , வாட் டிட் யூ மீன் என்பதை புலபடுத்தியது.

    மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கனுமா என்ன?

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு