பின்பற்றுபவர்கள்

சனி, 21 நவம்பர், 2020

அம்மி பறக்குது!!

நண்பர்களே,
 இடையில் சிறிது காலம் பதிவின் பக்கம் வராமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கும் புதிய வடிவிலான பதிவு தளம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை என்பதே பிரதான காரணம்
. எனினும் இந்த புதிய மாற்றங்களை புரிந்துகொண்ட பதிவுகள் எழுத முயற்சிக்கின்றேன். குழந்தை பருவத்திலிருந்து தமது முதுமை பருவம் வரை பாதுகாப்பான சூழலிலும் , பாதுகாப்பான போஷாக்கான உணவுகளையம் சுத்தமான குடிநீர் , சத்தான காய் கனிகள் போதாதற்கு மேலை நாட்டு தயாரிப்பு சத்து நிறைந்த கூடுதல் உணவுகள் , பாதுகாப்பான உறைவிடம் முறையான மருத்துவ பரிசோதனைகள் என்று தம்மையும் தமது குடும்பத்தையும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் ஒருபகுதி. அவர்களுக்கு சிறிய தலைவலி காச்சல் ஜலதோஷம் என்றால்கூட பதறிப்போய் மருத்துவரை அழைப்பதும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று காட்டுவதுமாக இருப்பார்கள், கை கால்களில் சிறிய சிராய்ப்பு என்றாலும் கூட பதறிவிடுவார்கள.
 இவர்களுக்கெல்லாம் எந்த வியாதியும் வராது ; அப்படியே வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எரிந்து விடும் அளவிற்கு வசதியும் சுகாதாரமும் சத்தான உணவும் அவர்களுக்கு சாத்தியம்.
 இப்படிதான் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் இருந்தது. 
 ஆனால் தற்போது அங்கெங்கிணாதபடி உலகெங்கிலும் விரவி பரவி இருக்கும் கொடிய கிருமியின் வரவிற்கு பிறகு ஏழை பணக்காரன் , ஆரோக்கியம் மிகுந்தவன் ஆரோக்கியம் இல்லாதவன் படித்தவன் படிக்காதவன் , உயர் பதவியில் இருப்பவன் வேலையே இல்லாமல் இருப்பவன் போன்று எந்த வேறுபாடும் இல்லாமல் யாரையும் தாக்கி அழிக்கும் இந்த கொடூர கிருமியால் உலக மக்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம்.
 அம்மியும் உரலும் ஆட்டம் காணும் இந்த சூழலில் காய்ந்த ஆலமர சருகுகள் எம்மாத்திரம்? இனியும்கூட ஆபத்தை உணராமல் , பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்போமேயானால் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என அறிந்து செயல்படுவது நல்லது. 
 இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிகூட கடந்த ஓரிரு மாதங்கள் /வாரங்களில் கிருமியின் தாக்குதலும் வீரியமும் குறைந்துகொண்டிருந்த சூழலில் கடந்த வாரம் முதல் அதன் வீரியமும் தொற்றும் வேகம் எடுத்திருப்பது வேதனை அளிக்கின்றது.
 அப்படி மருத்துவ வசதியும் சுகாதார வசதியும் அபரிமிதமாக இருக்கும் நாடுகளிலேயே இப்படி என்றால் சுகாதாரமும் பாதுகாப்பு வசதியும் குறைவாக உள்ள நாட்டு மக்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்து நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது. 
 கடந்த இரண்டு மாதங்களில் திடகாத்திரமும் ஆரோக்கியமுமாக இருந்த எனது மூன்று நண்பர்களை இந்த கொடூரன் கொண்டுசென்றுவிட்டான் என நினைத்து வேதனையுடன் இந்த பதிவினை முடிக்கின்றேன். 
 நன்றி.
 மீண்டும் ச(சி)ந்திப்போம்
 கோ

16 கருத்துகள்:

  1. நண்பர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது
    ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்களுக்கும் நன்றி திரு கரந்தையார் அவர்களே.

      நீக்கு
  2. பல நாள்களுக்குப் பின் கண்டதில் மகிழ்ச்சி.
    முடிந்தவரை தற்காத்துக்கொள்ள முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள். வருகைக்கும் செய்திக்கும் நன்றிகள்.

      நீக்கு
  3. நீண்ட நாட்கலுக்கு பிரகு நீங்க பதிவு எழுத வந்த மகிழ்ச்சியில்
    வாசிக்க வந்தால்
    பதிவின் கடைசியில் இருந்த செய்தி
    பார்த்து
    வருத்தமாக இருக்கிரது சார்.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் பதிவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.
    ஆனால், கவலையூட்டும் இழப்புகளை கேள்விப்படுகையில் மிகவும் வறுந்துகிறோம்.
    ஹைஜீனிக் என்று சொல்லும் வளர்ந்த நாடுகளையே இது அதிகம் பாதிக்கிறது.
    என் அலுவலகத்திலும், பயந்து பயந்து ரொம்ப சுத்தம் பேணுபவர்களின் மன வலிமையின்மையை உபையோகித்து அவர்களையே கொரானா அதிகம் பாதிப்பது போல் தோன்ருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அரவிந்த், நீங்கள் சொல்வது உண்மைதான், இங்கேயும் வீடு இல்லாத மனிதர்கள் சாலையோரம் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை தொற்று பாதித்ததாக பெரிய தகவல் இல்லைதான். எனினும் பாதுகாப்பு அனைவருக்கும் அவசியம். வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஆமாம் தனபால், மனம் சோகத்தால் நிறைந்திருக்கின்றது.
      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. தம்மை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சியே. இந்த கொரோனா நம் அனைவரின் வாழ்வு முறையையும் தலைகீழாக மாற்றி போட்டுள்ளது என்பது ஒரு கசப்பான உண்மை.
    என் உறவு நடப்பு வட்டாரத்திலும் சிலர் தவறிவிட்டனர். தவறிய தம் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். நானும் அறிந்தவர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு, வருகைக்கு மிக்க நன்றி. அந்த மூவரில் ஒருவர் தாங்கள் அறிந்தவரே. திரு கனகராஜ் அவர்கள்.

      நீக்கு
  7. வணக்கம்

    கொரணா வைரஸ் பற்றி நல்ல விழிப்புணர்வு சிறப்பு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  8. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம்!

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி , இந்த காலகட்டம் மிக மிக கொடுமையான கால கட்டமாகத்தான் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு