Followers

Friday, August 25, 2017

மலைப்பூட்டும் சிலை கூட்டம்!!

எல்லாம் ஓரிடம்தான்.
நண்பர்களே,

தூக்கம் கண்களை தழுவ தவமிருக்க அந்த தவத்தை என்னுடைய தவ வலிமையால் தகர்த்தெறிந்துவிட்டு , நடை பயணம் மேற்கொண்டதால் சூரிய

குளியலால் உடல் வேர்த்து ஆடைகள் அதன் சாடையையும் வாடையையும் வித்தியாசப்படுத்தி காட்டியதால், மீண்டும் ஒரு குளியலுக்கு பின் ஆடை மாற்றிக்கொண்டு  மறக்காமல் தொப்பியும் கருப்பு கண்ணாடியையும் அணிந்து வெளியில் வந்தேன்.

சுற்று பயணத்தின் ஆரம்பம் ஒரு புனிதமனான இடத்திலிருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி, காலையில் உணவு விடுதியில் சேகரித்தறிந்த ஆலயம் செல்ல முடிவெடுத்தேன்.

தங்கும் விடுதியின் வரவேற்பாளரிடம்  விசாரித்து வாடகை கார் ஒன்று கூப்பிட்ட மாத்திரத்தில்  வந்து சேர்ந்தது.

வாகன ஓட்டுனரிடம் தெரிந்தவரை விவரித்ததில் அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாகனத்தை நிறுத்தி இதுதான் அது. என்றார்.

அது ஒரு நீண்ட அகன்ற  நடை சாலை , இரு புராணங்களும் விதவிதமான துணி கடைகள், கலை பொருட்கள், குளிர் பானக கடைகள்.. சோப்பு சீப்பு கண்ணாடிகள்... வாசனை திரவியங்கள்....கண்கவர் மெத்தை விரிப்புகள் என பல தரப்பட்ட பொருட்கள் நிரம்பிய வணிக சாலையாக காட்சி அளித்தது.

அதன் வழியே எதிரும் புதிருமாக ஆட்கள் நடமாட்டம்...

அந்த பிரதான சாலையின் ஒரு கோடி முதல் கடைகோடிவரை ஒரே பக்கத்த கோடிகளின் சஞ்சாரமாக இருந்தது.

கூட்டத்தோடு கூட்டமாக முன் நோக்கி செல்லும் நபர்களை பின்தொடர்ந்து போய்கொண்டே இருந்தேன்.

ஒரு கட்டத்திற்குமேல் நகரமுடியாத அளவிற்கு பக்தர்கள்  வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 

இப்போது நான் நிற்கும் இடம் ஒரு குறுகிய வழியாக மாறி இருந்தது.  இரண்டு நபர்கள் ஒன்றாக தமது தோள்கள் உரசிக்கொள்ளாமல் முன்னேறுவது என்பது கடினமாக - சிரமமாக இருக்கும் மிக மிக குறுகலான வழி.

Image result

எப்போதும் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை - சுபீட்சம் அடைய குறுக்கு பாதையில் செல்வதை விட்டு குறுகலான சிறிய சிரமமான பாதையானாலும் நேர்மையான (பக்தி) மார்க்கத்தில் செல்லவேண்டும் என்பதை உணர்த்துவதா க அந்த குறுகி பாதையின் வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும்போது உணர்ந்தேன்.

கூட்டத்தை கட்டு படுத்த,  கொஞ்சம் பேர் உள்ளே சென்றவுடன் பக்க்தர்கள் நிறுத்தப்படுகின்றனர்.  உள்ளே சென்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதை பொறுத்து மீண்டும் வரிசையில் இருப்பவர்களுக்கு அனுமதி.

இதில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் வேறு எங்கேயோ இருந்து இதேபோல பக்தர்கள் வரிசையாக வந்து அதாவது ஆங்கில எழுத்து "Y" போல இருவேறு வரிசைகளில் வந்து பின்னர் ஒரு பாதையில் இணைந்து அங்கிருந்து ஒவ்வொருவராக உள்ளே செல்லும்படி அமையப்பெற்ற பாதையில் பயணித்து கோவிலுக்குசெல்லவேண்டும்.

ஒரு வழியாக உள்ளே சென்றஎனக்கு அது என்ன கோயில் என்று தீர்க்கமாக உணர முடியவில்லை.

ஒரு பக்கம் இதை சிவன் கோவில் என்று சொல்லலாம் அல்லது விஷ்ணு கோவில் என்று சொல்லலாம், (திருப்பதி வெங்கடாசலபதி), அம்மன் கோயில் என்று சொல்லலாம், அல்லது சாய்பாபா கோவில் என்று சொல்லலாம் அல்லது சீக்கியர்களின் குருத்துவாரா என்றும் சொல்லலாம்.

என்ன குழப்பமாக இருக்கின்றதா?

எனக்கும் அப்படித்தான் இருந்தது.

குழப்பம் தீர நாளை வரை காத்திருங்கள்.

அதுவரை.....

நன்றி..

மீண்டும்  ச(சி)ந்திப்போம்.

கோ


6 comments:

 1. ஒவ்வொரு பதிவிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்துவிடுகின்றீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   வேண்டுமென்றே வைக்கப்படும் சஸ்பென்ஸ்கள் அல்ல, பதிவு நீட்சியை தவிர்க்க இடையில் நிறுத்தி மீண்டும் தொடர்வதால் ஒரு சுவாரசியமான இடத்தில் நிறுத்தவேண்டும் என்றெண்ணி செய்யப்படும் "சித்து" வேலைகளில் இது ஒரு "சத்து" வேலை.

   தொடர்வதற்கும் உங்கள் தொய்வில்லா ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா

   கோ

   Delete
 2. எப்போதும் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை - சுபீட்சம் அடைய குறுக்கு பாதையில் செல்வதை விட்டு குறுகலான சிறிய சிரமமான பாதையானாலும் நேர்மையான (பக்தி) மார்க்கத்தில் செல்லவேண்டும் என்பதை உணர்த்துவதா க அந்த குறுகி பாதையின் வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும்போது உணர்ந்தேன்.// அருமையான கருத்து!!!! மிக மிக நேர்மறையான கருத்து!

  அக்கோயிலில் எல்லா கடவுளர்களுக்கும் இருக்கிறார்கள். தனித் தனியான பாதைகளுடன்..தனித்தனி சன்னதியுடன்!! சரியா? .ஆல் அண்டர் ஒன் ரூஃப்!!! நீங்கள் மினி டிஃபன் சாப்பிட்டது போல!!! என்று சொல்லலமா?!! ஹாஹாஹாஹா..காத்திருக்கிறோம் உங்கள் விவரணம் அறிய...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதுபோல் அண்டர் ஒன் ரூப் மினி டிஃபன் அல்ல மெகா பிரசாதம்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   Delete
 3. ko avarkalin payanam kovilil irunthu nalla aarampam...

  adutha pakuthikkaaka waiting sir...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகேஷ்,

   அது ஒரு திட்டமிடாத விசிட் என்றாலும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிபோல் அமைந்த விசிட்.

   கோ

   Delete