பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 ஜூன், 2016

"Money தா" பிமானம்

நமக்கு என்ன ஆச்சி  ?? 


நண்பர்களே,

சமீபத்தில் சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த துணிகர கொலை சம்பவம் என்னை மிகவும் பாதித்தது என்று சொல்வதைவிட, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தை எப்படி பாதித்திருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

கொலை பாதகர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கையைவிட, நமது காவல்துறையின் மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு என்று சொல்லவே பெரிதும் விரும்புகின்றேன்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் யாருமே உதவ வரவில்லை, யாருமே சாட்சி  சொல்லவும் வரவில்லை என்ற பொதுமக்களின் மீதான ஞாயமான குற்றச்சாட்டை  நான் பெரிதும் வரவேற்கிறேன்.

அதே சமயத்தில் மனிதாபிமானம் கொஞ்சம் கூட யாருக்கும் இல்லை என்ற மேற்போக்கான குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது.

ஏனென்றால், ஒருவருக்கு உதவ போய் அதனால் வரும் தேவையற்ற  சடங்கு சமாச்சாரஙகள், மக்களின் உதவும் எண்ணத்தையும் மனிதாபிமான மனப்பான்மையையும் பின்னடைவு செய்ய வைக்கின்றன என்பதுதான் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டிய நிதர்சனம்.

சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது, எங்களது வாகனத்திற்கு மிக அருகில் "சாகச" எண்ணத்துடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர், எங்கள் எச்சரிக்கை சமிக்ஞ்சைகளை பொருட்படுத்தாமல்,எங்கள் வாகனத்தின்மீது மோதுவதுபோல் வந்து பக்கத்தில் இருந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்துவிட்டார்.

அவருக்கு பின்னால் வந்தவர்கள் எவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி அவருக்கு எந்த உதவியும் செய்ய முன்வராத நிலையில், அவருக்கு பல மீட்டர் முன்னால் கடந்து  போய்க்கொண்டிருந்த நாங்கள் எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அவருக்கு உதவ சென்ற சமயத்தில், அடிபட்டு கீழே விழுந்திருந்தவர் எழுந்து நின்று , உதவ சென்ற எங்கள் மீது குற்றம் சுமத்த முயன்றார் ஏதோ எங்களால்தான் அவருக்கு இப்படி ஏற்பட்டது என்பதுபோல்.

நல்ல வேளை, எங்களுக்கு பின்னால் பயணம் செய்தவர்கள் எல்லோரும் அந்த நபர் சாலையின் இரண்டு பக்கங்களிலும் இப்படியும் அப்படியுமாக சாகசம் செய்துகொண்டே வண்டி ஓட்டியதையும்  எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதையும்  அந்த நபரின் முன்னிலையிலேயே சொல்லியும், மனிதாபிமான அடிப்படியில் அவரை மருத்துவமனை கொண்டு சேர்த்தபோது அவரின் நண்பர்கள் மூலம் வண்டியை சரிசெய்து கொடுக்கும்படியும் அடிபட்டவருக்கு பணம் கொடுக்கும்படியும் பேரம் பேச ஆரம்பித்தனர்.

எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதால் நாங்கள் போலீசுக்கு போகலாம் என்று சொன்னதை கேட்டவுடன் போலீசுக்கு எல்லாம் வேண்டாம்   நீங்களே ஏதேனும் பார்த்து செய்யுங்கள் என பிடிவாதமாக சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

பிறகு அவர்கள் பேசியதை கேட்ட பொதுமக்கள் எங்களை போக சொல்லிவிட்டு அந்த நபருக்கு முதல் உதவி மட்டும் செய்து அனுப்பி வைத்தனர்.

நண்பர்களே,

நாங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் எங்கள் வழியை பார்த்து சென்றிருக்கலாம், ஆனால் மனிதாபிமானத்தை மனதில் தேக்கி வைத்திருப்பதால் உதவ முன் வந்த எங்களுக்கு அன்று அலைச்சலும் மன உளைச்சலும்தான் மிஞ்சியது.

ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுபவர்களுக்கு சட்ட ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் அதன் தொடர்ச்சியாக வரும் வேண்டாத விசாரிப்பு சடங்குகளும் பழிவாங்கும் சிந்தனைகளும் பெருகிவிட்ட நிலையில் உண்மையில் உதவ நினைக்கும் நெஞ்சம்கூட "நமக்கு என்ன ஆச்சி" என்று  கொஞ்சமும் கவலை இன்றி அந்த இடம் விட்டு அகலவே காலை அகல எடுத்து வைக்கின்றது.

Moneyதா Moneyதா ஏன் இந்த போக்கு.

கொலை போன்ற சந்ம்பவங்களை துப்பு துலக்க, நேரடியாக இல்லாவிட்டாலும் பார்த்தவர்கள், அதைப்பற்றி செய்தி அறிந்தவர்கள், தங்கள் ஐடென்டிட்டியை வெளிக்காட்டாமல் மறைமுகமாக தகவல்தந்து உதவலாமே?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

  1. //ஒருவருக்கு உதவ போய் அதனால் வரும் தேவையற்ற சடங்கு சமாச்சாரஙகள், மக்களின் உதவும் எண்ணத்தையும் மனிதாபிமான மனப்பான்மையையும் பின்னடைவு செய்ய வைக்கின்றன என்பதுதான் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டிய நிதர்சனம்//

    இதுதான் நண்பரே முதல் காரணம் மனிதம் இறக்கவில்லை அதை இறுக்கி விட்டது நமது சட்டதிட்டங்களே..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மகேஷ், ஆமாம் பாவம்தான்.

      கோ

      நீக்கு
  3. உண்மைதான்! இப்படியும் சிலர் இருப்பதால்தான் மனிதாபிமானம் மறைந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி சுரேஷ், சரியாய் சொன்னீர்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  5. ஏனென்றால், ஒருவருக்கு உதவ போய் அதனால் வரும் தேவையற்ற சடங்கு சமாச்சாரஙகள், மக்களின் உதவும் எண்ணத்தையும் மனிதாபிமான மனப்பான்மையையும் பின்னடைவு செய்ய வைக்கின்றன என்பதுதான் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டிய நிதர்சனம்.// நாங்கள் இதனை 100% ஒப்புக் கொள்கின்றோம். இப்படித்தான் இங்கே நாங்கள் எதிர்கொண்டு இதனாலேயே நாங்கள் உதவ மிகவும் பயப்படுவதுண்டு மனசாட்சி குடைந்தாலும்..போராட்டம் மனதுள் நடந்தாலும் யதார்த்தத்தைத்தான் நாங்கள் அனுசரிக்க வேண்டியுள்ளது...மிகவும் வேதனையான ஒன்று

    பதிலளிநீக்கு
  6. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கும் தங்களின் எதார்த்தமான கருத்திற்கும் மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அரசே
    மனிதாபிமானம் என்பது இன்று எங்கோ சென்று விட்டது.

    ஆனாலும் நல்லவர்கள் தங்களுக்கு உதவியது கடவுள் செயல் தான்

    சாட்சி,,, அவையெல்லாம் ஜோடிக்க மட்டுமே

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு