பின்பற்றுபவர்கள்

புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டு!

வாழ்த்துகள் !!

நண்பர்களே,


உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.   


"வருடந்தோறும் வழக்கமாக  வருவது புத்தாண்டு- வந்து 

பெரும் மகிழ்வை பெரும்பாலோருக்கு தருவது புத்தாண்டு.

கொண்டாட்டம் குதூகலத்தை  கொடுத்திடும் புத்தாண்டு 

கொடியெனவே பிணைந்திடனும்   தொடர் இன்பம்  நம்மோடு.

நம்பிக்கை சாரல் நம் எண்ணங்களில் நலமுடனே  தூரட்டும் 

நாள்தோறும்  புது வாழ்வு நமை நித்தம் வந்து சேரட்டும். 


எல்லோருக்கும் எல்லாமும்  பரனிடம்  யாசிப்போம்  - அது 

எப்போதும் எதார்த்தத்தில் சாத்தியமா யோசிப்போம் 

இருப்பதை முழுமனதுடன் ஏற்று நன்றி பல  சாற்றுவோம் 

இருள் நீங்கி இன்பம் சூழ நல் ஒளி தீபம் ஏற்றுவோம். 

சென்ற ஆண்டைவிட இப்புத்தாண்டில் தூய   மாற்றங்கள்  துளிர்க்கட்டும் 

நினைப்பிலுள்ள ஞாயமான நம் சுக  கனவுகள்  பலிக்கட்டும்.


இழந்துவிட்ட பல உறவுகளின் நினைவலைகள் ஓயட்டும்  

இருப்பவரின் இதயங்களில் இன்பத்  தேனாறு பாயட்டும்.

ஆள்பவரின் மனதினிலே கரிசனைகள் பூக்கட்டும் - அவர்கள் 

மன்னரல்லர் சேவகர்கள் எனும் நினைப்பு தலை தூக்கட்டு.

ஆழ்கடனில்  தத்தளிபோர்   வாழ்வு நிலை மாறட்டும் 

கடனில்லா, நோயற்ற  சுக  வாழ்வு நம்மை  சூழட்டம்.


விவசாயம் மீனவும்  தொழில் துறைகள் பெருகட்டும் 

விளைச்சல் கூடி அறுவடைகள் நீரில் மூழ்கா திருக்கட்டும் 

தவமாக வரமாக நாம் பெற்ற வாழ்வு சிறக்கட்டும் 

தவறாமல் எளியோர்க்கும் தங்கக்கதவு  திறக்கட்டும் 

உடல் நலமும் மன நலமும் ஒன்றியந்து ஓங்கட்டும் -அவை 

உறுதியாய்  நமையென்றும்  ஓயாமல் தாங்கட்டும்.


மத்தாப்பு மகிழ்தீபம் நம் வானில் ஜொலிக்கட்டும்

மனமெல்லாம்   புதுகீதம் நம் வாழ்வில் ஒலிக்கட்டும் 

எத்திசை உலகமெங்கும் மனித நேயம் பூக்கட்டும் 

எள்ளளவும் வன்மம் பகை இல்லாமல் நீக்கட்டும் 

புத்தாண்டிலும் நம் உறவு புதுப்  பொலிவுடனே  தொடரட்டும் அது 

நித்தம் நம் நெஞ்சதனில்  நல்ல நினைவலையாய் படரட்டும்".





நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக