Followers

Saturday, December 31, 2016

பன்னீரும் பணிவும்!!

   செல்வமும் செழிப்பும்!!
.
நண்பர்களே,

ஆண்டாண்டு காலமாக நமது இந்திய திரு நாட்டின் பாரம்பரிய வழக்கமாக நடைமுறையிலிருக்கும் ஒரு மரபு,
விழாக்களுக்கு, திருமண வீடுகளுக்கு வருபவர்களை பன்னீர் தெளித்தும் சந்தானம் பூசியும் கற்கண்டு கொடுத்தும் வரவேற்கும் ஒரு அழகான முறை.

வருகின்ற விருந்தினர், எத்தனை அழகான, விலை மதிப்பு மிக்க வண்ண மயமான ஆடை அலங்காரங்கள் செய்திருந்தாலும் அல்லது சாதாரண உடை அணிந்து வந்திருந்தாலும், அல்லது விலை உயர்ந்த வாசனை திரவியங்களை பூசி இருந்தாலும் , பாகுபாடின்றி அனைவரையும் பன்னீர் தெளித்து வரவேற்பதை நாம் பார்த்திருப்போம்- அனுபவித்தும் இருப்போம்.

அதே போல, திருமணத்தை நடத்துபவர்கள் எத்தனை லட்சம்,அல்லது கோடிகளை செலவழித்து திருமண விழாக்களை நடத்தினாலும் குறைந்த செலவில் வாங்கப்படும் எளிய பன்னீரையே தெளித்து வரவேற்பது வழக்கம்.

அப்படி அந்த பன்னீரில் என்ன இருக்கின்றது.

அதில் இருக்கும் வாசனையை தவிர்த்து, அதில் எளிமை இருக்கின்றது, பணிவு இருக்கின்றது, தாழ்மை இருக்கின்றது, எல்லோரையும் சமமாக மதிக்கும் தன்மை இருக்கின்றது, அடக்கம்  இருக்கின்றது, எல்லோரையும் எளிதில் சேர்ந்துவிடும் குணம் இருக்கின்றது, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக - எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கின்றது.

எனவே தான் எத்தனை பணக்காரர்களாக இருந்தாலும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்கள் மீது இந்த எளிய அதே சமயத்தில் எல்லா நற்குணங்களையும் தன்னகத்தே கொண்ட இந்த பன்னீரை தெளித்து வரவேற்கிறார்கள்.

நாமும் இந்த 2016 ஆம் ஆண்டு நமக்கு ஏற்பட்ட கண்ணீர் உகுக்கும் சோக நிகழ்வுகள் அத்தனையின் வலிகளையும் வடுக்களையும் மறந்து வரவிருக்கும் புத்தாண்டாம் 2017 ஆம் ஆண்டை பன்னீர் தெளித்து வரவேற்போம்.

நம் வாழ்வின் எல்லாநாட்களும்,பன்னீரின் தன்மைபோல, எல்லோரையும் சமமாக மதித்து, எல்லோரிடமும்  அன்பையும் நட்பையும் எந்த பாரபட்சமும் இன்றி பாராட்டி மகிழ்வோம்.

வருகின்ற புத்தாண்டு நம் ஒவ்வொருவருக்கும் நம் நாட்டிற்கும் புதிய நன்மைகளை, ஆரோக்கியங்களை ,செல்வங்களையும் செழிப்பையும் வளமையையும் நல்ல விளைச்சலையும் கொண்டு வரட்டும் என இறைவனை வேண்டி உங்கள் அனைவருக்கும் "இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை" தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

8 comments:

 1. let us also hope that panneer may not give up his present position to the lady....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே . ஆமாம் நீங்க எந்த பன்னீரை ,எந்த லேடியை சொல்கின்றீர்கள்?

   புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   கோ

   Delete
 2. பன்னீரைப் பற்றி நுணுக்கமானவற்றை அறிந்தேன். ஒரு விழாவில் முக்கியமான விருந்தினர், (அரசியல் நிலையில் முக்கியப்பொறுப்பில் உள்ளவர்) வருகையின்போது அவரை வரவேற்கும்போது எவ்வாறு பன்னீர் தெளிக்கவேண்டும் என்று வரவேற்புக்குழுவினரான எங்களிடம் கூறப்பட்டது. விருந்தினரின் தலைக்கு மேல் ஓங்குவது போல் இருக்கக்கூடாதாம். அதிகமாக நனைத்துவிடக்கூடாதாம். அதே சமயம் தெளிக்கும்போது பன்னீர்ச்செம்பு கீழே விழுந்துவிடக்கூடாதாம். தலைக்கு மேலோ, அங்குள்ளோருக்கு முன்பாகவோ குலுக்கி தெளிக்கக்கூடாதாம். இதைப் படிக்கும்போது அந்த நினைவு வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   தங்களின் வருகைக்கும் பன்னீர் தெளிப்பு குறித்த வளமான செய்தி பகிர்விற்கு மிக்க நன்றிகள்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்.

   கோ

   Delete
 3. பன்னீர்..... :)

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் வாழ்த்துக்கள் வெங்கட் . வருகைக்கு மிக்க நன்றியுடன்...

   கோ

   Delete
 4. ஆஹா இம்புட்டு இருக்கா பன்னீர் தெலிப்பதன் பேக்கில்?

  #திருமணத்துக்கு கண்டிப்பா பன்னீர் தெலிச்சிடனும் டோய்!

  2017 டிசம்பருக்குல்ல முடிக்க லச்சியம்; 2018 டிசம்பருக்குல்ல முடிக்க நிச்சயம்!!!

  மை மைண்ட் வாயிஸ்:
  என்ன அவசரம் பார்த்தேலா சார்? வேலைக்கு போக ஆரம்பிச்சு முலுசா ஒரு மாதம் கூட முடிக்கல அதுக்க்க்குல்ல...


  --

  வங்கிக்கு போக ஆரம்பிச்சதில் இருந்து இப்போதான் பதிவுகள் வாசிக்க சமயம் கிடைச்சிருக்கு.

  வீட்டில் எல்லோரும் நலம்தானே?
  புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. மகேஷ்,

   அதது காலாகாலத்துல நடக்கணும்னு பெரியவங்க சொல்லி வச்சதில ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்குமா? படிப்பு, வேலை, திருணம், குழந்தை ,குடும்பம்.. என்பதன் வரிசையை மாற்றமுடியுமோ? சீக்கிரம் பன்னீர் தெளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

   வாழ்த்துக்கள் உங்களுக்கு.

   கோ

   Delete