பின்பற்றுபவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

குடியரசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

 வாழ்த்துக்கள்!

"பிறந்த நாள்.... இன்று பிறந்த நாள்....  நாம்
பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் 
மறந்த நாள்.....
ஹாப்பி பர்த்டே டூ யூ...."


இந்த விளம்பரம் இலங்கை வானொலியில் - இலங்கை கூட்டுஸ்தாபனம் ஆசிய சேவை இரண்டு  எனும் அலை வரிசையில் இருந்து  பல வருடங்களாக வந்துகொண்டிருந்தது, பலருக்கு நினைவிருக்கும்.

அதில் அன்றைய  நாளில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகள் பெரியவர்களுக்கு , அழகிய தமிழ் உச்சரிப்புடன் வாழ்த்து சொல்வார்கள், கூடவே, பிறந்த நாள் கொண்டாடும் நபர்களின் உறவினர்களும் வாழ்த்துவதாக கூறி, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி தங்கை, மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா , சித்தி,அம்மம்மா, அப்பப்பா...பாட்டி, தாத்தா ஆகியோரும் உங்களை வாழ்த்துகிறார்கள் என்று சொல்லிவிட்டு, "ஹாப்பி பர்த்டே"  என சொல்லி நல்ல தொரு பாடலையும் ஒலிபரப்புவார்கள்.

  சரி இப்போ எதெற்கு இத பத்தி பேசுகிறார் என யோசிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

கடந்த வாரம் எழுதிய  "பார்டி உஷார்|" பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த பிறந்த நாள் கொண்டாடிய சிறுவனுக்கு இன்று தான் பிறந்த நாள் எனினும் கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சில நாட்களுக்கு முன்னமே பார்டி ஒழுங்கு செய்யப்பட்டது.

எனவே அந்த சிறுவனுக்கு இன்றைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதோடு, இன்னும் இரண்டு பேர்களுக்கும் இன்று நமது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவோம்.


யார் , அல்லது  எது பிறந்தாலும் , பிறந்த அந்த நாளில் இருந்து பன்னிரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஆண்டு வரும் அதே நாள் பிறந்த நாளாக கருதப்படும், வாழ்த்துக்களும் கொண்டாட்டங்களும் நடத்தப்படும்.

அவ்வகையில்,கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் பிறந்த நமது இந்திய குடியரசு தினத்தின் 66 வது பிறந்த தினமான இந்த மாதம் 26 ஆம் நாளை நினைவு கூர்ந்து நமது இந்திய திரு நாட்டுக்கு நமது இதயம் கனிந்த குடியரசு பிறந்த நாள் வாழ்த்தை உளமார தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


ஊர் சிரித்தது என்றால் ஊரா சிரிக்கும்?, ஊர் மக்கள் சிரித்தார்கள் என்றுதானே அர்த்தம்.

அது போல இந்திய திரு நாட்டுக்கு குடியரசு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றால் நமது இந்திய மக்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றுதானே அர்த்தம்.

"என் இனிய பாரத மக்களே உங்கள் பாசத்துக்குரிய கோ வின் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்"

ஜெய் ஹிந்த்!!


சரி அடுத்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாருக்கு?

அது இரண்டு பெண்களுக்கு.

இவர்கள் இருவரும் ஒட்டி பிறக்காத இரட்டை சகோதரிகள்.

எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் இணைந்தே  எந்த சூழ்நிலையிலும் ஒன்றாகவே வாழ்ந்து வந்த  இவர்கள், பெரியவர்களாகி தனி தனி குடும்பங்களாக பிரிய நேர்ந்த போதும் தங்களது வீடுகள் அடுத்தடுத்தவீடுகளா  இருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.

இப்படி வாழ்ந்து வந்த இந்த இரட்டை சகோதரிகள் தங்களின் ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒன்றாக ஒரே கேக்கை வெட்டியே பிறந்த முதல் ஆண்டு முதல் கொண்டாடி வருகின்றனர்.

இப்படியே இவர்கள் கடந்த பத்தாண்டுகள் அல்ல, இருபது ஆண்டுகள் அல்ல, முப்பது, நாற்பது, ஐம்பது ஆண்டுகள் அல்ல கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர்கள் இணைந்து கொண்டாடியது எத்தனையாவது பிறந்த நாள் தெரியுமா?

சொன்னால் ஆச்சரிய படுவீர்கள்........

1911 ஆண்டு பிறந்த இவர்கள்  கடந்த 102 ஆண்டுகளாக தங்களது வீட்டில் தங்களது பிறந்த நாட்களை கொண்டாடிய , இங்கிலாந்திலேயே அதிக வயதுடைய இரட்டை சகோதரிகளான பிளாரன்ஸ் டேவீசும், க்ளநீஸ் தாமசும் இந்த ஆண்டு அடுத்தடுத்த அறைகளில் தங்கி வசித்து - வாழ்ந்து வரும் ஒரு முதியோர் பாதுகாப்பு மற்றும் நர்சிங் ஹோமில் தங்களின் அப்பா, அம்மா, அம்மம்மா,அப்பப்பா, தாத்தா பாட்டிகள் தவிர்த்து(!!!!) ஏனைய பிள்ளைகள், உறவினர்கள்,  நண்பர்கள், சக விடுதி முதியவர்கள், முதியோர் இல்லத்து ஊழியர்கள் புடை சூழ தங்களது 103 ஆம் பிறந்த நாளை மிக உற்சாகத்தோடும், சந்தோஷத்தோடும் , மகிழ்ச்சியோடும் கொண்டடி மகிழ்ந்தனர்.

அவர்கள் இன்னும் பல பிறந்த நாட்களை இதேபோல் மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் இணைந்து கொண்டடி  மகிழ  நாமும் நமது வாழ்த்துக்களை சொல்லலாமே.


"Many  More  Happy  Returns  of The  Day"  

"பிறந்த நாள்.... இன்று பிறந்த நாள்....  நாம்
பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் 
மறந்த நாள்.....
ஹாப்பி பர்த்டே டூ யூ...."


மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்:

  1. பார்ட்டி பையனுக்கு எங்கள் பிலேட்டட் வாழ்த்துக்கள்! ஹாப்பி இன்று முதல் ஹாப்பி!!!

    யம்மாடியோவ் 103 வது பிறந்த நாளா! அடி ஆத்தீ....இன்னும் பல கொண்டாடி கின்னஸில் இடம் பெற வாய்ப்புண்டோ?!!!! வாழ்த்துவோம்!

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்கினிய நண்பர்களே,

    உங்கள் வாய் முகூர்த்தம் போல அந்த பா(ர்)ட்டிகள் கின்னஸ் சாதனை படைக்கும் அளவிற்கு இன்னும் பல ஆண்டுகள் இப்புவியில் ஆரோக்கியத்துடன் வாழட்டும். வாழ்த்தும் உங்களைபோல.

    ஆமாம், அடி ஆத்தீ... என்றால் என்ன?

    வருகைக்கு மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ.

    பதிலளிநீக்கு