Followers

Thursday, June 18, 2015

"பர(ற)ந்த வான வீதியில்...."

அந்த நாள் ........


நண்பர்களே,

முதலாமாண்டு முதுகலை மாணவர்கள் இணைந்து , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சியின்போது நடந்த அந்த நினைவுகளின் சில பகுதிகளை இங்கே இந்த நேரத்தில் நினைவுகூர என்னை தூண்டிய ஒரு விஷயம்:

என்னோடு ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்று படிப்பிற்கு பின் அவரவர் பல திசைகளை நோக்கி தங்களது வாழ்க்கை பயணங்களை தொடரும் ஒரு கட்டாயத்தின்பேரில் , அன்று முதல் இன்றுவரை பலரின் தொடர்பு அற்றவனாக இருந்த எனக்கு, கடந்த வாரம் தொலை தூரத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்து என்  கண்களை குளமாக்கியது.

Image result for pictures of phone conversation

 படிக்கின்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து நட்பை பரிமாறி கொண்டும்  கொண்டாடிகொண்டும் இருந்த நாங்கள் இருவரும் ஒரு கால கட்டத்தில் கால சூழ்நிலைகளின் தவிர்க்க முடியாத கட்டாயத்தின் பேரில் ஒருவரை ஒருவர் பிரிந்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என் இணைப்பில் வந்தவர் , என் பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் உங்களில் பலருக்கு ஏற்க்கனவே அறிமுகமானவர்தான்.

அவர்களை குறித்து அறிந்துகொள்ள இதை சொடுக்குங்கள்.


அவரோடு நேரம் போனதே தெரியாமல் அளவலாவிகொண்டிருந்த மணித்துளிகளில் பரிமாறிகொண்ட கடந்த கால நிகழ்வுகள் ஆயிரம் ஆயிரம்.

அவற்றுள் ஒன்றுதான், முதலாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் நடத்திய இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சி.

ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பள்ளியும் இணைந்திருந்ததை ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

அப்போது நடக்கு அந்த இரண்டாம் ஆண்டு அண்ணன்மார்களின் பிரிவு உபச்சார நிகழ்வில் அந்த 40 அண்ணன்களும் தங்கள் கைகளில் எரியும் மெழுகு வர்த்திகளை ஏந்திய வண்ணம் உறுதிமொழிகள் கூறி அந்த மெழுகு ஒளியை தமது அடுத்த தலைமுறை மாணவ தம்பிகளாகிய முதலாமாண்டு அண்ணன்களுக்கு கையளித்து நமது பள்ளியின் மகத்துவ மேன்மையினையும், மாண்பையும், சிறப்பையும் எங்களுக்கு பின் நீங்கள் தான் கட்டி காக்க வேண்டும் எனும் நோக்கில்  ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து தமது அன்பை வெளிபடுத்தும் அந்த நிகழ்ச்சி என் ஆழ் மனதில் அப்படியே படிந்திருந்ததினால், அதுபோன்ற ஒரு நிகழ்வை இங்கு எனது மூத்த நண்பர்களுக்கு நடத்தவேண்டும் என்று என் மனம் வாஞ்சித்தது.

என் மன ஓட்டத்தை மற்ற சக மாணவர்களோடு விவாதித்து அந்த முன்மொழிவை துறை தலைவரிடம் எடுத்து சென்றேன்.  அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டு அனுமதியும் தந்துவிட்டார்.

விழாவன்று, அனைத்து முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களும் தங்களுக்கு ஒதுக்கபட்டிருந்த இடங்களில் வகுப்பு வாரியாக ஆளுக்கொரு பக்கமாக ஒரே வகுப்பறையில் கூடிஅமர்ந்திருந்தோம். 

எங்களுக்கு முன்னாள் அமைக்கபடிருந்த மேடையில் , கல்லூரி முதல்வர், முதுகலை  துறை தலைவர், மற்றும்  ஓரிரு பேராசிரியர்கள் அமர்ந்திருக்க, கல்லூரி முதல்வர் குத்து விளக்கேற்றி தமது வாழ்த்துரை வழங்கி , பின்னர் இரண்டாம் ஆண்டு மாணவருள் முதல் வரிசையில் முதலாவதாக அமர்திருந்த மாணவரை அழைத்து அந்த மாணவரின் மெழுகுதிரியை மேடையில் ஒளிர்ந்துகொண்டிருந்த  குத்துவிளக்கில் பற்றவைத்து கொடுக்க ,

அந்த மாணவர் அதை அவர் அமர்ந்திருந்த வரிசையில் அவருக்கு பக்கத்து மாணவரின் மெழுகில் பற்ற வைக்க இப்படியே அந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவரின் கைகளிலும் மெழுகு ஒளிர்ந்துகொண்டிருக்கையில்.....

நிகழ்ச்சி நிரலின் ஒழுங்குப்படி மேடைக்கு வந்த நான் இரண்டாம் ஆண்டு மாணவர்களை அப்படியே தங்களின் வலது பக்கமாகவும் முதலாமாண்டு மாணவர்களை அவர்களது இடது பக்கமாகவும்  ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்க்கும் வண்ணம்  திரும்பும்படி வேண்டிக்கொண்டு அவர்களின் மெழுகு ஒளியை முதலாமாண்டு மாணவர்களின் மெழுகுக்கு ஒளிஊட்டும்படி அன்பாக வேண்ட இப்போது முதலாமாண்டு மாணவர் ஒவ்வொருவராக  தங்கள் மெழுகிற்கு ஒளி பெற்றுகொண்டிருக்கையில்.......

Image result for students with candles


மேடையில் இருந்த நான், என் மாணவ நண்பர் பின்னணி  இசை மீட்ட, அமைதியான குரலில் இயல்பிற்கு கொஞ்சம் விலகி சோக ராகத்தில் ஒரு பாடல் பாடி முடிக்கவும் அந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மெழுகோடு போட்டிபோட்டுக்கொண்டு கண்ணீர் உகுத்த அந்த காட்சி பார்த்த முதலாமாண்டு மாணவர்களாகிய எங்களுடன் சேர்ந்து நெஞ்சுருக நின்றிருந்தனர் மேடையில் அன்றிருந்த பெரியவர்களும்.

அது என்ன பாடல்?

கொஞ்சம் உணர்ச்சிவசபட்டதால் இப்போது எனக்கு சிறிது அவகாசம் தேவைபடுகின்றது  நிகழ்ச்சியை தொடர.

எனவே மீதத்தை நாளை தொடர்கின்றேன்.

அதுவரை, மெழுகுவர்த்தி  "எரியட்டும்", எழிலார்ந்த ஒளியினை நம் உள்ளங்களில் அவை "எறியட்டும்".

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ 7 comments:

 1. கோ, தங்கள் பழய நினைவுகள் மீண்டதற்கு நன்றிகள்.மீதி நிகழ்வுகளுக்காக, நாளைவரை,,,,,,,

  ReplyDelete
 2. வருகைக்கும் உடனடியான பின்னூடத்திற்கும் மிக்க நன்றி?

  அடுத்த பாகம் இதோ விரைவில்.....அதுவரை மெழுகொளியில் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் என்ன பாட்டாக இருக்கும் என்று..

  கோ

  ReplyDelete
 3. அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தனப்பால்,

   இதோ இப்பவே எழுதுகிறேன்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   Delete
 4. மனதை நெகிழ வாய்த்த பதிவு ... உணர்ந்து படித்தேன். தாம் அறிந்த நண்பரை நானும் அறிவேன். சென்ற வாரம் நண்பரை அவர்தம் குடும்பத்தோடு சந்தித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. அந்தா பாடலை நான் அறிவேன்.. அருகே இருந்து கேட்டதினால்..
  அது சரி.. நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல் தமக்கு நினைவு இருகின்றதா?

  ReplyDelete
 5. மனதை நெகிழ வாய்த்த பதிவு ... உணர்ந்து படித்தேன். தாம் அறிந்த நண்பரை நானும் அறிவேன். சென்ற வாரம் நண்பரை அவர்தம் குடும்பத்தோடு சந்தித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. அந்தா பாடலை நான் அறிவேன்.. அருகே இருந்து கேட்டதினால்..
  அது சரி.. நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல் தமக்கு நினைவு இருகின்றதா?

  ReplyDelete
 6. வருகைக்கு மிக்க நன்றி,

  கண்டிப்பாக நினைவிருக்கின்றது, அடுத்த பதிவில் அதுதான், அதுவரை கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.

  கோ

  ReplyDelete