உள்ளமெல்லாம் !!
நண்பர்களே,
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது ஒரு பொதுவான கூற்று.
அதே சமயத்தில், புரியாத மகிழ்ச்சி, இனம் புரியாத துக்கம், இனம்புரியாத கலக்கம் என்று சொல்வதையும் கேட்டிருப்போம் அல்லது உணர்ந்திருப்போம்.
நமக்கு உண்டாகும் உணர்வுகள் அத்தனைக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும் என்பது பொதுவான தீர்மானம்.
ஆனால் சிலவேளைகளில், எந்த ரணமும் இன்றி மனம் சோர்வாக கலக்கமாக சில வேளைகளில் பயமாக கூட இருக்கும், ஏனென்று தெரியாது.
அதே போல் மனம் என்னவென்றே தெரியாமல் சில வேளைகளில் மகிழ்ச்சியாகவும் பரவசமாகவும் இருக்கும் , காரணத்தை ஆற அமர்ந்து யோசித்தாலும் பிடிபடாது.
இதைத்தான் ஒருவேளை இனம்புரியாத மகிழ்ச்சி அல்லது இனம்புரியாத துக்கம் , கலக்கம் என்று சொல்கிறோமோ?
காலையில் விவரமாக நினைவிற்கு வராமல் போகும் நேற்றிரவு நாம் கண்ட கனவுகள்கூட இதுபோன்ற உணர்வுகளுக்கு காரணமாக அமைவதுண்டு.
அவ்வகையில், இன்று எனக்கும் ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது. அதை சொல்லில் வடிக்க முடியாது.
என்ன உணர்வு, நேர்மறையான உணர்வா அல்லது எதிர்மறையான உணர்வா?
மனம் முழுவதும் ஆக்கரமித்து மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றி நிரம்பி ததும்பும் அந்த உணர்வு மகிழ்ச்சியான உணர்வுதான்.
இதுபோன்று மனம் மகிழும் உணர்விற்கு என்ன காரணம் என்று சற்று யோசித்துப்பார்த்தேன், ஒரு காரணமும் புலப்படவில்லை, பிடிபடவில்லை, நேற்றைய இரவு கண்ட(?? !!)கனவுகூட முழுமையாக நினைவிற்கு வரவில்லை.
காரணத்தை யோசித்துக்கொண்டு காலத்தை விரயமாக்குவதை தவிர்த்து, நமக்கு எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற மகிழ்ச்சி தருணங்கள் மனதில் தோன்றி அந்த நாளை சிறப்பு நாளாக அமைத்துக்கொடுக்கும்; அதை ஆராய்ந்துகொண்டிருப்பதிவிட அந்த தருணத்தை முழுமையாக அ னுபவிப்பதுதான் சால சிறந்தது என்றெண்ணி இதோ இந்த நிமிடம் வரை மகிழ்ந்திருக்கிறேன்.
யார் அல்லது எது காரணம்?
இந்த பிரபஞ்சத்தில் நம்மை படைத்து நம்மை ஆட்டுவித்து துக்கத்தையும் மகிழ்ச்சியையும் மாற்றி மாற்றி கொடுத்து நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் எல்லாம் வல்ல பரம்பொருள் அந்த பரமேஸ்வரனான மகேஸ்வரனுக்கே வெளிச்சம்.
இதுபோன்று உங்களுக்கும் இனம்புரியாத உணர்வுகள் ஏற்பட்டிருப்பின், மறக்காமல் பகிரவும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
எனக்கும் இந்த அனுபவம் உண்டு கோ. ஆனால் பாருங்க, இனம் புரியாத கவலைகள்தான் அதிகம் ...ஹாஹாஹா!!!!
பதிலளிநீக்குஆனா பாருங்க இந்த இனம்புரியாத பயத்திற்கும் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் கண்டிப்பாக நம் ஆழ்மனமும் மூளையின் ஒரு பகுதி அது தான் காரணம் அதற்குள் புதைஞ்சு கிடைப்பவைதான்....ஆனால் நீங்க சொல்லியிருப்பதை இந்த வரிகளை வழிமொழிகிறேன்...
//காரணத்தை யோசித்துக்கொண்டு காலத்தை விரயமாக்குவதை தவிர்த்து, நமக்கு எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற மகிழ்ச்சி தருணங்கள் மனதில் தோன்றி அந்த நாளை சிறப்பு நாளாக அமைத்துக்கொடுக்கும்; அதை ஆராய்ந்துகொண்டிருப்பதிவிட அந்த தருணத்தை முழுமையாக அ னுபவிப்பதுதான் சால சிறந்தது என்றெண்ணி இதோ இந்த நிமிடம் வரை மகிழ்ந்திருக்கிறேன்.//
ஆனந்தம் என்றால் ஓகே....ஆனா கவலைனா பயம்னா......உடனே களைந்திட முயற்சி எடுக்க வேண்டுமே இல்லைனா...
கீதா
பதிலளிநீக்குவணக்கம்.
வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.
பெரும்பான்மையான நேரங்களில் இனம்புரியாத கவலைகளே அதிகம் தோன்றுவதால், எப்போதாவது ஒருமுறை அத்தி பூத்தாற்போன்று ஏற்படும் மகிழ்ச்சி தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்துகொள்ளவேமாண்டும் என்பதால்தான் உடனடியாக பதிவேற்றம் செய்து உங்களையும் மகிழ் விக்க முடிந்தது.
இனம்புரிய எதிர்மறை உணர்வுகளை உடனடியாக களைய முடியாது என்றால் சிந்தனையை வேறு திசைநோக்கி பயணிக்க செய்யமுடியுமா ?
வருகைக்கு மீண்டும் நன்றிகள்.