பின்பற்றுபவர்கள்

வியாழன், 5 அக்டோபர், 2017

பாய் மண்ணே வணக்கம்!!.

Hats off!!

நண்பர்களே,  

உலகின் பல நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம்,நம் ஒவ்வொருவருக்கும் ஒவொரு விதமான அனுபவமும் படிப்பினையும் ,பரவசமும் உண்டாகும்.

எல்லோருக்கும் ஒரே விதமான அனுபவம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது என்றாலும் அவரவர் அணுகுமுறையினை பொறுத்து, ரசனையை பொறுத்து, எதிர்பார்ப்புகளை பொறுத்து இவை மாறுபடும்.

அவ்வகையில்  அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து , பிரான்ஸ், இத்தாலி, மால்டா, ஜெர்மனி, ஹாலந்து, சைனா, சிங்கப்பூர், எகிப்து,  பகரின், வேல்ஸ்,ஸ்காட்லாந்து, பெல்ஜியம் , இஸ்ரயேல், பாலஸ்தீனம் ....போன்ற   மேற்கத்தைய   நாடுகள் பலவற்றையும் கிழக்கத்திய நாடுகள் பலவற்றையும்,வளைகுடா நாடுகள் பலவற்றையும் , வட ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றையும் சுற்றிவர வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக , அதன் அனுபவங்களை பெரும் பொக்கிஷமாக கருதி மகிழ்கின்றேன்.

ஆண்டிற்கு குறைந்த பட்சம் இரண்டு நாடுகளுக்கேனும் பயணம் செய்யும்படி அமைந்துவிட்ட - அமைத்துக்கொண்ட வாழ்க்கை முறைமையின் சுழற்சியில் சமீபத்தில் சுற்றிவந்த நாடு  -  அதி குறைந்த கால நிர்ணயத்தில் ராக்கட்டை விஞ்சும் வேகத்துடன் அதி நவீன வாழ்க்கை வசதிகளுடன் வளர்ந்து - உயர்ந்து ஏனைய உலக நாடுகளை வியக்கவைக்கும் அசுர வளர்ச்சி பாதையில் பயணிக்கும் அழகு நாடான "துபாய்" என்பது என்னை அறிந்தவர்கள் அறிந்த செய்தி.

பயண அனுபவங்களின்  சில துகள்களை சமீபத்தில் பதிவுகளாக எழுதியபோது அதை படித்தவர்களுள் சிலர், அடுத்து என்ன? அடுத்து எங்கே போனீர்கள்,? என்னென்ன பார்த்தீர்கள்? என செய்தி தொடர்பு சாதனங்கள் அத்தனையின் வாயிலாகவும் கேட்க தொடங்கி விட்டனர்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல செய்திகளை பகிர்ந்துகொண்டிருந்தாலும் பயண குறிப்புகள் - பெற்ற அனுபவங்கள் அத்தனையையும் எழுத்தில் வடிப்பதும் அவற்றை பயணம் தொடங்கியதுமுதல் திரும்பி வீட்டிற்கு வந்தது வரை முழுமையாக படம் பிடித்தாற்போல் பதிவேற்றம் செய்வதுவும் என்னை பொறுத்தமட்டில் சாத்தியமல்ல.

எனவேதான்  முழு பயணத்தின் சில பாகங்களை மட்டுமே பகிர்ந்துகொண்டு வருகிறேன்..

அவ்வகையில் என்னை வியப்பில் ஆழ்த்திய பல விடயங்கள் என் நெஞ்சில் நீங்கதா விந்தை நினைவுகளாக படர்ந்துவிட்டன.

அவற்றுள் ஒன்று.......

சிறு வயதில் பாதிரிமார்கள் பள்ளிக்கூடத்தில், கற்றுக்கொடுத்த ஒரு பாடலின்  முதற்பகுதியின் பொருளும் அதன் மீதான நம்பிக்கையும் , துபாயில் நான் பார்த்த  காட்சிகளால் தரை மட்டமாகிப்போனது.

அப்படி  என் நம்பிக்கையை சிதைத்து தரைமட்டமாக்கிய காட்சிகள் எவை, அந்த பாடலின் முதற்பகுதி என்ன என்பதை   தொடரும் இப்பதிவின்  பிற்பகுதியில்  சொல்கிறேன்.

அதுவரை.....

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

பி.கு: பதிவை இப்படி பாதியில்  நிறுத்துவதும் பிரித்து போடுவதும் பதிவின் நீளத்தை முன்னிட்டுத்தானே தவிர,  சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, திக் திக் திகில்..,எதிர்பாராத  திருப்புமுனை....என்ற எந்த காரணங்களையும்  முன்னிட்டு அல்ல என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

பி.பி.கு: ஆமாம் இந்த பி.கு யாருக்கு...?

12 கருத்துகள்:

  1. பாய் மண்ணே என்றவுடன் ஏதோ மட்டன் பிரியாணி பற்றி சொல்ல போகின்றீர்கள் என்று வந்தேன்..

    பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் இந்தப்பக்கம் வந்த உங்களுக்கு மிக்க நன்றி.
      பாய் என்றவுடன் பிரியாணிதானா?
      அதையும் தாண்டி வேர் பலா போல வேறு பல இனிய விடயங்களும் உள்ளனவே.

      கோ

      நீக்கு
  2. பி.கு. ஸூப்பர் தொடர்கிறேன் நண்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும் தொடர்வதற்கு கற்பூரம் அடிக்காமல் செய்த சத்தியத்திற்காகவும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. பதில்கள்
    1. அய்யாவின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      ஒன்றா இரண்டா? இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன்.

      தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. //பி.பி.கு: ஆமாம் இந்த பி.கு யாருக்கு...?//

    எப்போதாவது ஒருமுறை வரும் எனக்காகாத்தான் இருக்கும்!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதாவது ஒருமுறை வந்தாலும் , வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும் நீங்களும் ஒரு சூப்பர் ஸ்டார் பதிவர்தானே.

      தங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

      பி. கு உங்களுக்கானதன்று; நீங்கள் ரொம்ப.... நல்ல .... வாசக பதிவரன்றோ...

      பொருத்தமானவர்கள் யாரேனும் உரிமை கொண்டாடுகின்றார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு
  5. ஹிஹிஹிஹி இந்தப் பிகு யாருக்கு என்று தெரியாதாக்கும்??!!! ஹாஹாஹாஹா...

    சரி சரி அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க் அந்தக் காட்சிகள் என்ன என்பதைப் பற்றி அறிய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட உங்களுக்கு தெரியுமா அந்த பி கு யாருக்கென்று?.

      நம்ம ஸ்ரீராம் அவர்களுக்கு கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்..

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  6. ஆஹா எத்தனை எத்தனை நாடுகள்,
    சுற்றி இருக்குரீங்க!
    வாவ் சூப்பர் சார்!

    எனக்கும் ஆண்டிற்கு குறைந்த பட்சம் இரண்டு வேண்டாம் ஒரு நாட்டிர்க்காவது
    சுற்றிப்பார்க்கச் செல்ல வேண்டும் என ஆசை.
    எதிர் காலத்தில்!
    *

    உங்கள் நம்பிக்கையை சிதைத்த அந்த பாடல், பொருள் பற்றி
    அடுத்த பகுதியில் வாசிக்க ஆர்வமாக்அ இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  7. மகேஷ்,

    நலம் தானே.,

    ஒன்றென்ன பல நாடுகளுக்கு பயணப்படும் நாட்கள் உங்களுக்கும் அமைய வாழ்த்துகிறேன். எல்லாம் சாத்தியமே சத்தியமாய்.

    இதோ வந்துட்டேன் அடுத்த பதிவை தொடுத்து வழங்க.

    வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

    கோ

    பதிலளிநீக்கு