பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 ஜூன், 2026

கற்கண்டின் கருவறையே !

தாய் தமிழுக்கு வணக்கம்.


 நண்பர்களே,

சமீப காலத்தில் எப்போது பாடவேண்டும் எத்தனை முறை பாடவேண்டும் என்றெல்லாம் பல சர்ச்சைகள் நம் தமிழ்த் தாய் வாழ்த்துக்குறித்து எழுந்துவரும் இச்சூழல் நாம் அறிந்ததே.

அவரவர்க்கு தமிழின்பால் தமிழ்மொழியின்பால், தமிழன்னையின்பால் ஒவ்வொரு அபிப்பிராயம் ஆர்வம்,அனுபவம் இருக்கும்.

அதே சமயத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொதுவான பாடலான மனோன்மணியம் சுந்தரனார் இயற்றி பெருவாரியான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு , பாரம்பரியமாக, அரசு விழாக்கள், பள்ளி  கல்லூரி நிகழ்ச்சிகளில், மற்றும் பல பொதுவான கூடுகைகளின்போது பாடப்படும்போது நம் எல்லோருக்கும் மனதினில் ஒரு மகிழ்சியும், கம்பீரமும், சில நேரங்களில் கர்வம்கூட ஏற்படுவதுண்டு.

ஒவ்வொரு முறை இந்த பாடலை பாடும்போதும் கேட்க்கும்போதும் உள்ளபடியே என் உள்ளம் உவகையால் பூரிக்கும் ஆர்ப்பரிக்கும்.

தமிழ் நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களின்போது குத்துவிளக்கேற்றுவதும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதற்கு  முன்னுரிமையையும் , முதல் மரியாதையையும்  கொடுப்பதென்பதும்,, பாடும்போது சாதி மதம் கடந்து எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்வதும் தமிழர்கள் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை , அது நம் உணர்வின் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

சமீபத்தில் இதை குறித்து யோசிக்கும்போது, என் மனதில் தோன்றிய சில வாக்கியங்களை இதோ உங்களின் பார்வைக்கு படைக்கிறேன், இதை குறித்து தங்கள் மேலான கருத்துக்களை தயவாக தெரிவிக்கவும்.


தமிழ்த்தாய் வணக்கம்.


"அன்னைத் தமிழே !

அட்சய நல்  தேனமிழ்தே !

கன்னலின் சுவை மிஞ்சும் 

கற்கண்டின் கருவறையே !


உன்னை நான் உச்சரிக்கும் 

ஒப்பில்லா நேரமெல்லாம் 

மா  பலா  வாழையோடு 

பாற் கடலின் அமுது தோய்ந்த 


கோ- பிள்ளை பருகும் தூய 

பால் சுவை உணரும் இந்த 

கோயில்பிள்ளையின் 

கோடி வணக்கங்கள் - உந்தன் 

கோமேதகத் திருவடிகட்க்கு.

நன்றி ,

வணக்கம் 

மீண்டும் ச(சி)ந்திப்போம். 

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக