பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

"பர(ற)ந்த வான வீதியில்...." 2

நெஞ்சிலே வந்ததே.....

மெழுகொளி   ப(தொ)டர்கிறது.............

முதலில் இருந்து தெரிந்துகொள்ள : "பர(ற)ந்த வான வீதியில்...."

Image result for picture of students farewell

இப்படி மெழுகு வர்த்திகள் உருகுகின்றனவா, அல்லது அந்த அறையில் கூடியிருந்த அத்தனை பேர்களின் இதயங்கள் உருகுகின்றனவா என இனம் பகுத்தறிய கூடா வண்ணம்  அந்த நிகழ்ச்சியை ஒரு உணர்வுபூர்வமாக -உணர்ச்சிபூர்வமாக மாற்றிய அந்த பாடலும் அதன் இசையும் அதன் ராகமும் (குரலும்???)ஒலித்த வார்த்தைகள் இதோ உங்களுக்காக.


பல்லவி 1

அன்புள்ளம் கொண்ட எங்கள் 
ஆருயிர் நண்பர்களே!
என்றும் இனிதுடன், நீவீர்.. வாழ
 .... நாங்கள் வாழ்த்துவோம்..
அன்புள்ளம் கொண்ட எங்கள் 
ஆருயிர் நண்பர்களே......

சரணம் 1

பரந்த வான வீதியில் 
பறக்கும் பறவை கூட்டமே!
பாடித்திரிந்த நாட்க்கள்போல்
சேர்ந்து படித்த நினைவுகள் 
நெஞ்சில் வந்து மோதும்போது
சோகம் சூழ்ந்ததே
உங்கள் பிரிவை எண்ணி உள்ளம்
தவித்து வாடுதே....

ஆனால் இது வேண்டும்
வாழ்க்கை விளக்கேற்ற
தேவை ஒரு பாதை - புது
பயணம் தொடங்க..
பிரியும் போதும் தொடர்வதே 
உறவின் கீதமே......

பல்லவி 2

நெஞ்சில் ஒரு காயம்
உங்கள் பிரிவால் வந்த சோகம்
இனி என்று கூடுவோம்?
நினைவை இசையாய்
நாங்கள் மீட்டுவோம்.
அன்புள்ளம் கொண்ட எங்கள் 
ஆருயிர் நண்பர்களே....

சரணம் 2

இறைவன் வகுத்த பாதையை
இதயமதனில் ஏற்று நீர்
இறுதிவரையில் சென்றிட
இன்று உம்மை வாழ்த்துவோம்
அன்பு கருணை அடக்கம் கொண்டு
என்றும் வாழ்ந்துநீர்
பண்பு என்னும்  படகில் நாளும்
பயணம் செய்து நீர்
பார் போற்றிடும்  வண்ணம்
வாழ்க நீர் என்றும்,
பார் போற்றிடும் வண்ணம் 
வாழ்க நீர் என்றும்
உண்மை ஊக்கம் உம்மையே
என்றும் உயர்த்துமே....

மீண்டும் பல்லவி 2

நெஞ்சில் ஒரு காயம்
உங்கள் பிரிவால் வந்த சோகம்
இனி என்று கூடுவோம்
நினைவை இசையாய்
நாங்கள் மீட்டுவோம்

மீண்டும் பல்லவி 1

அன்புள்ளம் கொண்ட எங்கள் 
ஆருயிர் நண்பர்களே!
என்றும் இனிதுடன், நீவீர்.. வாழ
 .... நாங்கள் வாழ்த்துவோம்..
அன்புள்ளம் கொண்ட எங்கள் 
ஆருயிர் நண்பர்களே......

ஆமாம் இந்த பாடலின் ராகம் என்ன?

இசைஞானி இளையராஜா இசை அமைத்த , இதய கோயில் திரைப்படத்தில் வரும் , " இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்"  என்ற பாடலின் ராகம் தான்.  பாடி பாருங்களேன்.


இந்த பாடல் முடியும் வரை அமைதிகாத்திருந்த அத்தனை மாணவர்களும் குறிப்பாக இரண்டாம் ஆண்டு மாணவ தோழர்களும் தோழியரும் சத்தமாக விசும்பி அழும் ஓசை அந்த அறை முழுதும் சூழ , இரண்டாம் ஆண்டு மாணவ தலைவர் தமது நன்றியினை தெரிவித்து பேசும்போது, தங்கள் வாழ்நாளில் அந்த திரை இசை பாடலை எங்கு எப்போது கேட்க்க நேர்ந்தாலும் இந்த பிரிவு உபசார நிகழ்ச்சிதான் எங்கள் கண் முன் வந்து நிற்கும் என்று தன் கண்முன் வந்து நின்ற கண்ணீரை துடைத்தவண்ணம் தழுதழுத்த குரலில் கூறி நன்றி சொன்ன அந்த நிகழ்ச்சியினை என் கல்லூரிகால நண்பனின் தொலைபேசி அழைப்பு எங்கள் நினைவலைகளை அழைத்து நினைப்பூட்டி சென்றது.

வந்திருந்த அனைவரும் குறிப்பாக   இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அந்த பாடல் எழுதப்பட்ட  கையெழுத்து பிரதியை அலுவலக ஊழியரின் உதவியுடன்  பிரதி எடுத்து பத்திரமாக எடுத்துசென்றதும் நினைவில் நிழலாடுகின்றது.

Image result for picture of students farewell

அன்று அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட உங்களில் யாரேனும் இந்த பதிவை படிக்க நேர்ந்தால் தயவாக என்னை தொடர்புகொண்டு  தெரிவித்தால் மிகவும் மகிழும் எந்தன் நெஞ்சம்.

(பாடல் தேவைபடுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம், சன்மானம் எல்லாம் நமக்குள் எதற்கு?)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

11 கருத்துகள்:

  1. அருமையான பாடல், அழகிய வார்த்தைகள், தங்கள் நினைவுகள் மீட்ட பதிவு அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. கோ, ஊரும், கல்லூரியும் சொன்னால் நலம், ஆனால் நான் படிக்கல, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேர சொன்னாலும் ஊற சொல்லக்கூடாதுன்னு எங்க கொள்ளுபாட்டி, எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டு போய்ட்டாங்க, அதேபோல "யாகாவாராயினும் பேர் காக்கா" அப்படின்னு எங்க கொள்ளுத்தாத்தவும் சொல்லி இருக்கின்றார்.

      நீங்கஎன்னோடு படிக்கலன்னு எனக்கு தெரியும் ஏன்னா உங்க அளவுக்கு நான் (பாட்டி)வயதானவன் அல்லவே.

      பாட்டு பாடி பார்த்தீர்களா?

      கோ

      நீக்கு
    2. பாட்டியின் குரலில் பாடினால் நல்லா இருக்காது, தங்கள் வரிகள் வேதனைப் பட வேண்டாம், பாட்டிக்கும் தாத்தாவுக்கும் நன்றி.

      நீக்கு
    3. பதிவினை படித்து விட்டீர்கள் என்பதை ஒப்புகொள்ளும் நீங்கள் ரகசியமாக மனதுக்குள் பாடியும் பார்த்ததை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கின்றீர்கள்.

      நீங்கள் பாடிய அந்த பாடல் இங்கே வரை பாய்ந்து வந்து என் செவி சேர்ந்ததை உணர முடிந்தது.

      குரலில் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது, என்ன செய்வது வயசானால் அப்படித்தான்.

      பாட்டி சரி, அது யார் தாத்தா?

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. பழய நினைவுகள் மீட்டு எழுதுவதில் பெயர் போனவர் ஆச்சே நீங்க.
    பிரிவு உபசார நிகழ்ச்சி கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ் , பாடி பார்த்தீர்களா?.

      நீக்கு
  4. அதே மெட்டில் பாடிப் பார்த்தேன்... கலங்கினேன் கண்ணீருடன்... (பழைய நினைவுகள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பல்,

      பதிவினை படித்தும் பாடியும் ரசித்தமைக்கும், அந்த நாள் ஞாபக படகில் பயணித்து உகுத்த கண்ணீருக்கும் எமது பதிவு காணிக்கை ஆகிறது.

      நன்றி

      நீக்கு