பின்பற்றுபவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

கேடி பில்லா - கில்லாடி ரங்கா.

ஊனம் - ஒரு போர்வை- ஒரு பார்வை!!

இது ஏதோ திரை பட விமர்ச்சனமா?

அப்படி என்றால் கூட இது ரொம்ப தாமதமான விமர்ச்கானமா இருக்குமே.
அந்த படம் வந்து, வெந்து, ஓடி , ஆடி ஓய்ந்து போன பிறகு எதற்கு அதற்க்கு இப்போ விமர்சனம்.


 இப்படி நீங்களே யோசிக்கும்போது நான் மட்டும் யோசிக்காம இருப்பேனா?

இந்த பதிவின் தலைப்பு மட்டும் தான் திரைப்பட பெயர் மற்றபடி சொல்ல வர விஷயம் வேற.

சில நாட்களுக்கு முன்  காவல் துறையால் வலை வீசி தேடப்பட்டு வரும் இரண்டு கில்லாடிகளை பற்றிய சம்பவம் தான் இந்த பதிவு.

ஒருவர் உடல் ஊனமுற்றவர், சர்க்கர வண்டியில்,பார்பவர்கள் அனுதாப படும் வகையில்  அமர்ந்திருக்க மற்றவர் அவருக்கு உதவியாக பார்பவர்கள் பாராட்டும்  வகையில் அந்த சர்க்கர வண்டியை தள்ளிக்கொண்டு ஒரு பல சரக்கு அங்காடிக்குள் நுழைகின்றனர்.

அப்படியே தங்களுக்கு தேவையான பொருட்கள் எங்கே அடுக்கி வைக்கபட்டிருக்கின்றன என பார்த்துக்கொண்டே, ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், அங்கே பொருட்களை பார்பதுபோல இருந்துவிட்டு , அந்த பக்கம் யாரும் வராத சமயமாக பார்த்து, மேல் செல்பில் அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களை வீல் சேரில் இருப்பவர் எடுத்து தனது "குளிர்கால" கோட்டுக்குள் அடுக்குகின்றார். (குளிர் காலத்தில் இங்கே பல அடுக்கு குளிர் தடுப்பு பாதுகாப்பு ஆடைகளை அணியவேண்டி இருக்கும்).

வீல் சேரில் அமர்ந்திருப்பவர் எப்படி மேல் செல்பில் இருக்கும் பொருட்களை எடுக்க முடியும்?

ஏன் முடியாது, எழுந்து நின்றால் அந்த செல்ப் இவரின் மார்பு உயரம் தானே, மேலும் அதற்கும் மேல் இருக்கும் செல்ப்கூட அவருக்கு எட்டுமே, எப்படி ? எப்படி என்றால், அவர் உண்மையிலேயே, நடக்க முடியாதவரோ, அல்லது வீல்சேர் உபயோகிப்பவரோ, அல்லது அவரோடு வந்தவர் இவரின் உதவியாளனோ அல்ல.

இருவரும் முழு உடல் ஆரோக்கியமும் கட்டு+ கட்டு மஸ்தான உடலமைப்பும் உசேன் போல்ட்டின் வலிமையையும் கொண்ட கால்களையும் கைகளையும் கொண்டவர்கள்.

,
அவர்கள் இருவரும் தான் "கேடி பில்லாவும் கில்லாடி ரங்காவும்".

தங்களுக்கு வேண்டிய பொருட்களை, மது பாட்டில்களை  எடுத்து தங்களின் கோட்டுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கடையை விட்டு "நடையை"!!!! கட்டினார்கள் வந்த முறையிலேயே யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில்.

கடை ஊழியர்கள்  இவர்கள் எதுவும் வாங்கவில்லை போலும் என்று அலட்ச்சியமாக இருந்துவிட்டார்.

மாலையில் கடை அடைக்கும் நேரத்தில் அன்றைய சி சி டி வின் பதிவுகளை பார்க்கும் போது திடுக்கிட்டார் , வந்தவர்கள் செய்திருந்த  லீலைகளை கண்டு. 

திருடப்பட்ட பொருட்களில் விலை உயர்ந்த மது பாட்டில்களும் அடங்குமாம்.

இப்போது அவர்கள் போலீசுக்கு பயந்து தலை மறைவாகி இருக்கின்றனர், கூடிய விரைவில் பெரிய டி வி யில் அவர்களது புகைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.

இது போன்று உடல் ஊனத்தை ஒரு போர்வையாக பயன்படுத்தி சமூக விரோத குற்ற செயல்களில் ஈடுபடும் இரக்கமற்ற மனிதர்களின் செயலால், அப்பாவிகளான பல ஊனமுற்றோரும் சந்தேக பார்வைக்கு தப்ப முடியாமல் போகின்ற அவல நிலைமையை என்ன சொல்வது.

இவர்களை போன்ற மன ஊனம் கொண்ட மனிதரை மனிதர்கள் என்றுகூட சொல்ல மனம் ஏனோ வர வில்லை

யாரைத்தான் நம்புவதோ  "போதை" நெஞ்சம்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

  1. நல்ல சமூக விழிப்புணர்வு பதிவுதான் நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கில்லருக்கு,

    உங்களைபோன்ற சமூக நலனில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்களால் இந்த மாதிரியான செயலை ஏற்றுகொள்ள முடியாதுதான், நானும் வருத்தப்பட்டேன், ஏன் இவர்கள் இந்த போர்வைக்குள் நுழைந்தனர் என்று.

    வருகைக்கு மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கேடிகள்! ஊனமுற்றவர்களைக் கேவலப்படுத்தும் இவர்கள் மனிதர்களே இல்லை. இந்த இடுகை எங்களுக்காகத்தானே.....அது சரி உங்கூர் போலீஸ் எங்களை இன்னும் அணுகவில்லையே! ம்ம்ம்ம் இது ஜுஜூபி கேஸ் என்று எங்களிடம் வரவில்லை போலும்.....

    பதிலளிநீக்கு
  4. அன்பிற்கினிய நண்பர்களே,

    அப்போ ....பாட்டில்களை சுட்டது நீங்கள்தானோ? மேலும் இது ஜுஜிபி மேட்டர் என்பதால் உங்க ஊர் டிஜிபி கிட்ட சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லி சிபாரிசு அனுப்பப்பட்டதாக செய்தி வந்திருக்கு.

    எச்சரிக்கை.

    இந்த களவில் கூட்டு சேராத நண்பன்

    கோ

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு பிடித்திருந்ததா, தலைப்பு அருமை என்று சொல்லிவிட்டு பதிவை குறித்து ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே?

      வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

      கோ

      நீக்கு