Followers

Monday, June 27, 2016

அம்மா இங்கே வா! வா!!--3

"தலை மகனுக்கு தலைப்பு செய்தி"

நண்பர்களே,

 தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--2

காரில் சுமார் 2 மணி நேர பயணத்தின்போது, நாட்டின் வளர்ச்சி, சாலை பராமரிப்பு,  குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் நலன் பற்றிய விசாரிப்புகள், தொடர்பான பேச்சுக்கள் இடம் பெற்றன.

இடையில் அம்மாவை பற்றியும் அவர்களுக்கு அளித்துவரும் மருத்துவம் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களில்  உற்சாகமும்  சுரத்தியும் சற்று குறைந்திருந்ததாக கருதியவர், ஒருவேளை தம்மை வரவேற்க நேற்று இரவே இவர்கள் பயணம் மேற்கொண்டதால் போதிய தூக்கமும் ஓய்வும் இல்லாததினால் இப்படி உற்சாக குறைவாக இருப்பார்கள் என்று முதலில் கருதியவர்,தொடர்ச்சியான தொய்வினை இனம் கண்டு, கேட்ட கேள்விதான், முந்தைய பதிவின் இறுதியில் அவர் கேட்ட கேள்வியான, " உண்மையை சொல்லுங்கள்   அம்மாவிற்கு என்ன ஆனது?" 

தம்மை வரவேற்க வந்திருந்த இருவரும்  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.

அந்த அமைதி இவருக்கு, இயல்பிற்கு மிஞ்சிய பதட்டத்தையும், இருதயத்தில் படபடப்பையும் அதிகரித்தது.

மேலும், வழியில் எங்கேயேனும் நிறுத்தி, தேநீர் அருந்தலாமா என்றும் கேட்டனர்.

ஒருவேளை, கால் வீக்கத்திற்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அம்மாவின்  காலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தின், அதன் தாக்கத்தின்  தன்மை கருதி காலை எடுத்துவிட்டிருக்க நேர்ந்திருக்கும் செய்தியை  இந்த காலை நேரத்தில் எப்படி சொல்வது என தயங்குகின்றனரோ?

அப்படியும் இருக்க வாய்ப்பிருக்காது, கால் வீக்கத்திற்கு போய் யாரேனும் காலை எடுப்பார்களா?

ஒரு சனம் கூட தாமதிக்க விரும்பாதவர், தேநீரை பிறகு அருந்தலாம், முதலில் நான் கேட்ட கேள்விக்கு உண்மையான பதிலை கூறுங்கள் என கொஞ்சம் தழுதழுத்த குரலிலும் அதே சமயத்தில் கொஞ்சம் அதிகாரத்தொனியிலும் கேட்கிறார் - "அம்மாவிற்கு என்ன ஆனது".

ஆறு பிள்ளைகளை பெற்று எடுத்து   பேணி வளர்த்து தமது எல்லா பிள்ளைகளுக்கும்  பேர் சொல்லும் அளவிற்கு படிப்பளித்து, உற்றாரும் உறவுகளும் ஊராரும் எப்போதும் தன் அம்மாவை குறித்து நல்ல செய்திகளாகவே சொல்லி கேட்டிருந்த தாயின் தலைமகனான அவருக்கு 25/05/2016 அன்று காலை,   வந்திருந்தவர்கள் வாய்மொழியாக சொன்ன  தலைப்புச்செய்தி..........

"அம்மா நேற்று இரவு 10.00 மணிக்கு குறைவில்லா உலக வாழ்வினை நிறைவு செய்து இறைவனடி சேர்ந்துவிட்டார்" என்ற செய்தி.

இறந்துவிடுவார்கள் என்ற எண்ணமே எட்டிப்பார்க்காத  உள்ளத்தில் இடியென இறங்கிய அந்த கொடிய செய்தி கேட்டு உள்ளம் உடைந்தவராக கதறி துடித்த அதிர்வில் பயணப்பட்டுக்கொண்டிருந்த வாகனம் தடுமாறியது கொஞ்சம்  தடமும் மாறியது இதயம் இடம் மாறியது..

இன்னமும் தனது  தாயாரின் உடல் மருத்துவமனை அமரர்  அறையில் குளிரூட்டப்பட்ட பெட்டகத்தில் இருப்பதை அறிந்து, 

 'அம்மா கடந்தஆண்டு  ஆகஸ்டில்  உங்களை பார்க்க வந்தேன் , இரவு நேரம் நான் உங்கள் அருகில் படுத்திருந்தபோது, " குளிருது கொஞ்சம் அந்த ஏ சியை அணைத்து விடு" என்று சொன்னீர்கள், அந்த குளிரையே தாங்காத  உங்கள் உடல் இப்போது ஐஸ் பெட்டி குளிரை எப்படி தாங்கும்? ,  பலமுறை தன்னோடு இங்கிலாந்தில் வந்து சில மாதங்கள் தங்கி செல்லுமாறு அழைத்தபோதெல்லாம்கூட குளிரை காரணம் காட்டி வர மறுத்தீர்கள் இப்போது எப்படி இந்த ஐஸ் பெட்டிக்குள் அடங்கி இருக்கின்றீர்கள்?' என தமது உள்ளம் கேட்டதை கண்ணீர் போர்வையால் மூடி மறைக்க முடியாமல் கலங்கி துடித்தாராம்.

அடுத்தடுத்து நிகழ்ந்த இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் உடல் கலந்துகொண்டாலும்  உள்ளம் என்னவோ அம்மாவின் ஆன்மாவோடு பேசிக்கொண்டே இருந்ததாம்.

அப்படி அவர் தன் அம்மாவின் ஆன்மாவோடு பேசிய விடயங்களை நாளை சொல்கிறேன்.

நன்றி.

 மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.



8 comments:

 1. அதிர்ச்சிதான்! அன்பால் அரவணைத்த தாயின் இழப்பு கொடிது தான்!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ்,

   வருகைக்கும் தங்கள் கரிசனைக்கும் நன்றிகள்.

   கோ

   Delete
 2. எதிர்பார்த்தோம். மனம் வேதனை அடைகின்றது. அம்மாவிற்கு வணக்கங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் தங்கள் வணக்கத்திற்கும் நன்றிகள்.

   கோ

   Delete
 3. வருத்தமளிக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே,

   வருகைக்கும் தங்கள் கரிசனைக்கும் நன்றிகள்.

   கோ

   Delete
 4. குளிர்ந்த காற்றினையே தாங்காத அவர்கள் உடல் ,,,,

  படிக்க முடியாமல் கண் நீரினால் மறைக்கிறது எழுத்தை,,

  பக்குவப்பட்ட மனம் ஆனாலும் அன்னை அல்லவா?

  ஆன்மா இளைப்பாறட்டும் இறைவன் நிழலில்..

  ReplyDelete
 5. பேராசிரியருக்கு,

  தங்களின் தொடர் வருகைக்கும், உங்கள் கண்ணீர் அஞ்சலிக்கும் மிக்க நன்றிகள்.

  கோ

  ReplyDelete