Followers

Thursday, February 25, 2016

அந்த சிலமணி நேரம்??!!--2

கூடாரத்திற்குள் ....


நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ..... அந்த சிலமணி நேரம்??!!

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவை கடந்து சுமார் 1.00 மணி அதி காலையில் இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் பிரதான எட்டு வழி சாலையில் வாகன நடமாட்டங்கள் குறைந்திருந்த அந்த சமயத்தில், நெடுஞ்சாலை விதிகளின்படியான அதிக பட்ச வேகமான 70 மைல்  வேகத்தில் ஒரு கார் பயணித்து கொண்டிருந்தது.


வியாழன் இரவ துவங்கிய பனிபொழிவு மேலும் தீவிரமடைந்ததால், சாலைகள் வெள்ளை போர்வை போர்த்தி இருந்தாலும் அவ்வப்போது பயணிக்கும் சில வாகனங்கள் விட்டுச்சென்ற பாத தடம்கள் மட்டும் கைகோர்க்க முடியாமல், குளிரில் தனித்தனியாக கருப்பு இணை கோடுகளாக சாலையில் படுத்து கிடந்தன.

சுமார்  ஒரு  இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஒரு இணைப்பு சாலைக்குள் அதாவது dual carriage  சாலையில் தனது பயணத்தை தொடர்ந்தது.

அந்த சாலையின் வேக உச்சம் மணிக்கு 60 மைல், காரும் அந்த உச்சவரம்பிற்கு உட்பட்டு போய் கொண்டிருந்தது.

இடையிடையே எதிர் பட்ட  வேகத்தடை மற்றும் போக்கு வரத்து விளக்குகளின் சமிக்ஞை களுக்கேற்ப ஆங்கங்கே நின்றும் நிதானமாகவும்   பயணித்தது.

சாலைகளின் எதிர் திசையில் அவ்வப்போது பொருட்களை ஏற்றி செல்லும் ஒரு சில கன ரக லாரிகளும் வெளி ஊர் பேருந்துகளும் ஊர்ந்து போய் கொண்டிருந்தன.

சரியாக காலை சுமார் 3.00 மணி யளவில் அந்த கார் புறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 130 மைல் தொலைவில் உள்ள ஒரு நகரத்தின் ஒதுக்குபுறத்தில் நின்றது, காரின் விளக்குகள் அணைக்கப்பட்டன.  ஆனால் கதவுகள் திறக்கப்படவில்லை.

தற்போது நிலவும் குளிரில், காரில் ஹீட்டர் இல்லாமல் பயணிக்கவோ உள்ளே தொடர்ந்து தங்கி இருக்கவோ முடியாது.  இந்த நிலையில் அந்த காரில் இருந்து யாருமே இறங்கவும் இல்லை.

காலை சுமார் 4.45 மணிக்கு அந்த இடம் முழுவதையும் இரண்டு மா நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட குற்றவியல் போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

நேரமாக ஆக கொஞ்சம் கொஞ்சமாக வானம் தன் கருமையை விழுங்கிக்கொண்டே,வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது.

செய்தி அறிந்த உள்ளூர் வாசிகள் அந்த இடம் நோக்கி படை எடுக்க அவர்களுள் யாரையும் அந்த காரின் அருகில் நெருங்க விடாமல் காவலர்கள் தடுப்பு கட்டி இருந்தனர்.

இதற்கிடையில் ஆளாளுக்கு ஒவ்வொரு அனுமானங்களை பரப்ப ஆரம்பித்திருந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நடந்த உண்மை அல்லது என்ன நடக்கின்றது  என்று  காவலுக்கு வந்த காவலர்களுக்கே தெரியாது ,ஏனென்றால் அவர்களுக்கு கூட காரின் அருகில் செல்ல அனுமதி இன்னும் மேலிடத்தில் இருந்து வரவில்லை என்பதுதான்.

சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு மேலே ஒரு காவல்துறை  ஹெலிகாப்படர் வட்டமடித்துகொண்டு தகவல் சேகரித்து, தரையில் உள்ள காவல்துறை கட்டுபாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி கொண்டிருந்தது.

கட்டுபாட்டு அலுவலகத்தில் இருந்து சம்பந்த பட்ட இடத்தில் உள்ள காவல் துறை மேல்மட்ட அதிகாரிகளுக்கு அவ்வப்போது சில தகவல்கள் தெரிவிக்கபட்டுகொண்டிருன்தது.

இதற்கிடையில் உள்ளூர் மற்றும் தேசிய தொலைகாட்சி மற்றும் தகவல் ஊடகங்களும், இந்த பதற்றமான சூழ்நிலையை, செய்திகள் எதனையும் உறுதி படுத்தாமல், நாட்டு மக்களுக்கு அறிவிக்க தொடங்கிவிட்டன.

இப்போது மேலும் ஒரு விசேஷித்த காவல் துறையின் அதிரடி படையும் பாது காப்பு கவச உடை அணிந்த மற்றுமொரு படையும் "சம்பவ" இடத்திற்கு வந்து சேர்ந்தன.

இப்போது சுமார் காலை 6.00 மணி இருக்கும்.

அப்போது வந்த தொலைகாட்சி நிகழ்ச்சியின் காலை ஒளிபரப்பில் தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் இணைப்பு சாலைகளில் பொருத்தபட்டிருக்கும் சில கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில வீடியோ பதிவுகள் காட்டப்பட்டன. எனினும் பனி மூடியிருந்த அந்த காரின் உள்ளே எதையும் சரியாக பார்க்க முடியவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் அங்கே ஒரு தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தூரத்தில் இருந்து அந்த காரின் மீது தண்ணீர் பீச்சி அடிக்க ஏற்பாடு செய்ய பட போவதாக தகவல்கள் தூறல்களாக தெறித்தன.

இப்போது அந்த காரை சுற்றிலும் ஒரு வெள்ளை நிற கூடாரம் அமைத்து மூடி இருந்தனர்.

உள்ளே என்ன நடக்கிறது ?

கொஞ்சம் காத்திருங்கள் கேட்டு சொல்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 comments:

 1. அடுத்து என்ன நடக்கும் அறிய ஆவலில்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி , தொடர்ந்து பயணியுங்கள்.

   கோ

   Delete
 2. கொஞ்சம் பரபரப்பாதான் இருக்கு சார்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்வகுமார் பரபரப்பின் பரப்பளவு இன்னும் இருக்கு.

   கோ

   Delete
 3. வணக்கம்
  கதை விறுவிறுப்பாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரூபன்,

   தொடர் பயணத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் சொல்கிறேன் இது கதையல்ல?????!!!!

   கோ

   Delete
 4. வணக்கம் அரசே,
  என்ன நடக்கிறது, காத்திருக்கிறோம்,,
  ரொம்ப காக்க வைக்கிறீர்கள் அரசே,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி பேராசிரியரே.
   வைத்துகொண்டு வஞ்சனையா செய்றேன், கேட்டுதானே சொல்லணும், வாழ்க்கையிலே கொஞ்சம் பொறுமை அவசியம்.

   Delete
 5. ரொம்பவே சஸ்பென்ஸ்...சரி அந்தக் கார் தானியங்கிக் கார்? அதாவது ஓட்டுநர் இல்லாமல் ஓட்டப்படுபவை இருக்கின்றதே அது போன்றதோ....ஹிஹிஹி இந்த 007 இப்படித்தான் யோசிக்கும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி, ஆமாங்க சஸ்பென்ஸ் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கு. இருந்தாலும் இந்த தானியங்கி.... எல்லாம் நீங்க சொல்லகூடாது கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.

   Delete