மனம் மகிழ்ந்திருந்த தருணம்!!
நண்பர்களே,
கடந்த மாத(டிசம்பர்) கடைசி இரண்டு வாரங்கள் தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் இரண்டு வாரங்களுக்கு தாய்லாந்திலேயே இருந்து விடுமுறையை கழிக்கலாமென்றிருந்தேன்.
பின்னர் இரண்டு வாரங்கள் ஒரே நாட்டில் இருப்பதைவிட பக்கத்திலுள்ள மலேசியாவில் சில நாட்கள் தங்கி சுற்றிபார்க்கும் எண்ணம் சற்று தாமதமாக வந்ததால், லண்டனிலிருந்து நேராக தாய்லாந்து சென்று தங்கி இருந்துவிட்டு அடுத்த நாள் மலேசியா செல்லும்படி பயண பாதையை மாற்றி அமைத்துக்கொண்டேன்.
தாய்லாந்து சென்றடைந்து முன்பதிவு செய்திருந்த ஓட்டலை அடைவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது.
லண்டலின் இருந்து விமான மார்கமாக தோஹா வழியாக பேங்க்காக் வந்தடைய காத்திருப்பு நேரம் தவிர்த்து சுமார் 14 மணிநேரம் ஆனது.
மேலும் லண்டன் வந்து விமானம் ஏறும் முன் மேற்கொண்ட பயண களைப்பும் சேர்ந்துகொண்டதால், மனம் உற்சாகத்துடன் இருந்தாலும் உடல் சோர்ந்துபோனது.
எனவே அன்று மாலை வேறு எங்கும் செல்லாமல், வரவிருக்கும் கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த ஓட்டலின் பல்வேறு வளாகங்களையம் பூங்காக்களையம் சுற்றி பார்த்துவிட்டு, பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழ்ந்துவிட்டு அடுத்த நாளுக்கான பயண பொருட்களை ஒழுங்கு செய்துவிட்டு உறங்கப்போனேன்.
அடுத்த நாள் காலை 7.30க்கு விமான நிலையம் அழைத்து செல்லும் வாகனம் வருவதற்குள்,குளித்து முடித்து சிற்றுண்டியும் அருந்திவிட்டு அறையை காலி செய்துவிட்டு வாகனத்திற்காக காத்திருந்தேன்.
சில மணிநேர சாலை பயணத்திற்குப் பின் விமான நிலையம் அடைந்தேன்.
இந்த மொத்தப் பயணத்திலும் , இப்போது மலேசியா போகப்போகிறோம் joyful சிங்கப்பூரை பார்க்க சென்ற சில பத்தாண்டுகளுக்கு முன்பே colourful மலேசியாவை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் இப்போது ஆனந்தாமாக மாறப்போகின்றது என்ற மனதில் மிதமிஞ்சிய ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் மலேசியா செல்லும் எனக்கான விமானம் ஏறி அமர்ந்தவுடன், விமானம் பறக்கும் முன்னே நான் பறந்தேன் பேருவகைகூடிய பேரானந்த மகிழ் வானில்.
மலேசியாவை அடைந்ததிலிருந்து அங்கு தங்கி இருந்த நாட்களில் சந்தித்த மனிதர்கள், சென்றுவந்த இடங்கள், உணவு, கலாச்சாரம், மொழி, பண்பாடு, வானளாவிய கட்டிடங்கள், கலை வடிவ பொக்கிஷங்கள், அரண்மனைகள், உலக புகழ் பெற்ற பிரமாண்டமான முருகன் சிலை மற்றும் அது அமைந்திருக்கும் மலை குகை அதிசயம், படகு சவ்வாரி, வணிக வளாகங்கள், சீன அங்காடி, கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த christmas அலங்காரங்கள் , இரட்டை கோபுரத்தின் பிரமாண்டம் போன்றவற்றில் உள்ளபடியே உள்ளத்தை பறிகொடுத்தேன் என்றால் அது மிகை அல்ல.
சமயம் வாய்க்கும்போதெல்லாம் இனிய நினைவுகளை கண்டிப்பாக அசைபோடுவேன் அவ்வப்போது இந்த பக்கம் அவசியம் வந்து கண்டு செல்லுங்கள் தங்கள் கருத்தை தந்து சொல்லுங்கள்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக